#1
"கையிலிருக்கும் வேலையின் மேல்
உங்கள் அத்தனை கவனத்தையும் குவித்திடுங்கள்.
மையத்தில் குவியாமல்
சூரியனின் கதிர்கள் எரியூட்டுவதில்லை."
_ Alexander Graham Bell
#2
"வலுவான கனவுகளுக்கும் தேவை
அடங்காத உற்சாகம் என்பதை உறுதிப்படுத்துகிறது,
வான் நோக்கிய இருவாச்சிப் பறவையின்
மூர்க்கமான முழக்கம்."
#4
"நம்பிக்கையானது
அர்ப்பணிப்புடன்
பல மணிகள் நாட்கள் வாரங்கள் வருடங்களாக,
விடாது உழைப்பதில் உருவாகிறது."
_ Robert Staubach
#5
"கடந்தவற்றைத் திரும்பிப் பார்ப்பதில் தவறில்லை,
ஆனால் வெறித்து நோக்கியபடி நின்று விடாதீர்கள்."
_ Doris Roberts
#6
"பயத்தை உணருங்கள்,
ஆனால் எவ்வகையிலேனும் செய்து முடித்து விடுங்கள்."
_ Susan Jeffers
#7
"ஒரே இடத்தில் நின்றிருந்தாலும்
ஒவ்வொருவரும் வெவ்வேறு உலகத்தையே பார்க்கிறார்கள்."
#8
"இரைச்சல் நிரம்பிய உலகினில்,
இன்னிசையாக இருந்திடுங்கள்."
படங்கள் துல்லியம். வரிகள் அழகு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்களோடு வரிகளும் போட்டி போடுகின்றன. படங்கள் வெகு அழகு.
பதிலளிநீக்குகீதா
மிக அருமையான படங்கள், கடைசி படம் மிக அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குபொன்மொழிகளும் அருமை.