பொம்மைகளை வைத்து செய்யப்படும் கொலு வழிபாட்டு முறை தென்னிந்திய மாநிலங்களில் சிறப்பாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ் மொழியில் பொம்மை கொலு என்பது ‘தெய்வீக இருப்பு’ என்ற பொருளிலும், தெலுங்கு மொழியில் பொம்மல கொலுவு என்பது ‘பொம்மைகளின் கோட்டை’ என்ற பொருளிலும், கன்னட மொழியில் பொம்பெ ஹப்பா என்பது ‘பொம்மைத் திருவிழா’ என்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. கொலு என்றாலே அழகு என்று பொருள். அழகிய திருவிழாவின் முதல் பாகம் இங்கே. தங்கை வீட்டின் கொலுப் படங்கள் இரண்டாம் பாகமாக இந்தப் பதிவில் தொடருகிறது:
கொலுக் காட்சிகளுக்குப் பொருத்தமாக ஓவியங்களை இணையத்தில் தேர்வு செய்து, தேவையான அளவில் அச்சகத்தில் பிரசுரித்து வாங்கி, நான்கு பின் திரைகளை (backdrops) அமைத்திருந்தார் தங்கை.
இந்த வருடம் எங்கள் குடியிருப்பின் க்ளப் ஹவுஸில் அனைத்து மகளிர் ஒத்துழைப்புடன் வைக்கப்பட்ட கொலு. ஒன்பது நாட்களும் மாலையில் பூஜை நடைபெற்றதோடு, குழந்தைகள், பெரியவர்கள் பாட்டுப் பாடியும் சிறப்பித்தார்கள்.
#15
*********
இதோ அடுத்த பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. விழாக்கள் மக்களிடையே உற்சாகத்தையும் நல்ல அலைகளையும் பரப்பட்டும்!
சந்தோஷங்களை பரப்பும் விழாக்கள். வித்தியாசமான, அழகான வண்ணமயமான கொலு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குமீண்டு வந்ததில் மகிழ்ச்சி. .வருக.
நீக்குஆம் வந்து விட்டேன் :). நன்றி ஸ்ரீராம்.
நீக்குமிக அருமையாக இருக்கிறது தங்கை வீட்டு கொலு . கொலுவிற்கு பொருத்தமாக ஓவியங்கள் அமைத்து இருப்பது மேலும் அழகாய் இருக்கிறது. பொம்மைகள் பளிச் என்று மின்னுகிறது.
பதிலளிநீக்குகொலு படங்கள் எல்லாம் பேசுவது உண்மை.
உங்கள் வீட்டு சரஸ்வதி அம்மன் அழகு.
நன்றி கோமதிம்மா.
நீக்குபடங்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குதங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
மிக்க நன்றி.
நீக்குஉங்கள் தங்கை ரொம்ப அழகாகக் கற்பனைத்திறனுடன் வைத்திருக்கிறார். கொலு பொம்மைக்குப் பொருத்தமாக ஓவியங்களை தேர்ந்தெடுத்து பின் திரையாக வடிவமைத்திருப்பது தத்ரூபமாக இருக்கு குறிப்பா அந்த அரண்மனை வடிவங்கள்....செம...மிகவும் வித்தியாசமான கொலு. பொம்மைகளும் அழகு. எவ்வளவு உழைப்பு!
பதிலளிநீக்குகுடியிருப்பு கொலுவும் அழகாக இருக்கிறது. உங்க வீட்டு சரஸ்வதி செம..
ரசித்துப் பார்த்தேன, ராமலஷ்மி.
கீதா
நன்றி கீதா.
நீக்குகாளிங்க நர்த்தனம் மிக அழகு!
பதிலளிநீக்குமகாபாரதத்தின் சூதாட்டம் காட்சியமைப்பும் வியக்க வைக்கிறது.
நன்றி மனோம்மா.
நீக்கு