சந்திக்கும் ஒவ்வொரு மனிதரின்
அன்பையும்
சந்தேகித்தபடியே சில இதயங்கள்
அக்கறையை அவமதிப்பாக
பரிவைப் பாசாங்காக
மூளையின் துணைகொண்டு
காரணங்களை அலசி அலசி
அன்பைத் திரித்து மகிழ்கின்றன
பேதமையின் உச்சத்தில்.
யார் யார் வாயிலாகவோ
சுற்றிச் சுற்றி முயன்றும்
தாம் தாமாகத்
தங்க முடியாத இடத்தில்
சுயமிழந்துவிடும்
சாத்தியங்களுக்கு அஞ்சி
பிரார்த்திக்கத் தொடங்குகிறது
வேதனையுடன் அன்பு
அமிர்தக் கடலில் மூழ்கிக் கிடந்தாலும்
நச்சு கலந்த இரத்தத்தையே
இதயத்துக்குப் பாய்ச்சுவேன் என
அடம்பிடிக்கிற ஆன்மாக்களின்
பரிசுத்தத்திற்காக.
***
15 ஏப்ரல் 2012 நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்!
படம் : இணையத்திலிருந்து..
வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு//அக்கறையை அவமதிப்பாக
பதிலளிநீக்குபரிவைப் பாசாங்காக
மூளையின் துணை கொண்டு
காரணங்களை அலசி அலசி
அன்பைத் திரித்து மகிழ்கின்றன
பேதமையின் உச்சத்தில்.//
மிக அருமையான வரிகள்..
இப்படியும் சில பேர் இருக்காங்க. என்ன பண்றது ?
பதிலளிநீக்குஅமிர்தக் கடலில் மூழ்கிக் கிடந்தாலும்
பதிலளிநீக்குநச்சு கலந்த இரத்தத்தையே
இதயத்துக்குப் பாய்ச்சுவேன் என
அடம்பிடிக்கிற ஆன்மாக்களின்
பரிசுத்தத்துக்குப் பிரார்த்தித்தபடி.//
superb wordings.
சாத்தியங்களுக்கு அஞ்சி
பதிலளிநீக்குவிலகத் தொடங்குகிறது
வேதனையுடன் அன்பு// அற்ப்புதமான வரிகள் அருமை .
அருமை ராமலஷ்மி.
பதிலளிநீக்குசுயமிழந்துவிடும்
பதிலளிநீக்குசாத்தியங்களுக்கு அஞ்சி
விலகத் தொடங்குகிறது
வேதனையுடன் அன்பு
அருமையான வரிகள்..
அமிர்தக் கடலில் மூழ்கிக் கிடந்தாலும்
பதிலளிநீக்குநச்சு கலந்த இரத்தத்தையே
இதயத்துக்குப் பாய்ச்சுவேன் என
அடம்பிடிக்கிற ஆன்மாக்களின்
பரிசுத்தத்துக்குப் பிரார்த்தித்தபடி.////
அருமையான வரிகள்.
அருமையான வரிகள். வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநல்லதொரு வேண்டுதல்.. ராமலக்ஷ்மி.. நேர்மறை எண்ணம் பாயட்டும்..
பதிலளிநீக்குஅழகான வரிகள் அக்கா...இப்படியும் சிலபேர் இருக்கதான் செய்றாங்க,என்ன செய்றது??
பதிலளிநீக்குஅருமை. அதிலும் கடைசி வரிகள்...
பதிலளிநீக்கு// அடம்பிடிக்கிற ஆன்மாக்களின்
பரிசுத்தத்துக்குப் பிரார்த்தித்தபடி. //
தொடர்ந்து அன்பு செலுத்தியவண்ணம்... இல்லையா? அனால் அன்பு என்றால் என்ன? ஏதோ ஒரு எதிர்பார்ப்பில்லாமல் அன்பு இருக்க முடியுமா?
ஆனால் நிறைய பேர் அன்பிற்கு ஒரு காரணம் இருக்கும்... எதையோ ஒன்றை எதிர்பார்த்து அந்த எதிர்பார்ப்பின் விளைவாக. அந்த ஏதோ ஒன்று கிடைக்க வேண்டுமே என்ற நினைப்பின் காரணமாக நிறைய அன்புகள் காண முடிகிறது. எதிர்பார்ப்பில்லாமல் அன்பு இருக்க முடியுமா...முடியும் என்றால் அவமதிப்புகளை லட்சியம் செய்யுமா? அடுத்தவரைப் புரிந்து, அவர்தம் பலவீனங்கள் உணர்ந்து வருவதுதானே அன்பு... அன்பு உண்மை என்றால் அவமதிக்கும் உள்ளத்தையும் வெற்றி கொள்ள முடியுமே...! (ஹி...ஹி... கவிதை படித்து எழுந்த சிநதனைகளைப் பின்னூட்டமிட்டு விட்டேன்!)
"விலகத்தொடங்கும் வேதனை அன்பு" அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
Lakshmi said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள்.//
நன்றி லக்ஷ்மிம்மா.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//மிக அருமையான வரிகள்..//
நன்றி சாந்தி.
மோகன் குமார் said...
பதிலளிநீக்கு//இப்படியும் சில பேர் இருக்காங்க. என்ன பண்றது ?//
காத்திருக்கும் அன்பு. நன்றி மோகன் குமார்.
புதுகைத் தென்றல் said...
பதிலளிநீக்கு****/அமிர்தக் கடலில் மூழ்கிக் கிடந்தாலும்
....
பரிசுத்தத்துக்குப் பிரார்த்தித்தபடி./
superb wordings./****
நன்றி தென்றல்.
சசிகலா said...
பதிலளிநீக்கு/அற்ப்புதமான வரிகள் அருமை ./
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசிகலா.
Asiya Omar said...
பதிலளிநீக்கு/அருமை ராமலஷ்மி./
நன்றி ஆசியா.
ரிஷபன் said...
பதிலளிநீக்கு***/சுயமிழந்துவிடும்
சாத்தியங்களுக்கு அஞ்சி
விலகத் தொடங்குகிறது
வேதனையுடன் அன்பு
அருமையான வரிகள்../***
மிக்க நன்றி.
ஸாதிகா said...
பதிலளிநீக்கு//அருமையான வரிகள்.//
நன்றி ஸாதிகா.
Anton Cruz said...
பதிலளிநீக்கு//அருமையான வரிகள். வாழ்த்துகள்!//
நன்றி ஆன்டன்.
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு//நல்லதொரு வேண்டுதல்.. ராமலக்ஷ்மி.. நேர்மறை எண்ணம் பாயட்டும்..//
அதுவே அன்பின் ஆசையும். நன்றி முத்துலெட்சுமி.
S.Menaga said...
பதிலளிநீக்கு//அழகான வரிகள் அக்கா...//
நன்றி மேனகா.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//அவர்தம் பலவீனங்கள் உணர்ந்து வருவதுதானே அன்பு... அன்பு உண்மை என்றால் அவமதிக்கும் உள்ளத்தையும் வெற்றி கொள்ள முடியுமே...!//
நிச்சயமாக:)! வெற்றி கொள்ளதான் விலகுகிறது தற்காலிகமாக.
உங்கள் சிந்தனையிலுள்ள கேள்விகள் எனக்கும் எழுந்தனவே. எதிர்பார்ப்பில்லாததே உண்மையான அன்பு. அப்போதுதான் அன்பு அன்பாக இருக்க இயலும். அப்படி இருக்க இயலாமல் சுயம் இழந்து விடுவோமோ என அஞ்சியே ஒதுங்குகிறது தன் வலியைப் புரிய வைக்க முயன்றபடி, மீண்டும் நுழையும் விருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் பிரார்த்தித்தபடி. நன்றி ஸ்ரீராம்.
மாதேவி said...
பதிலளிநீக்கு/"விலகத்தொடங்கும் வேதனை அன்பு" அருமை.
வாழ்த்துகள்./
நன்றி மாதேவி.
திருத்த முடியாத திருந்தாத இவர்கள் குப்பை போல தான் சூழலுக்கு இடைஞ்சலாய் ..........அருமையான வெளிபாடு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு@கோவை மு சரளா,
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குஉங்கள் சிந்தனைகளை மீண்டும் அலசியதில், வரிகளில் மாற்றம் செய்து விட்டேன்:). நன்றி ஸ்ரீராம்.
நன்றி... ஆனால் அதென்ன சரியாக ஒரு வருடம் கழித்து திருத்தம்?!! :))
பதிலளிநீக்கு@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குநேரம் வருகையில் சொல்கிறேன்:)!