வியாழன், 16 ஜனவரி, 2014

இரு நூல்கள் வெளியீடும்.. நட்புகளின் அன்பும்.. மனம் நிறைந்த நன்றியும்..


நேற்று மதியம்  “இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்பை சென்னைப் புத்தகக் கண்காட்சி புதுப்புனல்-அகநாழிகை அரங்கு எண்கள் 666,667-ல் வெளியிட்ட கவிஞர் மதுமிதாவுக்கும் பிரதியைப் பெற்றுக் கொண்ட கவிஞர் தி. பரமேஸ்வரிக்கும் நன்றி. கலந்து கொண்டு சிறப்பித்த ‘மலைகள்’ இதழின் ஆசிரியர் சிபிச் செல்வன், ‘உயிர் எழுத்து’ ஆசிரியர் சுதீர் செந்தில், கவிஞர் அய்யப்ப மாதவன் மற்றும் சூர்யா சுரேஷ் ஆகியோருக்கு அன்பு நன்றி.

#1

#2
சாந்தி மாரியப்பனின் (அமைதிச்சாரல்) ‘சிறகு விரிந்தது’ கவிதைத் தொகுப்பு வெளியீடும் நடைபெற்றது. வாழ்த்துகள் சாந்தி:)!

#3
மாலை ஐந்து மணி அளவில் இதே அரங்கில் “அடை மழை” சிறுகதைத் தொகுப்பை நான் கேட்டுக் கொண்டதன் பேரில் அன்புடன் சம்மதித்து, வெளியிட்ட எழுத்தாளர் சுகா அவர்களுக்கும் பிரதியைப் பெற்றுக் கொண்ட எழுத்தாளர் தமிழ்நதிக்கும் நன்றி.
#4
#5

 #6
நடுவில் வெளி ரங்கராஜன் அவர்கள்..
நிகழ்வுகளை ஒருங்கிணைத்த பொன். வாசுதேவனுக்கு மனமார்ந்த நன்றி. 
**

சென்ற வாரம் பெங்களூர் வந்திருந்த தோழி மதுமிதா என் இல்லத்துக்குத் தந்த எதிர்பாராத வருகை மகிழ்ச்சியைக் கொடுத்தது.
#7
அவர்கள் பெங்களூருக்கு வருவதாகத் தெரியும். முன்னர் இருமுறை சந்தித்திருக்கிறோம். முதல் சந்திப்பு இங்கே. சிலமாதங்களுக்கு முன் வந்திருந்தபோது திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களது இல்லத்தில் நடைபெற்ற கம்பராமாயணம் முற்றோதல் வகுப்பில் சந்தித்தோம் (அது குறித்த பகிர்வு பிறகு). இந்த முறை நான் சென்று சந்திப்பது இயலாதிருந்த சூழலில் அதைத் தெரிவித்திடலாம் என அழைத்து ‘இப்போது எங்கே இருக்கிறீர்கள்’ என்றேன். நான் வசிக்கும் பகுதியைச் சொல்லி, அதன் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் ஒரு கன்னட புரொஃபசரை சந்திக்கச் சென்று கொண்டிருப்பதாய் சொன்னார்கள்.
#8
மறுமுனையில் தோழி ஷைலஜா
‘நீங்கள் செல்லவில்லை.. நான் இருக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறீர்கள்’ என்றதும் அவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. எனக்கும். நான் முகவரியை மெசேஜ் செய்ய, அரை மணியில் எல்லாம் அழைப்புமணியை அழுத்தி விட்டார் மதுமிதா. கையில் மலரக் காத்திருந்த மொட்டுடனான மஞ்சள் நிற ரோஜாச் செடி.
#9

மொட்டு நேற்று முழுதாக மலர்ந்திருக்க... சென்னையில் அவர் கையால் நூல் வெளியீடு. இருவருமே அன்று நினைத்திருக்கவில்லை..

அதே போலவே நான் ரசித்து வாசிக்கும் எழுத்து சுகா அவர்களுடையது. அவர் எனது நூலினை வெளியிடக் கூடுமென்பதும் நான் நினைத்திராத ஒன்று. மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு வியப்பில் ஆழ்த்தினார்.

 ‘அடை மழை’ நூல் அறிவிப்பானதுமே தொகுப்பை வாங்கி வாசிப்பதாக வாழ்த்தியிருந்த எழுத்தாளர் யெஸ். பாலபாரதி அலுவலக வேலைகளுக்கு நடுவே காத்திருந்து நிகழ்வில் கலந்து கொண்டதுடன், படங்கள் (4,5,6) எடுத்து உடனடியாக அனுப்பியும் வைத்திருந்தார். நலம் நாடும் நண்பர்கள் நமக்கான நிகழ்வுகளில் பங்கு பெறுவது தானாக வாய்த்து விடுகிறது.
**
#10

றுதியாக, அகநாழிகை பொன். வாசுதேவனின் அயராத உழைப்பினை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அத்தனை நூல்களுக்கும் அட்டை வடிவமைப்பு, Proof reading ஆகியவற்றைத் தனியொருவராகச் செய்திருக்கிறார். கேட்டுக் கொண்ட கடைசி நேரத் திருத்தங்களை மிகப் பொறுமையுடன் செய்து தந்தார். கண்காட்சியினால் பெரும்பாலான அச்சகங்களில் வேலை தாமதம்.., கூடவே பொங்கல் விடுமுறை.. இவற்றுக்கு நடுவே மிகுந்த சிரமங்களைக் கடந்து புத்தகங்களைக் கண்காட்சிக்குக் கொண்டு வந்ததுடன் வெளியூரில் இருக்கும் என் போன்றோருக்காக அக்கறையுடன் நூல் வெளியீட்டையும் ஒருங்கிணைத்து நடத்திக் கொடுத்திருக்கிறார். அனைத்திற்கும் நன்றி!
#11
சிறகு விரிந்தது (சாந்தி மாரியப்பன்)
அடை மழை, இலைகள் பழுக்காத உலகம்
மற்றும் அன்ன பட்சி (தேனம்மை லெஷ்மணன்)
வாழ்த்துகள் தேனம்மை!
#12
அகநாழிகை பதிப்பக வெளியீடுகளை
உயிர்மை ஆசிரியர் மனுஷ்ய புத்திரன்
பெற்றுக் கொள்கிறார்.
நூல்களில் ‘அடை மழை’யும்..



அகநாழிகை பதிப்பகம் பல நூல்கள் வெளியிட்டு மென்மேலும் வளர என் வாழ்த்துகள்..!
#13

தொடர்ந்து என் எழுத்துக்களை வாசித்துக் கருத்துகளைப் பகிரும் நண்பர்களான ஸ்ரீராம், அமுதா ஆகியோர் நூல்களை வாங்கிய கையோடு மகிழ்ச்சி தெரிவித்த அன்புக்கும் நன்றி:)!

எழுத்தும் இணையமும் நாம் இதுவரை சந்தித்திராதவர்களையும் நல்ல நண்பர்களாகத் தந்து கொண்டிருக்கிறது. அற்புதமான நட்பும், ஒருவர் நலனில் ஒருவர் காட்டும் அக்கறையும் என்றென்றும் தொடரட்டுமாக.
***

51 கருத்துகள்:

  1. அருமையான நிகழ்வு.. பார்க்கும்போதே சந்தோஷமாக உள்ளது. மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி. சென்னையில் இப்போது இல்லையே என்ற வருத்தமே மேலோங்கி நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  3. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. படங்கள் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி.நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. புகைப்படங்களுடன் நிகழ்வைப்
    பதிவு செய்துள்ளதைப் படிக்க மிக்க மகிழ்ச்சி
    சாதனைகள் தொடர நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. மிக்க மகிழ்ச்சி... சிறப்பான நிகழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. நிகழ்வை தொகுத்து வழங்கியதில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. மிக்க மகிழ்ச்சி,நல்வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான பொங்கல் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  9. படிக்கையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும் ஞாயிறன்று வாங்கி விடுவேன். படித்தபின் எழுதுகிறேன். மகிழ்வுடன் கூடிய என் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துகள். நேற்று என்னால் செல்ல முடியவில்லை. நீங்கள் பகிர்ந்துள்ள படங்கள் அந்தக் குறையைப் போக்கின. இன்னும் இலைகள் பழுக்காத (நம்) உலகில் அடைமழையாய் புத்தகங்கள் வெளியாக 'எங்கள்' வாழ்த்துகள். :)))

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  12. மிக்க மகிழ்ச்சி ராமலஷ்மி. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    அன்புடன்
    பவளா

    பதிலளிநீக்கு
  13. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

    பாராட்டுக்கள்.

    பகிர்வுக்கும்,படங்களுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  14. மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. அருமையான மகிழ்ச்சிதரும் பதிவு.புத்தகங்கள் அனைத்தும் வடிவாக வெளியிட்ட அகநாழிகைப் பதிப்பகத்துக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.இந்த வருடப் புத்தகக் கண்காட்சி பெருமைக்கு உரியது.

    பதிலளிநீக்கு
  16. @"உழவன்" "Uzhavan",

    நீங்கள் சென்னையில் இருந்திருந்தால் நிச்சயம் சென்றிருப்பீர்கள் என நானும் நினைத்தேன். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  17. @Menaga sathia,

    நன்றி மேனகா. தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்:)!

    பதிலளிநீக்கு
  18. @பால கணேஷ்,

    மகிழ்ச்சி கணேஷ். காத்திருக்கிறேன்:)! நன்றி.

    பதிலளிநீக்கு
  19. மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி. மேலும் பல சிறப்புகள் உங்களை வந்தடையட்டும்!

    பதிலளிநீக்கு
  20. மொட்டு மலர்ந்த அழகுமலருக்கும் ,

    "இரு நூல்கள் வெளியீடும்.. நட்புகளின் அன்பும்.. மனம் நிறைந்த நன்றியும்..

    நிறைந்த அருமையான நிகழ்வுகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  21. வாழ்த்துக்கள் அக்கா...
    சந்தோஷமா இருக்கு...
    இன்னும் நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  22. அன்பு ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
    மேலும் மேலும் புகழ் சேரட்டும்.

    புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்ற அமைதிச்சாரல், தேனம்மை மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. இனிய வாழ்த்துகள்..

    எனது நூல் வெளியீட்டையும் குறிப்பிட்டமைக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  24. ராமலக்ஷ்மி நீங்க கலந்து கொள்ளவில்லையா?

    பதிலளிநீக்கு
  25. @கிரி,

    சென்னை செல்லும் திட்டம் இருக்கவில்லை. நன்றி கிரி:)!

    பதிலளிநீக்கு
  26. படம் எண் 11-ல் வரிசையாக, சொல்லி வைத்தது போல தோழிகள் மூவரின் புத்தகங்களும்!! மூவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin