இலக்கணப் பிழை
ஒரு காற்புள்ளி
கோபத்தைச் சற்று நேரம்
நிறுத்தி வைக்கிறது
ஒரு முற்றுப்புள்ளி
ஒரு நட்புக்கு
முடிவெழுதுகிறது
ஒரு கேள்விக்குறி
பல காலமாக
உறங்கவிடவில்லை
ஒரு ஆச்சரியக்குறி
நிலைக்காத ஒன்றை
கொண்டாடுகிறது
அடைப்புக்குறிகள்
உண்மையான வாழ்க்கையை
மறைத்து வைக்கின்றன
உண்மையான வாழ்க்கையை
மறைத்து வைக்கின்றன
சரியான நிறுத்தற்குறியைத் தேடி
எங்கெங்கோ
அலைந்து திரிகிறது வாழ்க்கை
எங்கெங்கோ
அலைந்து திரிகிறது வாழ்க்கை
காற்புள்ளிகளைத் திருத்துவதிலும்
முற்றுப்புள்ளிகளை மாற்றுவதிலும்
ஆச்சரியக்குறிகளைத் துரத்துவதிலும்
கேள்விக்குறிகளுக்கு அஞ்சுவதிலும்
முற்றுப்புள்ளிகளை மாற்றுவதிலும்
ஆச்சரியக்குறிகளைத் துரத்துவதிலும்
கேள்விக்குறிகளுக்கு அஞ்சுவதிலும்
கழிகின்றன வருடங்கள்
திருப்பும் போதே புரிய வருகிறது
எழுதிக் கொண்டிருப்பதாக
நினைத்த கதையின்
ஆசிரியராக நாம்
ஒருபோதும் இருந்ததில்லை
*
26 ஜூலை 2026, சொல்வனம் இணைய இதழ்: 371_ல் வெளியாகியுள்ள எனது இரு கவிதைகளில் ஒன்று.


தத்துவ கவிதை அருமை.
பதிலளிநீக்குவாழ்க்கை நிறைய கற்றுக் கொடுக்கிறது. நாம் ஆசிரியராக ஒரு போதும் இருந்தது இல்லை அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குகவிதையின் நிறைவுப்பகுதி சட்டென உண்மையைப் புரிய வைக்கிறது. கண்ணன் அர்ஜுனன், தருமருக்கு சொன்னனது போல..
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம், சொல்வனம் தளத்தில் பதிந்த கருத்துக்கும்.
நீக்கு