#1 மகா கணபதி
மைசூர் மணல் சிற்ப அருங்காட்சியகம், இந்தியாவின் முதலாவது மட்டுமின்றி ஒரே ஒரு மணல் சிற்ப அருங்காட்சியகமும் கூட. சாமுண்டி மலைகளின் அடிவாரத்தில் சுமார் 13500 சதுர அடி நிலப்பரப்பில், மைசூரின் கலாச்சாரப் பாரம்பரியம், வனவிலங்கு மற்றும் மும்மதம் போன்ற 16 கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு, 150-க்கும் மேற்பட்ட மணல் சிற்பங்களைக் காட்சிக்கு வைத்துள்ளார்கள்.
சிற்பங்கள் ஒவ்வொன்றும் மணல் கலைஞர் எம்.என். கௌரி என்பவரால் உருவாக்கப்பட்டவை. அவருக்கு இதில் எப்படி நாட்டம் வந்தது என்பது சுவாரஸ்யமானது. பொறியியல் படிப்பின் இரண்டாம் ஆண்டில் அப்படிப்பைத் தொடராமல் வெளியேறியவர், கணினி அறிவியலில் பயிற்சி எடுத்தார். அப்போது 3d max எனும் மென்பொருளின் உதவி கொண்டு முப்பரிமாண சிற்ப மாதிரிகளை உருவாக்கினார். கணினியில் உருவாக்கிய தன் சிற்பங்களுக்கு "உயிரோட்ட உணர்வு" இல்லாததை உணர்ந்தவர், 2011_ஆம் ஆண்டு முதன் முறையாக மணல் சிற்பங்களை உருவாக்க முயற்சித்தார். அவரது முயற்சிக்குப் பாராட்டு கிடைத்ததும், 20 இலட்சம் ரூபாய் கடன் பெற்று இந்த மணல் சிற்ப அருங்காட்சியகத்தைத் தொடங்கினார். 150 சிற்பங்களையும் வடிவமைக்க 115_க்கும் மேற்பட்ட லாரி மணல் தேவைப்பட்டிருக்கிறது. 2014_ஆம் ஆண்டில் அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
நுழைவாயிலில் 15 அடி உயரமான விநாயகர் சிலை பார்வையாளர்களை வரவேற்கிறது. சாமுண்டீஸ்வரி, மைசூர் தசரா, மகாபாரதக் காட்சி, சிரிக்கும் புத்தர், சாண்டா கிளாஸ் போன்ற பெரிய சிற்பங்கள் ஈர்க்கின்றன.
#2 கீதையின் பாதை
#4 சாமுண்டீஸ்வரி
#9 சிரிக்கும் சீனப் புத்தர்
#10 காட்டரசன்
மேலும் சில சிற்பங்களின் படங்களை பாகம்-2 ஆக விரைவில் பதிகிறேன்.
*
கண்டிப்பாகப் பார்த்தே ஆக வேண்டிய இடம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் நேரம் வாய்த்தால் பார்க்கலாம். நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு சற்று அருகிலேயே இருந்ததால் சென்று வந்தோம்.
*
மணல் சிற்பம் என்றால் என் நினைவுக்கு வருவது உதிரியான கடற்கரை மணல், ஆற்று மணலில் செய்யப்படும் சிற்பங்கள். இங்கு பார்த்தவை களிமண்ணில் செய்து காய வைக்கப்பட்ட சிற்பங்கள். தத்ரூபமாக இருப்பதை மறுக்கவில்லை. ஆனால் இவற்றை மணல் சிற்பம் (sand sculptures) என்று சொல்லாமல் களிமண் சிற்பங்கள் (clay sculptures) என்று சொல்லலாமோ?
ஒரு முறை பெங்களூர் லால்பாக் மலர்க்கண்காட்சியில் இதே கீதையின் பாதையை, தற்காலிகச் சிற்பமாக மணலால் உருவாக்கியிருந்தது அருமையாக இருந்தது. வெவ்வேறு கோணங்களில் படமாக்கியிருந்தேன். அதுவும் மீள் படங்களாக உங்கள் பார்வைக்கு இங்கே:
பெங்களூர் குடியரசு தின மலர்க் கண்காட்சி 2012
#a
#b
#c
**
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக