சனி, 14 ஆகஸ்ட், 2010

பச்சை - ஆகஸ்ட் PiT போட்டிக்கு..

பெங்களூரில் மெட்ரோ திட்டத்துக்காக நாலாயிரத்துக்கும் மேலான மரங்கள் வெட்டப்பட்டு விட்டதாக காற்று வாக்கில் செய்திகள் உலவினாலும் அரசு தரப்பு அதை மறுக்கிறது. முன் எப்போதையும் விடக் கொதிப்பாக அமைந்த இவ்வருடக் கோடை ‘நானே போதாதா ஆதரத்துக்கு’ என அச்சுறுத்திச் சென்று விட்டது. பெங்களூரின் வெதருக்காகவே முற்றுகையிட்ட பன்னாட்டு நிறுவனங்களால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க, ஜனத்தொகை பெருக, அதற்கேற்ற வகையில் சாலை விஸ்தரிப்புகளும் மேம்பாலங்களும் தற்போது மெட்ரோவும் தேவைப்பட கடைசியில் இழந்தது கார்டன் சிட்டி தன் அடையாளத்தை.

காட்டை அழித்து நாடாக்குவதும் வயலை அழித்து வீடாக்குவதும் தொடருகிற வேளையில் வந்திருக்கும் PiT தலைப்பு ‘பச்சை’. பசுமை. மனதுக்குக் குளுமை.

"படத்தில் பச்சை பிரதானமா இருக்கணும். அது மரமா இருக்கலாம், இலையா இருக்கலாம், உடையா இருக்கலாம், ப்ளாஸ்டிக் குடமா இருக்கலாம், பெயிண்ட் டப்பாவா இருக்கலாம், வாகனமா இருக்கலாம், இதுவா இருக்கலாம், அதுவா இருக்கலாம், கிளிப்பச்சையா இருக்கலாம், ஆலிவ் பச்சையா இருக்கலாம். மொத்தத்துல பச்சையா இருக்கணும்."

இப்படியாக PiT அறிவித்திருந்தாலும் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு வெகுசிலரைத் தவிர மற்றவர் எல்லாம்..
‘புல்லின் சிரிப்பு பச்சை நிறமே
இலையின் இளமை பச்சை நிறமே’
எனக் களத்தில் இறங்கி விட்டார்கள், பாருங்கள் இங்கே :)!

[படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரிந்தால் Ctrl மற்றும் minus பொத்தான்களை உபயோகித்திடக் கேட்டுக் கொள்கிறேன்.]


புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா!



அடர் பச்சைக் கானகத்தில் தனிப்பச்சையாய்..

தண்ணீரின் நிறமும் பாசிப்பச்சையாய்..


வயலும் வாழ்வும்



பச்சைப் பசேல்



கன்று ஒன்று



பசு ஒன்று

பசும்புல் சுவைத்தபடி..


பசுமை நிறைந்த நினைவுகளே..

"பாடித் திரிந்த பறவைகளே.. பழகிக் களித்த தோழர்களே..
பறந்து செல்கின்றோம்.. நாம்.. பிரிந்து செல்கின்றோம்.." என 82-ல் விடைபெற்ற இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளிக்கு சமீபத்திய நெல்லை விஸிட்டின் போது சென்றிருந்தேன். (அது பற்றியொரு பதிவு எழுத எண்ணம் உண்டு). சீருடை வண்ணமாகிய ‘பச்சை’ வெள்ளையைத் தன்னிலும் தாங்கி நிற்கறது பள்ளி அலுவலகம் இயங்கும் இந்தப் பிரதான கட்டிடம். நேர் மேலே சேப்பல்:

சன்னல்களின் பச்சை டின்டட் கண்ணாடி வழியே பாய்ந்து பரவி நிற்கும் இந்தப் பசும் ஒளி சின்ன வயதிலிருந்து ரொம்பப் பிடிக்கும். அமைதியான சூழலை இன்னும் ஆழமாக்குகிறது அந்த ஒளியெனத் தோன்றும். அதற்காகவே அடிக்கடி செல்லுவேன் அப்போது. பள்ளியினுள் பல மாற்றங்களைக் கண்டாலும் இந்த சேப்பல் அன்று கண்டது போல அப்படியே இருப்பது கண்டு வந்தது ஒரு பரவசம்.


மலர்களின் கானமும் மரங்களின் மயக்கமும்


மார்கழி பஜனையில் சிலிர்த்து நிற்கும் நெட்டிலிங்கங்கள்


எங்கெங்கு காணினும் பசுமையடா..



சோலை வனம்



மலர் வனம்



பூங்கா வனம்



ஏரிக்கரையோரம் தேநீர் நேரம்



துள்ளாத மனமும் துள்ளும்


இப்படியொரு back yard அமைந்தால்..


A Country House



தளிரும் மரமும்

பசுஞ்சோலையில் நிற்கும் பச்சிளம்பாலகன்
இவன் தலைமுறைக்காக..
விட்டு வையுங்கள் மரங்களை!


இருந்த பச்சைகளில் சிலவற்றைத் தேற்றிப் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.
இருத்தலின் அடையாளமாக எதைக் கொடுக்கட்டும் என நேரமிருந்தால் சொல்லிச் செல்லுங்கள். முதல் மூன்றில் ஒன்று என்பது என் எண்ணமாக உள்ளது:)!

65 கருத்துகள்:

  1. வழக்கம் போல புகைப் படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  2. பச்சை கண்களில் அப்பிவிட்டீர்கள்!

    எதை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள் என்பதை இந்த முறை மீ த வாட்சிங்க் ஒன்லி :)

    பதிலளிநீக்கு
  3. இரண்டாவது ... இருத்தல் என்பது இதுதான் ..

    பதிலளிநீக்கு
  4. 2nd one is best... whn give to select..give numbring...
    i also snd like this ..if u can try this
    http://faaique.blogspot.com/2010/08/blog-post_08.html

    பதிலளிநீக்கு
  5. வழக்கம் போல் படங்கள் அர்ர்ர்ருமை

    பதிலளிநீக்கு
  6. என்னிடம் ஒரு அருமையான பச்சை படம் ...பனித்துளிக்கு பதிலாக அம்மாவும் பெண்ணுமாக அமர்ந்திருப்பார்கள்[மும்பை தொங்கு தோட்டத்தில் எடுத்தது]
    எடுத்தது நான்தான் என்றாலும் இருப்பது அவர்கள் அல்லவா....

    பதிலளிநீக்கு
  7. அக்கா முதல் படம் மிக அருமை , கண்டிப்பாக நீங்கள் தான் ஜெயிப்பீர்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. அனைத்து படங்களுக்கும் சூப்பர்...

    பதிலளிநீக்கு
  9. வயலும் வாழ்வும் அனுப்புங்க

    முதல் படத்துல கொக்கு தான் ப்ரதானமா இருக்கு.. :)

    பதிலளிநீக்கு
  10. வாவ்! எல்லாமே சூப்பர்! அப்புறம் சபரி செம போஸ்! :-))

    பதிலளிநீக்கு
  11. காமிரா கவிதைகள் கொள்ளை அழகு அக்கா.

    கடைசி.. பையன் கருத்தோட மனசுல நிக்கிறார்..

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்.
    நீண்ட நாட்களுக்கு பின் வருகிறேன்.... நீங்க நலமா?

    படங்கள் எல்லாமே நல்லாதான் இருக்கு
    என் வரிசை.... 2,3,1.
    மற்றபடி பச்சை வெகு சிலிர்ப்பு.

    பதிலளிநீக்கு
  13. என்னோட சாய்ஸ் வயலும் வாழ்வும்...!

    அதற்கடுத்து சோலைவனம்...!

    வெற்றி பெற வாழ்த்துக்கள் மேடம்!

    பதிலளிநீக்கு
  14. Excellent photoes. Normally I like greenish scenaries; most of the photoes are awesome. All the best. You will surely win prize.

    பதிலளிநீக்கு
  15. 2 avathu padathai konjam depth kooti parungal kandipaga nantrai irukkum.sthil msttum than mulumaiyana patchai ullathu... valthukkal mam
    kalathil kuthipom

    பதிலளிநீக்கு
  16. மூன்றாவது படம்தான் ராமலக்ஷ்மி.
    ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்களப் பார்ப்பதில் சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  17. புகைப்படங்கள் ஒரே சாயலில் இருந்தாலும் நோய் நொடியில்லா வாழ்வுக்கு இந்த பச்சை எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு மரங்களைக் காக்க ஏதாவது செய்தால் நல்லது.

    அடுத்தவர்களை சொல்கிறாயே...நீ என்ன செய்தாய் என்று பலர் கேட்கலாம். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள மரத்தின் இலைகள் உதிர்வதால் அவற்றை சுத்தம் செய்வதே பெரிய வெளியாகி வருகிறது. ஆனால் நாங்க அந்த மரத்தை எதுவும் செய்யாமல் இருக்கிறோம். எங்களால் இப்போது முடிந்தது இதுதான்.

    பதிலளிநீக்கு
  18. வயலும் வாழ்வும் முதலிடம். தனிப்பச்சை ரெண்டாவது..

    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. அனைத்திலும் பசுமை அழகு அருமை! இருந்தாலும் மூன்றாவதில் நம் வயல்களின் பசுமை கொள்ளை அழகு!

    பதிலளிநீக்கு
  20. பசுமை என்ற தலைப்புக்காக, பள்ளிக்கூடத்தையெல்லாம் போடுறது ரொம்ப புதுசா இருக்கு :-)

    பதிலளிநீக்கு
  21. புகைப்படங்கள் அனைத்தும் அருமை . பகிர்வுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  22. பசுமை மாறாமல் இருக்குங்க...

    பசுமையான வாழ்த்துகள்
    3ம் 4ம் என் தேர்வாக இருக்கும்

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    பதிலளிநீக்கு
  23. எப்படிப்பா இவ்வளவு அழகா படம் எடுக்கிறீங்க? ஒவ்வொரு படமும் மயங்க வைக்குது.

    கான்வெண்ட் பத்தி கண்டிப்பா எழுதணும்!!

    பதிலளிநீக்கு
  24. வழக்கம் போல புகைப் படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  25. ஸ்ரீராம். said...
    //வழக்கம் போல புகைப் படங்கள் அருமை.//

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  26. ஆயில்யன் said...
    //பச்சை கண்களில் அப்பிவிட்டீர்கள்!//

    எடுத்த படங்களை பகிர்ந்திட கிடைத்த வாய்ப்பு. விடலாமா:)?

    //எதை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள் என்பதை இந்த முறை மீ த வாட்சிங்க் ஒன்லி :)//

    இப்படிச் சொன்னால் எப்படி:(?

    பதிலளிநீக்கு
  27. கே.ஆர்.பி.செந்தில் said...
    //இரண்டாவது ... இருத்தல் என்பது இதுதான் ..//

    ‘இருத்தல்’? மிகச் சரி:)! நன்றி செந்தில்.

    பதிலளிநீக்கு
  28. tamildigitalcinema said...
    //உங்களது பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://writzy.com/tamil/ ல் உங்கள் பதிவுகளை இணையுங்கள்...//

    தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. Mohamed Faaique said...
    //2nd one is best... whn give to select..give numbring...
    i also snd like this ..if u can try this
    http://faaique.blogspot.com/2010/08/blog-post_08.html//

    உங்கள் பதிவைப் பார்த்தேன். எப்போதும் படங்களுக்கு தலைப்பு கொடுத்து விடுவதால் நான் இம்முறையைப் பற்றி யோசிக்கவில்லை. நல்ல யோசனை. அடுத்தமுறை நடைமுறைப் படுத்துகிறேன். முதல் வருகைக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  30. goma said...
    //வழக்கம் போல் படங்கள் அர்ர்ர்ருமை//

    மிக்க நன்றி:)!

    //என்னிடம் ஒரு அருமையான பச்சை படம் ...பனித்துளிக்கு பதிலாக அம்மாவும் பெண்ணுமாக அமர்ந்திருப்பார்கள்[மும்பை தொங்கு தோட்டத்தில் எடுத்தது]
    எடுத்தது நான்தான் என்றாலும் இருப்பது அவர்கள் அல்லவா....//

    அனுமதி கிடைத்தால் பகிர்ந்திடுங்கள். காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  31. சசிகுமார் said...
    //அக்கா முதல் படம் மிக அருமை , கண்டிப்பாக நீங்கள் தான் ஜெயிப்பீர்கள் வாழ்த்துக்கள்//

    நன்றி சசிகுமார். பங்களிப்புடன் நம் கடமை முடிந்தது:)!

    பதிலளிநீக்கு
  32. சௌந்தர் said...
    //அனைத்து படங்களுக்கும் சூப்பர்...//

    நன்றி செளந்தர்.

    பதிலளிநீக்கு
  33. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //வயலும் வாழ்வும் அனுப்புங்க//

    முதல் ஓட்டு:)!

    //முதல் படத்துல கொக்கு தான் ப்ரதானமா இருக்கு.. :)//

    அதுவும் சரிதான்:)!

    பதிலளிநீக்கு
  34. சந்தனமுல்லை said...
    //வாவ்! எல்லாமே சூப்பர்! அப்புறம் சபரி செம போஸ்! :-))//

    நன்றி முல்லை:)!

    பதிலளிநீக்கு
  35. சுசி said...
    //காமிரா கவிதைகள் கொள்ளை அழகு அக்கா.

    கடைசி.. பையன் கருத்தோட மனசுல நிக்கிறார்..//

    நன்றி சுசி:)!

    பதிலளிநீக்கு
  36. அம்பிகா said...
    //பசுமையான அழகு.
    3ம் 4ம் அழகு.//

    நாலாவது உங்களைப் போலவே இன்னும் சிலருக்கும் பிடித்துள்ளது. கோணம் மிக நேர்த்தியாக இல்லாவிட்டாலும் பச்சை என்னவோ பசேல் பசேல். நன்றி அம்பிகா.

    பதிலளிநீக்கு
  37. சி. கருணாகரசு said...
    //வணக்கம்.
    நீண்ட நாட்களுக்கு பின் வருகிறேன்.... நீங்க நலமா?

    படங்கள் எல்லாமே நல்லாதான் இருக்கு
    என் வரிசை.... 2,3,1.
    மற்றபடி பச்சை வெகு சிலிர்ப்பு.//

    வரிசைப் படுத்தியமைக்கு நன்றி கருணாகரசு. சில நாட்கள் நானும் வலைப்பக்கம் வரவில்லை:)!

    பதிலளிநீக்கு
  38. ப்ரியமுடன் வசந்த் said...
    //என்னோட சாய்ஸ் வயலும் வாழ்வும்...!

    அதற்கடுத்து சோலைவனம்...!

    வெற்றி பெற வாழ்த்துக்கள் மேடம்!//

    சோலைவனம் எனக்கும் பிடித்த ஒன்று. நன்றி வசந்த்.

    பதிலளிநீக்கு
  39. மோகன் குமார் said...
    //Excellent photoes. Normally I like greenish scenaries; most of the photoes are awesome. All the best. You will surely win prize.//

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  40. mervinanto said...
    //2 avathu padathai konjam depth kooti parungal kandipaga nantrai irukkum.sthil msttum than mulumaiyana patchai ullathu... valthukkal mam
    kalathil kuthipom//

    நன்றி மெர்வின். இனிதான் முடிவு எடுக்க வேண்டுமென்றாலும்
    நீங்கள் சொன்னவாறே செய்து தயாராக வைத்திருக்கிறேன், களத்தில் குதிக்க:)!

    பதிலளிநீக்கு
  41. வல்லிசிம்ஹன் said...
    //மூன்றாவது படம்தான் ராமலக்ஷ்மி.
    ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்களப் பார்ப்பதில் சந்தோஷம்.//

    நன்றி வல்லிம்மா! உங்கள் வருகை எனக்கும் மகிழ்ச்சி:)!

    பதிலளிநீக்கு
  42. திருவாரூரிலிருந்து சரவணன் said...
    //புகைப்படங்கள் ஒரே சாயலில் இருந்தாலும் நோய் நொடியில்லா வாழ்வுக்கு இந்த பச்சை எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு மரங்களைக் காக்க ஏதாவது செய்தால் நல்லது.//

    அதேதான்.

    //அடுத்தவர்களை சொல்கிறாயே...நீ என்ன செய்தாய் என்று பலர் கேட்கலாம். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள மரத்தின் இலைகள் உதிர்வதால் அவற்றை சுத்தம் செய்வதே பெரிய வெளியாகி வருகிறது. ஆனால் நாங்க அந்த மரத்தை எதுவும் செய்யாமல் இருக்கிறோம். எங்களால் இப்போது முடிந்தது இதுதான்.//

    இப்படியான எண்ணங்கள் எல்லோருக்கும் இருந்தாலே போதுமே. நன்றி சரவணன்.

    பதிலளிநீக்கு
  43. அமைதிச்சாரல் said...
    //வயலும் வாழ்வும் முதலிடம். தனிப்பச்சை ரெண்டாவது..

    வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

    கவனத்தில் கொள்கிறேன் உங்கள் கருத்தை. நன்றி அமைதிச்சாரல்.

    பதிலளிநீக்கு
  44. மனோ சாமிநாதன் said...
    //அனைத்திலும் பசுமை அழகு அருமை! இருந்தாலும் மூன்றாவதில் நம் வயல்களின் பசுமை கொள்ளை அழகு!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் மனோ சாமிநாதன்.

    பதிலளிநீக்கு
  45. "உழவன்" "Uzhavan" said...
    //பசுமை என்ற தலைப்புக்காக, பள்ளிக்கூடத்தையெல்லாம் போடுறது ரொம்ப புதுசா இருக்கு :-)//

    இருப்பதிலேயே அதுதான் வித்தியாசமாய் இருக்கு, அதைக் கொடுங்களேன் போட்டிக்கு என நண்பர் ஒருவர் மடல் அனுப்பியிருந்தார் என்றால் பாருங்களேன்:)!

    பதிலளிநீக்கு
  46. PPattian : புபட்டியன் said...
    //பூங்கா வனம் is my choice...//

    பச்சை இலைகளால் தோரணம் அமைந்த படம். நன்றி புபட்டியன்.

    பதிலளிநீக்கு
  47. !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    //புகைப்படங்கள் அனைத்தும் அருமை . பகிர்வுக்கு நன்றி. //

    நன்றி சங்கர்.

    பதிலளிநீக்கு
  48. ஆ.ஞானசேகரன் said...
    //பசுமை மாறாமல் இருக்குங்க...

    பசுமையான வாழ்த்துகள்
    3ம் 4ம் என் தேர்வாக இருக்கும்//

    நன்றி ஞானசேகரன்.

    பதிலளிநீக்கு
  49. சிங்கக்குட்டி said...
    //புகைபடங்கள் அனைத்துமே அருமை :-)//

    நன்றி சிங்கக்குட்டி? நலமா:)?

    பதிலளிநீக்கு
  50. ஹுஸைனம்மா said...
    //எப்படிப்பா இவ்வளவு அழகா படம் எடுக்கிறீங்க? ஒவ்வொரு படமும் மயங்க வைக்குது.

    கான்வெண்ட் பத்தி கண்டிப்பா எழுதணும்!!//

    நன்றி ஹுஸைனம்மா.

    கான்வெண்ட் பற்றி நிச்சயம் எழுதுகிறேன். முழு ஸ்கூலையும் படம் எடுத்திருக்கிறேன். ஒரு பிகாஸா ஆல்பமாக்கிட எண்ணம்.

    பதிலளிநீக்கு
  51. சே.குமார் said...
    //வழக்கம் போல புகைப் படங்கள் அருமை.//

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  52. தமிழ்மணத்தில் வாக்களித்த 11 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 28 பேருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  53. எட்டாவது எனக்குப்பிடித்தது. (வழிபாட்டு அறையில் இருக்கும் ஜீஸஸ் படம்) நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்வது போல்........

    பதிலளிநீக்கு
  54. எல்லாப் படங்களும் நல்லா இருக்கு ராமலக்ஷ்மி.

    வயல் இல்லையென்றால் வாழ்வேது !

    நம் வாழ்வுக்கு ஆதாரம் வயல் தானே அதற்கு தான் என் ஓட்டு.

    பச்சிளம் பாலகன் சபரியும் தன் தலைமுறை தாண்டி வருமா இந்த பசுஞ்சோலை என சிந்திக்கிறனோ!

    பதிலளிநீக்கு
  55. அக்கா, உங்கள் படங்களை பார்த்துக் கொண்டு வரும் போது, பள்ளி chapel பார்த்து விட்டு, கண்களில் நீர்.... இனம் புரியா சந்தோஷம்.... ரொம்ப நன்றி, அக்கா... விரைவில், நீங்கள் எழுதும் குறிப்பு குறித்து படிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு
  56. ம‌ன‌தை கொள்ளைக்கொள்கிற‌து ப‌ட‌ங்க‌ள்.

    பதிலளிநீக்கு
  57. பச்சையா சொல்லணுமின்னா...ரெண்டாவது படம்தான் பச்சையாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  58. oru karuthu, sila padangal, ethilumn neerthi ... ithu thaan ungal adayalam ... ippathivum vazhakkam pole !!! :)

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin