வியாழன், 6 மார்ச், 2014

குங்குமம் இதழில்.. - பிடித்த 'பெண் மொழிக் கவிதை'..

 மகளிர் தினத்தையொட்டி ‘பெண்கள் ஸ்பெஷலாக’ வெளிவந்துள்ள (10.03.2014) இந்த வாரக் குங்குமம் வார இதழில்...

பிடித்த பெண்மொழிக் கவிதையாக..

‘சிலைகள் அமைதியிழக்கும் நாட்கள்’:

அகஸ்டஸின் 'டீக்கடைச்சூரியன்' தொகுப்பிலிருந்து..
நன்றி குங்குமம்!

அ.வெண்ணிலா, சாந்தி மாரியப்பன், உமா ஷக்தி, லாவண்யா, தி.பரமேஸ்வரி, மதுமிதா, உமா மோகன், சக்தி ஜோதி, பத்மஜா நாராயணன் உள்ளிட்ட மேலும் பல பெண் கவிஞர்களுக்குப் பிடித்த கவிதைகள் இதழின் வெவ்வேறு பக்கங்களில் இடம் பெற்றுள்ளன.

கவிதைகளைப் படைத்தவர்களுக்கும், பகிர்ந்த தோழிகளுக்கும் வாழ்த்துகள்!
***

17 கருத்துகள்:

  1. என்ன ஒரு வித்தியாசமான கற்பனை! சிலையின் அவஸ்தை ரசனை.

    பதிலளிநீக்கு
  2. கவிதை அருமை...
    பகிர்ந்த அனைத்துச் சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்...
    கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்...
    உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  3. இந்தக் கவிதைப் புத்தகம் என்னிடமும் இருக்கிறது ராமலெக்ஷ்மி. எனக்குப் பிடித்த கவிதையும் இதுதான்.:)

    பதிலளிநீக்கு
  4. கவிதை ஏன் பிடித்தது என்பதையும் பிரசுரித்திருந்தால் தமிழ் ரசனை வளர பேருதவியாக இருக்கும்,

    பதிலளிநீக்கு
  5. @Thenammai Lakshmanan,

    ஆம், மிக நல்ல கவிதை. நன்றி தேனம்மை:).

    பதிலளிநீக்கு
  6. @ஜமதக்னி,

    பெண்களுக்கு ஆதிகாலம் தொட்டு இன்றளவிலும் சமூகத்தில் நிலவி வரும் ஒரு அவலச் சூழலை கவிதை சிறப்பாகச் சித்தரிப்பதாகக் கருதுகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. தில்லி நண்பர் அகஸ்டஸ் அவர்களின் கவிதை மீண்டும் ஒரு முறை படித்து மகிழ்ச்சி.....

    இப்போதெல்லாம் ஏனோ அதிகம் எழுதுவதில்லை......

    பதிலளிநீக்கு
  8. என்ன ஒரு கற்பனை.பெண்களின் நிலையை இதைவிட அற்புதமாகச் சொல்ல முடியுமா.நன்றி ராமலக்ஷ்மி. திரு.அகஸ்டஸிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. @வெங்கட் நாகராஜ்,

    நன்றி வெங்கட். அவரது கவிதைத் தொகுப்புக்கு நீங்களும் நூல் மதிப்புரை எழுதியிருந்த நினைவிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. கு(ட்)டிக் கவிதை - ஒரு ரசிகனின் பார்வை.

    சில நாட்களுக்குமுன் இவ்விதழில் வெளியாகி சரியான கவனம் ஈட்ட முடியாமல் தோல்வியடைந்த கு(ட்)டிக் கவிதை பற்றிய என் வாசிப்பு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். முற்றிலும் புதிய எழுத்தாளர் என்பதால் ஒரு சீரிய படைப்பு கவனம் பெறாமல் போய்விடக்கூடாது என்ற எண்ணமே இதை எழுதும் தூண்டுகோலாக அமைந்துள்ளது என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். கவிதை, தலைப்பு குறிப்பிடுவதுபோல் குட்டியாக இருப்பதால் முழு கவிதையும் கீழே கொடுத்துள்ளேன்.

    மதுக்கடை முற்றத்தில்
    மல்லாக்க கிடக்குது
    மனமொடிந்து
    மிதிவண்டி

    கவிதையின் தலைப்பிலேயே இது குட்டி கவிதையா இல்லை குடி கவிதையா என்ற படைப்பாளியின் குழப்பம் அவர் குடிச்சாலைக்கு (Bar) உள்ளே இருந்து வரும்பொழுது இதை பார்த்தாரா என்ற எண்ணத்தை நமக்கு ஏற்ப்படுத்துகிறது. படைப்பாளியின் உண்மை அனுபவத்தின் தூண்டுதலால் பீறிட்ட உணர்ச்சி கொந்தளிப்பே படைப்பின் மூலம் என்ற எண்ணம் படைப்பை கூர்ந்து நோக்க ஒரு சிறந்த ரசிகனை தூண்டுவதில் வியப்பேதுமில்லை அல்லவா?

    மதுக்கடை வாயில்களிலும் அவற்றை சார்ந்த பகுதிகளிலும் மல்லாக்க கிடக்கும் மனிதர்கள் இந்தியா போன்ற வளர்ச்சியடைந்து விட்டதாக பாவிக்கும் நாடுகளில் சகஜம் என்பதாலோ என்னவோ மல்லாக்க கிடக்கும் மிதிவண்டி கவிஞரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பரபரப்பாக இயங்கிக்கொன்டிருக்கும் மதுக்கடை வாயிலில் நடுக்கூடத்தில் கிடத்தப்பட்ட திரு திருவென விழித்துக்கொண்டிருக்கும் குழந்தை போல கிடக்கும் மிதிவண்டி ஒரு மெல்லிய கவி உள்ளத்தின் அனுதாபத்தினை ஈட்டியைருப்பது பொருத்தம் தான்.
    அஃறினை யான மிதிவண்டிக்கு மனமிருக்கிறதா? என்ற இலக்கணம் மற்றும் அறிவுபூர்வமான கேள்விகளுக்கு இங்கு இடமுண்டா? மனிதனுக்கும் அவன் வழித்துணையான வண்டிக்கும் இடையே உளவியல் ரீதியிலான ஒரு இன்ங்காணமுடியா பிணைப்பு இருப்பதை வாகனமோட்டிகளே அறிவார். எவ்வளவோ வாகன உரிமையாளர்களால் தங்கள் வாகனங்களை அஃரிணையாக எண்ண முடிவதில்லை என்ற உண்மை உறைக்கும்பொழுதும் கவிதையின் தளம் பலமடங்கு விரிவடைந்து ரசிகனுக்கு உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்த காரணமாக அமைகிறது. எனக்கு தெரிந்த மது அருந்தும் நண்பர்களில் ஒருவர் குடித்து விட்டு வண்டியில் செல்லும்பொழுதெல்லாம் 'ஒண்ணும் பிராப்ளம் இல்லீங்க; ஏறி உக்காந்தா இது தானா வீட்டுக்கு போயிடும்' என்று அனைவரையும் சமாதானம் செய்து விட்டு போவது இங்கு நினைவு கூறத்தக்கது. குதிரையையும் இழந்த செக்காவின் வண்டிக்காரர்களாக இன்று பலர் வண்டிகளுடன் உளவியல் பிணைப்பு கொண்டுள்ளனர் என்பதே மறுக்க முடியாத உண்மை. அப்படிப்பட்ட வண்டிக்கு மனமிருக்கும் என்ற நம்பிக்கை 'கடவுள் இருக்கிறார்' என்பதுபோல நிரூபிக்க முடியாத நம்பிக்கைகளில் ஒன்று என்றால் அது மிகையல்ல.

    மல்லாக்க ஒரு முறை விழுவதற்குள் உடைந்து விடுமா மனம் என்ற நியாயமான கேள்வியை தொடர்ந்து, மல்லாக்க கிடத்தப்பட்டதா அல்லது விழுந்ததா இந்த மிதிவண்டி என்கிற ஐயம் எழுவது இயற்கையே. தன் வாழ்கையின் ஒரு பகுதியாகி ஆற்றாமைகளையும் அவமானங்களையும் பகிர்ந்து கொள்ளும் தன் வண்டியை எந்த ஒரு மனிதனும் இப்படி வீசியெறிந்து விட்டு செல்ல மாட்டான். அவன் குடிச்சாலைக்குள் செல்லும்பொழுது நிதானம் தவறாமல் மிதிவண்டியை ஒழுங்காக நிறுத்தி தான் சென்றிருக்க வேண்டும். கடைவீதியின் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் 'இங்கேயே நில்லு, இப்ப வந்திடறேன்' என நிறுத்தப்பட்ட குழந்தையின் உள்ளம் போல மிதிவண்டியின் உள்ளமும் உடைந்து போயிருக்கலாம். அல்லது இவ்வளவு நேசிக்கும் தன்னை இந்த குடிகாரர்கள் நடுவில் அனாதையாகி விட்டு சென்றானே. அதிலும் கேவலமாகி எவனோ ஒரு குடிகாரனால் தள்ளப்பட்டு இவ்வளவு கேவலமாக வீழ்ந்து கிடக்க வேண்டியதாயிற்றே என அதன் மனம் உடைந்திருக்குமோ? 'அட பாவி, இன்றுமா கையிலிருக்கும் காசு முழுவதர்க்கும் குடித்து விட்டு கேவலப்பட போகிறாய்' என்ற எண்ணத்தினால் கூட அவன் வாழ்கையின் சுக துக்கங்கள் அனைத்தும் அறிந்த அதன் மனம் உடைந்திருக்கலாம் அல்லவா?

    இப்படி முடிவில்லாத எண்ண குமு(ழ)றல்களை ரசிகர்கள் மனத்தில் மிகசச் சில வார்த்தைகளில் ஏற்படுத்தும் இக்கவிதை இந்த நூற்றாண்டின் சிறந்த கவிதைகளில் ஒன்று என்று சொன்னால் மிகையாகாது. மேலும் 'மனமொடிந்து' என்ற வார்த்தையினை 'நிறமிழந்த' என்று மாற்றுவதன் மூலம் தமிழ் ஹைகூக்களில் சிறந்தவற்றுள் ஒன்றாக இக்கவிதை மாறிவிடும் வாய்ப்பும் இதன் சிறப்பை வலுப்படுத்துகிறது. கவிஞரின் தொண்டு சிறக்க வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin