என்னவோர் எழுத்தாளர்!
இ. இ. கம்மிங்ஸிடம்
எனக்குப் பிடித்தது என்னவென்றால்-
அவர் சொல்லின் புனிதத் திரையைக்
கிழிந்தெறிந்து,
தனது வசீகரத்தாலும்
துணிச்சலான சாதுர்யத்தாலும்
அழுகிய போலித்தனத்தை
வெட்டிக் கடந்து செல்லும்
கட்டுக்கோப்பற்ற வரிகளை
நமக்கு அளித்தார்.
எவ்வளவு தேவையாக இருந்தது அது!
பழைய
சோர்ந்த
பாணியில்.
ஆனால், பின்னர் வந்தார்கள்
அவரைப் பின்பற்றியவர்கள்,
அவரை நகலெடுத்தவர்கள்.
முன்பு கீட்ஸ், ஷெல்லி,
ஸ்வின்பர்ன், பைரன் போன்றோரை
மற்றவர்கள் நகலெடுத்தது போலவே,
இவர்களும் அவரை நகலெடுத்தார்கள்.
ஆனால்
நிச்சயமாக
ஒரே ஒரு
இ. இ. கம்மிங்ஸ் மட்டும்தான் இருந்தார்.
ஒரு சூரியன்.
ஒரு நிலா.
*
மூலம்: "What A Writer" By Charles Bukowski
*
தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
*
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படுபவர் ஹென்றி சார்லஸ் புக்கோவ்ஸ்கி. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மானியர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். புக்கோவ்ஸ்கியின் எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன.
ஆறு நாவல்கள், ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் யாவும் சுமார் அறுபதுக்கு மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. அனைத்துமே அமெரிக்க விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்டவை.
**
9 மே 2026, பண்புடன் இணைய இதழில்.., நன்றி பண்புடன்!
***



ஒரு படைப்பாளி ஐந்நூறு படைப்பாளியைப் பாராட்டுவது எவ்வளவு பெரிய விஷயம். புக்கோவ்ஸ்கி பற்றியும் அறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்கு*இன்னொரு
நீக்குபேசிப் பதிவதில் நேர்ந்த பிழை எனப் புரிகிறது.
கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.
அசடு வழிய வைக்கிறது google டைப்போ! 500 படைப்பாளியை இல்லை, இன்னொரு படைப்பாளியை.
நீக்குஆம், புரிந்தது. நன்றி ஸ்ரீராம்.
நீக்குபுக்கோவ்ஸ்கி கவிதைகளை பற்றி சொன்னது அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்கு