Sunday, November 14, 2010

தமிழ்மணம்-டாப் ட்வென்டி-பரிசு மழை-விருது விழா

ஞாயிறு கொண்டாட்டம் #மகிழ்ச்சி

தமிழ் மணம் புதிய சேவை ஒன்றை அறிவித்துள்ளது. அதன் படி ஒவ்வொரு ஞாயிறும் முந்தைய வாரத்தின் முன்னணி வலைப்பூக்கள் இருபதைத் தேர்ந்தெடுத்து இங்கே அளிக்கத் தொடங்கியுள்ளது.

முதல் வாரம் பத்தாவது இடத்தில் முத்துச்சரம்:)!


வாரத்துக்கு ஒன்றோ இரண்டோ பதிவுகள் போட்டுவிட்டு பாதையோரமாய் ‘பராக்கு’ பார்த்தபடி போய்க் கொண்டிருந்த என்னை ‘படார்’னு ஜீப்புல ஏத்தி விட்டிருக்காங்க.

எதேச்சையாக ஆனந்தவிகடன் தீபாவளி ஸ்பெஷல் கவிதை, கலைமகள் மற்றும் லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளிமலர் கதைகள், தினமணி தீபாவளி மலர் பங்களிப்பு என வரிசையாகப் பத்திரிகைப் படைப்புகளைப் பதிந்ததில் தற்காலிகமாக அதிகரித்த பார்வையாளர்களால் (தகவல்:Blogger stat) கிடைத்த இடமே என்றாலும், புதிய சேவையின் தொடக்க வாரத்தில் கிடைத்த அங்கீகாரம் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி தமிழ்மணம்!

சமீபத்திய இடுகை ஒன்றில் பதிவர் சகாதேவன் அவர்கள் ‘what is the secret of your writing?’ எனக் கேட்டிருந்தார்.

‘இங்கு கிடைக்கிற ஊக்கம்’ எனப் பதிலளித்திருந்தேன்.

ஆத்மார்த்தமாய் சொன்னது.

தொடர்ந்து வருகை புரிந்து ஊக்கம் தரும் அனைத்து நண்பருக்கும் என் நன்றிகள்!


புத்தகப் புதுவெள்ளம் #குதூகலம்

தமிழ்மணம் விருது 2009-ல் பரிசு பெற்றதற்கு நன்றி சொல்லி இட்ட பதிவில் நான்...

தமிழ்மணம் விருதென்பது வருடம் முழுவதும் கூடவே வந்த தோழமைகள் சுற்றிச் சூழ நின்று கைதட்ட, தாயின் பரிவோடு திறமையைத் தட்டிக் கொடுக்கும் தலைமையாசிரியரிடமிருந்து பரிசு வாங்குவது போன்றதான சின்ன வயது சந்தோஷம். குழந்தையின் குதூகலம். பதிவருக்கே உரித்தான பரவசம்:)!

என்னதான் சொல்லுங்க. நம்மை பாராட்டி வழங்கப் படும் எந்தப் பரிசும் குதூகலம் தரக் கூடியவை. அதிலும் எழுதும் நமக்கு சிறந்த பரிசு புத்தகங்களை விட வேறென்னவாக இருந்திட இயலும்?

இரண்டு பிரிவுக்குமாக ரூ.1500-க்கு வருடத் தொடக்கத்திலேயே ந்யூபுக் லேண்ட் பரிசுக் கூப்பன்களை அனுப்பி வைத்திருந்தது தமிழ்மணம். சென்னைக்கு செல்லும் வாய்ப்பு இல்லாது போன நிலையில் சமீபத்தில்தான் மிகத் தாமதமாக அணுக முடிந்தது அவர்களை. ஏற்பட்ட கால இடைவெளியின் காரணமாக மறுபடி ‘தமிழ்மணத்திலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தால் நல்லது’ என அவர்கள் தெரிவிக்க, தமிழ்மணம் நிர்வாகி திரு. ஆர்.செல்வராஜ் அவர்கள் உடன் செயல் பட்டு மின்னஞ்சல் அனுப்பியதோடு, நான் புத்தகங்களை வாங்கியாயிற்றா மடல் அனுப்பிக் கேட்டு உறுதியும் செய்து கொண்டார். அவருக்கு என் நன்றிகள்.

வாங்கிய புத்தகங்களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு:

அவனும் இவனும் - ஷைலஜா
யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள் - நிலாரசிகன்
என் செல்ல செல்லங்கள் - துளசி கோபால்
கருவேல நிழல் - பா. ராஜாராம்
கோவில் மிருகம் - என்.விநாயமுருகன்
காலப் பயணிகள் - விழியன்
இரவுக் காகங்களின் பகல் - க.அம்சப்ரியா
டி.வி.ஆர் நினைவுப்போட்டி - பரிசு பெற்ற கதைகள்
கருவாச்சி காவியம் - வைரமுத்து
என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் - மனுஷ்ய புத்திரன்
சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’- முழுத்தொகுப்பு [4 பாகங்கள்]

எல்லாம் வாசித்தானதும் சில புத்தகங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்திட உள்ளேன்.


திருவிழா தேரோட்டம் #உற்சாகம்

வேகமாய் நகருகின்றது காலம். இதோ வந்து விட்டது அடுத்த திருவிழா. தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள்-2010. விவரங்கள் இங்கே. பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தனிப்பிரிவும் புதிதாக அறிவித்துள்ளார்கள்.

பரிசு நம் இலக்கல்ல. பங்களிப்பே முக்கியம். நம் அனைவரது படைப்புகளையும் உலகெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்குக் கொண்டு சேர்க்கும் தமிழ்மணம் நடத்தும் விழா. கூடித் தேர் இழுப்போம். உற்சாகமாய் அனைவரும் கலந்து கொள்வோம். வாருங்கள்.
***


76 comments:

 1. மிக்க மகிழ்ச்சி மேடம் டாப் 10ல் வந்தமைக்கு!

  தமிழ்மணம் விருது விழாவில் இம்முறை நான்கிலும் வெல்ல வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. ரங்கமணியிடம் சொல்லி, உங்களுக்கு சுற்றிப் போடச் சொல்லுங்கள்.
  என்னையும் நினைவு கூர்ந்து எழுதியதற்கு நன்றி.

  சகாதேவன்.

  ReplyDelete
 3. நான் உங்களிடம் கேட்க வேண்டும் என நினைத்திருந்த கேள்விகள் சிலவற்றுக்கான பதில்களாய் இந்த பதிவு உள்ளது. மிக்க நன்றி. நேரில் தொடர்கிறேன்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் மேடம். இந்த வருடமும் தமிழ் மணப் போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. ரொம்ப சந்தோசமா இருக்கு ராமலக்ஷ்மி மேடம். உங்கள் படைப்புகள் தரம் வாய்ந்தவை.,போற்றத்தக்கது. மேலும் வெற்றிகள் பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. மேலும், மேலும் சிகரம் தொட, தொடுவீர்கள்...
  வாழ்த்துக்கள்.
  என் பதிவுக்கு 13 வது இடம் என்பதனை நம்ப முடியாத சந்தோஷத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்

  ReplyDelete
 8. புதுமாற்றங்களை கவனிக்க இயலாமல் வேறு வேலை யில் இருந்தேன் உங்கள் பதிவால் பல விசயம் தெரிந்துகொண்டேன்.. ராமலக்‌ஷ்மி..

  டாப்புக்கு பரிசுக்கு புத்தகத்துக்கு எல்லாத்துக்கும் பாராட்டுகள்.:)

  ReplyDelete
 9. தொடர்ந்து ஜீப்ல ஏறிட வாழ்த்துகள்!

  தமிழ்மணம் புத்தகம் வந்தாச்சா! :)

  ReplyDelete
 10. TOP 10ல் வந்தமைக்கு வாழ்த்துகள்.........

  ReplyDelete
 11. இன்னும் பல சிகரங்கள் தொட உளமார்ந்த வாழ்த்துக்கள் ராமலஷ்மி :-))

  தமிழ்மணம் விருதுகளையும் வெல்ல வாழ்த்துகிறேன்..

  ReplyDelete
 12. ரொம்ப சந்தோஷ‌மா இருக்கு.. வாழ்த்துக்கள் மேம்!

  ReplyDelete
 13. நாந்தான் உங்கள மொதல்ல வாழ்த்தியது. :)

  சும்மா ஹிட்ஸ் கணக்கு மட்டும் எடுக்காமல் பல விசயங்களை தமிழ்மணம் கலந்து எடுப்பது நல்ல விசயம்.

  மேலும் வாரம் ஒரு முறை இதை அப்டேட் செய்வதால் எல்லோருக்கும் இதில் இடம்பெற வாய்ப்பு கெடைக்குது.

  தமிழ்மணம் இதேபோல் (ஹிட்ஸ் கணக்கை மட்டும் வைத்து முடிவு செய்யாமல்) தொடர்ந்து ஃபாளோ செய்யனும் :)

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் வாராவாரம் இடத்தை தக்கவைக்க முயற்சிக்கவும்

  ReplyDelete
 15. வாழ்த்துகள் அக்கா !

  ReplyDelete
 16. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி. குறிப்பாக பதிவர்கள் பலரின் புத்தகங்களையும் வாங்கி இருப்பது கண்டு மகிழ்ச்சி. மென்மேலும் பல பரிசுகளைக் குவிக்கவும் வாழ்த்துகள் :)

  ReplyDelete
 17. //கோவில் முருகன் - என்.விநாயமுருகன்//

  கோவில் மிருகம் முருகனாகிவிட்டதே :)

  ReplyDelete
 18. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.மென்மேலும் தொடரட்டும் வெற்றிகள்.

  ReplyDelete
 19. மிகுந்த மகிழ்ச்சி . வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. கலக்கல் ராமலஷ்மி! வாழ்த்துகள்! :-)

  புத்தக பட்டியலில் எல்லாம் பதிவர் பட்டியலா..சூப்பர்!

  ReplyDelete
 21. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள்!!! ...

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் மேடம்.

  ReplyDelete
 24. வாழ்த்துக்கள்! :)

  ReplyDelete
 25. ப்ரியமுடன் வசந்த் said...
  //மிக்க மகிழ்ச்சி மேடம் டாப் 10ல் வந்தமைக்கு!

  தமிழ்மணம் விருது விழாவில் இம்முறை நான்கிலும் வெல்ல வாழ்த்துகள்!//

  ஒருவருக்கு மூன்று பிரிவு மட்டுமே அனுமதி. #தகவல்

  மிக்க நன்றி வசந்த்:)!

  ReplyDelete
 26. சகாதேவன் said...
  //ரங்கமணியிடம் சொல்லி, உங்களுக்கு சுற்றிப் போடச் சொல்லுங்கள்.
  என்னையும் நினைவு கூர்ந்து எழுதியதற்கு நன்றி.//

  அப்படியே செய்திடலாம்:)! மிக்க நன்றி சகாதேவன்.

  ReplyDelete
 27. தமிழ்க் காதலன். said...
  //நான் உங்களிடம் கேட்க வேண்டும் என நினைத்திருந்த கேள்விகள் சிலவற்றுக்கான பதில்களாய் இந்த பதிவு உள்ளது. மிக்க நன்றி. நேரில் தொடர்கிறேன்.//

  நல்லது, மிக்க நன்றி:)!

  ReplyDelete
 28. LK said...
  //வாழ்த்துக்கள் மேடம். இந்த வருடமும் தமிழ் மணப் போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்//

  நன்றி எல் கே. எல்லோரும் கலந்து சிறப்பிப்போம்.

  ReplyDelete
 29. புவனேஸ்வரி ராமநாதன் said...
  //மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.//

  நன்றி புவனேஸ்வரி.

  ReplyDelete
 30. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  //ரொம்ப சந்தோசமா இருக்கு ராமலக்ஷ்மி மேடம். உங்கள் படைப்புகள் தரம் வாய்ந்தவை.,போற்றத்தக்கது. மேலும் வெற்றிகள் பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 31. அன்பரசன் said...
  //வாழ்த்துக்கள்.//

  தொடரும் வருகைக்கு மிக்க நன்றி அன்பரசன்.

  ReplyDelete
 32. அம்பிகா said...
  //மேலும், மேலும் சிகரம் தொட, தொடுவீர்கள்...
  வாழ்த்துக்கள்.
  என் பதிவுக்கு 13 வது இடம் என்பதனை நம்ப முடியாத சந்தோஷத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்//

  பார்த்தேன் அம்பிகா:)! உங்களுக்கும் வாழ்த்துக்கள்! மிக்க நன்றி.

  ReplyDelete
 33. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //புதுமாற்றங்களை கவனிக்க இயலாமல் வேறு வேலை யில் இருந்தேன் உங்கள் பதிவால் பல விசயம் தெரிந்துகொண்டேன்.. ராமலக்‌ஷ்மி..//

  அதுவும் பதிவின் நோக்கம். குறிப்பாக விருது விழா எல்லோரது கவனத்துக்கும் வர வேண்டும்.

  //டாப்புக்கு பரிசுக்கு புத்தகத்துக்கு எல்லாத்துக்கும் பாராட்டுகள்.:)//

  மிக்க நன்றி முத்துலெட்சுமி:)!

  ReplyDelete
 34. ஆயில்யன் said...
  //:)

  வாழ்த்துகள் !//

  நன்றி ஆயில்யன்!

  :)

  ReplyDelete
 35. ஈரோடு கதிர் said...
  //தொடர்ந்து ஜீப்ல ஏறிட வாழ்த்துகள்!//

  நன்றி கதிர். அது சாத்தியமா தெரியாது. ஆகவேதான் வந்த வேளையில் ஒட்டியாச்சு போஸ்டர்:)! மேலும், எல்லோருக்கும் வாய்ப்பு அமையட்டும். 15-க்கு வாழ்த்துக்கள்!

  //தமிழ்மணம் புத்தகம் வந்தாச்சா! :)//

  பட்டியலையே தந்து விட்டேனே:)!!

  ReplyDelete
 36. வழிப்போக்கன் - யோகேஷ் said...
  //TOP 10ல் வந்தமைக்கு வாழ்த்துகள்.........//

  மிக்க நன்றி யோகேஷ்.

  ReplyDelete
 37. அமைதிச்சாரல் said...
  //இன்னும் பல சிகரங்கள் தொட உளமார்ந்த வாழ்த்துக்கள் ராமலஷ்மி :-))

  தமிழ்மணம் விருதுகளையும் வெல்ல வாழ்த்துகிறேன்..//

  மிக்க நன்றி அமைதிச்சாரல்.

  ReplyDelete
 38. Priya said...
  //ரொம்ப சந்தோஷ‌மா இருக்கு.. வாழ்த்துக்கள் மேம்!//

  வாங்க ப்ரியா. மிக்க நன்றி.

  ReplyDelete
 39. ஸ்ரீராம். said...
  //வாழ்த்துக்கள்.//

  நன்றிகள் ஸ்ரீராம்:)!

  ReplyDelete
 40. வருண் said...
  //நாந்தான் உங்கள மொதல்ல வாழ்த்தியது. :)//

  அதுவும் புதிர் போட்டு... :)

  //சும்மா ஹிட்ஸ் கணக்கு மட்டும் எடுக்காமல் பல விசயங்களை தமிழ்மணம் கலந்து எடுப்பது நல்ல விசயம்.

  மேலும் வாரம் ஒரு முறை இதை அப்டேட் செய்வதால் எல்லோருக்கும் இதில் இடம்பெற வாய்ப்பு கெடைக்குது.

  தமிழ்மணம் இதேபோல் (ஹிட்ஸ் கணக்கை மட்டும் வைத்து முடிவு செய்யாமல்) தொடர்ந்து ஃபாளோ செய்யனும் :)//

  உண்மைதான். செய்வார்கள் என நம்புவோம். இருபதுக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு :) !!

  ReplyDelete
 41. சி.பி.செந்தில்குமார் said...
  //வாழ்த்துக்கள் வாராவாரம் இடத்தை தக்கவைக்க முயற்சிக்கவும்//

  நன்றி. வழக்கம் போலவேதான் தொடரும் பதிவுகள்:)! அமைந்தால் அமையட்டும். பத்தாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ள உங்களுக்கும் வாழ்த்துக்கள் செந்தில்குமார்!

  ReplyDelete
 42. ஹேமா said...
  //வாழ்த்துகள் அக்கா !//

  நன்றிகள் ஹேமா.

  ReplyDelete
 43. கவிநயா said...
  //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி. குறிப்பாக பதிவர்கள் பலரின் புத்தகங்களையும் வாங்கி இருப்பது கண்டு மகிழ்ச்சி. மென்மேலும் பல பரிசுகளைக் குவிக்கவும் வாழ்த்துகள் :)//

  நன்றி கவிநயா. பதிவில் அறிமுகமானவர்களின் எழுத்துக்களை புத்தக வடிவில் பார்க்கையில் படிக்கையில் மகிழ்ச்சிதான்:)!

  ReplyDelete
 44. நிலாரசிகன் said...
  ***//கோவில் முருகன் - என்.விநாயமுருகன்//

  கோவில் மிருகம் முருகனாகிவிட்டதே :)***

  கவனக்குறைவால் ஏற்பட்ட பிழை. திருத்தி விட்டேன் நீங்கள் சொன்னதுமே. நன்றி நிலாரசிகன்:)!

  ReplyDelete
 45. திகழ் said...
  //வாழ்த்துகள்//

  நன்றி திகழ்.

  ReplyDelete
 46. மாதேவி said...
  //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.மென்மேலும் தொடரட்டும் வெற்றிகள்.//

  நன்றிகள் மாதேவி:)!

  ReplyDelete
 47. தமிழ் உதயம் said...
  //மிகுந்த மகிழ்ச்சி . வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி தமிழ் உதயம்.

  ReplyDelete
 48. சந்தனமுல்லை said...
  //கலக்கல் ராமலஷ்மி! வாழ்த்துகள்! :-)

  புத்தக பட்டியலில் எல்லாம் பதிவர் பட்டியலா..சூப்பர்!//

  ஆமா முல்லை:)! மிக்க நன்றி!

  ReplyDelete
 49. மோகன் குமார் said...
  //வாழ்த்துக்கள் Madam.//

  நன்றி மோகன் குமார்:)!

  ReplyDelete
 50. K.B.JANARTHANAN said...
  //மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!//

  மிக்க நன்றி தங்கள் முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 51. அமுதா கிருஷ்ணா said...
  //வாழ்த்துக்கள்..//

  முதல் வருகையென எண்ணுகிறேன். நன்றிகள் அமுதா கிருஷ்ணா:)!

  ReplyDelete
 52. அமுதா said...
  //வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள்!!! ...//

  நன்றி அமுதா:)!

  ReplyDelete
 53. Sriakila said...
  //வாழ்த்துக்கள் மேடம்.//

  மிக்க நன்றி ஸ்ரீஅகிலா.

  ReplyDelete
 54. Bharkavi said...
  //வாழ்த்துக்கள்! :)//

  நன்றி பார்கவி.

  ReplyDelete
 55. சசிகுமார் said...
  //congratz//

  நன்றி சசிகுமார். வாழ்த்துக்கள் எட்டாம் இடத்துக்கு:)!

  ReplyDelete
 56. தமிழ்மணத்தில் வாக்களித்த 15 பேருக்கும், இன் ட்லியில் வாக்களித்த 12 பேருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 57. மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 58. இனிய வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 59. நீங்க வெற்றி இடத்தில் இருக்க தகுதியானவர்தான்.... உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 60. வாழ்த்துக்கள் அக்கா..

  ReplyDelete
 61. அமைதி அப்பா said...
  //மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.//

  நன்றி அமைதி அப்பா:)!

  ReplyDelete
 62. சி. கருணாகரசு said...
  //இனிய வாழ்த்துக்கள்.....

  நீங்க வெற்றி இடத்தில் இருக்க தகுதியானவர்தான்.... உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி கருணாகரசு. இளங்கதிர் நலமா:)?

  ReplyDelete
 63. சுசி said...
  //வாழ்த்துக்கள் அக்கா..//

  நன்றி சுசி:)!

  ReplyDelete
 64. // ராமலக்ஷ்மி said...
  ப்ரியமுடன் வசந்த் said...
  //மிக்க மகிழ்ச்சி மேடம் டாப் 10ல் வந்தமைக்கு!

  தமிழ்மணம் விருது விழாவில் இம்முறை நான்கிலும் வெல்ல வாழ்த்துகள்!//

  ஒருவருக்கு மூன்று பிரிவு மட்டுமே அனுமதி. #தகவல்
  //

  மன்னிக்கவும் மேடம்

  *17. பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவு – எந்த இடுகைகளாகவும் இருக்கலாம்*

  +

  3. எந்தவொரு இடுகையையும் எழுதிய பதிவரே பரிந்துரை செய்யவேண்டும். ஒரே பதிவர் அதிகபட்சமாக மூன்று வெவ்வேறு பிரிவுகளுக்குப் பரிந்துரை செய்யலாம்.


  =4 (சரியா?)

  ReplyDelete
 65. மொத்த பின்னூட்டமும் முடியட்டும் பூசணிக்காயோடு வருகிறேன்....[சகாதேவன் கவனிக்க]

  ReplyDelete
 66. @ வசந்த்,

  // ஒரே பதிவர் அதிகபட்சமாக மூன்று வெவ்வேறு பிரிவுகளுக்கு//

  அந்த மூன்று பிரிவுகளுக்குள் 17-ம் அடக்கம் என்பதே என் புரிதல்:)! தமிழ்மணம் நமக்கு மடல் அனுப்புகையில் இது தெளிவாகத் தெரிய வரும் என நம்புகிறேன். காத்திருப்போம்:)!

  ReplyDelete
 67. goma said...
  //மொத்த பின்னூட்டமும் முடியட்டும் பூசணிக்காயோடு வருகிறேன்....[சகாதேவன் கவனிக்க]//

  நன்றி:))! முடிந்தது, சரியான நேரத்தில் வந்து விட்டீர்கள்:)!

  ReplyDelete
 68. தொடர் வெற்றிகள் தொடர் வண்டிகளாய் தொடரட்டும்

  வாழ்த்துக்கள் சகோ

  விஜய்

  ReplyDelete
 69. @ விஜய்,

  மிக்க நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin