செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

சூரியனின் கையெழுத்து - பண்புடன் மின்னிதழில்...

1.
கிழக்கின் ஒளி
திறக்கும் தாமரை
நாளின் முதல் சொல்.

2.
காய்ந்த இலை
சலசலக்கும் காற்றில்
வழியும் வெப்பம்.

3.
சாளர ஒளி
மிதக்கும் துகள்கள் 
சூரியனின் கையெழுத்து.

4.
இலைகளில் இடைவெளி
சிதறும் கதிரொளி 
தைக்கும் பட்டாம்பூச்சி.

5. 
நிலவொளித் திடல்
ஆடும் வெற்றூஞ்சல்
தூங்காத காற்று.
*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin