வியாழன், 5 ஜனவரி, 2023

யாவும் நலமே - தூறல்: 43

 அனைவருக்கும் தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இங்கே பதிவுகள் தந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிறது. காணவில்லை எனத் தேடி நலம் விசாரித்த நட்புகளுக்கும், சென்ற வாரம் என் பிறந்தநாளை நினைவு வைத்திருந்து வாழ்த்தியவர்களுக்கும் அன்பு கலந்த நன்றி. ஒரு சிறு விபத்துக்குப் பிறகு மீண்டு வந்து கொண்டிருக்கிறேன்.

தீபாவளிக்கு மறுநாள், குடியிருப்பு வளாகத்தினுள் காலை நடைப் பயிற்சியின் போது சட்டெனப் பக்க வாட்டில் இரண்டடி நகர வேண்டி வந்தபோது பாதாம் காயின் மேல் கால் ஏறி தடுமாறி விழுந்ததில் வலது கையின் சுண்டு விரலில் எலும்பு முறிவு, மோதிர விரலில் மூட்டு எலும்பு விலகல், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை, ஒரு விரலில் தையல், மறு விரலில் திருகாணிகள் பொருத்திக் கம்பியில் இணைத்து முழங்கை வரைக்கும் ஒரு மாத காலம் கட்டு, ஒரு  கணுக்காலிலும் ஒரு முழங்காலிலும் அடிபட்டு நடக்கவும் சில வாரங்களுக்கு சிரமம், ஒவ்வொன்றுக்கும் அடுத்தவர் உதவியை எதிர்பார்த்து இயங்க வேண்டியிருந்த சூழல், கைக்கட்டு பிரித்த பிறகு  விறைப்பாகி விட்ட விரல்களுக்கு ஃபிசியோதெரபி பயிற்சி என நாட்கள் நகருகின்றன. குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் மனரீதியான சோர்வையும் கடந்து மீண்டு வந்து விட்டேன் ஆயினும், விரல்கள் இன்னும் முழுதாக இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. மடிக்கணினியை  உபயோகிப்பதிலும் தட்டச்சுவதிலும் சிரமம் உள்ளது.

சமீப ஆண்டுகளில் கேமராவை இயக்க முடியாமல் போன பெரிய இடைவெளி இது. 'தினம் ஒரு படம்' பதியும் வழக்கம் கொண்ட எனது Flickr பயணம் சென்ற ஆண்டு '365 படங்கள்' எனும் இலக்கோடு தொடங்கியது. இயங்க முடியாது போன கடைசி இரண்டு மாதங்களைத் தவிர்த்து விட்டு பார்த்தால் 252 படங்கள் பதிவேற்றம் செய்திருப்பது மனதுக்கு நிறைவையே தருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் எனது ஃப்ளிக்கர் பட ஓடை பெற்றிருக்கும் பக்கப் பார்வைகள் நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் ++!  (சென்ற வருடக் கணக்கு இங்கே).


பறவைகள், பூக்கள்,  மனிதர்கள், குழந்தைகள் மற்றும் டேபிள் டாப் படங்களை இந்த இணைப்பில் 
காணலாம்:

முத்துச்சரம் வலைப்பூவிலும் தமிழாக்கக் கவிதைகள், சில கட்டுரைகள், வாராந்திரப் படத் தொகுப்புகள் எனத் தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறேன்.

அடுத்து, கேமராவைக் கையாள சற்று நாளாகலாம். அதுவரையிலும் முன்னர் எடுத்து பகிராமல் வைத்திருக்கும் படங்களை அவ்வப்போது பதிய உள்ளேன். இனி யாவும் நலமே 🙂.


புது வருடம் அனைவருக்கும் சிறப்பாக அமையட்டும்!
***
எனது சேமிப்புக்காக,
FB_யில் இந்தப் பகிர்வு இங்கே.
***

21 கருத்துகள்:

  1. புது வருடத்தில் அழகான ரோஜாவுடன் மீண்டும் வருகை.
    இனி எல்லாம் நலமே!
    நீங்கள் பட்ட துன்பம் போயின, இனி எல்லாம் நலம்.
    புதுவருடத்தில் உங்கள் எண்ணங்கள் எல்லாம் நிறைவேற இறைவன் அருள்வார். என் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும் ராமலக்ஷ்மி. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. விபத்தின் சிகிச்சையைப் படிக்கும்போது முதுகுத்தண்டு சில்லிடுகிறது.  சிரமமான நேரங்கள் முடிந்து நல்ல காலம் தொடங்கும் காலம்.  விரைவில் முற்றிலும் குணமடைந்து பழையபடி வலைப்பணிகளையும் தொடர பிரார்த்தனைகள்.  உங்களுக்கு எங்கள் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்.  புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ஓ... சிறியதொரு தடுமாற்றம் தரும் சிரமங்கள் தான் என்னன்ன... விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள். மீண்டும் தங்கள் புதிய புகைப்படங்களை இனிய பொன்மொழிகளுடன் காண காத்திருக்கிறேன். புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி அமுதா. இந்த வருடத்திலிருந்து பொன்மொழிகளுடன் பகிர்வதை நிறுத்தி விடலாமா எனும் எண்ணம் எழுந்தது. தங்கள் பின்னோட்டம் அதை மாற்றி விட்டது. படங்களும் பொன்மொழிகளுமாக பயணம் தொடர்கிறது :).

      நீக்கு
  4. விபத்து பற்றி அறிந்து வருத்தமாக இருந்தது. இந்த மாதிரி சமயங்களில் வலியுடன் சூழ்நிலைக்கேற்ப நம்மை பொருத்திக்கொள்வது மிகவும் சிரமமான விஷயம். ஒரு வழியாக கணினியில் எழுதுவது வரை நலமாகியுள்ளது மகிழ்வைத்தருகிறது. முழுவதுமாக குணமடைந்து பழையபடி சுறுசுறுப்பாக இயங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  5. இந்தப் புத்தாண்டில் மகிழ்வுடனும் உற்சாகத்துடனும் நலமுடனும் நீங்கள் சிறந்திருக்க என் இனிய வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் நல்வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மனோம்மா.

      நீக்கு
  6. என்னடா ராமலக்ஷ்மியைக் காணவில்லையே என்று நினைத்தேன். ஆனால் நெகட்டிவாக எதுவும் தோன்றவில்லை.

    உங்கள் பதிவு வாசித்ததும்தான் தெரிகிறது காரணம். சிகிச்சை பயமுறுத்துகிறது. எப்படியோ அதையும் கடந்து இப்போது வந்தாலும் பழையபடி நன்றாகி குறிப்பாகப் புகைப்படம் எடுக்கும் சூழல் வந்து உங்களை மகிழ்விக்க வேண்டும்,

    தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள். புத்தாண்டு வாழ்த்துகள் விரைவில் சுகமாகிட வாழ்த்துகள். இனி எல்லாம் சுகமே!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. தீபாவளி அன்று எங்கள் வீட்டிலும் ஒரு விபத்து. மீண்டு வந்தாச்சு. எனக்கு அதிகம் பாதிப்பில்லை. ஆனால் அப்பாவுக்கு. மீண்டு வந்தாச்சு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டு வந்தது அறிந்து ஆறுதல். கவனமாக இருந்திடுங்கள்.

      நீக்கு
  8. குடும்பத்தினரது அன்பான அரவணைப்பு, சிறப்புப் பயிற்சிகள், நண்பர்களின் அன்பு மற்றும் பிரார்த்தனைகள், நல்ல ஆரோக்கியமான இனிய சூழலை உருவாக்கட்டும்.

    விரைவில் முழுமையாகக் குணமடைந்து, உங்கள் அற்புதமான சுயத்தை விரைவில் பெறுங்கள்.

    இனிய புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. இயல்பு நிலைக்கு மீண்டு இன்னும் சுறுசுறுப்பாக உங்கள் எழுத்திலும் புகைப்படக் கலையிலும் இனிதே இன்னும் சாதனைகள் படைத்திட இறைவனை வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  10. மனதுக்கு சங்கடமான ஓய்வு மீண்டு வந்துள்ளீர்கள் . பணிகள் சிறப்பாக வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin