Tuesday, August 19, 2014

175_வது உலகப் புகைப்பட தினமும்.. சில ஆலோசனைகளும்..

175 வருட வரலாறு. உலகப் புகைப்பட தினம்.

இன்றைய நாளில் நாம் அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டிய சில விஷயங்களை இங்கே பதிவது நன்றாக இருக்குமெனத் தோன்றியது:). வாழ்க்கையில் தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் நம் போன்ற கலைஞர்கள் சற்றே கவனம் எடுத்தால் தவிர்த்திட முடிகிற தவறுகள் என்னென்ன எனப் பார்ப்போமா?


* கோணம் முக்கியம். படத்தை க்ளிக் செய்யும் முன் உங்கள் ஃப்ரேமின் எல்லாப் பக்கங்களிலும் கண்களை ஓட்டுங்கள், சப்ஜெக்டுடன் காட்ட வேண்டிய ஏதாவது முக்கியமான விஷயத்தைக் கோட்டை விடுகிறோமா என. என்னதான் பிறகு சரி செய்து கொள்ளலாம் என்றாலும் கோணல் மாணலாக எடுப்பதைத் தவிருங்கள்.


* நாளை கேமராவுடன் கிளம்புகிறோம் என்றால் முந்தைய இரவே பேட்டரியை சார்ஜில் போடுங்கள். அவசியப்பட்டால் backup battery ஒன்றும் வைத்துக் கொள்ளலாம்.


* மோசமான சீதோஷ்ண நிலைகளிலிருந்து உங்கள் கேமராவைப் பாதுகாக்கத் தவறாதீர்கள். பூஞ்சனம் ஏற்படாமலிருக்க கேமரா பையில் சிலிகான் ஜெல் பாக்கெட் ஒன்றைப் போட்டு வையுங்கள். அடிக்கடி உபயோகிக்காத லென்சுகளை அவற்றிற்கான pouch_களில் போட்டு அதை ஜிப் லாக் பைகளில் பத்திரப் படுத்துங்கள்.

Stay Focused
* மெமரி கார்டை மறக்காதீர்கள்.
கேமராவிலேயே கூட சேமிக்க முடியுமென்றாலும் அதன் கொள்ளளவு கம்மியே. முன்னர் எடுத்த படங்களை டிரான்ஸ்ஃபர் செய்து விட்டு காலி மெமரி கார்டை எடுத்துப் போகலாம் எனக் கடைசி நேரத்தில் லாப்டாப்பில் இருந்து எடுக்காமலே விட்டு விட்டுக் கிளம்பி வந்து “அடடா” என வருந்திய கலைஞர்களைக் கண்டிருக்கிறேன். முன் போலில்லாமல் அதிக கொள்ளளவில் மெமரி கார்ட் கிடைக்கின்றன. ஆனாலும் கூட ஒன்றே ஒன்றென இருக்காமல் வெளியில் செல்லுகையில் வெவ்வேறு கொள்ளளவில் 2,3 வைத்துக் கொள்வது நல்லது.*வெளியிடங்களில் லென்சுகளை மாற்றும் போது என்ன அவசரமானாலும் சரியாகப் பொருத்தியிருக்கிறோமா எனப் பார்ப்பது அவசியம்.

*ட்ரைபாட் உபயோகிக்கும் போதும் எல்லா கால்களையும் ஒரே அளவில் பொருத்தியிருக்கிறோமா, கேமராவை சரியாக டைட் செய்திருக்கிறோமா என நன்றாக பரிசோதித்த பிறகே படமெடுக்க ஆரம்பிக்க வேண்டும். சின்ன அளவிலான தவறு  கூட கேமராவோடு லென்சையும் சேர்த்துக் கவிழ்த்து விடும். கவனம்!

* படமெடுக்கும் முன் லென்ஸ் கேப்_ஐ கழட்ட மறக்காதீர்கள்:). அதை பத்திரப் படுத்துவது அதை விட முக்கியம். சின்னதாக இருப்பதால் அங்கே இங்கே வைத்தால் கண்ணுக்குப் படாமல் போகும். சட்டைப் பையிலோ, கேமரா பையிலோ போட்டுக் கொள்வது பாதுகாப்பு.


"Passion is energy. Feel the power that comes from 
focusing on what excites you." - Oprah Winfrey
* முந்தைய செட்டிங்கில் இருக்கும் கேமராவை அப்போதைய தேவைக்கேற்ப மாற்ற மறக்காதீர்கள். ஓரிரு நிமிடங்கள் அவற்றைச் சரி பார்த்தபிறகு படமெடுக்க ஆரம்பித்தால் பிறகு கோணங்களில் கவனம் செலுத்த முடியும்.

* கேமரா ஸ்ட்ராப் கழுத்திலோ கையிலோ சரியாகப் பிடித்திருங்கள். நழுவி விழுந்த பிறகு வருந்திப் பயனில்லை.* சப்ஜெக்டிலிருந்து பாதுகாப்பான தொலைவிலிருந்து படம் எடுங்கள். பாதுகாப்பு உங்களுக்கும் வேண்டும். கேமராவுக்கும் வேண்டும்:).


*எடுக்கும் படத்தை செட்டிங் சரியாக இருக்கிறதா என்பதற்காகப் பார்ப்பது சரி. மற்றபடி ஒவ்வொரு படமும் எப்படி வந்திருக்கிறது என அடிக்கடி பார்த்தபடி நிற்காதீர்கள்.  கவலைப் படாமல் தொடர்ந்து எடுங்கள். இல்லையெனில் அழகான காட்சிகள் பலவற்றைத் தவற விட நேரலாம்.


*ஒவ்வொரு ஷூட் முடிந்த பிறகும் படங்களை (laptop, external hard disk, net என) குறைந்தபட்சம் இரண்டு இடங்களிலாவதுசேமித்து வையுங்கள்.

* அடுத்த நீண்ட நேரத்துக்குப் படமெடுக்கப் போவதில்லை என்றால் கேமராவை ஸ்விட்ச்சை அணைத்திடுங்கள். பேட்டரி பவர் வீணாவது மட்டுமல்ல, கவனிக்காமல் பல நாட்களுக்கு விட்டுவிடும் பட்சத்தில் லீக் ஆகவும் வாய்ப்பிருக்கிறது.

* எத்தனை அபூர்வமான காட்சியானாலும் பரபரப்பாகப் படம் எடுக்காதீர்கள். அந்தப் படபடப்பே படங்களை அற்புதமாக வரவிடாமல் பாதித்திட வாய்ப்புள்ளது. எந்த சூழலானாலும் தெளிவாக, ரிலாக்ஸ்டாக படமெடுத்துதான் பாருங்களேன்:)!


 புகைப்படக் கலைஞர்கள், ஆர்வலர்கள் அனைவருக்கும் 
உலகப் புகைப்பட தின நல்வாழ்த்துகள்! 


HAPPY CLICKING!
***


இந்தப் பகிர்வு தமிழில் புகைப்படக் கலை (PiT) தளத்திலும்.

தொடர்புடைய முந்தைய பதிவு:
உலகப் புகைப்பட தினம் - புகழ் பெற்றக் கலைஞர்கள் என்ன சொல்றாங்கன்னா..15 comments:

 1. உங்களுடைய அனுபவபூர்வமான பயனுள்ள போட்டோகிராபி ஆலோசனைகள். நானும் ஒரு ஆர்வலர் மற்றும் போட்டோகிராபர் என்ற முறையில் உங்கள் வலைத்தளம் வழியே உங்களுக்குக்கும் மற்றவர்களுக்கும் ’உலக புகைப்பட தினம்’ – வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்! நன்றி!
  த.ம.2

  ReplyDelete
 2. அதானே... புகைப்பட தினத்துக்கு உங்களிடமிருந்து பதிவில்லாமலா....

  இந்த சார்ஜரில் பேட்டரியைப் போடுவது- அதுதான் பெரும்பாலும் விட்டு விடுவோம்!

  எல்லாமே மிக மிக உபயோகமான டிப்ஸ். சின்ன விஷயங்கள் என்று நாம் நினைப்பவற்றில்தான் பெரும்பாலும் கோட்டை விடுவோம்!


  ReplyDelete
 3. பலருக்கும் பயன்படும் ஆலோசனைகளை சொல்லியுள்ளீர்கள்.

  வாழ்த்துகளும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 4. அத்தனையும் முத்துக்களே!!!!

  கவனத்தில் வைத்துக் கொள்கின்றேன்.

  நன்றீஸ்ப்பா.

  ReplyDelete
 5. நல்ல டிப்ஸ். கற்றுக் குட்டிகளுக்கும் பயன் தரும்.

  ReplyDelete
 6. நல்ல யோசனைகள்... லென்ஸ் பாதுகாப்பு பற்றியது, அட, தெரியாம போச்சே!

  ReplyDelete
 7. @தி.தமிழ் இளங்கோ,

  அனுபவத்தோடு புத்தகங்களில் வாசித்து அறிந்தவையும் சேர்த்துப் பகிர்ந்திருக்கிறேன். வாழ்த்துகளுக்கு நன்றி.

  ReplyDelete
 8. @ஸ்ரீராம்.,

  ஆம். அதேதான்:). சின்ன விஷயங்களிலும் கவனம் தேவை. நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 9. உங்களுக்கும் உலகப் புகைப்படத் தின வாழ்த்துக்கள்!
  மிகவும் பயனுள்ள தகவல்களை தொகுத்தளித்துள்ளீர்கள்.
  பெரும்பாலும் தெரிந்தவிடயங்கள் என்று அலட்சியமாக இருக்கும் விடயங்களில் தவறுவதால் சரியாகப் புகைப்படம் எடுக்கமுடியாதுபோகும் சந்தர்ப்பங்கள் அனேகம்.
  சிலமுறை தவறுவிட்டதால் கற்றுக்கொண்ட பாடத்தில் DSLR ஐப் பயன்படுத்தும் முன்னர் சரிபார்ப்பதற்காக என்று ஒரு பட்டியல் தயாரித்துப் புகைப்படக் கருவிகள் வைக்கும் பையினுள்ளேயே வைத்துள்ளேன். சுட்டி: http://clicking-moments.blogspot.com.au/2013/05/pre-shoot-checklists-for-amateur.html
  இப்பொழுதெல்லாம் படம்பிடிக்கக் கிளம்பமுன் சரிபார்த்துவிட்டே கிளம்புவது வழக்கம்.

  ReplyDelete
 10. @Vijay,

  நீங்கள் தந்திருக்கும் சுட்டியும் பயனுள்ளது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 11. அருமையான உபயோகமான குறிப்புகள்.
  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  பயணம் காரணமாய் நிறைய பதிவுகள் படிக்க காலதாமதமாகிறது.
  இன்னும் பயணம் ஓயவில்லை.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin