சனி, 25 ஆகஸ்ட், 2012

அவர்களின் கதைகள் - நவீன விருட்சத்தில்..



அவர்களின் கதைகள்

கதகதப்புக்காக மூட்டியத்
தீயைச் சுற்றிக்
கிழிந்த கம்பளிகள்
பழைய சாக்குகளுக்குள்
தமைக் குறுக்கிக்
குழுமியிருந்தனர்
கதை பேச.

அவர்களுக்காகவே அவர்கள்
புனைந்து கொண்ட கதைகளில்
அவர்களுக்கு மட்டுமே
திறப்பதாகக்
கருவூலக் குகைகள்..
தற்காலிகமாகவேனும்
வறுமையை மறக்க.

அவர்களைத் தவிர எவராலும்
விடுவிக்க முடியாத புதிர்களை
ஆலோசித்து உருவாக்கிப்
பெருமிதத்துடன்
சிரித்துக் கொண்டார்கள்..
ஏளனங்களை மறக்க.

அவர்களால் மட்டுமே
அழிக்க முடிகிற அரக்கர்களையும்
அவர்களை மட்டுமே
நேசிக்கிற தேவதைகளையும்
உலவ விட்டார்கள்..
ஒடுக்கப்படுவதையும்
ஒதுக்கப்படுவதையும் மறக்க.

மீளாத் துயருடன்
நாளும்
அக்கதைகளைக் கேட்டபடி
அவர்களுக்காகவே
மின்னிக் கொண்டிருந்தன..

ஆதிக்கவாதிகளால்
நலிந்து அழிந்து போன
அவர்களது உறவுகள்,
வானத்தில் நட்சந்திரங்களாக.
***
24 ஆகஸ்ட் 2012 நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்!

படம்: பெங்களூர் சித்ரகலா பரீஷத் ஓவியக் கண்காட்சி ஒன்றில் எடுத்தது - http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/7849016246/in/photostream



35 கருத்துகள்:

  1. அவர்களால் மட்டுமே
    அழிக்க முடிகிற அரக்கர்களையும்
    அவர்களை மட்டுமே
    நேசிக்கிற தேவதைகளையும்
    உலவ விட்டார்கள்..
    //
    நல்லா இருக்கு ராமலக்‌ஷ்மி..வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. //ஆதிக்கவாதிகளால்
    நலிந்து அழிந்து போன
    அவர்களது உறவுகள்,
    வானத்தில் நட்சந்திரங்களாக.// ;)

    பாராட்டுக்கள்.

    நவீன விருட்சத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அருமை.ராமலஷ்மி.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. /*அவர்களால் மட்டுமே
    அழிக்க முடிகிற அரக்கர்களையும்
    அவர்களை மட்டுமே
    நேசிக்கிற தேவதைகளையும்
    உலவ விட்டார்கள்..
    ஒடுக்கப்படுவதையும்
    ஒதுக்கப்படுவதையும் மறக்க.

    மீளாத் துயருடன்
    நாளும்
    அக்கதைகளைக் கேட்டபடி
    அவர்களுக்காகவே
    மின்னிக் கொண்டிருந்தன..

    ஆதிக்கவாதிகளால்
    நலிந்து அழிந்து போன
    அவர்களது உறவுகள்

    yathartham...arumaiyaaha vanthulladhu. vazhthukkal

    பதிலளிநீக்கு
  5. அருமை. நவீன விருட்சத்தில் வெளியானதற்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. அசத்தல்.... நவீன விருட்சத்தில் வெளியானதற்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. "ஆதிக்கவாதிகளால்
    நலிந்து அழிந்து போன
    அவர்களது உறவுகள்,
    வானத்தில் நட்சந்திரங்களாக".

    மனத்தை நெகிழவைக்கும் வரிகள்.

    அருமையான கவிதை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. அவர்களின் கதைகள்....அது அவர்களின் கதைதான்...அற்புதம் அக்கா.வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  9. நல்ல கவிதை ராமலக்ஷ்மி.வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  10. ஆதிக்கவாதிகளால்
    நலிந்து அழிந்து போன
    அவர்களது உறவுகள்,
    வானத்தில் நட்சந்திரங்களாக.

    படமும் கவிதையும் மனதை நெருடுவதாய் அருமை

    பதிலளிநீக்கு
  11. அழகான வரிகள்... அருமை...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    (தமிழ் பதிவர்கள் திருவிழாவிற்கு சென்றதால், கருத்திட தாமதம்)

    பதிலளிநீக்கு
  12. மீண்டும் வாசிக்க வைத்தது ராமலக்ஷ்மி. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin