கவிதைகள் ஆயிரக் கணக்கில் ஆகுகையில்
உணர்வீர்கள் நீங்கள் உருவாக்கியது
அவை வந்து நிற்கின்றன மழை, சூரிய ஒளி,
போக்குவரத்து, இரவுகள், வருடத்தின் நாட்கள்,
மற்றும் முகங்களில்.
இவற்றோடு வாழ்வதை விடவும்
இவற்றை விட்டு விடுவது சுலபம்,
ஒருவன் வானொலி வழியாக
பியானோ வாசிப்பதைப் போன்றது
மேலும் ஒரு வரியைத் தட்டச்சுவது.
ஆகச் சிறந்த எழுத்தாளர்கள்
வெகு குறைவாகவே சொல்லியிருக்கிறார்கள்
ஆக மோசமானவர்கள்,
வெகு அதிகமாக.
*
மூலம்:
'As the poems go'
By Charles Bukowski
**
படம்: இணையத்திலிருந்து..
நன்றி சொல்வனம்!
'மற்றவர் எழுதியதை படிக்கும்போது என் கைகள் தானே நிராகரிக்கின்றன என் எழுத்தை' என்று நான் கூட முன்பொருமுறை எழுதி இருந்தேன். இப்போதும் அந்தக் கருத்துதான்!
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குகவிதையின் முதல் வரி - உண்மைதான் ரொம்ப இதைப் பற்றி யோசித்ததுண்டு...நாம் எழுதுவது ஒன்றுமே இல்லை என்று
பதிலளிநீக்குகீதா
தங்கள் கருத்துக்கு நன்றி கீதா.
நீக்குகவிதை பகிர்வு அருமை.
பதிலளிநீக்குசொல்வனம் இதழில் வெளியானது அறிந்து மகிழ்ச்சி வாழ்த்துகள்.
மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குகவிதை அருமை. செல்வரத்தினம் வெளியானததற்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசொல்வனம் வெளியீடு. நன்றி மாதேவி.
நீக்கு