வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

தூறல் 14 - என் வானம்; அடை மழை; அகநாழிகை; பெஸ்ட் ஃபோட்டோகிராபி டுடே; குமரியில் புகைப்படப் பிரியன்

அடை மழை
சென்னை புத்தகக் கண்காட்சிக்கு எனது புத்தகங்களை வாங்கவென்றே சென்றதுடன், வாங்கிய கையோடு அங்கிருந்து மகிழ்வோடு வாழ்த்துத் தெரிவித்தவர், நான் விரும்பி வாசிக்கும் 'என் வானம்' தளத்துக்குச் சொந்தக்காரரான அமுதா. அடுத்த இருதினங்களில் திடீர்ப் பயணமாக அலுவலக வேலையாக பெங்களூர் வந்தவர் வேலை முடிந்ததும் மறுநாள் காலையில் கிளம்பும் திட்டத்தை என்னைச் சந்திக்கவென மாற்றிக் கொண்டு மாலை விமானத்துக்கு டிக்கெட் எடுத்திருந்தார். அடைமழை போன்றதான அன்புக்கு நன்றி அமுதா:). இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் பெங்களூர் வந்திருந்தபோது முயன்றும் முடியாது போன சந்திப்பு, இந்த முறை இனிதாக நடந்தது என் இல்லத்தில். சென்னையில் வாங்கிய என் நூல்களை பெங்களூர் வரை கொண்டு வந்து கையெழுத்து வாங்கி, ஜீப்பில் ஏற்றினார் என்னை:)!அவருக்கு நான் ஊக்கம் தருவதாகச் சொல்வார். நான் ஃபேஸ்புக்கில் சிந்தனைத் துளிகள் பகிர ஆரம்பித்த போது, ‘நீங்கள் எடுத்த படங்களோடு பகிர்ந்திடுங்கள்’ என்ற அவரது ஆலோசனையைப் பின்பற்றத் தொடங்கியதில், பகிரும் ஒவ்வொரு படத்துக்கும் பொருத்தமான தினமொழிகளைத் தேட, சிந்திக்கக் காரணமாகி விட்டார்.  எழுத்துக்கும் சரி, ஒளிப்படங்களுக்கும் சரி இணையத்தில் என் வானமாக இருப்பது நட்புகள் தரும் ஊக்கமே. எனக்கு மட்டுமன்றி இது நம் அனைவருக்குமே பொருந்தும்தான், இல்லையா:)?
 **

ண்காட்சியில் என் புத்தகங்கள் ஓரளவுக்கு நல்ல விற்பனையானதாகப் பதிப்பாளர் தெரிவித்தது மகிழ்ச்சியைத் தந்தது. வாங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் இங்கு எனது மனமார்ந்த நன்றி! புதிய வெளியீடுகள் அனைத்தையுமே நல்ல முறையில் முன்னெடுத்துச் சென்றதற்கும் ஃபேஸ்புக்கில் அவ்வப்போது படங்களைப் பகிர்ந்து பரவலாகப் பலரையும் தகவல் சென்றடையச் செய்ததற்கும் அகநாழிகை பொன்.வாசுதேவனுக்கு நன்றி.

#அடை மழை சிறுகதைத் தொகுப்பில் கையெழுத்திட்டுத் தருகிறார் உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன். அவருக்கு என் நன்றி.

உயிரோசையில் வெளிவந்த சிறுகதையொன்றும்
தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
# அகநாழிகை வெளியீடுகளைப் பெற்றுக் கொள்ளும் இயக்குநர் மகேந்திரன்
‘அடை மழை’யுடன்..

கநாழிகை வெளியீடுகள் அனைத்தையும் இப்போது ஆன்லைனிலும் வாங்கிடலாம்:


இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு இங்கே கிடைக்கிறது:


அடைமழை’ சிறுகதைத் தொகுப்பு இங்கே கிடைக்கிறது:
**

டந்த ஒரு வருடமாக வெளிவராமல் தடைப்பட்டிருந்த ‘அகநாழிகை’ சமூகக் கலை இலக்கிய இதழ் மீண்டும் வருகிறது:
இனி எண் வழி இதழாக ‘அகநாழிகை’ தொடர்ந்து வெளிவரும். அதாவது நேர்காணல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் ஒரு புத்தகமாகவும், சிறுகதைகள், கவிதைகள், புத்தக விமர்சனங்கள் மற்றொரு புத்தகமாகவும் வெளி வருகிறது.  1/8 புத்தக அளவில் பைண்ட் செய்யப்பட்டு 160 பக்கங்கள் கொண்ட புத்தகமாக நேர்காணல்கள், கட்டுரைகளை உள்ளடக்கிய இதழ் 7 தற்போது அச்சில் உள்ளது. இதழ் 8 ல் சிறுகதைகள் கவிதைகள் இடம் பெறும்.

உலகெங்கிலும் உள்ள ‘அகநாழிகை’ வாசகர்கள் படிப்பதற்கு வசதியாக இன்னும் சில தினங்களில் மார்ச் 2014 இதழ் MAGZTER ல் வாசிக்கக் கிடைக்கும்:

இணையத்தின் வழியாகப் பணம் செலுத்தித் தரவிறக்கம் செய்து வாசித்துக் கொள்ளலாம்.

டிசம்பர் 2013, ‘பெஸ்ட் போட்டோகிராபி டுடே’ பத்திரிகையில்... தினமலர் பொக்கிஷம் பகுதிக்கு தற்போது ஒளிப்படக் கலைஞர்கள் நேரடியாகத் தங்கள் படங்களை வலையேற்றும் வசதி வந்துள்ளது. அது குறித்த தகவல் வெளியீட்டில்... சென்ற வருடம் வெளிவந்த என்னைப் பற்றிய அறிமுகம்...
#
**

ஃபேஸ்புக் ‘புகைப்பட பிரியன்’ குழும உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டதன் பேரில் மெர்வின் ஆன்டோ இரண்டாவது முறையாக நிகழ்த்திக் காட்டி வெற்றி  கண்ட குமரி ஒளிப்படக் கருத்துப்பட்டறை குறித்த விரிவான அறிவிப்பை இங்கே பகிர்ந்திருந்தேன். நிகழ்வுக்கான நாள் நெருங்க நெருங்க வரவை உறுதி செய்த குழும உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பினும் உறுதியுடன் ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி வந்தார் மெர்வின். புகைப்பட பிரியன் குழுமத்தினர் 50 சதவிகிதம் என்றால், அவரே எதிர்பாராத அளவு எண்ணிக்கையில் தமிழகமெங்கிலும் இருந்து தொழில் சார்ந்த, குழுமத்தில் இல்லாத புகைப்பட ஆர்வலர்களும் கூடப் பங்கேற்று நிகழ்வைச் சிறப்பித்து விட்டிருக்கிறார்கள்.
படத்தில் முகமது ரஃபி
படம்: பானு ரேகா T R: புகைப்படப் பக்கம்: AB PHOTOGRAPHY  
இன்றைய தினமலர் இணையப் பக்கத்தில் இவர் குறித்த அறிமுகம்!
வாழ்த்துகள் பானுரேகா:)!
ஒளிப்படக் கலையில் அசத்தி வரும் மகள் அஞ்சனா ஜெயராமுடன் மும்பையிலிருந்து வந்து கலந்து கொண்டிருக்கிறார் இந்திரா ஜெயராம்.

வரவேற்புரை ஆற்றுகிறார் இந்திரா ஜெயராம்.
[படம்: Surya Clicks]

மேலும் ஃபோட்டோ வாக்-கில் கலந்து கொள்ள கணிசமான நண்பர்களுடன் பாண்டிச்சேரி ஒளிப்படக்கலை குழுமத்தினருடன் சென்று சேர்ந்திருக்கிறார் ஒளிப்படக் கலைஞர் முகமது ரஃபி.

“மறக்கமுடியாத கன்னியாகுமரி..” எனத் தன் அனுபவங்களைத் தினமலர் பொக்கிஷம் பகுதியில் பகிர்ந்திருக்கிறார்,  நிகழ்வில் கலந்து கொண்ட தினமலர் பத்திரிகையைச் சார்ந்த ஒளிப்படக் கலைஞர் எல்.முருகராஜ் அவர்கள்:
“போட்டோ வாக்கில் கலந்து கொண்ட புகைப்படக்கலைஞர்களின் புகைப்படங்களை பார்த்த போது ஆச்சசர்யமாகவும்,மிரட்டலாகவும் இருந்தது.பலரது புகைப்பட மொழி புதுமையாக இருந்தது, மனதிற்குள் சந்தோஷத்தை அருவி போல கொட்டியது, திரும்ப, திரும்ப அந்த படங்களை பார்க்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது, மொத்தத்தில் வரவேற்கும் படியாகவும், பாராட்டும்படியாகவும் இருந்தது.” 

“கருத்தரங்கில் பெஸ்ட் போட்டோகிராபி எடிட்டர் பழனிக்குமார், சென்னை சென்டியன்ட் பள்ளி முதல்வர் லக்ஷ்மணன், மதுரை ஸ்கூல் ஆப் போட்டோகிராபி நிறுவனர் தனபால், வசந்தம் செந்தில் ஆகிய புகைப்பட நிபுணர்கள் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினர்.” 

“இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு புகைப்பட கலைஞர்கள் கேட்ட சந்தேகங்களும், கேள்விகளும் என்னை சந்தோஷப்படுத்தியது.”

புகைப்பட பிரியன் ரசிகர்களுக்கான சிறப்பு அறிவிப்பு.

மேலும் வாசிக்கவும்........

மற்றும் கலந்து கொண்ட கலைஞர்கள் எடுத்த சில படங்களை போட்டோ கேலரியில் கண்டு இரசிக்கவும்........

 இங்கே செல்லவும்: http://www.dinamalar.com/news_detail.asp?id=912071

மகிழ்ச்சியும் நல்வாழ்த்துகளும் மெர்வின்:)!


**
டத்துளி: அன்பூ..
Love.. the universal language understood by all.
அன்பு தின வாழ்த்துகள்!
***

19 கருத்துகள்:

  1. அடுக்கடுக்கான சந்தோஷங்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. ‘அகநாழிகை’ சிறப்பு தகவலுக்கும் இணைப்புகளுக்கும் நன்றி...

    அன்பான வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. அகநாழிகை இதழ் மீண்டும் வெளிவருவதில் மிக்க மகிழ்ச்சி! அடைமழை நன்கு விற்பனை என்கிற செய்தி தருவதும் அஃதே! மகிழ்வான நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு தொகுப்பு. அகநாழிகை வெளியாவதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. அருமையான் பகிர்வு.
    உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    அன்பு தினத்திற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. மகிழ்ச்சியான தகவல்கள் நிறையத் தந்திருக்கிறீர்கள். தங்கள் நூல்கள் நிறைய விற்கவும் மேலும் புகழ்பெறவும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. சந்தோஷ தருணங்கள்
    தொடர்ந்து தொடர மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. சமீபத்திய சென்னை பயணத்தின் போது உங்கள் புத்தகம் வாங்கிவிட்டேன். விரைவில் படித்து விடுவேன்......

    மகிழ்ச்சியான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. எங்கும் சந்தோஷம் பரவட்டும்....

    பதிலளிநீக்கு
  9. Hi, How can i get the bestphotographytoday book monthly. I tried to get information from their website but not.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Please contact 9842127033 for details. Also you can follow their fb page https://www.facebook.com/BEST-Photography-TODAY-Magazine-1328953547138298/ for updates.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin