ஞாயிறு, 22 ஜனவரி, 2023

நீங்கள் நீங்களாகவே..

#1
"கம்பீரமாக உங்களை முன்னிறுத்துங்கள்... 
நீங்கள் எவ்வாறாக இருக்கிறீர்களோ அவ்வாறாகவே!"
_Thasleem Rayeesha
#2
"மற்றவர்களது வாழ்க்கையைக் கவனிப்பதை நிறுத்திடுங்கள். 
மற்றவர்கள் கவனிக்க விரும்பும் வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள்."


#3
"தவறாகி விடும் என்பதைப் பற்றி மட்டுமே சிந்திக்காதீர்கள். 
எது சரியாக நடக்கும் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள்."


#4
"வார்த்தைகளை உபயோகிக்காத குரல் ஒன்று உள்ளது. 
கவனியுங்கள்."
- Rumi


#5
"கடமையைப் பற்றி தெளிவாக உள்ளேன். 
என்ன நேரினும் அதை நிறைவேற்றிடுவேன்."

#6
“உங்கள் வார்த்தைகள் உங்கள் குணத்தைக் காட்டும் கண்ணாடி, 
கவனமாக அவற்றைத் தெரிவு செய்யுங்கள்.”


*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 150
பறவை பார்ப்போம்.. - பாகம்: 90
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பதுஇயலும் வரைத் தொடரும் ..:)!
***


7 கருத்துகள்:

  1. படங்கள் ஒவ்வொன்றும் அழகு.  வரிகளும் பிரமாதம்.  முதல் படம் அதற்கு கொடுக்கப்பட்ட வரிகளோடு அழகாக மேட்ச் ஆகிறது.  பாரிஸ்டர் கோட் போட்ட சிவாஜி கணேசன் போல கம்பீரமாக தோள்களை அகட்டி நிற்கிறது அந்தப் பறவை.

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான தொகுப்பு. படங்களும் அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை ராமலக்ஷ்மி.முதல் படம் நல்ல கம்பீரம்தான்.
    படங்களுக்கு பொருத்தமான வரிகள், நல்ல தேர்வு.

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு வரிகளும் அற்புதம் .

    பதிலளிநீக்கு
  4. படங்களும் அவற்றிற்கான வாசகங்களும் அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin