Friday, March 1, 2013

ஒரு சின்னப் பறவை - ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதை


a minor bird


பறந்து போகட்டும் என நினைத்திருக்கிறேன்
அந்தச் சிறுபறவை,
நாள் முழுக்க என் வீட்டில் பாடிக் கொண்டிராமல்.

கதவருகே நின்று கைகளைத் தட்டியிருக்கிறேன்,
இதற்கு மேலும் தாங்க முடியாது எனத்
தோன்றிய தருணங்களில்.

என்னிடத்திலும் ஏதோ பிழை இருக்கிறது.
பறவையின் கானத்தைப் பழிப்பது நியாயமில்லை.

எங்கோ தவறு நிச்சயம் இருக்கிறது
எந்தப் பாடலையும் அடக்க நினைப்பதில்.
***

மூலம்: A Minor Bird (1928)
By Robert Frost
15 பிப்ரவரி 2013, அதீதம் மின்னிதழுக்காக மொழியாக்கம் செய்த கவிதை.

39 comments:

 1. அசத்தல்..

  பறவை தானும் உற்சாகமாகி மற்றவர்களுக்கும் அந்த உற்சாகத்தைக் கடத்துது. அதை ஏன் தடுக்கணும்?. அருமையான கேள்விக்கு கவிதையிலேயே அழகான பதி. நல்ல மொழியாக்கம்.

  ReplyDelete
 2. அழகான பதில்ன்னு வாசிக்கவும் :-)))

  ReplyDelete
 3. பறவையின் கருத்தையும் அடக்க நினைப்பது தவறு என்று நினைக்கும் மென்மையான கவியுள்ளம் வியக்க வைத்தது. அழகை ரசிப்பவன்தானே கவிஞனாக முடியும்! அருமைங்க!

  ReplyDelete
 4. நல்ல மொழியாக்கம்....

  சிறப்பான கவிதைப் பகிர்வுக்கு பாராட்டுகள்.....

  ReplyDelete


 5. A Minor Bird

  I have wished a bird would fly away,
  And not sing by my house all day;

  Have clapped my hands at him from the door
  When it seemed as if I could bear no more.

  The fault must partly have been in me.
  The bird was not to blame for his key.

  And of course there must be something wrong
  In wanting to silence any song.
  Robert Frost

  ஒரு அழகு புறா ஒன்று
  எங்கள் வீட்டு பால்கனியிலே
  அடைகாத்துக் கொண்டு இருக்கிறது
  இப்பொழுது தான் ஈன்ற
  தன் வெள்ளை முட்டைகளை

  துறத்து வெளியே அதை
  தொல்லை தாங்க முடியவில்லை என‌
  கத்திக்கொண்டு இருக்கிறார்
  கணவன் கழுகு போல.

  இருந்து விட்டு போகட்டும்
  இன்னும் சில நாட்கள் என்று
  இதமாக சொல்லி அவரை
  இணங்க வைத்திருந்தேன்.

  என்ன ஆச்சரியம்.
  என்னைக் கூப்பிட்டு
  எங்கேயும் அந்தப்புறாவைத்
  துறத்திவிடாதே என்றார்.
  என்ன ஆச்சு என்றேன்.

  இதைப்பார் என்று
  உங்கள் அழகான ராபர்ட் ஃப்ராஸ்ட்
  கவிதையின் மொழிபெயர்ப்பினை
  காணச்செய்தார்.

  உங்கள் கவிதையால்
  எங்கள் வீட்டு சின்னப்புறாவின்
  இரண்டு இளம் குஞ்சுகள்
  பிழைத்தன.

  இன்று அவரும்
  புதிதாய்ப் பிறந்தார்.  மீனாட்சி பாட்டி.

  ReplyDelete
 6. மொழியாக்கம் அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. மொழியாக்கம் நன்றாக இருக்கிறது ராமலக்ஷ்மி.
  பறவையின் உற்சாகப் பாட்டை ஏன் தடை செய்ய வேண்டும்? பாடி அனைவரையும் அந்த உற்சாக உலகத்திற்கு அழைத்து செல்லட்டும்.

  ReplyDelete
 8. அருமையான் ஆழ் கவிதைக்கு நன்றி

  ReplyDelete
 9. அருமையான கவிதையை மொழியாக்கம் செய்து தந்தமைக்கு நன்றி.... பறவை அழகு....

  ReplyDelete
 10. அருமையான மொழிஆக்கம்.

  பறவைகளின் பாடலில் அனைவரும் மகிழ்வோம்.

  ReplyDelete
 11. மிக அருமை.. நல்ல கவிதையை வாசிக்க கொடுத்ததற்கு நன்றி.

  ReplyDelete
 12. மிகவும் அருமையான கவிதை.சிறப்பான மொழியாக்கம்.ரசித்துப்படித்தேன். நன்றி

  ReplyDelete
 13. நல்ல கவிதையின் அழகான தமிழாக்கம். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 14. @அமைதிச்சாரல்,

  /ஏன் தடுக்கணும்?/ உண்மைதான். நன்றி சாந்தி.

  ReplyDelete
 15. @sury Siva,

  அருமையான செயல். அழகான கவிதை. நன்றி. நன்றி.

  மகிழ்வாகவும் மனதுக்கு நிறைவாகவும் இருக்கிறது.

  ReplyDelete
 16. அக்கா..
  அருமையான கவிதையை அழகான தமிழில் ஆக்கித் தந்திருக்கிறீர்கள்...

  ReplyDelete
 17. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

  Visit : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_2.html

  ReplyDelete
 18. இப்பொழுதுதான் வெங்கட் அவர்களின்
  பதிவில் பறவைகள் படும் பாட்டைப் படித்து மனம் நொந்தேன்.
  இங்கு உங்கள் ஆக்கம் மன நிறைவைத் தருகிறது.நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 19. படமும்,கவிதையும் அசத்தலாக உள்ளது.

  ReplyDelete
 20. @கோமதி அரசு,

  பறவைகளுக்கு தினம் உணவு வைத்து, அவற்றுடன் நேரம் செலவழித்து மகிழ்ச்சியடைகிற தங்களது கருத்து, நிச்சயம் சரியானதாக இருக்கும்:)! நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 21. @ezhil,

  கருத்துக்கு நன்றி எழில்.

  ReplyDelete
 22. @அப்பாதுரை,

  உங்கள் கைத்தட்டலுடன் எனது பாராட்டும் சேருகிறது:)!

  ReplyDelete
 23. @ரிஷபன்,

  மகிழ்ச்சியும் நன்றியும்:)!

  ReplyDelete
 24. @திண்டுக்கல் தனபாலன்,

  தகவலுக்கு நன்றி:)! தங்களுக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 25. @வல்லிசிம்ஹன்,

  நன்றி வல்லிம்மா.

  அந்தக் காணொளியை நானும் பார்த்தேன். வேதனையான விஷயம்.

  ReplyDelete
 26. @ஸாதிகா,

  படத்தையும் ரசித்ததற்கு நன்றி ஸாதிகா:).

  ReplyDelete
 27. எழில்மிகு மொழிபெயர்பு.

  ReplyDelete
 28. @Bhim,

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin