சனி, 11 ஆகஸ்ட், 2012

ஆரஞ்சுக் கொண்டாட்டம் - ஆகஸ்ட் 2012 PiT போட்டி

டேங்கரின் டேங்கோ. அழுத்தமான ஆரஞ்சு. இதுதான் 2012 கொண்டாடிக் கொண்டிருக்கும் வண்ணம். பளிச் என ஒளிரும் இந்நிறம் ‘உலகின் பொருளாதாரச் சிக்கல்கள் சரியாகி மக்களின் வாழ்வு மேம்பட வழிவகுத்து, நல்ல விஷயங்களை நோக்கி உற்சாகமாக நம்மை நகர்த்தும்’ என்பது இதைத் தேர்ந்தெடுத்த வல்லுநர்களின் கருத்து. வண்ணத்துக்கும் வாழ்வுக்கும் என்ன சம்மந்தம்? கேள்வி எழும்பினாலும் நல்லதொரு நம்பிக்கையை விதைக்கும் விஷயத்தை நாமும் கொண்டாடி விடுவோமே:)!

இம்மாதத் தலைப்பு: ஆரஞ்சு (இளஞ்சிகப்பு)

கொண்டாடலாம் வாங்க!

கவனிக்க வேண்டியவை: சிகப்பை ஏற்கனவே சீரும் சிறப்புமாகக் கொண்டாடியாயிற்று. (அப்போது நான் பகிர்ந்த 24 படங்கள் இங்கே). எனவே இப்போது வண்ணம் சிகப்பை நோக்கிச் சாய்ந்திடாமல் ஆரஞ்சுக்கு.. இளஞ்சிகப்புக்கு.. முக்கியத்துவம் கொடுக்கட்டும். பிரதானமாக ஈர்க்கும் கருப்பொருள் அல்லது வண்ணம் ஆரஞ்சாக அமையட்டும். அருமையாய் படமாக்கிட ஐநூறு பதிவுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் PiT தளத்தில் பாடங்களுக்கா பஞ்சமில்லை. எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு அழகழகான ஆரஞ்சுடன் வாருங்கள்! படங்களை அனுப்பக் கடைசித்தேதி: 20 ஆகஸ்ட் 2012.

சில மாதிரிப் படங்களைக் பார்ப்போம்.

#1


#2


#3


#4


#5


#6


#7



#8


படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 20 ஆகஸ்ட் 2012.

நாட்டாமையாக நானிருக்கும் இப்போட்டியின் அறிவிப்புப் பதிவு, PiT உறுப்பினர்களின் மேலும் சில அழகான ஆரஞ்சுப் படங்களுடன் இங்கே.

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே.

அறிவிப்பான ஆறு நாட்களில் அணிவகுக்க ஆரம்பித்து விட்ட முப்பதுக்கும் மேலான ஆரஞ்சுப் படங்கள் இங்கே. நேரமிருக்கையில் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து உற்சாகம் கொடுங்கள். அடுத்த பத்து நாட்களுக்குள் உங்கள் படங்களை அனுப்பி வைத்திடுங்கள்!
***

40 கருத்துகள்:

  1. அந்த குட்டி பையனை அடிக்கடி பாக்கிறோம் உங்கள் சொந்த கார பையனா?

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அனைத்தும் அருமை...

    எங்கும் எதிலும் ஆரஞ்சு... நன்றி... (TM 3)

    பதிலளிநீக்கு
  3. Look At Mee Color என்போம் ஆரஞ்ச் கலரை..

    பளிச் என்று தூரத்தில் இருந்தாலும் அடையாளம் காட்டும் அருமையான வண்ணம்..

    பதிலளிநீக்கு
  4. கண்ணைக் கவரும் வண்ணம். கண்கவர் படங்கள். வல்லிம்மா முதல் லிஸ்ட் படங்கள் போட்டு விட்டார்!

    பதிலளிநீக்கு
  5. ராமலக்ஷ்மி, படங்கள் எல்லாம் அழகு.
    ஃபேண்டா கலர் ஃ பேண்டா கலர் சிலர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் இந்த ஆரஞ்சு வர்ணத்தை.
    இந்த கலருக்கு கண்ணை கவரும் குணம் உண்டு.

    தம்பி மகனும் அவன் வைத்து இருக்கும் பாலும் அழகு.

    பதிலளிநீக்கு
  6. அத்தனைப்படங்களும் அழகோ அழகு!

    முத்துச்சரம் ராமலக்ஷ்மியா கொக்கா!! என நிரூபித்து விட்டீர்கள்.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  7. ஆஹா எனக்குப் பிடித்த ஆரஞ்சு வண்ணம்.படங்கள் அருமை.படம் அனுப்ப முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. வழக்கம் போலவே எல்லாப் படங்களும் கண்ணைச் சுண்டி இழுக்கின்றன.

    பதிலளிநீக்கு
  9. படங்கள் அனைத்தும் அருமை அக்கா!!

    பதிலளிநீக்கு
  10. ஆஹா! ஆரேஞ் அத்தனையும் பளிச்..

    பதிலளிநீக்கு
  11. ராமலட்சுமியா கொக்கா? வைகோ கமெந்ட் ரசித்தேன்.
    sharp pictures.

    பதிலளிநீக்கு
  12. அனைத்து படங்களும் அருமை, குறிப்பா முதல் படம் ரொம்பவும் எனக்கு பிடிக்கிறது, காரணம் சொல்ல தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
  13. அசத்தும் அழகுப் படங்கள். கவிதைபோல் மிளிரும் படங்கள் ஒவ்வொன்றும் மனம் கவர்வதில் வியப்பென்ன? பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  14. முதலும் கடைசியும் சூப்பரக்கா !

    பதிலளிநீக்கு
  15. எல்லாப் படங்களும் அழகுன்னாலும் ஒத்தைச் செந்நாரை ரொம்ப அழகாருக்கு.

    பதிலளிநீக்கு
  16. @ஸ்ரீராம்.,

    நன்றி ஸ்ரீராம்.

    வல்லிம்மா பதிவில் இல்லாத படத்தையே போட்டிக்குத் தந்துள்ளார். போட்டி ஆல்பத்தில் பார்த்திடுங்கள்:).

    பதிலளிநீக்கு
  17. @கோமதி அரசு,

    ஆம், குளிர்ப் பெட்டியிலிருந்து எடுத்த ஃபேண்டாவையே அழகாகப் படமெடுத்திருக்கிறார் ஒருவர்.

    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  18. @Asiya Omar,

    எனக்கும் பிடித்த வண்ணம்:)! இன்னும் இரு தினங்களுக்குள் அனுப்பிடுங்கள். நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  19. @வரலாற்று சுவடுகள்,

    மகிழ்ச்சியும் நன்றியும். தங்கள் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா:)?

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin