Sunday, March 2, 2014

ரெண்டு ரூவாய்க்கு.. - நம்மைச் சுற்றி உலகம்

#1 சிற்றருவியின் சங்கீதம்

#2 எந்தப் பூவிலும் வாசமுண்டு

#3 பூப் போலே உன் புன்னகையில்..

 #4 பூவும் தளிரும்..
#5 பொன்னான முதுமை


#6 உன்னால் முடியும் கண்ணே..


#7 அமைதி தவழும் புத்தரின் முகம்.. 
சலசலக்கும் நீரூற்றாக..
#8 பொது இடத்தில்.. நடை பாதையில்..
Keep the environment clean
மாறுங்கப்பா...
எடுக்கணும்னு எடுத்த காட்சியில்லை இது. விழி விரியப் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தவரை எடுக்க ஃபோகஸ் செய்து முடித்து ‘க்ளிக்’கிய வேளையில் இப்படி மாட்டி விட்டார். பதியாமலே வைத்திருந்த படத்தை விழிப்புணர்வுக்காக இருக்கட்டுமென சமீபத்தில் வலையேற்றினேன் ஃப்ளிக்கரில். இத்தனைக்கும் தோளிலே கிடக்கிறது துண்டு..

#9 வாழ்வின் வர்ணங்கள்
  

 #10 'ரெண்டு ரூவாய்க்கா..?!?!'

மனித மனமும்.. மாறாத இவர் வாழ்க்கைத் தரமும்..
பெரிய உணவு விடுதிகளிலும், பல்பொருள் அங்காடிகளிலும் சொன்ன விலையைக் கொடுக்கிற மனிதர்கள், பேரம் பேசுவதெல்லாம் வேகாத வெயிலில் அவதிப்படும் வீதியோர சிறுவியாபாரிகளிடம்தானே!
**


நம்மைச் சுற்றி உலகம் (பாகம் 2)

***
15 comments:

 1. அத்தனையும் ஜூப்பர்.

  துண்டு அவரைப் பொறுத்தவரை ஒரு அலங்காரம், அவ்ளோதான்.

  ReplyDelete
 2. ஓரிரண்டு படங்களை முன்னரே ரசித்திருக்கிறேன். எல்லாமே அருமை.

  ReplyDelete
 3. @சாந்தி மாரியப்பன்,

  அப்படிதான் தெரிகிறது. நன்றி சாந்தி.

  ReplyDelete
 4. @ஸ்ரீராம்.,

  நன்றி ஸ்ரீராம். flickr மற்றும் fb_யில் பகிர்ந்தவற்றின் தொகுப்புதான்:).

  ReplyDelete
 5. அத்தனை படங்களும் ரசனைக்கு விருந்து. மால்களின் கொள்ளையடிக்கும் பார்க்கிங் கட்டணங்கள், முகம்மூடா ஆட்டோக் கொள்ளைகள் என்று எங்கெங்கும் பொறுமை காக்கும் நம் மக்கள் சாலையில் பூ, பழம் விற்பவர், செருப்பு தைப்பவரிடம் பேரம் பேசுவதை பல சந்தர்ப்பங்களில் கண்டு நானும் வருந்தியதுண்டு. அந்த கடைசிப் பாரா எனக்கு மிகப் பிடித்தமாக இருக்கிறது!

  ReplyDelete
 6. @பால கணேஷ்,

  நன்றி. உண்மைதான். அந்த மனிதரின் கண்களில் இருக்கும் அதிர்ச்சியைப் பாருங்கள்.

  ReplyDelete
 7. அனைத்துப் படங்களும் அருமை!

  *'ரெண்டு ரூவாய்க்கா..?!?!'
  மனித மனமும்.. மாறாத இவர் வாழ்க்கைத் தரமும்.. *

  எளிய மனிதர்களுக்காக தங்களைப் போன்றவர்கள் சிந்திப்பதும், அதனை பிறரும் பின்பற்ற வேண்டும் என்கிற விருப்பமும் இயற்கை அவர்களை கைவிடவில்லை என்பதன் வெளிப்பாடுதான். மிக்க நன்றி.

  ReplyDelete
 8. @ராமலக்ஷ்மி
  ஆமாம், அந்த மனிதரின் கண்ணில் தெரியும் அதிர்ச்சியைப் பார்த்தால், அவர்கள் கேட்கும் பணத்தைவிட கூடுதலாகக் கொடுக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், இன்று யாரும் மனிதர்களை மனிதர்களாகப் பார்ப்பதில்லை. எந்திரமாகவே பார்க்கிறார்கள்!

  ReplyDelete
 9. அருமையான படங்கள்......

  இங்கே தில்லியில் ரிக்‌ஷாவாலாக்களிடம் பேரம் பேசுவார்கள் - பார்க்கவே கஷ்டமாக இருக்கும்..... அவரது உடல் உழைப்பினை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை!

  ReplyDelete
 10. @அமைதி அப்பா,

  சிறு வியாபாரிகளிடம்தான் மனிதர்கள் பெரும்பாலும் விடாமல் பேரம் பேசுவார்கள்:(! கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 11. @வெங்கட் நாகராஜ்,

  நன்றி வெங்கட். ஆம். வருத்தம் தருகிற விஷயம் இது.

  ReplyDelete
 12. அனைத்துப்படங்களும் அருமை.

  "பொதுஇடத்தில்"படம் நல்ல அறிவுறுத்தல்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin