புதன், 20 ஜூன், 2012

சீர் கொண்டு வா - ஜூன் PiT

இன்றுதான் கடைசித் தேதி உங்கள் சீர் வந்து சேர.

ஜூன் போட்டித் தலைப்பு: சீர்/Uniformity

ஒரே ஒரு நாள்தானே உள்ளது என நினைத்தால் ஒரு நாள்தான். ‘இன்னும் 24 மணிநேரம் இருக்கே’ என நினைத்தால் நிமிடங்களும் நொடிகளும் துணைக்கு வரும்:)! கேமராவைக் கையிலெடுத்துக் கொண்டு பார்வையைச் சுழல விடுங்கள்.

எந்த மாதிரி ‘சீரான படங்களை’ எல்லாம் போட்டிக்கு அனுப்பலாமென நடுவர் சர்வேசன் ஒரு பட்டியலே தந்திருக்கிறார்:

//- பள்ளிச் சிறார்கள் பலர், 'சீரு'டையில்
- வேலைக்குச் செல்லும் மக்கள், 'சீரு'டையில்
- பார்க்கிங் ஸ்டாண்டில் 'சீரா'க நிறுத்தப்ப்ட்டிருக்கும், ஒரே நிற டாக்ஸி வண்டிகள், அரசுப் பேருந்துகள், etc..
- பலசரக்கு கடைகளில், சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மசாலா டப்பாக்கள்
- தள்ளு வண்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காய்கறி
- அலுவலக 'க்யூப்', நாற்காலிகள்/மேசைகள்
- வரிசையான சாலை மரங்கள்.
.//

இதெல்லாம் சில உதாரணங்களே. ஆனால் உங்கள் கற்பனை சிறகடித்துப் பறக்க அந்த வானமே எல்லை.

சீராய் சிலவற்றை நானும் அடுக்கியுள்ளேன் இங்கே உங்கள் பார்வைக்கு:

#1

# 2


#3


#4


#5


#6

#7
#8

#9

#10

#11

# 12

#13

#14

இதுவரை வந்திருக்கும் எண்பதுக்கும் அதிகமான படங்களைக் காண இங்கே செல்லுங்கள். நேரமிருக்கையில் கருத்துகளை வழங்கி உற்சாகம் கொடுங்கள்.
***

28 கருத்துகள்:

  1. எல்லா புகைப்படங்களும் புருவத்தை உயர்த்தச் செய்கிறது.!

    பதிலளிநீக்கு
  2. நினைவூட்டலுக்கு நன்றிகள்.

    உங்க படங்கள் எல்லாமே சூப்பரு!!!!!!

    நானும் வகுப்பில் இருக்கேன்னு ஒன்னு அனுப்பிட்டேன்:-))))

    பதிலளிநீக்கு
  3. 'சீரி'ல் இவ்வவளவு முடியுமா? உங்கள் படங்களில் சில ஏற்கெனவே வெவ்வேறு தலைப்புகளில் பார்த்தது ஆயினும் அனைத்தும் அருமை. போட்டிக்கு வந்துள்ள படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. அழகழகான போட்டோக்கள். கண்களுக்கு விருந்தளிக்கின்றன. போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. கண்களைக் கொள்ளை கொண்டன அழகான புகைப்படங்கள்!

    பதிலளிநீக்கு
  6. . போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. படங்கள் எல்லாமெ வெகு அழகா இருக்கு. கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. எல்லாப்படங்களும் அருமை.

    டாப்பில் உள்ள முதல் படம் தான் டாப்!

    காரம் தடவிய மாங்காயின் சுவை கூடுதலாக உள்ளதால், நாக்கில் நீர் ஊற வைப்பதாக உள்ளது.

    அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. சூப்பர்ப் படங்கள் எல்லாமே, அதிலும் அந்த மிளகிட்ட மாங்காய் வாயில் எச்சில் ஊறுகிறது....!

    பதிலளிநீக்கு
  10. ஏழைக்கேத்த எள்ளுருண்டையா என்னால முடிஞ்சதை சீரா அனுப்பியிருக்கேன். போதாதுதான்.. அடுத்த தடவை இன்னும் நல்லாச் செய்யறேன். ரைட்டா :-)))))))

    பதிலளிநீக்கு
  11. வரலாற்று சுவடுகள் said...
    //எல்லா புகைப்படங்களும் புருவத்தை உயர்த்தச் செய்கிறது.!//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. துளசி கோபால் said...
    //உங்க படங்கள் எல்லாமே சூப்பரு!!!!!!

    நானும் வகுப்பில் இருக்கேன்னு ஒன்னு அனுப்பிட்டேன்:-))))//

    மிக்க நன்றி.

    சைக்கிள் அணிவகுப்பு மிக அருமை:)!

    பதிலளிநீக்கு
  13. சுசி said...
    //அழகான படங்கள் அக்கா :)//

    நன்றி சுசி:)!

    பதிலளிநீக்கு
  14. ஸ்ரீராம். said...
    //'சீரி'ல் இவ்வவளவு முடியுமா? உங்கள் படங்களில் சில ஏற்கெனவே வெவ்வேறு தலைப்புகளில் பார்த்தது ஆயினும் அனைத்தும் அருமை. போட்டிக்கு வந்துள்ள படங்களும் அருமை.//

    ஆம் தலைப்புக்குப் பொருத்தமாக, மாதிரிப்படங்களாக காட்ட விளையும் PiT பதிவுகளில் ஏற்கனவே வந்த படங்கள் தவிர்க்க முடிவதில்லை:)! நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  15. விச்சு said...
    //அழகழகான போட்டோக்கள். கண்களுக்கு விருந்தளிக்கின்றன. போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. பா.கணேஷ் said...
    //கண்களைக் கொள்ளை கொண்டன அழகான புகைப்படங்கள்!//

    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  17. T.V.ராதாகிருஷ்ணன் said...
    //போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.//

    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. ரிஷபன் said...
    //super shots.. Enjoyed.//

    மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
  19. Lakshmi said...
    //படங்கள் எல்லாமெ வெகு அழகா இருக்கு. கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.//

    நன்றி லக்ஷ்மிம்மா.

    பதிலளிநீக்கு
  20. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //எல்லாப்படங்களும் அருமை. டாப்பில் உள்ள முதல் படம் தான் டாப்!

    காரம் தடவிய மாங்காயின் சுவை கூடுதலாக உள்ளதால், நாக்கில் நீர் ஊற வைப்பதாக உள்ளது.//

    நன்றி vgk sir:)!

    பதிலளிநீக்கு
  21. MANO நாஞ்சில் மனோ said...
    //சூப்பர்ப் படங்கள் எல்லாமே, அதிலும் அந்த மிளகிட்ட மாங்காய் வாயில் எச்சில் ஊறுகிறது....!//

    நன்றி மனோ:)!

    பதிலளிநீக்கு
  22. அமைதிச்சாரல் said...
    //என்னால முடிஞ்சதை சீரா அனுப்பியிருக்கேன். //

    சீருடையில் சீராக சாலையோரம் நடைபோடும் மனிதர்கள் மனதில் நின்றனர். அருமையான படம் சாந்தி!!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin