வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

விநாயக சதுர்த்தி வாழ்த்துகள் !

#1 நண்பர்கள் அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!


பெங்களூரில் இந்த வருடம் Eco friendly_ஆகப் பண்டிகையைப் கொண்டாட வேண்டி மேற்கொள்ளப்பட்டு வருகிற விழிப்புணர்வு நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதாக உள்ளன. நேற்று எடுத்த சிலவற்றோடு, பல்வேறு சமயங்களில் எடுத்த வினை தீர்க்கும் விநாயகரின் படங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

#2 முழு முதற் கடவுள்

#3 சயனக் கோல கணபதி

#4 நர்த்தன கணபதி

 #5 பொற்பாதங்கள் சரணம்


# 6 கணபதி பப்பா

#7 துங்கக் கரிமுகத்துத் தூமணியே..

#8 மஹா கணபதி

சுற்றுச்சூழல் பாதுகாக்க தன்னார்வலர்களும் கர்நாடக அரசும் இந்த வருடமும் வர்ணம் தீட்டிய பிள்ளையார் சிலைகளை வாங்காமல் களி மண்ணாலான பிள்ளையார் சிலைகளை வாங்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

#9

எந்தெந்த இடங்களில் மண் சிலைகள் கிடைக்கின்றன என்பதையும் செய்தித் தாள்களில் அறிவித்திருப்பதோடு, பொது இடங்களில் துண்டுப் பிரசுரங்களாகவும் வழங்குகிறார்கள். FM ரேடியோவிலும் நிகழ்ச்சிகளுக்கு நடுவே தெரிவிப்பதோடு அதன் அவசியத்தை விளக்கி வருகிறார்கள்.

#10

ஆனாலும் கூட பத்து கடைகளுக்கு ஒரு கடை என வண்ணப் பிள்ளையார்கள் விற்பனையும் தொடரவே செய்கிறது.

#11

வருடக் கணக்காக வண்ண பிள்ளையாரை வணங்கிப் பழகி விட்டவர்கள் களிமண் சிலைகள் முன் தயங்கித் தயங்கி நின்று விட்டு பின் வண்ண பிள்ளையாரை வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது. இவர்களும் மாறுவார்கள். சில வருடங்களுக்கு முன் வரை பத்து அல்ல, இருபது வண்ணச் சிலை கடைகளுக்கு ஒரு கடை.. களிமண் சிலைகள் என்ற விகிதத்தில் விற்பனை இருந்து வந்தது. அந்த நாட்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நல்ல முன்னேற்றம் என்றே சொல்ல வேண்டும்.

#12

ஆனை முகத்தோனின் ஆசிர்வாதங்களோடு 
இயற்கை அன்னையின் அருளையும் 
சேர்த்துப் பெற்றிடுவோம்!
***

25 கருத்துகள்:

  1. எத்தனை எத்தனை பிள்ளையார்? பின்னணி ஃபேட் அவுட் ஆகி விநாயகர் தெளிவாகத் தெரிவது அழகு. கொழுக்கட்டை தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் விநாயக சதுர்த்தி தின வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  5. அனைத்துக் கணபதிகளும் கண் கொள்ளாக் காட்சி! நன்றி ராமலக்ஷ்மி. உங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

  6. வணக்கம்!

    பிள்ளையார் பொன்னடியைப் பேணும் மனத்தினிலே
    கொள்ளை இனிமையெனக் கூறு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  7. எத்தனை எத்தனை பிள்ளையார்? பின்னணி ஃபேட் அவுட் ஆகி விநாயகர் தெளிவாகத் தெரிவது அழகு.

    superb vinayka.
    subbu thatha.

    Why not a piece of poetic piece on every picture of Lord Vinayaka!!

    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  8. அழகு அழகாகப் பிள்ளையார்கள். அருள் பொழியும் பார்வை. மிக அருமை ராமலக்ஷ்மி.இனிய விநாயகச் சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. அழகான பிள்ளையார் படங்கள்.....

    உங்களுக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. @sury Siva,

    செய்திருக்கலாம்தான் :). நன்றி சூரி sir.

    பதிலளிநீக்கு
  11. அக்கா போட்டோக்கள் அருமை...
    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  12. அழகான பிள்ளையார்கள்.
    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
  13. ராமலக்ஷ்மி நீங்க எங்கேயோ போயிட்டே இருக்கீங்க... :-) செமையா இருக்கு ஒவ்வொரு படமும்.

    நான் கவனித்த வரை பூ, இடங்கள், பொருட்கள் போன்றவற்றை அதிகம் நிழல்படமாக எடுக்கிறீர்கள். இவற்றோடு மனிதர்களை எடுத்தாலும் இவற்றோடு ஒப்பிடும் போது குறைவு தான். இது போன்ற படங்களையும் அதிகம் எடுக்கவும்.. இவை உயிரோட்டமாக இருக்கும்.

    வடமாநிலம் சென்றால் படம் எடுக்க விதவிதமான மனிதர்கள் கிடைப்பார்கள். ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்து சென்று இது போல படங்களை எடுத்துட்டு வாங்க.. செம அனுபவமா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  14. நன்றி கிரி:).

    உண்மைதான். வடமாநிலங்களில் சுற்றுலாத் தலங்களில் புகைப்படங்கள் எடுத்தால் அதிகமாய் யாரும் ஆட்சேபணை தெரிவிப்பதில்லை.

    வாய்ப்புக் கிடைத்த வரை மனிதர்களை எடுத்தப் படங்களை தனி ஆல்பமாக (People) ஃப்ளிக்கரில் தொகுத்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin