வியாழன், 22 நவம்பர், 2012

இலைகள் பழுக்காத உலகம் - மலைகள் இதழில்..


கைபிடித்துக் கதைபேசி நடந்த நாட்களும்
பாசத்தால் நனைந்த நிகழ்வுகளும்
நெஞ்சோடு இருந்தாலும்
நிழற்படங்களாலேயே
நினைவில் பொருத்திப் பார்த்தத்
தந்தையின் முகத்தைக்
கண்டேன் கனவில் நேற்று.

கம்பீரத் தோற்றம்
அதே கணீர் சிரிப்பு.

தேடுகின்றன அவர் கண்கள்
தான் விட்டுச் சென்ற
எட்டு வயதுச் சிறுமியை.

ஏற்றுக்கொள்ள இயலவில்லை
மகளென்று
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நரையோடும் சிகையோடு
அவரினும்
அதிக வயதாகி நின்றிருந்த என்னை..

மறையாத சூரியனின் வெளிச்சத்தில்
தேயாத முழுநிலவைக் காண முடிகிற
தான் வாழும் உலகில்
வாடாத மலர்களையும்
பழுக்காத இலைகளையுமே
பார்த்துப் பழகிவிட்டவருக்கு.
***

படம் நன்றி: இணையம்

18 ஆகஸ்ட் 2012, ‘மலைகள்’ எட்டாவது இதழில்., நன்றி மலைகள்.காம்!

33 கருத்துகள்:

  1. அப்பா....

    மறையாத நிலவு.சூரியன்.நித்தியவாழ்வில் அப்பா.
    தேய்ந்து வளரும் வாழ்வில் நாம்.

    அப்பாவுக்கு வணக்கம் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  2. எட்டில் விட்டுச் சென்ற அப்பா-மகளின் மனக் கட்டிலில் உறங்குகிறார்!அப்பப்பா!!அருமை!

    பதிலளிநீக்கு
  3. என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

    மனம் கனத்தது...

    tm3

    பதிலளிநீக்கு
  4. ஆழகிய கவிதை
    அருமையான உணர்வுகளுடன்.

    பராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. மனப் பிம்பங்களுக்கு வயதாவதில்லை! அருமையான கனவு, கவிதை.

    பதிலளிநீக்கு
  6. அப்பாக்களின் உலகில் பிள்ளைகளுக்கு என்றுமே வயதாவதில்லை. உங்கள் கற்பனை அருமை.

    பதிலளிநீக்கு
  7. இந்த கவிதையை படித்ததும் எனக்கு அப்பா ஞாபகம் வந்துவிட்டது..நெகிழ்வாக இருக்கு....

    பதிலளிநீக்கு
  8. @ezhil,

    அழகாகச் சொல்லிவிட்டீர்கள் எழில். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. @S.Menaga,

    இயல்பே. உங்கள் அப்பாவுக்கு என் வணக்கங்கள்.

    நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  10. எனக்குள்ளும் ஏதோ நினைவு வர அழுதேவிட்டே அக்கா !

    பதிலளிநீக்கு
  11. மறையாத சூரியனின் வெளிச்சத்தில்
    தேயாத முழுநிலவைக் காண முடிகிற
    தந்தையின் கம்பீரத் தோற்றம்
    தனயளின் நினைவோட்டம் கனக்கிறது..

    பதிலளிநீக்கு
  12. @ஹேமா,

    தங்கள் உணர்வைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  13. அப்பாவைப் பற்றிய கவிதை மனதை நெகிழவைத்து விட்டது.

    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  14. Very touching.

    You have a great skill in expressing thoughts and emotions in words. Hats off !

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin