#1
தமிழ்நாட்டில் காரைக்குடி, பள்ளத்தூர், ஆத்தங்குடி மற்றும் கொத்தமங்கலம் போன்ற பல இடங்களில் செட்டிநாட்டு வீடுகள் உள்ளன என்றாலும் ‘செட்டிநாட்டு அரண்மனை’ என அழைக்கப்படும் கானாடுகாத்தான் அரண்மனை அவற்றுள் புகழ் பெற்றதாகத் திகழ்கிறது. இது சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் கானாடுகாத்தான் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
#2
பாரம்பரிய செட்டிநாட்டு கட்டிடக்கலையை வெளிப்படுத்தும் இந்த அரண்மனை ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் 1912 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேக்கு மரங்களால் அலங்கார வேலைப்பாடுகள், கிரானைட் தூண்கள், பளிங்குக் கற்களால் ஆன தரைகள் கொண்ட இந்த மாளிகையைக் கட்டி முடிக்க ஏழு வருடங்கள் ஆகியுள்ளன.
இந்த அரண்மனையைச் சுற்றிப் பார்க்க தற்சமயம் முன் அனுமதி பெற வேண்டும். சில காலம் முன்வரை நுழைவுக் கட்டணத்துடன் சுற்றுலாப் பயணிகள் பார்க்க அனுமதித்து வந்தார்கள். இப்போது பராமரிப்பு கருதி அது நிறுத்தப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. ஆகையால் வெளியில் இருந்து எடுத்த சில படங்களை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
#3
இந்த அரண்மனையும் பன்மொழித் திரைப்படங்களில் இடம் பெற்ற ஒன்று. பல படங்களில் பாடல் காட்சிகள் மட்டும் இந்த அரண்மனை முன்னால் படமாக்கப்பட்டிருக்கும். அரண்மனை உள்ளே படமாக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களில் குறிப்பிடத் தக்கது ’கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’. ஆத்தங்குடி அரண்மனையைப் போலவே இதையும் ‘சினிமா வீடு’ என்று அங்குள்ளோர் குறிப்பிடுகின்றனர்.
1990 சதுர அடியிலான, ஒன்பது வாகனங்கள் வரை நிறுத்தக் கூடிய நீண்ட கார் ஷெட்.
#4
வலப்பக்கமிருக்கும் கதவு சன்னல்களுக்கு அடுத்து, நடுவே ஷட்டர்களால் மூடப்பட்ட ஒன்பது ஷெட்களையும் படத்தில் காணலாம்.
#4
#5 பின்புற வீதியில் அரண்மனையின் பின்வாசல்:
கானாடுகாத்தான் பகுதியில் எங்கு திரும்பினாலும் பெரிய பெரிய வீடுகளைப் பார்க்க முடிகிறது. சுற்றுப் புறத்தில் எடுத்த சில படங்கள்.
#6 அரண்மனையின் பின்வாசலுக்கு நேர் எதிரே உள்ள மாளிகை ஒன்று:
#7 அரண்மனையின் இடப் புற வீதியில், பல சன்னல்களைக் கொண்ட மற்றுமோர் நீண்ட மாளிகை
#8 கோயில் குளத்தருகே காணப்பட்ட அழகிய வீடு:
சிதம்பர விநாயகர் கோயில்
#9
#10
#11
எல்லாமே அழகு. அழகான அழகான கட்டிடக்கலை. விவரங்கள் சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅருமை இவ்வரிசையில் தேவகோட்டை வீடுகளை மறந்து விட்டீர்களே...
பதிலளிநீக்குஅவற்றைப் பற்றி நீங்கள் சொன்ன பிறகே இணையத்தில் தேடி அறிய வந்தேன். அருமையான வீடுகள். மிக்க நன்றி.
நீக்குமிக அழகான படங்கள். குளமும் அதற்கு பின்னால் தெரியும் கோவிலும் அருமை.
பதிலளிநீக்குபல சினிமாக்களில் இந்த வீடை பார்த்து இருக்கிறேன். இப்போது நாடகங்களில் கூட வருகிறது செட்டி நாட்டு வீடுகள்.
ஆம், பல வீடுகள் படப்பிடிப்பிற்குப் பயன்படுத்தப் படுகின்றன. நன்றி கோமதிம்மா.
நீக்குபடங்கள் செமையா இருக்கு...குளமும் கோவிலும் ஆஹா!
பதிலளிநீக்குமுதல் படம் அரண்மனை கவர்கிறது கூடவே மற்ற வீடுகளும் அழகோ அழகு. செட்டி நாட்டு வீடுகள் மீடியா/சினிமா புகழ் பெற்றவை!!!!!
கீதா
ஆம், புகழ் பெற்ற வீடுகள். நன்றி கீதா.
நீக்கு