புதன், 17 பிப்ரவரி, 2010

ஏரிக்கரைப் பூங்காற்றே-குமரகம் புகைப்படங்கள்-PiT போட்டிக்கும்

கேரளம் என்றால் பசுமை. பசுமை என்றால் கேரளம். கட்டியம் கூறுவது போல இருந்தன விமானத்திலிருந்து பார்க்கையில், விரிக்கப்பட்ட பச்சைக் கம்பளம் போலக் காட்சியளித்த தென்னைகள். கொச்சினில் இருந்து ஒன்றரைமணிநேரம் பயணித்தால் குமரகம். படங்களைப் பேசவிட்டிருக்கிறேன் வழக்கப்போல சின்னக் குறிப்புகளுடன்.

ஏரிக்கரைப் பூங்காற்றே

இம்மாத PiT போட்டித் தலைப்பு: வாகனம். இந்த முதல் படத்தையே போட்டிக்குத் தந்துள்ளேன்.
***

கரையோரக் கவிதைகள்

கண்ணுக்கெட்டிய வரையில் ஏரியைச் சுற்றியமைந்த கரையெங்கும் பசுமைதான். செழிப்புக்குக் காரணம் பேக் வாட்டர்.இருநூற்றுஐந்து சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து பரந்த வேம்பநாடு ஏரியைச் சுற்றிதான் குமரகமும் ஆலப்புழை, கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களும் உள்ளன.

முதலில் பேக்வாட்டர்ஸ் என்றால் என்னவென்று பார்ப்போம். இந்த ஏரியை எடுத்துக் கொண்டால் அது கடல் மட்டத்தின் அளவில் உள்ளது. மழைக்காலத்தில் மலையிலிருந்து பாய்ந்துவரும் நதிகளின் நீரானது கடலில் கலக்கும்போது ஏரியையும் நிரப்புகிறது. அந்த நல்லநீர் சுற்றியுள்ள மாவட்டங்களில் விவசாயத்துக்கு மிக உகந்ததாய் இருக்கிறது. மழையற்ற கோடையிலோ தாழ்வான மட்டத்தில் இருக்கும் காரணத்தால் கடலின் உப்புநீர் ஏரிக்குள் புகுகிறது. இதைத்தான் ‘பேக் வாட்டர்ஸ்’ என்கிறார்கள். அந்த சமயம் மட்டும் விவசாயத்துக்கு ஏற்றதாக இருப்பதில்லை.
***

போறவழி தென்கிழக்கோ

படகுவீடுகள் சராசரியாக 70அடி நீளமும் நடுப்பகுதில் 15அடி அகலமும் கொண்டவையாக உள்ளன. ஆணிகளை உபயோகிக்காமல் தேங்காய் நார்களைக் கொண்டேதான் பலகைகளைக் கட்டுகின்றார்களாம்.
***

அதிகாலை நேரமே இனிதான பயணமே
நிலாவைத்தான் கையில பிடிக்கமுடியுமா? அள்ளமுடியும் அதேபாணியில் சுடாத காலைச்சூரியனையும். ஆனா தோணி ஆட்டம் கண்டுட்டா.. அதான் கம்முன்னு அள்ளிட்டேன் நிர்மலமான அந்தச் சுடரொளியை கவனமா காமிராவிலேயே:)! எப்படிப் படகு சீராய்க் கிழிக்கிறது நீரிலே கோடு, பாருங்களேன்!
***

ஒதுங்கி நிற்கிறது படகு
கூரைமேல் சூரியன் எத்தனை அழகு

***
அஸ்தமனப் பொழுது
அமைதியில் மனது

அந்திசாயும் நேரமானால் ஏரிக்கரையோரம் இருக்கும் இருக்கைகள் நிரம்பிவிடும் அஸ்தமனத்தை ரசிக்க. ‘சளக் சளக்’ தாளகதியோடு கரையைத் தொடர்ந்து தொட்டுச் செல்லும் சிற்றலைகளின் சங்கீதம், நொடிக்கு நொடி மாறும் வானின் வர்ண ஜாலம், மெல்ல மெல்ல நீருக்குள் இறங்கும் சூரியப்பந்து யாவும் நெஞ்சை நிறைக்கும் அமைதியைத் தந்து.
***

தனித்திரு விழித்திரு
***
விழித்திருந்ததால் தனித்துத்தெரிவது
அடர்கானகத்தில் நிமிர்ந்துவளர வழியின்றிபோனாலும்
அயர்ந்து போகாமல்
கிடைத்தசந்தில் புகுந்துபுறப்பட்டு உருப்பட்டு
உலகுக்கு சொல்லுது பாடம்
வாய்ப்பு தேடிவரக் காத்திருக்காதே
தேடிப்போ நீ வாய்ப்பையென!
***


வானமே எல்லைநானும்தான் நானும்தான் என இன்னுமொன்று
தொட்டுவிடும் தூரம்தான் வானம்என்று
***

மோட்டர் படகு, துடுப்புப் படகு, படகு வீடு என எல்லாவற்றிலும் பயணித்து ஏரியைச் சுற்றி சுற்றி வந்த போது எடுத்த படங்களில் ஒருசிலவற்றைப் பகிர்ந்து கொண்டாயிற்று. ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.


பேக்கர்ஸ் பங்களா

வேம்பநாடு ஏரியின் கரையில்தான் அமைந்திருக்கிறது தாஜ் கார்டன் ரெட்ரீட் விடுதி.  ஆல்ஃப்ரெட் ஜார்ஜ் பேக்கர் என்பவரால் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1881-ல் கட்டப்பட்டது. நான்கு தலைமுறைகளாக நூறு வருடங்கள் அவரது குடும்பத்தினரே அதை உபயோகித்து வந்தபடியால் அவர் பெயருடனேயே இப்போது ரிசார்ட்டின் அலுவலகமாயும் உணவு விடுதியாயும்.


லகூன்
பங்களாவுக்கு நேர் எதிரே அமைந்த இந்த் லகூனைச் சுற்றிலும் இரவு ஏழுமணி அளவில் ஆரம்பித்து நான்கு கிராமத்துபெண்கள் ஆயிரம் அகல்விளக்குகளை ஏற்றி வைக்கிறார்கள். நீர் நிலம் அக்னி வாயு ஆகாயமென பஞ்சபூதங்களையும் தரிசிக்கும் ஐதீகமாம். இந்தப் பின்னணியில் மேலேதெரியும் புல்வெளியில் தினமும் இரவு எட்டு மணியிலிருந்து அரைமணி நேரத்துக்கு ஒவ்வொருநாளும் ஒன்றாக மோகினியாட்டம், பரதநாட்டியம், திருவாதிரை எனும் கேரளப் பாரம்பரிய கூட்டுநடனம், வயலின் மெல்லிசை எனக் காண வாய்த்தது. இரவுக்காட்சியாய் எடுத்தபடங்கள் எவையும் அத்தனை கூர்மையாக வரவில்லை. [மற்ற படங்கள் அந்த அனுபவத்துடன் இங்கே: ‘கண்ணோடு காண்பதெல்லாம்.]
ஒளிரும் தீபங்கள்
***

நெல் வயல்

சலசல ஓடை சிலுசிலு நாத்து
ஒத்தையடிப் பாலம் ஒசந்துநிக்கும் தென்னைகள்
***

பாதையோரம் பூத்திருந்து வரும்வழியைப் பார்த்திருந்தவை

செந்தாழம் பூவோ


***
ஸ்பீக்கர்பூவும் வெண்பூவும்
***
எக்சோரா என்னும் இட்லிப்பூ


***

சின்னஞ்சிறு மஞ்சள்மலர்

மொளைச்சு மூணுஇலையே விட்ட அரையடி உயரச்செடியில் ஒன்றரையங்குல அளவில் கண்சிமிட்டிய மஞ்சப்பூ மேக்ரோவில் அழகா வந்திருக்கா? ஒரு விஷயம் கவனித்தேன். இவற்றை எடுத்த பத்து நாட்களுக்குள்ளாகவேதான் லால்பாக் மலர்கண்காட்சி செல்லும் வாய்ப்பு வந்தது. பார்வைக்கென அணிவகுத்திருந்த தொட்டிச்செடிகளில் பூத்திருந்தவற்றைக் காட்டிலும் மண்ணில் வளர வரம் வாங்கி வந்தவற்றின் மலர்ச்சியே தனிதான் என்பதைக் கண்கூடாக உணர முடிந்தது. 
***


இயற்கையின் எழிலில் திளைக்க முடிந்த வனத்தில்
உறுத்தலாய் அமைந்தது இதுதான் மனதில்!

போட்டுத்........................................ ...........தள்ளுறாங்களே!
‘ஏன் வெட்டுறீங்க’ என்ற கேள்விக்கு ‘பூச்சி வெட்டிடுச்சு’ என வந்தது பதில். பல ஏக்கர் பரப்பளவில் பலவகை மரஞ்செடிகளைப் பயிர்செய்து பரமாரித்து வருபவர்கள் தப்பாகச் சொல்ல மாட்டார்கள் எனத் தோன்றினாலும் அத்தனை உயர்ந்தமரம் ஓரிரு மணியில் வெட்டிச் சாய்க்கப்பட்டது வருத்தமே த்ந்தது.

உலகெங்கிலும் மனிதரின் தேவைக்காக கணக்கில்லாமல் கடந்த சில வருடங்களாய்ச் சாய்க்கப்பட்டு வரும் மரங்கள்! காணாது போகிற காடுகரைகள்! விளைநிலங்கள்! விளைவுகள்? இயற்கையின் சீற்றம். குறைகிற மழை வரம். கூடிக்கொண்டே போகிற பூமியின் வெப்பம். இனியேனும் யோசிப்போம்.


இயற்கை அன்னையைப் போற்றுவோம்
இருக்கும் வளத்தைக் காப்பாற்றுவோம்


***


பொறுமையாய்ப் பார்த்ததற்கு நன்றி. சொல்லிப் போங்களேன் ‘பளிச்’சுன்னு பிடிச்சதென ஏதேனுமிருந்தால்:)!



ஏரிக்கரை படங்கள் மேலும் சில இந்தப் பதிவில்: தண்ணி காட்டறேன்..

இங்கே படங்கள் ஒன்றும் நான்கும்: கிழக்கு சிவக்கையிலே..




இப்பதிவுக்கு காட்சிப் படைப்புகள் பிரிவில் இரண்டாம் பரிசாக தமிழ்மணம் விருது 2010
வெள்ளிப் பதக்கம்
நன்றி தமிழ்மணம்!

முதலிரண்டு சுற்றுகளில் வாக்களித்த நண்பர்களுக்கும்,
இறுதிச் சுற்றில் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் நன்றி!
***


29 மார்ச் 2012
பேக்கர்ஸ் பங்களாவை இன்னொரு கோணத்தில் நான் எடுத்த படத்தை மேக் மை ட்ரிப் டாட்.காம் வாங்கி தன் விளம்பரங்களுக்கு பயன்படுத்தி வருகிறது என்பதையும் இங்கே பதிந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்:
***

153 கருத்துகள்:

  1. போட்டோக்களைப் பார்த்த 75 விழுக்காடு தன் அடுத்த சுற்றுலாவுக்கு கேரளாவைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.....
    good catch......

    பதிலளிநீக்கு
  2. //goma said...
    போட்டோக்களைப் பார்த்த 75 விழுக்காடு தன் அடுத்த சுற்றுலாவுக்கு கேரளாவைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.....
    //

    சரியா சொன்னீங்க கோமா. சீக்கிரமே போணும்னு தோணுது ஃபோட்டோஸ் பாத்து. பகிர்வுக்கு நன்றீஸ் அக்கா

    பதிலளிநீக்கு
  3. வார்த்த வரமாட்டங்குது. காமிரா அருமையா? உங்க திறமையாங்க?அருமை! அருமை!

    பதிலளிநீக்கு
  4. அருமை.. என்று ஒரே வார்த்தையில் அடங்கிவிடாது உங்கள் திறமை!!.

    பதிலளிநீக்கு
  5. வெட்டும் மரம் தவிர்த்து மற்றவையெல்லாம் நம்பர் 1 - அந்த வீடு/பங்களா ஹம்ம்ம் பார்த்துக்கிட்டே இருக்க தோணுது :)

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கவிதை. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. எதைச் சொல்ல ? எதை விட ?

    சூப்பர்

    பதிலளிநீக்கு
  8. எங்க பார்த்தாலும் படமும் யாத்திரையுமாப் போச்சே.:)
    எண்டே கேரளம் னு அதான் தம்பட்டம் போடறாங்க. நீங்க போய் வந்தது எங்களுக்கு எவ்வளவு லாபம் பாருங்கள்.
    வெகு வளப்பமான படங்கள். அழகு அள்ளிக் கொண்டு போகிறது. வெற்றிக்கு வாழ்த்துகள் பா.

    பதிலளிநீக்கு
  9. //காலைச்சூரியனை, அந்தச் சுடரொளியை, கவனமா காமிராவிலேயே கம்முன்னு அள்ளிட்டேன்//
    அத்தனை படங்களும் வர்ணனையும் அருமை. பி.ஐ.டி போட்டியில் பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. //பொறுமையாய்ப் பார்த்ததற்கு நன்றி. சொல்லிப் போங்களேன் ‘பளிச்’சுன்னு பிடிச்சதென ஏதேனுமிருந்தால்:)!//

    எல்லாமே பிடிச்சிட்டதால வாயடைச்சு போய்ட்டேன் அக்கா..

    அவ்ளோ அழகா இருக்கு படங்கள்..
    உங்க எழுத்துக்கள் இன்னும் அழகு சேர்க்குது.

    வாகனம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா.

    இவ்ளோ அருமையான இடங்கள கண்ணுக்கு விருந்தா தந்ததுக்கு நன்றிகள் அக்கா :)))

    பதிலளிநீக்கு
  11. ஒவ்வொரு புகைப் படமும், அதற்குரிய தலைப்பும், நீங்கள் எழுதிய விதமும் - வர்ணனை பூங்கா. அருமையான பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. நான் ஏற்கனவே அப்ளிகேஷன் போட்டிருக்கேன்.இந்த பதிவு லிங்கை அயித்தானுக்கு கொடுத்து பர்மிஷன் வாங்க வேண்டியதுதான்.

    புகைப்படங்கள் அருமைன்னா, உங்க காப்ஷன்ஸ் சூப்பரோ சூப்பர்

    பதிலளிநீக்கு
  13. அழகான படங்கள். அருமையான பகிர்வு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    அடுத்த தடவை ஊருக்கு வரும்போது நம்ம ஊரு அம்பாசமுத்திரம் பக்கம் வாங்க... அருவியும்,ஆறும், ஓடையும், குளமும், கொக்கும், வயலும், காடும், மரமும்,...பசுமையா நிறைய படம் எடுக்கலாம். :))

    பதிலளிநீக்கு
  14. பொறுமையா படிச்சதுக்கு நன்றியா?
    அதை நாங்க தான் சொல்லனும்.
    அழகழகான படங்கள். அழகான கவிதை. அருமையான பகிர்வு. நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  15. மிகமிக அழகா இருக்கு!!! இதுதான் நல்லா இருக்குன்னு சொல்ல முடியல அத்தனையும் மனதை கொள்ளைகொள்கிறது!(இரண்டு வருடம் முன்னால் நான் கூட மூணாறு, அதிரம்பள்ளி போயிருக்கேன். உண்மையிலே கேரளா அழகான ஊர்தான்)

    பதிலளிநீக்கு
  16. எங்க் ஏரியாவுக்கு வந்திருக்கீங்க எங்க கிட்ட சொல்லாம? கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு பராவயில்ல அடுத்தமுறை நியாபகம் வச்சிக்கோங்க http://www.s-teamholidays.com போய் பாருங்க

    பதிலளிநீக்கு
  17. எல்லாப் படங்களுமே அழகு + அருமை !
    பாராட்டுக்கள் சகோதரி !

    பதிலளிநீக்கு
  18. அருமை ராமலஷ்மி.
    இதை விட அழகான குளிர்ச்சியான வாகனம் இருக்குமோ.வெற்றிக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. புகைப்படம் அனைத்தும் அருமை...வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  20. அருமையான படங்கள் ..

    வெற்றி பெற வாழ்த்துக்கள் ராமலட்சுமி மேடம் .

    பதிலளிநீக்கு
  21. 3,7,11,17 ஆகிய புகைப்படங்கள் மிகக் சிறப்பு.

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  22. நீங்க வெற்றியடைந்தவுடன் பாட வேண்டிய பாடல்!

    வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும்!
    அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம்
    என் (nikon?) கேமிராவைச் சேரும்!

    99% உங்க திறமைதான், இருந்தாலும் இந்த வாயில்லாத கேமிராவுக்கு ஜெனரஸாக் கொஞ்சம் க்ரிடிட் கொடுங்க பாவம்! :)

    பதிலளிநீக்கு
  23. மீண்டும் செல்லத் தூண்டிவிட்டீர்கள் :)

    பதிலளிநீக்கு
  24. சூரியனின் சுடரொளியும் ஸ்பீக்கர் பூவும் தனித்திருவும் விழித்திருவும் அருமை ராமலெஷ்மி அடுத்த பயணம் குமரகம்தான்

    பதிலளிநீக்கு
  25. அற்புதம்.. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.... மஞ்சள் மலர் அழகு!

    பதிலளிநீக்கு
  26. goma said...

    //போட்டோக்களைப் பார்த்த 75 விழுக்காடு தன் அடுத்த சுற்றுலாவுக்கு கேரளாவைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.....
    good catch......//

    நன்றி கோமா. செல்லும் எவருக்கும் பிடித்துப் போகும் அந்த சூழல்.

    பதிலளிநீக்கு
  27. கபீஷ் said...

    //சரியா சொன்னீங்க கோமா. சீக்கிரமே போணும்னு தோணுது ஃபோட்டோஸ் பாத்து. பகிர்வுக்கு நன்றீஸ் அக்கா//

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ளீர்கள்:)! கருத்துக்கு நன்றி கபீஷ்!

    பதிலளிநீக்கு
  28. தனியாக நீரில் கல்லில் மேலிருக்கும் குருவியும் சாய்ந்த தென்னைமரமும் மெத்தப் பிடித்திருந்தன! :-)

    பதிலளிநீக்கு
  29. க.நா.சாந்தி லெட்சுமணன். said...

    // வார்த்த வரமாட்டங்குது. காமிரா அருமையா? உங்க திறமையாங்க?அருமை! அருமை!//

    இதேபோன்ற இயற்கை அழகு கொஞ்சும் அந்தமானில் இருக்கிற தங்களது பாராட்டு மகிழ்ச்சியைத் தருகிறது. முதல் வருகைக்கும் நன்றி சாந்தி லெட்சுமணன்.

    பதிலளிநீக்கு
  30. அமைதிச்சாரல் said...

    //அருமை.. என்று ஒரே வார்த்தையில் அடங்கிவிடாது உங்கள் திறமை!!//

    கருத்தை சொல்லியிருக்கும் விதம் இனிமை. நன்றி அமைதிச்சாரல்:)!

    பதிலளிநீக்கு
  31. ஆயில்யன் said...

    //வெட்டும் மரம் தவிர்த்து மற்றவையெல்லாம் நம்பர் 1 - அந்த வீடு/பங்களா ஹம்ம்ம் பார்த்துக்கிட்டே இருக்க தோணுது :)//

    நன்றி ஆயில்யன். படகு சவாரியும், பசுமையான சூழலும் பிடித்துப் போய் ரொம்பகாலம் டேரா போட்டிருந்தாராம் பேக்கர் துரை:)!

    பதிலளிநீக்கு
  32. க.இராமசாமி said...

    //ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கவிதை. பகிர்விற்கு நன்றி.//

    முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி இராமசாமி.

    பதிலளிநீக்கு
  33. Jeeves said...

    //எதைச் சொல்ல ? எதை விட ?

    சூப்பர்//

    எல்லாமே சூப்பரா:)? நன்றி ஜீவ்ஸ்!

    பதிலளிநீக்கு
  34. அண்ணாமலையான் said...

    //வெற்றிக்கு வாழ்த்துக்கள்.....//

    நன்றி அண்ணாமலையான்.

    பதிலளிநீக்கு
  35. எங்க ஆபிசுக்குப் பக்கதில இருகிற குமரகம் ஹோட்டல்தான் எனக்குத் தெரியும். ஒரிஜினல் குமரகத்தை நீங்கதான் இப்ப எனக்கு அழகான படங்கள் மூலம் காட்டியிருக்கீங்க :-))

    பதிலளிநீக்கு
  36. புகைப்படங்கள் மிகவும் அருமை ... வெற்றிபெற வாழ்த்துக்கள் .
    நம்ம பெங்களூரு குழுப் போட்டியில் கலந்து கொள்ளலாமே ..

    பதிலளிநீக்கு
  37. வல்லிசிம்ஹன் said...

    //எங்க பார்த்தாலும் படமும் யாத்திரையுமாப் போச்சே.:)//

    பகிர்வுகளில் அறிய முடிவதுதான் எத்தனை எத்தனை?

    //எண்டே கேரளம் னு அதான் தம்பட்டம் போடறாங்க. நீங்க போய் வந்தது எங்களுக்கு எவ்வளவு லாபம் பாருங்கள்.
    வெகு வளப்பமான படங்கள். அழகு அள்ளிக் கொண்டு போகிறது. வெற்றிக்கு வாழ்த்துகள் பா.//

    உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கு நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  38. சகாதேவன் said...

    ***/ //காலைச்சூரியனை, அந்தச் சுடரொளியை, கவனமா காமிராவிலேயே கம்முன்னு அள்ளிட்டேன்//

    அத்தனை படங்களும் வர்ணனையும் அருமை. பி.ஐ.டி போட்டியில் பரிசு கிடைக்க வாழ்த்துக்கள் /***

    படங்களோடு வர்ணனைகளையும் சேர்த்து ரசித்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  39. susi said...

    ***/ //பொறுமையாய்ப் பார்த்ததற்கு நன்றி. சொல்லிப் போங்களேன் ‘பளிச்’சுன்னு பிடிச்சதென ஏதேனுமிருந்தால்:)!//

    எல்லாமே பிடிச்சிட்டதால வாயடைச்சு போய்ட்டேன் அக்கா..

    அவ்ளோ அழகா இருக்கு படங்கள்..
    உங்க எழுத்துக்கள் இன்னும் அழகு சேர்க்குது.

    வாகனம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா.

    இவ்ளோ அருமையான இடங்கள கண்ணுக்கு விருந்தா தந்ததுக்கு நன்றிகள் அக்கா :)))/***

    உங்கள் மனம்கொள்ளா பாராட்டு உற்சாகத்தைத் தருகிறது சுசி. மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  40. ஜெரி ஈசானந்தா. said...

    //கலக்கல் கலர்புல் கவரேஜ்.//

    ஹைக்கூ போன்ற அழகான பாராட்டுக்கு மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு
  41. Chitra said...

    //ஒவ்வொரு புகைப் படமும், அதற்குரிய தலைப்பும், நீங்கள் எழுதிய விதமும் - வர்ணனை பூங்கா. அருமையான பதிவுக்கு நன்றி.//

    ஒவ்வொரு படத்தையும் அதற்கான வர்ணனைகளையும் நுணுக்கமாக ரசித்திருக்கிறீகள். நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  42. வாவ்.. எதை சொல்ல.. எதை விட.. ஆனாலும் 2வது படம் செம கலக்கல்..

    பதிலளிநீக்கு
  43. //Jeeves said...

    எதைச் சொல்ல ? எதை விட ? //

    ஹிஹி.. நானும் இதான் சொல்லி இருக்கேன்.. :)

    பதிலளிநீக்கு
  44. துபாய் ராஜா said...

    //அழகான படங்கள். அருமையான பகிர்வு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி துபாய் ராஜா!

    //அடுத்த தடவை ஊருக்கு வரும்போது நம்ம ஊரு அம்பாசமுத்திரம் பக்கம் வாங்க... அருவியும்,ஆறும், ஓடையும், குளமும், கொக்கும், வயலும், காடும், மரமும்,...பசுமையா நிறைய படம் எடுக்கலாம். :))//

    அதற்காகவே வந்துவிட வேண்டியதுதான்:)!

    பதிலளிநீக்கு
  45. அம்பிகா said...

    //பொறுமையா படிச்சதுக்கு நன்றியா?
    அதை நாங்க தான் சொல்லனும்.
    அழகழகான படங்கள். அழகான கவிதை. அருமையான பகிர்வு. நன்றி ராமலக்ஷ்மி.//

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அம்பிகா!

    பதிலளிநீக்கு
  46. முதல் படத்தப் பார்த்து,
    'வாவ்' என்று அதிசயத்திருக்க ...
    அடுத்தடுத்த படங்களின்
    அணிவகுப்பும் வெகு ஜோர்.

    குமரகம் எங்க இருக்கு ? கேரளாவிலா ... போயிருவோம் :))

    பதிலளிநீக்கு
  47. வழக்கம் போல படங்கள் அருமை...
    முதலாவது வாகன வீடு..!!
    போறவழி...படம் அருமை...
    ம்...ஹூம் ஒவ்வொன்றாய்ச் சொல்லி கட்டுப்படி ஆகாது..! அந்த இருள் படத்தைத் தவிர எல்லாப் படங்களுமே பிரம்...மாதம். நானும் தான் இரண்டுநாள் பயணமாக திருவனந்தபுரம் சென்று வந்தேன். என் கண்ணில் இந்த மாதிரி காட்சிகளும் படவில்லை. என் கேமிராவுக்கும் என் கைகளுக்கும் எடுக்கவும் தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
  48. Priya said...

    //மிகமிக அழகா இருக்கு!!! இதுதான் நல்லா இருக்குன்னு சொல்ல முடியல அத்தனையும் மனதை கொள்ளைகொள்கிறது!//

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ப்ரியா.

    //(இரண்டு வருடம் முன்னால் நான் கூட மூணாறு, அதிரம்பள்ளி போயிருக்கேன். உண்மையிலே கேரளா அழகான ஊர்தான்)//

    யாரும் மறுக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  49. இளைய கவி said...

    //எங்க் ஏரியாவுக்கு வந்திருக்கீங்க எங்க கிட்ட சொல்லாம? கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு பராவயில்ல அடுத்தமுறை நியாபகம் வச்சிக்கோங்க//

    கண்டிப்பா:)!

    //http://www.s-teamholidays.com போய் பாருங்க//

    பார்த்தேன். பயனுள்ள சுட்டி. மீதமுள்ள இடங்களையும் பார்த்திட வேண்டியதுதான்:)!

    பதிலளிநீக்கு
  50. எம்.ரிஷான் ஷெரீப் said...

    //எல்லாப் படங்களுமே அழகு + அருமை !
    பாராட்டுக்கள் சகோதரி !//

    ரசனைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரிஷான்!

    பதிலளிநீக்கு
  51. கண்மணி/kanmani said...

    //அருமை ராமலஷ்மி.
    இதை விட அழகான குளிர்ச்சியான வாகனம் இருக்குமோ.வெற்றிக்கு வாழ்த்துக்கள்//

    கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கண்மணி:)!

    பதிலளிநீக்கு
  52. நீங்க கிறுக்கிய.... மன்னிக்க.... ”கிளுக்”கிய கவிதை மிக நேர்த்தி.... பாராட்டுக்கள்..... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  53. //ஸ்ரீராம். said...

    நானும் தான் இரண்டுநாள் பயணமாக திருவனந்தபுரம் சென்று வந்தேன். என் கண்ணில் இந்த மாதிரி காட்சிகளும் படவில்லை//

    ஸ்ரீராம்

    நாம நமக்கு வேண்டியதை பார்ப்போம் - விடுங்க விடுங்க !!

    பதிலளிநீக்கு
  54. நாடோடி said...

    //புகைப்படம் அனைத்தும் அருமை...வெற்றி பெற வாழ்த்துக்கள்...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  55. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    //அருமையான படங்கள் ..

    வெற்றி பெற வாழ்த்துக்கள் ராமலட்சுமி மேடம் .//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்டார்ஜன்.

    பதிலளிநீக்கு
  56. பிரபாகர் said...

    //3,7,11,17 ஆகிய புகைப்படங்கள் மிகக் சிறப்பு.

    பிரபாகர்.//

    17-சின்னஞ்சிறுமலர் எனக்கும் பிடித்தது:)! 11-நேரிலும் ரம்மியம். 7-பலருக்கும் பிடித்திருக்கிறது. 3ஆவதும் பிடித்ததில் மகிழ்ச்சி பிரபாகர்!

    பதிலளிநீக்கு
  57. வருண் said...

    /நீங்க வெற்றியடைந்தவுடன் பாட வேண்டிய பாடல்!

    வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும்!
    அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம்
    என் (nikon?) கேமிராவைச் சேரும்!//

    வெற்றி வரக் காத்திருப்பானேன்:)? ‘பாராட்டை வாங்கித் தந்த பெருமையெல்லாம்...’ என இப்போதே பாடி விடுகிறேன். கூட சோனி என்பதை சேர்த்துக் கொள்ளுங்கள்.

    // 99% உங்க திறமைதான், இருந்தாலும் இந்த வாயில்லாத கேமிராவுக்கு ஜெனரஸாக் கொஞ்சம் க்ரிடிட் கொடுங்க பாவம்! :)//

    நிச்சயமா. அதுவும் டிஜிட்டல் ஒரு புரட்சியேதான். ரோல் ஃபிலிம் காலத்தில் ஒரு பூவை ஒன்பது ஷாட் எடுத்து எது பெட்டர் என தேர்ந்தெடுத்துக் கொள்வதெல்லாம் சாத்தியமா என்ன:)? உங்கள் கருத்தில் என் கேமிராக்களுக்கும் ரொம்ப சந்தோஷமாம்:)! நன்றி வருண்!

    பதிலளிநீக்கு
  58. @ வருண்,

    ஆனால் பூக்கள் தவிர மற்றவை யாவும் ஒரே ஷாட்தாங்க:)!

    பதிலளிநீக்கு
  59. நசரேயன் said...

    //எல்லாமே நல்லா இருக்கு//

    மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி நசரேயன்.

    பதிலளிநீக்கு
  60. எம்.எம்.அப்துல்லா said...

    // மீண்டும் செல்லத் தூண்டிவிட்டீர்கள் :)//

    அலுக்காது இயற்கையின் தாலாட்டு:)!

    பதிலளிநீக்கு
  61. thenammailakshmanan said...

    //சூரியனின் சுடரொளியும் ஸ்பீக்கர் பூவும் தனித்திருவும் விழித்திருவும் அருமை ராமலெஷ்மி அடுத்த பயணம் குமரகம்தான்//

    பிடித்தவற்றைக் குறிப்பிட்டதற்கு நன்றி தேனம்மை. அவசியம் சென்று வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  62. தமிழ் பிரியன் said...

    //அற்புதம்.. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.... மஞ்சள் மலர் அழகு!//

    மிகச் சிறிய மலர் அது:)! பாராட்டுக்கு நன்றி தமிழ் பிரியன்.

    பதிலளிநீக்கு
  63. சந்தனமுல்லை said...

    //தனியாக நீரில் கல்லில் மேலிருக்கும் குருவியும் சாய்ந்த தென்னைமரமும் மெத்தப் பிடித்திருந்தன! :-)//

    உங்கள் சாய்ஸ் என்றும் தனித்துவம்:)! நன்றி முல்லை.

    பதிலளிநீக்கு
  64. ஆடுமாடு said...

    //படங்கள் சூப்பர்.//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  65. எல்லாமே சூப்பர்

    வாழ்த்துக்கள்

    (என்ன கேமரா வைத்துள்ளீர்கள்? )

    விஜய்

    பதிலளிநீக்கு
  66. "உழவன்" "Uzhavan" said...

    //எங்க ஆபிசுக்குப் பக்கதில இருகிற குமரகம் ஹோட்டல்தான் எனக்குத் தெரியும். ஒரிஜினல் குமரகத்தை நீங்கதான் இப்ப எனக்கு அழகான படங்கள் மூலம் காட்டியிருக்கீங்க :-))//

    நன்றி உழவன்:)!

    பதிலளிநீக்கு
  67. ஜெனோவா said...

    //புகைப்படங்கள் மிகவும் அருமை ... வெற்றிபெற வாழ்த்துக்கள் .
    நம்ம பெங்களூரு குழுப் போட்டியில் கலந்து கொள்ளலாமே ..//

    குழு அமைத்து விட்டீர்களா? வாழ்த்துக்கள்! விருப்பம்தான் எனக்கும். ஆனால் தற்சமயம் இயலாது போலுள்ளது. அடுத்தமுறை குழுப் போட்டி வருகையில் நிச்சயம் சேர்ந்து கொள்கிறேன். நன்றி ஜெனோவா.

    பதிலளிநீக்கு
  68. சாய்ராம் கோபாலன் said...

    //WOW WOW WOW.

    What a sense of photographic eye you have. I am amazed//

    உற்சாகம் தரும் பாராட்டுக்கு நன்றி சாய்ராம்! புகைப்பட ஆர்வலர்களுக்கு இருக்க வேண்டிய ஒன்று நீங்கள் குறிப்பிடும் photographic eye. சரிதானே:)?

    பதிலளிநீக்கு
  69. SanjaiGandhi™ said...

    //வாவ்.. எதை சொல்ல.. எதை விட.. ஆனாலும் 2வது படம் செம கலக்கல்..//

    நன்றி சஞ்சய். அந்தப் படத்தைச் சுட்டி பெரிதாக்கிப் பார்த்தால் இன்னமும் அழகே:)!
    -------------
    ***/ //Jeeves said...

    எதைச் சொல்ல ? எதை விட ? //

    ஹிஹி.. நானும் இதான் சொல்லி இருக்கேன்.. :)/***

    எல்லாமே உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  70. சதங்கா (Sathanga) said...

    //முதல் படத்தப் பார்த்து,
    'வாவ்' என்று அதிசயத்திருக்க ...
    அடுத்தடுத்த படங்களின்
    அணிவகுப்பும் வெகு ஜோர்.

    குமரகம் எங்க இருக்கு ? கேரளாவிலா ... போயிருவோம் :))//

    நன்றி சதங்கா. அடுத்தமுறை இந்தியா வருகையில் செல்லவேண்டிய இடங்களில் இதையும் சேர்த்திடுங்கள்:)!

    பதிலளிநீக்கு
  71. ஸ்ரீராம். said...

    வழக்கம் போல படங்கள் அருமை...
    முதலாவது வாகன வீடு..!!
    போறவழி...படம் அருமை...
    //ம்...ஹூம் ஒவ்வொன்றாய்ச் சொல்லி கட்டுப்படி ஆகாது..! அந்த இருள் படத்தைத் தவிர எல்லாப் படங்களுமே பிரம்...மாதம்.//

    நன்றி ஸ்ரீராம். பதிவிலே சொன்னமாதிரி இருள் காட்சிகள் தெளிவாக வரவில்லை. அதிலே இன்னும் தேர்ச்சி பெற வேண்டும்:)!

    // நானும் தான் இரண்டுநாள் பயணமாக திருவனந்தபுரம் சென்று வந்தேன். என் கண்ணில் இந்த மாதிரி காட்சிகளும் படவில்லை. என் கேமிராவுக்கும் என் கைகளுக்கும் எடுக்கவும் தெரியவில்லை!//

    டிஜிட்டல் காலத்தில் இப்படி சொல்லலாமா? என்ன சிரமம்? அடுத்தமுறை கட்டாயம் முயற்சியுங்கள். ஒவ்வொரு படமாக வலைப்பூவில் பதியும்போது நாங்களெல்லாம் கவிதை சொல்ல வருவோம்.

    பதிலளிநீக்கு
  72. சி. கருணாகரசு said...

    //நீங்க கிறுக்கிய.... மன்னிக்க.... ”கிளுக்”கிய கவிதை மிக நேர்த்தி.... பாராட்டுக்கள்..... வாழ்த்துக்கள்.//

    நன்றிகள் கருணாகரசு:)!

    பதிலளிநீக்கு
  73. சாய்ராம் கோபாலன் said...
    //ஸ்ரீராம்

    நாம நமக்கு வேண்டியதை பார்ப்போம் - விடுங்க விடுங்க !!//

    அப்படி விட்டுவிடக் கூடாதென சொல்லியிருக்கிறேன்:))!

    பதிலளிநீக்கு
  74. விஜய் said...

    //எல்லாமே சூப்பர்

    வாழ்த்துக்கள்

    (என்ன கேமரா வைத்துள்ளீர்கள்?//

    சோனி W80. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி விஜய்.

    பதிலளிநீக்கு
  75. மின்மடலில்..

    //Hi Ramalakshmi,

    Congrats!

    Your story titled '‘ஏரிக்கரை பூங்காற்றே’-குமரகம் புகைப்படங்கள்-பிட் போட்டிக்கும்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 17th February 2010 06:21:01 PM GMT

    Here is the link to the story: http://www.tamilish.com/story/187769

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team//

    தமிழ்மணம், தமிழிஷ் திரட்டிகளில் வாக்களித்த அனைவருக்குன் என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  76. அழகு... அழகு... கொள்ளை அழகு. மிக்க நன்றி இது போன்ற மனதை மயக்கும் படங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு

    பதிலளிநீக்கு
  77. அமுதா said...

    //அழகு... அழகு... கொள்ளை அழகு. மிக்க நன்றி இது போன்ற மனதை மயக்கும் படங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு//

    வாங்க அமுதா! உங்கள் பாராட்டுக்கும் ரசனைக்கும் நன்றி நன்றி:)!

    பதிலளிநீக்கு
  78. அருமையான படங்கள், ராம லஷ்மி.
    இப்போதே back water ல போய்க் குதிக்கணும் போல இருக்கு :)

    பதிலளிநீக்கு
  79. Ammu said...

    //அருமையான படங்கள், ராம லஷ்மி.//

    நன்றி அம்மு:)!

    //இப்போதே back water ல போய்க் குதிக்கணும் போல இருக்கு :)//

    அடுத்த இந்திய விஜயம் எப்போது? பார்க்க வேண்டிய இடங்களில் இதையும் சேர்த்திடலாம்:)!

    பதிலளிநீக்கு
  80. பாத்திமா ஜொஹ்ரா said...

    //ஆச்சரியப்பட்டுப்போனேன் சகோதரி//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாத்திமா!

    பதிலளிநீக்கு
  81. முதலாவதுபடம் மிக மிக அருமை.

    காலைச்சூரியன்,படகுகிளித்துச் செல்லும் நீரோட்டம் அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
  82. படங்களும் கமெண்டுகளும் அட்டகாசம்!!! அவ்ளோதான் சொல்ல முடியம், ஆமா!!!

    பதிலளிநீக்கு
  83. அருமையான படங்கள்

    ஒவ்வொன்றுக்கும் இட்ட தலைப்புகள் பொருத்தமான அழகாக இருக்கின்ற‌ன‌.

    வெற்றிக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  84. சோனி w80 கேமிராவில் எடுத்த படங்கள் என்பதை நம்பவே முடியவில்லை. அத்தனை அழகு. ஒரு சாதாரண காம்பேக்ட் கேமிராவில் மிக அழகாக படங்கள் எடுக்க முடியும் என்பதற்கு உங்கள் படங்கள் உதாரணம்.

    பதிலளிநீக்கு
  85. கண்கவர் படங்கள் மூன்றாம் முறையாக :) செல்லும் ஆவலை ஏற்படுத்துகிறது.

    படகு வீட்டின் உட்புறப் படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  86. என்ன ஒரு அழகு
    இறைவனின் படைப்பு
    கண்களை கொடுத்து
    காணச்சொல்லும் களிப்பு
    மனம் மகிழ்ந்து போனேன்
    படங்களைகண்டும்
    அதையெடுத்த
    உங்களைக்கண்டும்.

    போட்டோ எடுத்தது யாரு அவங்களுக்கு பலத்த கிளாப்”

    பதிலளிநீக்கு
  87. படங்கள் கொள்ளை அழகு. அதுவும் ஸ்பீக்கர் பூவும் (அதன் பெயர் ஊதாப்பூவா?), நம்ப வெண்பூ படமும் ஸ்பெஷல்.

    பதிலளிநீக்கு
  88. மாதேவி said...

    // முதலாவதுபடம் மிக மிக அருமை.

    காலைச்சூரியன்,படகுகிளித்துச் செல்லும் நீரோட்டம் அருமையான படங்கள்.//

    வருகைக்கும் பிடித்தவற்றைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  89. நானானி said...

    //படங்களும் கமெண்டுகளும் அட்டகாசம்!!! அவ்ளோதான் சொல்ல முடியம், ஆமா!!!//

    நீங்க அவ்ளோ சொன்னாலே போதாதா எனக்கு:)? நன்றி நானானி!

    பதிலளிநீக்கு
  90. திகழ் said...

    //அருமையான படங்கள்

    ஒவ்வொன்றுக்கும் இட்ட தலைப்புகள் பொருத்தமான அழகாக இருக்கின்ற‌ன‌.

    வெற்றிக்கு வாழ்த்துகள்//

    படங்களுடன் தலைப்புகளையும் ரசித்தமைக்கு நன்றி திகழ்.

    பதிலளிநீக்கு
  91. கோகுல் said...

    //சோனி w80 கேமிராவில் எடுத்த படங்கள் என்பதை நம்பவே முடியவில்லை. அத்தனை அழகு.//

    நம்பித்தாங்க ஆகணும்! இடது பக்கம் ‘பேசும் என் படங்கள்’ எனும் ஸ்லைட் ஷோ மேலே சுட்டினால் என் ஃப்ளிக்கர் தளம் கிடைக்கும் பாருங்கள். அங்கே ஒவ்வொரு படமும் கேமிரா விவரங்களுடன்:)!

    //ஒரு சாதாரண காம்பேக்ட் கேமிராவில் மிக அழகாக படங்கள் எடுக்க முடியும் என்பதற்கு உங்கள் படங்கள் உதாரணம்.//

    பாராட்டுக்கு மிக்க நன்றி! உடனுக்குடன் படமாக்க வேண்டிய குழந்தைகளின் முகபாவங்கள் மற்றும் அசையும் காட்சிகள் போன்றவற்றிற்கு சோனி ஒத்துழைப்பதில்லை. அந்த சமயங்களில் நைகான்E3700 கைகொடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  92. வெயிலான் said...

    //கண்கவர் படங்கள் மூன்றாம் முறையாக :) செல்லும் ஆவலை ஏற்படுத்துகிறது.

    படகு வீட்டின் உட்புறப் படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கலாம்.//

    மூன்றாம் முறையா:)? கண்டிப்பாக சென்று வாருங்கள். அலுக்காது. தேர்ந்தெடுத்து சில படங்கள் மட்டுமேதான் வலையேற்றினேன். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெயிலான்.

    பதிலளிநீக்கு
  93. அன்புடன் மலிக்கா said...

    // என்ன ஒரு அழகு
    இறைவனின் படைப்பு
    கண்களை கொடுத்து
    காணச்சொல்லும் களிப்பு
    மனம் மகிழ்ந்து போனேன்
    படங்களைகண்டும்
    அதையெடுத்த
    உங்களைக்கண்டும்.

    போட்டோ எடுத்தது யாரு அவங்களுக்கு பலத்த கிளாப்”//

    கவிதையாய் வந்திருக்கும் பாராட்டுக்கும் கைதட்டலுக்கும் மிக்க நன்றி மலிக்கா!

    பதிலளிநீக்கு
  94. ஆதிமூலகிருஷ்ணன் said...

    //படங்கள் கொள்ளை அழகு. அதுவும் ஸ்பீக்கர் பூவும் (அதன் பெயர் ஊதாப்பூவா?), நம்ப வெண்பூ படமும் ஸ்பெஷல்.//

    நன்றி ஆதி. ஊதாப்பூ என்றும் சொல்வார்கள். பெயரைக் கொடுத்து படம் தேட வசதி இருப்பது போல கூகுளில் படத்தைக் கொடுத்து பெயர் தேட வசதி வந்தால் நன்றாக இருக்கும், ஹிஹி. யாரும் கண்டு கொள்ளவில்லை நல்லவேளை என நினைத்திருக்க, பிடித்துவிட்டீர்களே நம்ம 'வெண்பூ'வை! போட்டுக் கொடுத்து விடாதீர்கள்:)!

    பதிலளிநீக்கு
  95. //கரையோரக் கவிதைகள்//

    அனைத்தும் கொள்ளை அழகு.

    //கண்ணுக் கெட்டியவரை ஏரியைச் சுற்றியமைந்த கரையெங்கும் பசுமை தான்//

    ஆம் ராமலக்ஷ்மி,

    கண்ணையும் கருத்தையும் கவர்ந்து உள்ளத்தையும் கொள்ளை கொண்டது.

    விருந்து அளித்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  96. @ கோமதி அரசு,

    படங்களை ரசித்து மகிழ்ந்து கூறியிருக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  97. புகைப்படம் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று மிஞ்சுகிற அழகு.

    அவற்றிற்கு,உங்க வரிகள் இன்னும்கூட அழகு சேர்க்கிறது.

    அருமை!

    பதிலளிநீக்கு
  98. @ செல்வநாயகி,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    பதிலளிநீக்கு
  99. அழகா இருக்கு. மனதை கொள்ளைகொள்கிறது.

    பதிலளிநீக்கு
  100. அருமையான படங்கள் கொள்ளைகொண்டது மனங்களை.. :)

    வழக்கம்போல கமெண்ட்டுக்களும் அருமை.. தென்னைமரங்களும் அழகு அதன் தன்னம்பிக்கையைப் பற்றிய வர்ணனையும் அழகு.

    பதிலளிநீக்கு
  101. ஒதுங்கி நின்ற படகு கூரை மேல் சூரியன்.....படம் பிட் ல் வண்ணம் சேர்க்கும் செய்முறை விளக்கத்துக்கு தேர்வாகியிருக்கிறது .பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  102. உங்கள் தகவலும், சரித்திர நாவலின் வர்ணனை போன்ற கவிதைத்துள்ளலான குறிப்புக்களும், செய்திகளும் (ஆணியில்லாது நாரால் அமைத்தல் போன்ற ) படங்களும்..............!!!!!!!!!!

    அருமையான படங்கள்... சூப்பர்... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  103. ஒவ்வொரு படமு ப்ரொஃபொஷனல் கிரேடு. பட்டையக் கெளப்புது.

    குறிப்பா, அந்த கொக்கு படம் சூப்பரு. :)

    பதிலளிநீக்கு
  104. ஒரு சுற்றுலா சென்ற உணர்வு . அருமையான பதிவு . வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  105. ஒரு சுற்றுலா சென்று வந்த உணர்வை உங்களின் பதிவு ஏற்படுத்தியது . பகிர்வுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  106. சுந்தரா said...

    //புகைப்படம் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று மிஞ்சுகிற அழகு.

    அவற்றிற்கு,உங்க வரிகள் இன்னும்கூட அழகு சேர்க்கிறது.

    அருமை!//

    ரசனைக்கும் பாராட்டுக்கும் நன்றி சுந்தரா.

    பதிலளிநீக்கு
  107. V.Radhakrishnan said...

    //மிகவும் அழகிய படங்கள்//

    நன்றிகள் ராதாகிருஷ்ணன்.

    பதிலளிநீக்கு
  108. கடையம் ஆனந்த் said...

    //அழகா இருக்கு. மனதை கொள்ளைகொள்கிறது.//

    நன்றி ஆனந்த். நலம்தானா?

    பதிலளிநீக்கு
  109. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    //அருமையான படங்கள் கொள்ளைகொண்டது மனங்களை.. :)

    வழக்கம்போல கமெண்ட்டுக்களும் அருமை.. தென்னைமரங்களும் அழகு அதன் தன்னம்பிக்கையைப் பற்றிய வர்ணனையும் அழகு.//

    தென்னைமரத்தின் தன்னம்பிக்கை பலருக்கும் பிடித்துப் போய்விட்டது:)!
    ரசித்தமைக்கு நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  110. goma said...

    //ஒதுங்கி நின்ற படகு கூரை மேல் சூரியன்.....படம் பிட் ல் வண்ணம் சேர்க்கும் செய்முறை விளக்கத்துக்கு தேர்வாகியிருக்கிறது .பாராட்டுக்கள்//

    ஆமாங்க செவ்வானம் பார்த்தேன். அனுமதியும் வாங்கியிருந்தார் ஆனந்த். ‘நான் வளர்கிறேனே மம்மி’தானே:)! தேடிவந்து பாராட்டியமைக்கு நன்றிகள் கோமா!

    பதிலளிநீக்கு
  111. ஈ ரா said...

    //உங்கள் தகவலும், சரித்திர நாவலின் வர்ணனை போன்ற கவிதைத்துள்ளலான குறிப்புக்களும், செய்திகளும் (ஆணியில்லாது நாரால் அமைத்தல் போன்ற ) படங்களும்..............!!!!!!!!!!//

    எனது பாணியிலேயே போட்டுத் தாக்கி விட்டீர்களே:))!

    //அருமையான படங்கள்... சூப்பர்... வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி ஈ ரா.

    பதிலளிநீக்கு
  112. SurveySan said...

    //ஒவ்வொரு படமு ப்ரொஃபொஷனல் கிரேடு. பட்டையக் கெளப்புது.

    குறிப்பா, அந்த கொக்கு படம் சூப்பரு. :)//

    ஆஹா, மிக்க நன்றி சர்வேசன். தனித்திரு விழித்திரு படம்தான் அதிக ஓட்டு வாங்கியிருக்கிறது:)!

    பதிலளிநீக்கு
  113. ♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

    //ஒரு சுற்றுலா சென்ற உணர்வு . அருமையான பதிவு . வாழ்த்துக்கள் !//

    முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் சங்கர்!

    பதிலளிநீக்கு
  114. கடைசியில் நீங்கள் சொன்ன செய்தி அனைவரையும் சென்றடைய வேண்டும்..
    இந்த சமூக சிந்தனை அனைவருக்கும் வேண்டும்..

    யூத்புல் விகடனில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  115. பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

    //கடைசியில் நீங்கள் சொன்ன செய்தி அனைவரையும் சென்றடைய வேண்டும்..
    இந்த சமூக சிந்தனை அனைவருக்கும் வேண்டும்..//

    அதுவே என் விருப்பமும். முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  116. ஆஹா ரொம்பதாமதமா பார்க்கிற கடைசி ஆளு நாந்தான் போல்ருக்கே! கவிதை பாடவைக்கும் படங்கள் ராமலஷ்மி! அருமை அருமை!

    பதிலளிநீக்கு
  117. சான்ஸே இல்லங்க

    எல்லாப்படங்களும் செம அழகா எடுத்திருக்கீங்க அதுலையும் கடசிப்படம் வாய்ப்பே இல்ல போங்க

    அழகான இடம்

    பதிலளிநீக்கு
  118. ஷைலஜா said...
    //கவிதை பாடவைக்கும் படங்கள் ராமலஷ்மி! அருமை அருமை!//

    மிக்க நன்றி ஷைலஜா!

    பதிலளிநீக்கு
  119. கார்த்திக் said...

    // சான்ஸே இல்லங்க

    எல்லாப்படங்களும் செம அழகா எடுத்திருக்கீங்க அதுலையும் கடசிப்படம் வாய்ப்பே இல்ல போங்க

    அழகான இடம்//

    எல்லாப் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கார்த்திக். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  120. kallakal pics...ella picum azhagu. I loved the scenic ones...esp having "reflection" as its main theme.

    பதிலளிநீக்கு
  121. படங்களும் சொல்லோவியமும் ஒன்றுகொன்று பொருந்தி அட்டகாசமாக உள்ளது. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  122. @ திகழ்,

    ஒவ்வொரு முறையும் போட்டிக்கு முன்னதாக வாழ்த்த மறப்பதில்லை நீங்கள். அன்புக்கு நன்றி திகழ்.

    பதிலளிநீக்கு
  123. தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

    http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

    பதிலளிநீக்கு
  124. தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  125. @ செந்தழல் ரவி,

    உங்கள் பின்னூட்டம் மூலமாகவே அறிய வந்தேன்! மிக்க நன்றி. மற்ற இரண்டு பிரிவுகளும் கூட முதல் சுற்றில்:)!

    பதிலளிநீக்கு
  126. யோவ் said...
    //தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...//

    மிக்க நன்றிங்க:)!

    பதிலளிநீக்கு
  127. முதல் சுற்றில் கலக்கல் ...............வாழ்த்துக்கள் மேடம்...

    பதிலளிநீக்கு
  128. @ mervin anto,

    நன்றி மெர்வின்:)! உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்:)!

    பதிலளிநீக்கு
  129. தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  130. தமிழ்மணத்தில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள், ராமலக்‌ஷ்மி :)!!!

    பதிலளிநீக்கு
  131. சிறப்பான புகைப்படங்களுக்கும், தமிழ்மணத்தில் வென்றமைக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  132. ஆமினா said...
    //தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்//

    நன்றிகள் ஆமினா.

    பதிலளிநீக்கு
  133. திகழ் said...
    //வாழ்த்துகள்//

    நன்றி திகழ்:)!

    பதிலளிநீக்கு
  134. Thekkikattan|தெகா said...
    //தமிழ்மணத்தில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள், ராமலக்‌ஷ்மி :)!!!//

    மிக்க நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் தெகா:)!

    பதிலளிநீக்கு
  135. கும்மி said...
    //சிறப்பான புகைப்படங்களுக்கும், தமிழ்மணத்தில் வென்றமைக்கும் வாழ்த்துகள்.//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  136. ராமலக்ஷ்மி அவர்களுக்கு,
    http://sankarphoto.blogspot.com/ புகைப்படங்கள் nikon D5000 -இல் எடுத்தது.

    உங்கள் புகைப்படங்கள் சிறப்பாக உள்ளது.
    வாழ்த்துக்கள்!

    சங்கர் வெங்கட்

    பதிலளிநீக்கு
  137. @ சங்கர் வெங்கட்,

    தகவலுக்கு மிக்க நன்றி. நான் இப்போது உபயோகிப்பதும் Nikon D5000 என்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி:)!

    பதிலளிநீக்கு
  138. அழகிய புகைப்படங்கள்
    அருமை,
    உங்கள் புகைப்படங்கள்
    எனக்கு ஒரு முன்மாதிரி

    பதிலளிநீக்கு
  139. இந்த இடங்களை நேரில் பார்ப்பதை விட உங்கள் புகைப்படங்களில் தான் நல்லாருக்கு !! உண்மை வெறும் புகழ்ச்சியில்லை

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin