வெள்ளி, 26 ஜூன், 2026

தூறல்: 50 - உங்களுக்கே உரிய வேகம்

 ஓவியமான ஒளிப்படம்; 'பண்புடன்' போட்டி; பெங்களூர் நகர் உலா 

னது ஒளிப்படத்தை அடிப்படையாகக் கொண்டு ஓவியர் சண்முகநாதன் கருப்பையா (சதங்கா என்ற பெயரில் வலைப்பூவில் எழுதி வந்தவர்) உருவாக்கிய கலைப்படைப்பு:

எனது படம்:

எனது கேமரா பதிந்த காட்சியை, அவரது திறமை மறக்க முடியாத ஒன்றாக மனதில் நிறுத்தி விட்டது. அவருக்கு எனது அன்பும் நன்றியும்! 

நினைவுகளின் மீட்டலாக,

இதற்கு முன்னர் 2015_ஆம் ஆண்டு சதங்கா வரைந்து பரிசளித்த திருநாகேஸ்வரம் புஷ்கரணி படம் “இங்கே”: 

இதே போல் ஓவியர் யோகேஷ் காண்ட் நான் எடுத்த பூக்களின் படத்தை வாட்டர் கலர் ஓவியமாக்கிய பகிர்வு (2022) “இங்கே”.

*

ண்புடன் மின்னிதழ் தனது முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அறிவித்திருக்கும் போட்டியைப் பற்றி உங்களில் பலர் ஏற்கனவே அறிந்திருக்கக் கூடும். எனினும் தவறவிட்டவர்களுக்குப் பயனாகும் என அறிவிப்பை இங்கே பகிருகிறேன்:

#


படைப்புகளை வேர்ட் ஃபைலாக யூனிகோட் எழுத்துருவில் அனுப்ப வேண்டும். 

*

நகர் உலா

எம்.ஜி. ரோட் 

 மெட்ரோ ஸ்டேஷன்:

“ஒவ்வொரு ரயில் நிலையமும் முன்னோக்கி நகரும் கலையை கற்றுத் தருகிறது.”

# 1


இடப் பக்கம் தெரிவது பரேட் க்ரவுண்ட் (Parade Ground). படங்கள் அருகிலிருந்த பார்டன் செண்டர் கட்டிடத்தின் 13 வது தளத்திலிருந்து எடுத்தவை:

#2


யூட்டிலிட்டி பில்டிங்:

#3

நகரின் முதல் வானளாவிய 25 மாடிக் கட்டிடம். நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. 1970-களில் பெங்களூர் சிட்டி கார்ப்பரேஷன் (BCC) கட்டியது. 

ஹிக்கிங்பாதம்ஸ்:

#4

பழமை வாய்ந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது நகரின் புகழ் பெற்ற புத்தகக் கடைகளில் ஒன்றான ஹிக்கின்போதம்ஸ். கட்டிடத்தின் பாரம்பரிய அழகையும், விரிவான புத்தகத் தொகுப்பையும் தக்க வைத்திருப்பதால், இன்றளவிலும் பல தலைமுறை வாசகர்களின் விருப்பமான இடமாக அது தொடர்ந்து இயங்கி வருகிறது. 

#5

இது இந்தியாவின் புகழ்பெற்ற புத்தகக் கடைச் சங்கிலிகளில் ஒன்று. 1844-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நூலகர் ஏபல் ஜோஷுவா ஹிக்கின்போதம் அவர்களால் அன்றைய மதராஸ் நகரில் தொடங்கப்பட்டது. பெங்களூர் கிளை 1905_ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

#6


சர்ச் ஸ்ட்ரீட்

புத்தகப் புழு:

#7

(Book Worm)

எம். ஜி ரோடின் இணைச் சாலையான சர்ச் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள இந்தப் புத்தக கடையின் பெயர் வித்தியாசமாக உள்ளது அல்லவா?

#8


கமர்ஷியல் ஸ்ட்ரீட்

#9  
ஈஸ்டர்ன் ஸ்டோர்ஸ் நோக்கிய திசையில்..

#10 
காமராஜர் சாலையை நோக்கிய திசையில்..

பெங்களூர் சிவாஜி நகரின் இதயப் பகுதியில் அமைந்துள்ள கமர்ஷியல் ஸ்ட்ரீட், நகரின் மிகப் பழமையான மற்றும் துடிப்பாக விளங்கிய வணிகத் தெருக்களில் ஒன்று.   இன்று இத்தெரு ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு வெறிச்சோடி இருப்பதைப் பார்க்கும்போது ஒரு காலத்தில் கூட்ட நெரிசலில் நீந்தி நீந்திக் கடப்பதே பெரும் சவாலாக இருந்த அதே இடம்தானா என்று நம்ப முடியாமல் கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. படங்கள் வெவ்வேறு நாட்களில் சமீபத்தில் வாரநாட்களில் சென்றிருந்தபோது எடுத்தவை. ஒருவேளை வாரயிறுதிகளின் நிலைமை வேறாக இருக்கலாம். 

#11

காலமும் மாறிவிட்டது. மால்கள் வரவும் இந்தத் தெருக்களின் கடைகள் காற்று வாங்கின. இப்போது ஆன்லைன் ஷாப்பிங் பயன்பாடு அதிகமானதும் மால்கள் காற்று வாங்குகின்றன. ஷாப்பர்ஸ் ஸ்டாப் போன்ற பல நல்ல கடைகள் திடீரென கிளைகளை மூடி வருகின்றன. ஆனாலும் கமர்ஷியல் ஸ்ட்ரீட் இன்னும் தனது விசுவாசமான வாடிக்கையாளர்களை ஈர்த்துக்கொண்டே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதன் குறுக்குத் தெருக்களில் குறைவில்லாத கூட்டம் இருக்கவே செய்கிறது. 

#12

பெங்களூருவின் வணிகக் கலாச்சாரத்தில் ஒரு அன்புக்குரிய அடையாளமாக விளங்கிய கமர்ஷியல் ஸ்ட்ரீட், பிரிகேட் ரோட் போன்றவை தமக்கான வாடிக்கையாளர்களுக்காக எப்போதும் காத்திருக்கின்றன.

பெங்களூர் விமான நிலையம் மற்றும் மாரியாட் விடுதியில் படமாக்கிய சில 
கலைப் பொருட்கள்:
#13

#14

#15

#16


பெங்களூர் நெக்ஸஸ் சாந்தினிகேதன் மால்
சுவர் சித்திரங்கள்

#17
வாழ்க்கையின் சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாமல், 
அவற்றை அவிழ்க்கும் கரங்களாக மாறுங்கள்.

#18
உங்களுக்கே உரிய வேகத்தில் ஏறுங்கள், 
ஆனால் ஏறுவதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள்.

அடுத்ததும் ஏறுதல் குறித்துதான்..

டத்துளி:
பெங்களூர் அலுவலகக் கட்டிடம் ஒன்றில் கவனத்தை ஈர்த்த படிக்கட்டு வாசகங்கள்
#19
வயதானவர் மற்றும் உடல் உபாதை உடையோர் விதி விலக்கு எனினும் கருத்தில் கொள்ள வேண்டியவை:

1. படிக்கட்டுகளைப் படிப்படியாகத்தான் ஏற வேண்டும். 
2. ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை அவன் இரண்டிரண்டாக எதை எடுத்துக் கொள்கிறான் என்பதை வைத்தே மதிப்பிட முடியும்... மாத்திரைகளையா அல்லது படிக்கட்டுகளையா? 
3. நோக்கத்தைத் தொடர்ந்து துணிச்சலான செயல்பாடும் இருக்க வேண்டும். படிக்கட்டுகளை அண்ணாந்து பார்த்தால் போதாது, அவற்றில் ஏறத் தொடங்க வேண்டும். 
4. ஏறுகையில் பின்னோக்கிப் பார்க்காதீர்கள், விழுந்து விடுவீர்கள். 
5. உடல் தகுதியை அடைய மின்தூக்கி உதவாது. படிக்கட்டுகளே வழி.
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin