Tuesday, January 20, 2009

மின்னுகிறது கிரீடம்

மகுடம் சரிந்ததுமங்கையர் குலத்தின்
மகாராணியாக
தனக்குத் தானே
மகுடம் சூட்டியிருந்தாள்.

மாப்பிள்ளை வீட்டு
மகா ஜனங்கள்-திரு
மண வீட்டில்
கை நனைக்க
வெள்ளிச் செம்பு
கேட்ட போதுதான்..

அரசிக்கு அவரது
பொக்கிஷ அறையின்
பொருளாதாரம்
மட்டுமின்றி
மண மேடையேறிட-
மங்கல நாண்பூட்டிட-
பொருள் வேண்டிடும்
புதிரான உலகும்
புரிய வந்தது.


*****

[ஆகஸ்ட் 09,2003 திண்ணை இணைய இதழிலும்,
கடந்த மாதம் டிசம்பர் 06, 2008 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும்
வெளிவந்தது.]


தமிழகத்தில் 'மணமகள் கொடுத்த புகாரின் பெயரில், திருமண வீட்டில் வெள்ளிச் செம்பு கேட்டுத் தகராறு செய்த மாப்பிள்ளை வீட்டினர் கைது' என வெளிவந்த செய்தியில் பிறந்ததே முந்தைய கவிதை. இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பல காமெடி ட்ராக்குகளும் வந்தன திரைப்படங்களில். இன்றைய மங்கையர் நிலைமை அங்கொன்றும் இங்கொன்றுமாய் இது போலத் தொடர்ந்தாலும் மனதுக்கு இதமான பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதே நிதர்சனம். என் கவிதைக்கு தந்திருக்கிறேன் நானே ஒரு எதிர் கவிதை இங்கே:

உலக அழகிகள்படிப்பு ஒரு மணிமகுடம்
தன்னம்பிக்கை அதில்
ஒளிரும் ஒப்பற்ற வைரம்
நிமிர்ந்த நடை நீலம்
நேர்கொண்ட பார்வை முத்தாகும்
பார்க்கின்ற வேலையோ மாணிக்கம்
வாங்கும் சம்பளம் பவளம்
க்ரெடிட்கார்ட் போனஸ் இன்சென்டிவ்
கோமேதகம் மரகதம் வைடூரியம்
பூவையவள் புன்னகையோ புஷ்பராகம்
நவரத்தினங்களும் மின்னிடும்
அசைக்க முடியாத கிரீடம்-
நவயுக நங்கை இதையணிந்து
நிற்கையில் கூடுகிறது கம்பீரம்-
வைக்கிறாள் இண்டர்நெட்டில்
அவளேதான் இன்று சுயம்வரம்-
நிற்கின்றார் பயோடேட்டாவுடன்
வரிசையிலே வாலிபர்
பிடித்திடத்தான் அவள் கரம்-
பொங்கும் மகிழ்வுடன் பெற்றவரும்
தருகிறார் பெருமிதமாய் சுதந்திரம்-
பூரித்து நிற்கிறது இங்கு
பெண்மையெனும் அற்புதம்.
*****


[படங்கள்: இணையத்திலிருந்து]

இங்கு வலையேற்றிய பின்னர் இரண்டாவது கவிதை ‘மின்னுகிறது கிரீடம்’ என்ற தலைப்பிலே 5 மார்ச் 2009 இளமை விகடனின் "சக்தி 2009" மகளிர்தின சிறப்பிதழில் வெளிவந்துள்ளது:


இங்கு வலையேற்றிய பின் முதல் கவிதையும் 'புரிந்தது உலகம் சரிந்தது மகுடம்' என்ற தலைப்பில் 20 ஏப்ரல் 2009 இளமை விகடனில்:

102 comments:

 1. /*மின்னுகிறது கிரீடம் */
  உங்கள் முத்துச்சரத்தில் இன்னொரு முத்து.

  /*அரசிக்கு அவரது
  பொக்கிஷ அறையின்
  பொருளாதாரம்
  மட்டுமின்றி
  மண மேடையேறிட-
  மங்கல நாண்பூட்டிட-
  பொருள் வேண்டிடும்
  புதிரான உலகும்
  புரிய வந்தது.*/
  ம்... நிஜம் சுடும் பொழுது கற்பனை கரைகிறது...


  /*பொங்கும் மகிழ்வுடன் பெற்றவரும்
  தருகிறார் பெருமிதமாய் சுதந்திரம்-
  பூரித்து நிற்கிறது இங்கு
  பெண்மையெனும் அற்புதம்*/
  உண்மை தான். முன்பை விட இப்பொழுது நிறைய மாற்றம். அதில் மகிழ்கிறது மனம். என்றாலும் இன்னும் பலர் அதே இன்னலில் உழல்கின்றனர். காலம் நிச்சயம் மாற்றி எல்லோருக்கும் மின்னட்டும் நவரத்ன கிரீடம்.

  ReplyDelete
 2. முந்தைய கவிதை அதற்கு நீங்கள் தந்திருக்கும் கவிதையும் அழகு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
  ”மங்கல நாண்பூட்டிட பொருள் வேண்டும்” எனும் நிலை மாற வேண்டும் என்பதில் எனக்கெந்த மாற்று கருத்துமில்லை.

  ReplyDelete
 3. பார்க்கின்ற வேலையோ மாணிக்கம்
  வாங்கும் சம்பளம் பவளம்
  க்ரெடிட்கார்ட் போனஸ் இன்சென்டிவ்
  கோமேதகம் மரகதம் வைடூரியம்
  பூவையவள் புன்னகையோ புஷ்பராகம்
  நவரத்தினங்களும் மின்னிடும்
  அசைக்க முடியாத கிரீடம்-
  நவயுக நங்கை இதையணிந்து
  நிற்கையில் கூடுகிறது கம்பீரம்-
  வைக்கிறாள் இண்டர்நெட்டில்
  அவளேதான் இன்று சுயம்வரம்-
  நிற்கின்றார் பயோடேட்டாவுடன்
  வரிசையிலே வாலிபர்
  பிடித்திடத்தான் அவள் கரம்-//

  இந்த நிலை சந்தோஷ்த்தை தரும் அதே வேளையில் பெண்வீட்டார் காட்டும் கெத்தும், கர்வமும் அதிகமாகி இருக்கிறது.

  என் தம்பிக்கு பெண் தேடுகொண்டிருக்கிறோம். அந்த அனுபவங்களை பதிவிட்டால் சும்மா கதை சொல்றேன் என்று என்மேல் பாய்வார்கள்.

  முன்பிருந்த நிலையும் தவறு, இப்பொழுதிருக்கும் நிலையும் தவறு.

  நடுவாந்திரமான நிலைக்க்கு பிராத்திக்கிறேன்.

  ReplyDelete
 4. \\மாப்பிள்ளை வீட்டு
  மகா ஜனங்கள்-திரு
  மண வீட்டில்
  கை நனைக்க
  வெள்ளிச் செம்பு
  கேட்ட போதுதான்..\\

  சூப்பர் டாட் ...

  ReplyDelete
 5. \\மகுடம் சரிந்தது\\

  தலைப்பும் அதற்கேற்ற படமும் மிக அருமை ...

  ReplyDelete
 6. அமுதா said...

  //ம்...நிஜம் சுடும் பொழுது கற்பனை கரைகிறது...//

  ம்... அதே..மகுடமும் சரிந்தது..

  //உண்மை தான். முன்பை விட இப்பொழுது நிறைய மாற்றம். அதில் மகிழ்கிறது மனம். என்றாலும் இன்னும் பலர் அதே இன்னலில் உழல்கின்றனர். காலம் நிச்சயம் மாற்றி எல்லோருக்கும் மின்னட்டும் நவரத்ன கிரீடம்.//

  உங்கள் நல்வாக்கு பலித்து அவ்வாறே ஆகட்டும் அமுதா. கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 7. புதுகைத் தென்றல் said...

  //”மங்கல நாண்பூட்டிட பொருள் வேண்டும்” எனும் நிலை மாற வேண்டும் என்பதில் எனக்கெந்த மாற்று கருத்துமில்லை.//

  உங்களுக்கு அப்படி இருக்க வாய்ப்பே இல்லைதான்:)! தங்கள் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 8. உங்களுடைய பதில் கவிதை

  உண்மையில் ஒரு மனிமகுடம்

  வார்த்தைகள் விளையாடுகிறது ...

  \\பூரித்து நிற்கிறது இங்கு
  பெண்மையெனும் அற்புதம்.\\

  இவ்வரிகளில் தெரிகிறது பூரிப்பு உண்மையில்

  ReplyDelete
 9. அப்பா பெயர் - ஆம்பிளை
  அம்மா பெயர் - பொம்பளை
  என் பெயர் - மாப்பிள்ளை

  ...

  ஏற்கனவே தன்னை விற்று விட்ட ஆம்பிளை இப்போ விற்க பார்க்கிறார் என்னை - என் பெயர் மாப்பிள்ளை

  ReplyDelete
 10. புதுகைத் தென்றல் said...

  //இந்த நிலை சந்தோஷ்த்தை தரும் அதே வேளையில் பெண்வீட்டார் காட்டும் கெத்தும், கர்வமும் அதிகமாகி இருக்கிறது.

  என் தம்பிக்கு பெண் தேடுகொண்டிருக்கிறோம். அந்த அனுபவங்களை பதிவிட்டால் சும்மா கதை சொல்றேன் என்று என்மேல் பாய்வார்கள்.//

  ஒருவரும் பாய மாட்டார்கள் தென்றல். நீங்கள் சொல்வதிலும் உண்மை உள்ளது. கெத்து காட்டுபவர்கள் இரு வீட்டார் பக்கங்களிலும் இருப்பது தனீஈஈ...க் கதை. அவர்களை விட்டு விட்டுப் பார்க்கலாம்தானே:)! ஒரு காலத்தில் கெத்து மாப்பிள்ளை வீட்டார் மட்டுமே காட்டக் கூடியதாக இருந்த நிலை மாறி அதிலும் சம உரிமை வந்தாற் போலாகி விட்டது வருத்தத்திற்குரியதே.

  //முன்பிருந்த நிலையும் தவறு, இப்பொழுதிருக்கும் நிலையும் தவறு.

  நடுவாந்திரமான நிலைக்க்கு பிராத்திக்கிறேன்.//

  மிகச் சரி. ஆனால் இப்போதிருக்கும் நிலை என்பதை விட கர்வம் காட்டுவோரின் போக்கு தவறு எனக் கொள்ளலாமா? கற்ற கல்வி பண்பையும் தந்திருந்தால்தான் அணிந்து நிற்கிற கிரீடம் கூட மின்னும். சரிதானே தென்றல்?

  ReplyDelete
 11. இன்னும் கொஞ்ச நாள். பெண்கள் டவுரி கேப்பாங்க! பிறப்பு விகிதம் மாறிகிட்டே இருக்கு!

  ReplyDelete
 12. உங்களுக்கு அப்படி இருக்க வாய்ப்பே இல்லைதான்//
  ஆமாம் ராமலக்‌ஷ்மி
  கடந்த 25 வருடங்களாக கொடுப்பதும் இல்லை வாங்குவதும் இல்லையென்ற கொள்கையை கொண்ட குடும்பம் எங்களுடையது.

  ReplyDelete
 13. கர்வம் காட்டுவோரின் போக்கு தவறு//
  ஆம் இருவீட்டாருக்கும் இது பொருந்தும்.

  //கற்ற கல்வி பண்பையும் தந்திருந்தால்தான் அணிந்து நிற்கிற கிரீடம் கூட மின்னும். சரிதானே?//

  200 சதவிகிதம் சரி.

  ReplyDelete
 14. அக்கா நான் சத்தியமா டவுரி வாங்கல.( நன்றி என் அம்மாவுக்கு)

  ReplyDelete
 15. அன்பின் ராமலக்ஷ்மி,

  //படிப்பு ஒரு மணிமகுடம்
  தன்னம்பிக்கை அதில்
  ஒளிரும் ஒப்பற்ற வைரம்
  நிமிர்ந்த நடை நீலம்
  நேர்கொண்ட பார்வை முத்தாகும்
  பார்க்கின்ற வேலையோ மாணிக்கம்
  வாங்கும் சம்பளம் பவளம்
  க்ரெடிட்கார்ட் போனஸ் இன்சென்டிவ்
  கோமேதகம் மரகதம் வைடூரியம்
  பூவையவள் புன்னகையோ புஷ்பராகம்
  நவரத்தினங்களும் மின்னிடும்
  அசைக்க முடியாத கிரீடம்-
  நவயுக நங்கை இதையணிந்து
  நிற்கையில் கூடுகிறது கம்பீரம்-
  வைக்கிறாள் இண்டர்நெட்டில்
  அவளேதான் இன்று சுயம்வரம்-
  நிற்கின்றார் பயோடேட்டாவுடன்
  வரிசையிலே வாலிபர்
  பிடித்திடத்தான் அவள் கரம்-
  பொங்கும் மகிழ்வுடன் பெற்றவரும்
  தருகிறார் பெருமிதமாய் சுதந்திரம்-
  பூரித்து நிற்கிறது இங்கு
  பெண்மையெனும் அற்புதம்.//

  அருமை..!
  மின்னுகிறது கவிதை எல்லா வரிகளிலும் !
  பாராட்டுக்கள் சகோதரி !

  ReplyDelete
 16. 2 கவிதைகளுமே ரொம்ப நல்லா இருக்குக்கா.. :)

  ReplyDelete
 17. மின்னுகிறது கிரீடம் *,
  உங்கள் முத்துச்சரத்தில் இன்னொரு முத்து.
  //
  வழிமொழிகிறேன். கவிதையின் கருவும் வரிகளும் வெகு அருமை அக்கா.

  ReplyDelete
 18. நட்புடன் ஜமால் said...

  \\வெள்ளிச் செம்பு
  கேட்ட போதுதான்..\\

  சூப்பர் டாட் ...

  நன்றி ஜமால்.

  \\மகுடம் சரிந்தது\\

  தலைப்பும் அதற்கேற்ற படமும் மிக அருமை ...

  ரசனைக்கும் நன்றி.

  ReplyDelete
 19. Blogger நட்புடன் ஜமால் said...

  \\உங்களுடைய பதில் கவிதை

  உண்மையில் ஒரு மணிமகுடம்

  வார்த்தைகள் விளையாடுகிறது ...

  \\பூரித்து நிற்கிறது இங்கு
  பெண்மையெனும் அற்புதம்.\\

  இவ்வரிகளில் தெரிகிறது பூரிப்பு உண்மையில்//

  நல்ல மாற்றங்களைப் போற்றும் போது வரிகள் தானாகவே புன்னகை பூத்து பூரித்தும் விடுகின்றன போலும்:)!

  ReplyDelete
 20. நட்புடன் ஜமால் said...

  //ஏற்கனவே தன்னை விற்று விட்ட ஆம்பிளை இப்போ விற்க பார்க்கிறார் என்னை - என் பெயர் மாப்பிள்ளை//

  நன்றாக எழுதியிருக்கிறீர்கள்:)! விற்க விடாதீர்கள்!

  ReplyDelete
 21. திகழ்மிளிர் said...

  //அருமை//

  தொடர் வருகைக்கும் ஊக்கமிகு பாராட்டுக்கும் நன்றி திகழ்மிளிர்.

  ReplyDelete
 22. 2 கவிதைகளும், படங்களும் அழகு!!!

  ReplyDelete
 23. சூப்பரப்பு, வார்த்தைகள் சும்மா சரம் சரமா வந்து விழுந்துருக்கு.

  நானும் டவுரி எல்லாம் ஒன்னும் வாங்கலை.

  (நான் கேட்டாலும் அவங்க குடுக்கறதா இல்லை) :)))

  ReplyDelete
 24. //ambi said...
  சூப்பரப்பு, வார்த்தைகள் சும்மா சரம் சரமா வந்து விழுந்துருக்கு.
  //

  ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

  அழகாய் அமைந்திருக்கிறது கவிதை! இன்றைய நவநாகரீக பெண்மையின் வாழ்க்கை போல் தனித்தன்மையுடன் கீரிடம் சூடி....! :)

  ReplyDelete
 25. பொங்கும் மகிழ்வுடன் பெற்றவரும்
  தருகிறார் பெருமிதமாய் சுதந்திரம்-
  பூரித்து நிற்கிறது இங்கு
  பெண்மையெனும் அற்புதம்.

  கலக்கல் :) 100 மார்க்ஸ் :)

  ReplyDelete
 26. :-))

  //மண மேடையேறிட-
  மங்கல நாண்பூட்டிட-
  பொருள் வேண்டிடும்
  புதிரான உலகும்
  புரிய வந்தது.//

  உண்மையை அழகாய் இடித்துரைத்துள்ளீர்கள்! வார்த்தைகள் முத்துச் சரமாய் குலுங்குகின்றன, உங்கள் நடையில்!!

  இரண்டாம் கவிதை மிக ரசித்தேன்..
  ஒரு துள்ளல்/ நல்ல டெம்போ இருக்கிறது!!

  செம..செம..ராமலஷ்மி!!

  ReplyDelete
 27. //வைக்கிறாள் இண்டர்நெட்டில்
  அவளேதான் இன்று சுயம்வரம்-
  நிற்கின்றார் பயோடேட்டாவுடன்
  வரிசையிலே வாலிபர்
  பிடித்திடத்தான் அவள் கரம்-
  பொங்கும் மகிழ்வுடன் பெற்றவரும்
  தருகிறார் பெருமிதமாய் சுதந்திரம்//

  எஙகள் தலைமுறையில் பலரின் வாழ்வில் நிகழ்ந்தது இந்த அற்புதம்!! :-)

  ReplyDelete
 28. முதல் படமும் முதல் கவிதையும் ரொம்பப் பிடித்திருந்தது...
  அன்புடன் அருணா

  ReplyDelete
 29. இரண்டு கவிதகளுமே அருமை. அதிலும் இரண்டாவது சூப்ப்ப்ப்ப்பர்!!
  பெண்மையின் நிகழ்கால கம்பீரத்தை
  அழகாக மகுடத்தில் பதித்து சூட்டிவிட்டீர்கள்.

  கூடுதலாக இப்போதைய நிலமையையும் சொல்லட்டுமா?
  "உடுத்திய பேண்ட் சட்டையோடு வாடா! உன்னை கண்கலங்காமல் பாத்துக்கிறேன்!" என்ற அளவில்.

  ReplyDelete
 30. தன்னம்பிக்கைதான் வேண்டியது; கர்வம் வேண்டாதது. இப்போ தராசு அந்தப்பக்கம் தாழறாப்ல இருக்கு. புதுகைத் தென்றல் சொன்னது போல் நடுநிலைமை வேண்டும். இரண்டு கவிதைகளும் படங்களும் அழகு.

  ReplyDelete
 31. This is excellent. I enjoyed every word.
  Tamilla type adikka mudiyalai and hence english.

  ReplyDelete
 32. இரண்டு கவிதையும் அந்தந்தக் கலங்களுக்குப் பொருத்தம். மிகப் பிடித்தது இரண்டாவது.

  அனுஜன்யா

  ReplyDelete
 33. கவிநயா சொன்னது போல் கர்வம் இல்லாத கம்பீரமே அழகு!!!
  கர்வம் கம்பீரத்தை குப்புரத் தள்ளி விடும். ஜாக்கிரதை!!!

  ReplyDelete
 34. திவா said...

  //இன்னும் கொஞ்ச நாள். பெண்கள் டவுரி கேப்பாங்க! பிறப்பு விகிதம் மாறிகிட்டே இருக்கு!//

  அட, இப்போதுதான் ஒரு வருந்தத்தகு வழக்கு ஒழிந்து வருவதில் சமுதாயம் சற்று நிமிர்ந்து நிம்மதியாகையில் அப்படியே ரிவர்ஸ் கியர் போடும் என்கிறீர்களே?

  பயப்படாதீர்கள், அப்படியெல்லாம் ஏதும் ஆகாதென்றே நம்புவோம்.

  அப்படியே இன்னொரு கேள்வி, உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா திவா:)?

  ReplyDelete
 35. புதுகைத் தென்றல் said...

  // //உங்களுக்கு அப்படி இருக்க வாய்ப்பே இல்லைதான்//
  ஆமாம் ராமலக்‌ஷ்மி
  கடந்த 25 வருடங்களாக கொடுப்பதும் இல்லை வாங்குவதும் இல்லையென்ற கொள்கையை கொண்ட குடும்பம் எங்களுடையது.//

  பெருமைக்குரிய விஷயம். உங்கள் தம்பிக்குக் கண்டிப்பாக "அறிவில் சிறந்து அன்பில் உயர்ந்து பண்பில் மிளிரும்" மங்கை நல்லாளே இல்லாளாக அமைந்திடுவாள் பாருங்கள்!

  ReplyDelete
 36. புதுகைத் தென்றல் said...

  ////கர்வம் காட்டுவோரின் போக்கு தவறு//

  ஆம் இருவீட்டாருக்கும் இது பொருந்தும்.

  //கற்ற கல்வி பண்பையும் தந்திருந்தால்தான் அணிந்து நிற்கிற கிரீடம் கூட மின்னும். சரிதானே?//

  200 சதவிகிதம் சரி.// //

  நான் சொல்ல வந்ததை முழுமையாகப் புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி தென்றல்.

  ReplyDelete
 37. புதுகை.அப்துல்லா said...

  //அக்கா நான் சத்தியமா டவுரி வாங்கல.( நன்றி என் அம்மாவுக்கு)//

  அப்துல்லா, அல்லாவுடன் மற்ற எல்லாக் கடவுள்களின் ஆசிகளும் உங்கள் குடும்பத்தாருக்கு என்றென்றும் இருக்கும்.

  ReplyDelete
 38. எம்.ரிஷான் ஷெரீப் said...
  //அருமை..!
  மின்னுகிறது கவிதை எல்லா வரிகளிலும் !
  பாராட்டுக்கள் சகோதரி !//

  ஒவ்வொரு வரியையும் ரசித்திருக்கிறீர்கள் என்பதை, முழுக் கவிதையையே எடுத்துக் காட்டிய உங்கள் பின்னூட்டம் உணர்த்துகிறது.

  மிக்க நன்றி ரிஷான்.

  ReplyDelete
 39. SanJaiGan:-Dhi said...

  //2 கவிதைகளுமே ரொம்ப நல்லா இருக்குக்கா.. :)//

  உங்கள் ரசனைக்கு மிக்க நன்றி சஞ்சய்:)!

  ReplyDelete
 40. கடையம் ஆனந்த் said...

  // //மின்னுகிறது கிரீடம் *,
  உங்கள் முத்துச்சரத்தில் இன்னொரு முத்து.
  //

  வழிமொழிகிறேன். கவிதையின் கருவும் வரிகளும் வெகு அருமை அக்கா.///

  நன்றி ஆனந்த். கரு ஒன்றேதான், காலம் விளைவித்த மாற்றத்தில் மலர்ந்தது இரண்டாவது கவிதை.

  ReplyDelete
 41. கபீஷ் said...

  //2 கவிதைகளும், படங்களும் அழகு!!!//

  படங்களையும் ரசித்தமைக்கு நன்றி கபீஷ். இணையத்தில் கிடைத்தவையேயாயினும் பொருத்தமாக அமைந்து போனதாகவே எனக்கும் தோன்றியது.

  ReplyDelete
 42. ambi said...

  //சூப்பரப்பு, வார்த்தைகள் சும்மா சரம் சரமா வந்து விழுந்துருக்கு.//

  நன்றி அம்பி.

  //நானும் டவுரி எல்லாம் ஒன்னும் வாங்கலை.//

  வெரி குட்:)!

  //(நான் கேட்டாலும் அவங்க குடுக்கறதா இல்லை) :)))//

  அப்போ இந்த...பவளம் கோமேதகம் மரகதம் வைடூரியம்... :))))?

  ReplyDelete
 43. ஆயில்யன் said...

  // //ambi said...
  சூப்பரப்பு, வார்த்தைகள் சும்மா சரம் சரமா வந்து விழுந்துருக்கு.
  //

  ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

  அழகாய் அமைந்திருக்கிறது கவிதை! இன்றைய நவநாகரீக பெண்மையின் வாழ்க்கை போல் தனித்தன்மையுடன் கீரிடம் சூடி....! :)// //

  ரீப்பீட்டுக்கும் கவிதைக்கு சூட்டிய கிரீடத்துக்கும் மிக்க நன்றி ஆயில்யன்:)!

  ReplyDelete
 44. Truth said...

  //பொங்கும் மகிழ்வுடன் பெற்றவரும்
  தருகிறார் பெருமிதமாய் சுதந்திரம்-
  பூரித்து நிற்கிறது இங்கு
  பெண்மையெனும் அற்புதம்.

  கலக்கல் :) 100 மார்க்ஸ் :)//

  நூற்றுக்கு நூறா:)? சரி ட்ரூத் சொன்னால் உண்மையாதான் இருக்கும், நன்றி:)!

  ReplyDelete
 45. சந்தனமுல்லை said...

  //:-))

  //மண மேடையேறிட-
  மங்கல நாண்பூட்டிட-
  பொருள் வேண்டிடும்
  புதிரான உலகும்
  புரிய வந்தது.//

  உண்மையை அழகாய் இடித்துரைத்துள்ளீர்கள்! வார்த்தைகள் முத்துச் சரமாய் குலுங்குகின்றன, உங்கள் நடையில்!!//

  நன்றி முல்லை.

  //இரண்டாம் கவிதை மிக ரசித்தேன்..
  ஒரு துள்ளல்/ நல்ல டெம்போ இருக்கிறது!!

  செம..செம..ராமலஷ்மி!!//

  ஆகா கவிதையின் துள்ளலை விட இங்கே உங்கள் ஆனந்த துள்ளல் முன்னுரை எழுதி விட்டது தங்களது அடுத்த பின்னூட்டத்துக்கு:)!

  ReplyDelete
 46. சந்தனமுல்லை said...

  // //வைக்கிறாள் இண்டர்நெட்டில்
  அவளேதான் இன்று சுயம்வரம்-
  நிற்கின்றார் பயோடேட்டாவுடன்
  வரிசையிலே வாலிபர்
  பிடித்திடத்தான் அவள் கரம்-
  பொங்கும் மகிழ்வுடன் பெற்றவரும்
  தருகிறார் பெருமிதமாய் சுதந்திரம்//

  எஙகள் தலைமுறையில் பலரின் வாழ்வில் நிகழ்ந்தது இந்த அற்புதம்!! :-)// //

  அறிவேன் முல்லை:)! பெருமைக்குரிய விஷயம்தானில்லையா? சொல்லப் போனால் இரண்டாவது கவிதைக்கு இன்ஸ்பிரேஷனே இது போன்ற அற்புதங்களை ஒரு பதிவரின் பதிவில் உணர்ந்ததுதான்:))!

  ReplyDelete
 47. அன்புடன் அருணா said...

  //முதல் படமும் முதல் கவிதையும் ரொம்பப் பிடித்திருந்தது...//

  நன்றி அருணா. மனதை அவை பாதித்ததால் கூட இருக்கலாம்.

  ReplyDelete
 48. நானானி said...

  //இரண்டு கவிதகளுமே அருமை. அதிலும் இரண்டாவது சூப்ப்ப்ப்ப்பர்!!
  பெண்மையின் நிகழ்கால கம்பீரத்தை
  அழகாக மகுடத்தில் பதித்து சூட்டிவிட்டீர்கள்.//

  மிக்க நன்றி நானானி!

  //கூடுதலாக இப்போதைய நிலமையையும் சொல்லட்டுமா?
  "உடுத்திய பேண்ட் சட்டையோடு வாடா! உன்னை கண்கலங்காமல் பாத்துக்கிறேன்!" என்ற அளவில்.//

  இது இது இதுதான் நானானி டச்:))!

  ReplyDelete
 49. கவிநயா said...

  //இரண்டு கவிதைகளும் படங்களும் அழகு.//

  கவிதையுடன் படங்களையும் ரசித்தமைக்கு நன்றி கவிநயா.

  //தன்னம்பிக்கைதான் வேண்டியது; கர்வம் வேண்டாதது. இப்போ தராசு அந்தப்பக்கம் தாழறாப்ல இருக்கு.//

  ஒரு காலத்தில் தீர்வே இல்லையோ எனத் தாழ்ந்தே இருந்த நிலை மாறியது எவ்வளவு வரவேற்பிற்குரியதோ அதே அளவு கர்வம் என்பதும் கண்டனத்துக்குரியதே. பாரதி கண்ட புதுமைப் பெண்களாக இருக்க வேண்டும். படிப்பு பண்பைத் தர வேண்டும்.

  //புதுகைத் தென்றல் சொன்னது போல் நடுநிலைமை வேண்டும்.//

  நடுநிலைமை என்பதை விட இதில் ரெண்டே நிலைதான் என்கலாம். கர்வம் காட்டுவோர், காட்டாதோர். கர்வம் காட்டுபவர்கள் இரு பக்கத்திலும் இருக்கிறார்களே. அது எவராயினும் அவர்தம் போக்கு தவறே. சம உரிமை என நினைத்து கர்வம் காட்டுவதில் பெண்களோ அவர் வீட்டினரோ போட்டி போடாதிருப்பார்களாக:)!

  //கற்ற கல்வி பண்பையும் தந்திருந்தால்தான் அணிந்து நிற்கிற கிரீடம் கூட மின்னும். சரிதானே?// என்கிற என் கேள்விக்கு தென்றலும்
  '200 சதவிகிதம் சரி.' என்று விட்டார்கள். உங்களது ‘300 சதவிகிதம் சரி’ என்கிற பதிலுக்குக் காத்திருக்கிறேன்:)!

  ReplyDelete
 50. C said...

  //This is excellent. I enjoyed every word.
  Tamilla type adikka mudiyalai and hence english.//

  வரிவரியாய் ரசித்தவர் இருக்க வார்த்தை வார்த்தையாய் ரசித்திருக்கிறீர்கள்:). முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி C!

  ReplyDelete
 51. அனுஜன்யா said...

  //இரண்டு கவிதையும் அந்தந்தக் கலங்களுக்குப் பொருத்தம்.//

  உண்மை.

  //மிகப் பிடித்தது இரண்டாவது.//

  நன்றி அனுஜன்யா. என் கருத்தை நானே ரசித்து எழுதியது:).

  ReplyDelete
 52. நானானி said...

  // கவிநயா சொன்னது போல் கர்வம் இல்லாத கம்பீரமே அழகு!!!//

  உண்மைதான். அதையேதான் நானும் புதுகைத் தென்றலுக்கான பதிலில் ’பண்பு இல்லாத படிப்பால் பயனில்லை’ என்று கூறியிருக்கிறேன்.

  //கர்வம் கம்பீரத்தை குப்புரத் தள்ளி விடும். ஜாக்கிரதை!!!//

  இதுவும் சரியே. விதிவிலக்குகள் எங்கும் எதிலும் உண்டே. இரு பாலினருக்கும் இது பொருந்தும். ஆக, ஒருமித்த கருத்தையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்தியுள்ளோம்.

  கவிநயாவுக்கான என் பதிலைப் படித்து விட்டு '400 சதவிகிதம் சரி' என்பீர்கள் என நம்புகிறேன்:)!

  ReplyDelete
 53. //அட, இப்போதுதான் ஒரு வருந்தத்தகு வழக்கு ஒழிந்து வருவதில் சமுதாயம் சற்று நிமிர்ந்து நிம்மதியாகையில் அப்படியே ரிவர்ஸ் கியர் போடும் என்கிறீர்களே?//

  அதான் இயற்கை. சக்கரம் சுழலும். மேலிருந்து கீழ்; கீழிருந்து மேல். கன்யா சுல்கம் என்று பெண் எடுக்க வெகுமதி கொடுத்த பழக்கம் இருந்து இருக்கிறது. அது திருப்பி வரும்.

  // பயப்படாதீர்கள், அப்படியெல்லாம் ஏதும் ஆகாதென்றே நம்புவோம்.//

  அக்கா சொன்னா சரி!

  //அப்படியே இன்னொரு கேள்வி, உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா திவா:)?//

  ஜாதகம் ஏதாவது கைவசம் இருக்கா? :-)))))))

  ReplyDelete
 54. திவா said...
  //அதுதான் இயற்கை. சக்கரம் சுழலும். மேலிருந்து கீழ்; கீழிருந்து மேல்.//

  தத்துவம் சரிதான். ஆனால் எல்லா விஷயத்திலும் அது வொர்க்அவுட் ஆகியே தீருமா? தீரணுமா:)?

  //கன்யா சுல்கம் என்று பெண் எடுக்க வெகுமதி கொடுத்த பழக்கம் இருந்து இருக்கிறது. அது திருப்பி வரும்.//
  திருமதி ஒரு வெகுமதி என்பதாலா:)? தீர்மானமா சொல்றீங்க. பாருங்க, அன்பினால் அக்கறையினால் அவரவர் தம் பிள்ளைகளுக்கு செய்வது வேறு. கொடுத்தாத்தான் ஆச்சு எனக் குதிப்பது தவறு.

  //ஜாதகம் ஏதாவது கைவசம் இருக்கா? :-)))))))//

  ஆகா, தம்பி கொடுத்து விட்டார் வேலை. தேடியாவது அனுப்பிட மாட்டேனா:)?

  ReplyDelete
 55. //தத்துவம் சரிதான். ஆனால் எல்லா விஷயத்திலும் அது வொர்க்அவுட் ஆகியே தீருமா? தீரணுமா:)? //

  தீரும். அதனாலேதானே அது தத்துவம்?

  // திருமதி ஒரு வெகுமதி என்பதாலா:)? தீர்மானமா சொல்றீங்க. பாருங்க, அன்பினால் அக்கறையினால் அவரவர் தம் பிள்ளைகளுக்கு செய்வது வேறு. கொடுத்தாத்தான் ஆச்சு எனக் குதிப்பது தவறு..//

  ஆஹா! அதுதான் சரி. ரொம்ப சரியா சொல்லறீங்க.

  // ஆகா, தம்பி கொடுத்து விட்டார் வேலை. தேடியாவது அனுப்பிட மாட்டேனா:)? //

  வேலை யார் மேல எய்யப்போறீங்க?
  :-))

  பாருங்க பாருங்க...அடுத்த மாசம் பிறக்கப்போற என் பேரனுக்கோ பேத்திக்கோ சரிப்படுமான்னு பாக்கலாம்! ;-))

  ஆமாம், உங்க ஜாதக விசேஷம் என்ன? எங்க ஊர்லே இந்த முறை கொட்டின மழை போல பின்னூட்ட மழையா கொட்டுது! ;-)

  ReplyDelete
 56. திவா said...

  //வேலை யார் மேல எய்யப்போறீங்க? :-))//

  அன்பை அம்பென்றும் அக்கறையை வேலென்றும் எண்ணினால் என்னாதான் செய்யறதாம்:(?

  //பாருங்க பாருங்க...அடுத்த மாசம் பிறக்கப்போற என் பேரனுக்கோ பேத்திக்கோ சரிப்படுமான்னு பாக்கலாம்! ;-))//

  ஹா ஹா.. தாத்தா ஜாதகம் பார்த்து கை காட்ட.. பேரன் பேத்தி மறுபேச்சு பேசாமல் தலை ஆட்ட.. நடக்குமா இந்த தலைமுறையினரிடம்:))? அதெல்லாம் போயே போச்சுங்கோ:))!

  //ஆமாம், உங்க ஜாதக விசேஷம் என்ன? எங்க ஊர்லே இந்த முறை கொட்டின மழை போல பின்னூட்ட மழையா கொட்டுது! ;-)//

  நான் ஜாதகம் பார்ப்பதில்லையே. அனுப்பி வைக்கிறேன், பெரியவர் நீங்களேதான் பார்த்துச் சொல்லுங்களேன்:))!

  ReplyDelete
 57. முதல் கவிதை ஏற்கனவே படித்தது. இரண்டாவது ... கற்களை வைத்து மின்னுகிறது ...

  இப்போதைக்கு அட்டென்டன்ஸ் போட்டுக்கறேன். விரிவான பின்னூட்டம் பிறகு ...

  ReplyDelete
 58. சதங்கா (Sathanga) said...

  //முதல் கவிதை ஏற்கனவே படித்தது. இரண்டாவது ... கற்களை வைத்து மின்னுகிறது ...//

  நன்றி சதங்கா. முதல் கவிதை முன்னரே நீங்கள் வார்ப்பு கவிதை வாராந்திரி இணைய இதழில் படித்ததுதான்.

  ReplyDelete
 59. //அன்பை அம்பென்றும் அக்கறையை வேலென்றும் எண்ணினால் என்னாதான் செய்யறதாம்:(?//

  சிரிக்கணும்! :-))))

  // ஹா ஹா.. தாத்தா ஜாதகம் பார்த்து கை காட்ட.. பேரன் பேத்தி மறுபேச்சு பேசாமல் தலை ஆட்ட.. நடக்குமா இந்த தலைமுறையினரிடம்:))? அதெல்லாம் போயே போச்சுங்கோ:))!//

  ஆமாம். :-(

  // நான் ஜாதகம் பார்ப்பதில்லையே. அனுப்பி வைக்கிறேன், பெரியவர் நீங்களேதான் பார்த்துச் சொல்லுங்களேன்:))!//

  ம்ம்ம் விடுங்க. விசேஷத்தை கண்டு பிடிச்சா நம்ம ஜாதகத்திலே கட் பேஸ்ட்டா பண்ண முடியும்? :-)

  ReplyDelete
 60. திவா said...

  //விசேஷத்தை கண்டு பிடிச்சா நம்ம ஜாதகத்திலே கட் பேஸ்ட்டா பண்ண முடியும்? :-)//

  கரெக்ட்:))!

  ReplyDelete
 61. //கற்ற கல்வி பண்பையும் தந்திருந்தால்தான் அணிந்து நிற்கிற கிரீடம் கூட மின்னும். சரிதானே?//

  300 சதவிகிதம் சரிதான் :)

  ReplyDelete
 62. கிரீடத்தைவிட கவிதை மின்னுகிறது உங்கள் தனித்திறமையால் வாழ்த்துகள் ராமலஷ்மி

  ReplyDelete
 63. கவிநயா said...

  //300 சதவிகிதம் சரிதான் :)//

  நன்றி கவிநயா:)!

  ReplyDelete
 64. ஷைலஜா said...

  //கிரீடத்தைவிட கவிதை மின்னுகிறது உங்கள் தனித்திறமையால் வாழ்த்துகள் ராமலஷ்மி//

  நன்றி ஷைலஜா!

  ReplyDelete
 65. இன்றும் ஏதாவது பொருள் எதிர்பார்ப்புடனே நடக்கும் திருமணங்களை ... முத்துக்களும், வைரங்களும், பவளங்களும் சேர்த்து இன்றைய பெண்மைக்கு இலக்கணம் தந்து, மின்னுகிறது கிரீடம் ... இல்லை, இல்லை, பெண்மை ...

  //நடுவாந்திரமான நிலைக்க்கு பிராத்திக்கிறேன்.//

  இதுவும் அளவுடனே இருக்க பிரார்த்திப்போம் ...

  ReplyDelete
 66. முதலாவது நிஜ்ம், இரண்டாவது கணவு

  ReplyDelete
 67. சதங்கா (Sathanga) said...
  //இன்றும் ஏதாவது பொருள் எதிர்பார்ப்புடனே நடக்கும் திருமணங்களை ... முத்துக்களும், வைரங்களும், பவளங்களும் சேர்த்து இன்றைய பெண்மைக்கு இலக்கணம் தந்து, மின்னுகிறது கிரீடம் ... இல்லை, இல்லை, பெண்மை ...//

  அன்றைய அவலம் இன்றும் பல இடங்களில் தொடரும் நிலையில் மாற்றமாக மின்னுகிற பெண்மை போற்றப் பட வேண்டிய ஒன்றுதான் என்பதையே உங்கள் பின்னூட்டம் உறுதி செய்கிறது. ஆயினும்...:),

  //நடுவாந்திரமான நிலைக்க்கு பிராத்திக்கிறேன்.//

  இதுவும் அளவுடனே இருக்க பிரார்த்திப்போம் ...//

  'கிடைத்தது கிரீடம்’ என அகங்காரம் கொண்டால் அந்த நிமிடமே அது சோபை இழந்து விடுகிறது. அடக்கம் இல்லாத அறிவும் பண்பு இல்லாத படிப்பும் என்றும் மின்னியதில்லை. விதிவிலக்காய் இருப்பவரை விட்டு புதியதோர் விதி செய்தோரைப் போற்றுவதே நோக்கம். புதுகைத் தென்றல், நானானி, கவிநயாவுக்கான என் பதில்களையும் நேரம் இருந்தால் பாருங்களேன். உங்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பதாகக் கூற வரவில்லை. மின்னுகிற கிரீடத்திற்கு ஒரு விளக்கம், அவ்வளவே:)!

  ReplyDelete
 68. sollarasan said...

  //முதலாவது நிஜ்ம், இரண்டாவது கணவு//

  இரண்டாவது கனவல்ல சொல்லரசன். கண்முன் நடந்து வரும் நிஜம். முதல் நிலை முற்றிலுமாய் மாறாததால் இரண்டாவது கனவாய் தோன்றுவதிலும் வியப்பில்லைதான்.

  ReplyDelete
 69. ரொம்ப நல்லா இருக்கு அக்கா இரண்டு கவிதைகளும்!

  ReplyDelete
 70. super friend!

  antha 2 vathu kavithai maathiri oru ponnukku naan vaakkapattu pooyirukkalaam:-)))))

  ReplyDelete
 71. இரண்டு கவிதைகளும்
  மிகவும் அருமையான
  உண்மை என்ற அரிதாரம்
  பூசிக்கொண்டு இருக்கின்றன
  ரொம்ப அழகா படிக்க
  மிகவும் அருமையா
  இருந்திச்சுங்க ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 72. \\மாப்பிள்ளை வீட்டு
  மகா ஜனங்கள்-திரு
  மண வீட்டில்
  கை நனைக்க
  வெள்ளிச் செம்பு
  கேட்ட போதுதான்..\\


  சூப்பர் வெளியே வைத்தால் மின்னும்
  அதை வைக்க அவர்கள் படும் பாடு
  இருக்கிறதே பல கதைகள் சொல்லும்
  அருமை அருமை அருமை.

  ReplyDelete
 73. கவிதைகள் நன்று ராமலக்ஷ்மி..

  உங்கள்ளுக்கு ஒரு விருது இங்கே:

  http://pettagam.blogspot.com/2009/01/blog-post_24.html

  ReplyDelete
 74. நிஜமா நல்லவன் said...

  //ரொம்ப நல்லா இருக்கு அக்கா இரண்டு கவிதைகளும்!//

  இரண்டுமே பிடித்திருந்ததா? மகிழ்ச்சியும்:) நன்றியும் நிஜமா நல்லவன்.

  ReplyDelete
 75. அபி அப்பா said...

  //super friend!

  antha 2 vathu kavithai maathiri oru ponnukku naan vaakkapattu pooyirukkalaam:-)))))//

  வாங்க ஃப்ரென்ட்:)! அபி அம்மா காதிலே போட்டிரலாமா:)))?

  ReplyDelete
 76. RAMYA said...

  //இரண்டு கவிதைகளும்
  மிகவும் அருமையான
  உண்மை என்ற அரிதாரம்
  பூசிக்கொண்டு இருக்கின்றன
  ரொம்ப அழகா படிக்க
  மிகவும் அருமையா
  இருந்திச்சுங்க ராமலக்ஷ்மி.//

  முதல் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ரம்யா.

  //உண்மை என்ற அரிதாரம்//

  அருமையான கருத்து.

  ReplyDelete
 77. RAMYA said...

  \\ \\மாப்பிள்ளை வீட்டு
  மகா ஜனங்கள்-திரு
  மண வீட்டில்
  கை நனைக்க
  வெள்ளிச் செம்பு
  கேட்ட போதுதான்..\\

  சூப்பர் வெளியே வைத்தால் மின்னும்
  அதை வைக்க அவர்கள் படும் பாடு
  இருக்கிறதே பல கதைகள் சொல்லும்\\ \\

  எத்தனை கதைகள் கேட்டு விட்டோம்
  பார்த்து விட்டோம், இல்லையா ரம்யா:(?

  ReplyDelete
 78. பாச மலர் said...

  //கவிதைகள் நன்று ராமலக்ஷ்மி..

  உங்கள்ளுக்கு ஒரு விருது இங்கே//

  நன்றி பாசமலர் இந்தக் கவிதைகளுக்கான பாராட்டுக்கும், பட்டாம்பூச்சி விருதுக்கும், விருதளித்த பதிவில் பதிந்திருக்கும் பாராட்டுக்கும்.

  ReplyDelete
 79. நாகை சிவா said...

  //அருமை :)//

  நன்றி சிவா.

  ReplyDelete
 80. //வாங்க ஃப்ரென்ட்:)! அபி அம்மா காதிலே போட்டிரலாமா:)))?//

  enna friend thideernnu ippadi kundai thuukki thalaila poduriingka! avvvvvvvvvvv

  ReplyDelete
 81. //வாங்க ஃப்ரென்ட்:)! அபி அம்மா காதிலே போட்டிரலாமா:)))?//

  veendumaana namma friendship kaha abiammaa kathilee oru diamond kadukkan podungka:-))

  ReplyDelete
 82. அபி அப்பா said...

  //enna friend thideernnu ippadi kundai thuukki thalaila poduriingka!//

  ஆஹா..பாருங்கப்பா, குண்டு போன வேகத்தில எப்படி திரும்பி வந்திருக்கு என்பதை:

  //veendumaana namma friendship kaha abiammaa kathilee oru diamond kadukkan podungka:-))//

  :))))! ம்ம். சரி அதற்கென்ன போட்டு விடலாம். ஆனால் கடுக்கன் அபிக்குதான் சரியா இருக்கும். அதனால் இந்தப் பதிவுக்கு பொருத்தமாய் ‘மின்னுகிறது தோடு’ என நவரத்தின கற்கள் பதித்ததாய் போட்டு விடுகிறேன், பட் கூடவே விஷயத்தையும்:))))!

  ReplyDelete
 83. வணக்கம் ராமலக்ஷ்மி! :) நாந்தான் கடைசி ரெஸ்பாண்ஸ் போல இருக்கு! :)

  ***புதிரான உலகும் புரிய வந்தது***

  மஹாராணியை அறியாமையிலும், பயங்கரமான வெளி உலகம் தெரியாமலும் வளர்த்தவர்கள் அவள் பெற்றோர்கள்! அவர்களை பாராட்டுவதா இல்லை ஏசுவதா?

  ----


  ***பொங்கும் மகிழ்வுடன் பெற்றவரும்
  தருகிறார் பெருமிதமாய் சுதந்திரம்-
  பூரித்து நிற்கிறது இங்கு
  பெண்மை யெனும் அற்புதம்***

  அவளுக்கு கிடைத்த கல்வியும், அதனால் கிடைக்கும் செல்வமும் இந்த அற்புதத்தை நிகழ்த்தியுள்ளன!

  பெண் மனதை பெற்றவர்கள் புரிந்துகொண்டால் போதுமே, பெண் உலகையே ஆளலாம்! :) :)

  ReplyDelete
 84. இரு கவிதைகளுமே சொல்ல வந்த கருத்தை ரத்தினச் சுருக்கமாக சொல்லிவிட்டன. இதையும் கிரீடத்தில் வைத்துக் கொள்ளலாம்..!

  ReplyDelete
 85. வருண் said...

  //வணக்கம் ராமலக்ஷ்மி! :) நாந்தான் கடைசி ரெஸ்பாண்ஸ் போல இருக்கு! :)//

  வாங்க வருண், இல்லை உங்களுக்குப் பிறகும் ஒருவர் வந்து விட்டார்:)!

  //***புதிரான உலகும் புரிய வந்தது***

  மஹாராணியை அறியாமையிலும், பயங்கரமான வெளி உலகம் தெரியாமலும் வளர்த்தவர்கள் அவள் பெற்றோர்கள்! அவர்களை பாராட்டுவதா இல்லை ஏசுவதா?//

  பழியை பெற்றோர் மீது சுமத்துவதா இல்லை சமுதாயத்தின் மீதா என்பதும் கேள்வி.

  உலகம் தெரிந்து வளர்ந்தாலும் கூட கனவுகள் யாருக்குத்தான் இல்லை?

  //அவளுக்கு கிடைத்த கல்வியும், அதனால் கிடைக்கும் செல்வமும் இந்த அற்புதத்தை நிகழ்த்தியுள்ளன!//

  நிச்சயமாக. ஒரு வகையில் நீங்கள் சொல்வது சிந்திக்க வைக்கிறது வருண். கல்வியால் மட்டுமின்றி செல்வத்தாலும்தான் என்று. கல்வி கிடைக்காத சூழலில் இருந்து வந்த வர்க்கத்தினர் கூட இன்று 3, 4 வீடுகளில் வேலை செய்தாவது நன்கு சம்பாதிப்பவர்களாக ’நிமிர்ந்த நன்னடை’ போடுவதைப் பார்க்கிறோமே. திருமணமான இவ்வர்க்கத்துப் பெண்கள் முன் போல் குடிகார கணவன்மார்களுக்கு அஞ்சி ஒடுங்கி இராமல் அவர்களையே நம்பி இராமல் தம் குழந்தைகளை நன்கு படிக்கவும் வைக்கிறார்கள். இவ்விடத்தில் ‘படிப்பு ஒரு மணிமகுடம்’ என்பதை விட ‘தன்னம்பிக்கை’ ஒரு மணிமகுடம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

  //பெண் மனதை பெற்றவர்கள் புரிந்துகொண்டால் போதுமே, பெண் உலகையே ஆளலாம்! :) :)//

  இதுவும் மிகச் சரி:)! பெற்றவர் மட்டுமின்றி வாழ்க்கைப் பட்ட இடத்தில் மற்றவரும் புரிந்திட்டால் ஈரேழு உலகையும் சேர்த்தே ஆளலாம்:))!

  கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி வருண்.

  ReplyDelete
 86. மதன் said...

  //இரு கவிதைகளுமே சொல்ல வந்த கருத்தை ரத்தினச் சுருக்கமாக சொல்லிவிட்டன. இதையும் கிரீடத்தில் வைத்துக் கொள்ளலாம்..!//

  முதல் வருகைக்கும் கிரீடத்தில் பதித்திட இன்னும் இரண்டு ரத்தினங்களைத் தந்து சென்றமைக்கும் மிக்க நன்றி மதன்:)!

  ReplyDelete
 87. அடுத்த பதிவு எப்போம் அக்கா? சீக்கிரமாக எழுதுங்க.

  ReplyDelete
 88. பதிவுகள் இடுவதில் அதிக இடைவெளி நேரும் போதெல்லாம் அக்கறையுடன் விசாரிப்பதற்கு நன்றி ஆனந்த்:)! அடுத்தது இன்னும் ஓரிரு நாளில்..!

  ReplyDelete
 89. பலர் வாசித்து (ஆயிரத்திற்கு மேலானோர்) 90 பேர் பின்னூட்டம் இட்ட இந்த படைப்பு நிச்சயம் பாராட்டிற்குறியது. இந்த இரண்டு படைப்புகளும் இன்று நிலவில் இருக்கும் கொடுமை நிகழ்வுகளை தோலுரித்து காண்பித்துள்ளது. பொதுவாகவே நீங்கள் எடுக்கும் கவிதைக் கருக்களும் கருத்துக்களும், வெளிப்படுத்தலும் மிக வித்தியாசமானதும் சிறப்பானதுமாக இருக்கும். அந்த வரிசையில் இந்த இரண்டு கவிதைகளுமே இடம்பெறுவதில் மிக்க மகிழ்ச்சி, நல்வாழ்த்துக்கள்.

  அன்புடன் என் சுரேஷ்

  ReplyDelete
 90. N Suresh said...

  //பலர் வாசித்து (ஆயிரத்திற்கு மேலானோர்) 90 பேர் பின்னூட்டம் இட்ட இந்த படைப்பு நிச்சயம் பாராட்டிற்குறியது. இந்த இரண்டு படைப்புகளும் இன்று நிலவில் இருக்கும் கொடுமை நிகழ்வுகளை தோலுரித்து காண்பித்துள்ளது.//

  ஆயிரம் பேர் வாசித்தார்களா என்று தெரியாது. இப்பதிவினை இட்ட பிறகு வந்தவர் அறுநூற்றைத் தாண்டியதாகத்தான் ஹிட் கவுண்டர் சொல்கிறது:)! அதில் என் வரவும் உண்டு. ஆக, அதை விட்டிடலாம். நீங்கள் சொன்ன மாதிரி ஆயிரம் ஆயிரம் பெண்களின் நிலைமையை இரு கவிதைகளும் பிரதிபலிப்பதாகக் கொண்டிடலாம். இரண்டாவது கவிதையில் காணப்படும் நிலைமையைக் கொண்டாடிலாம்.

  தங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

  ReplyDelete
 91. அண்ணா கவிதை எல்லாம் போட்டு கலக்குறிங்க :)

  ReplyDelete
 92. 2 கவிதைகளுமே அழகு கிரிடம் படம் போலவே!!

  ReplyDelete
 93. மாப்பிள்ளை வீட்டு
  மகா ஜனங்கள்-திரு
  மண வீட்டில்
  கை நனைக்க
  வெள்ளிச் செம்பு
  கேட்ட போதுதான்..

  கலக்கலான வரிகள்..

  ReplyDelete
 94. PoornimaSaran said...

  //அண்ணா கவிதை எல்லாம் போட்டு கலக்குறிங்க :)//

  ’மாப்பிள்ளை’ ஜமாலைத்தானே சொல்றீங்க:))? ஜமாய்த்திருக்கிறார் நெஜமாவே:)!

  ReplyDelete
 95. PoornimaSaran said...

  //
  /மாப்பிள்ளை வீட்டு
  மகா ஜனங்கள்-திரு
  மண வீட்டில்
  கை நனைக்க
  வெள்ளிச் செம்பு
  கேட்ட போதுதான்../

  கலக்கலான வரிகள்..//

  கலங்க வைக்கும் வரிகளும் கூடத்தான், இல்லையா?

  ReplyDelete
 96. PoornimaSaran said...

  //2 கவிதைகளுமே அழகு கிரிடம் படம் போலவே!!//

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி பூர்ணிமா.

  ReplyDelete
 97. நல்ல கவிதை! படமும் சூப்பர் புகைப்படக் கலைஞரே!

  ReplyDelete
 98. தமிழ் பிரியன் said...

  //நல்ல கவிதை! படமும் சூப்பர் புகைப்படக் கலைஞரே!//

  நன்றி தமிழ் பிரியன்! படம் பொருத்தமாய் இருப்பதாய் எல்லோரும் கூறிவிட்டார்கள். இரண்டும் இணையத்தில் தேடிப் பிடித்தவைதான்:)!

  ReplyDelete
 99. //'மணமகள் கொடுத்த புகாரின் பெயரில், திருமண வீட்டில் வெள்ளிச் செம்பு கேட்டுத் தகராறு செய்த மாப்பிள்ளை வீட்டினர் கைது' என வெளிவந்த செய்தியில் பிறந்ததே முந்தைய கவிதை//

  பழைய பேப்பர் எங்களுக்கு பச்சியில இருக்கிற எண்ணெய்யை பிழிவதற்குத்தான் பயன்படுகிரது.. உங்களுக்கு அது கவிதைக்கான கருவாக இருந்திருக்கிறது :-)

  //பொருள் வேண்டிடும்
  புதிரான உலகும்
  புரிய வந்தது.//

  //வைக்கிறாள் இண்டர்நெட்டில்
  அவளேதான் இன்று சுயம்வரம்-//

  ரொம்ப நல்லாவே சொல்லிருக்கீங்க.. அதுவும்போக திண்ணை, முதல்தளம், இரண்டாவது தளம்.... இப்படி மொட்டை மாடி வரைக்கும் கவிதைக்கென ஒரு இடத்தையும் பிடித்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி :-)

  ReplyDelete
 100. " உழவன் " " Uzhavan " said...
  //பழைய பேப்பர் எங்களுக்கு பச்சியில இருக்கிற எண்ணெய்யை பிழிவதற்குத்தான் பயன்படுகிரது..//

  :)!

  //உங்களுக்கு அது கவிதைக்கான கருவாக இருந்திருக்கிறது :-)//

  பல சமயங்களில் நாம் கூட கதைகளில் வரும் சம்பவங்கள் கற்பனை என நினைப்போம். நடப்பவற்றைதான் எழுதுகிறார்கள் என செய்திகள் புரிய வைக்கின்றன, இல்லையா?

  //ரொம்ப நல்லாவே சொல்லிருக்கீங்க.. அதுவும்போக திண்ணை, முதல்தளம், இரண்டாவது தளம்.... இப்படி மொட்டை மாடி வரைக்கும் கவிதைக்கென ஒரு இடத்தையும் பிடித்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி :-)//

  வருகைக்கும் ஊக்கம் தரும் பாராட்டுக்கும் நன்றி உழவன்!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin