#1
"உலகமே சொல்லலாம்
வெளிச்சம் உள்ளது, ஆகாயத்தில் வானவில் உள்ளது,
சூரியன் உதிக்கின்றது என,
ஆனால் எனது கண்கள் மூடியிருந்தால்
எனக்கு அது எப்படிப் பொருள்படும்?"
_ Osho
#2
"பூனை உங்கள் கண்களை நேராக பார்க்கையில்,
அது ஒரு வார்த்தைகளற்ற உரையாடல்."
#3
"தன்னமிக்கை குறைவதே
எல்லாத் தயக்கத்திற்கும் காரணம்."
_ Todd Duncan
#4
"ஒருபோதும் நிறுத்தாதீர்கள்,
ஒருபோதும் போதுமென விட்டு விலகாதீர்கள்,
ஒரு வெற்றியாளர் ஆக
தேவையான தன்னம்பிக்கையை உங்களுக்கு நீங்கள் கொடுப்பதை
நிறுத்தி விடாதீர்கள்."
_ Diego Sanchez
#5
"உங்கள் கனவுகளின் திசையில்
தன்னம்பிக்கையோடு செல்லுங்கள்.
நீங்கள் கற்பனை செய்யும் வாழ்வை வாழுங்கள்!"
_ Henry David Thoreau
#6
"அறிவு தான் நிறையக் கற்று விட்டோம் எனப் பெருமிதப் படுகிறது.
ஞானம் அடக்கத்துடன் தான் அறிந்தது மிக சொற்பம் என எண்ணுகிறது."
_ William Cowper
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 209
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***
படங்கள் அட்டகாசம்.
பதிலளிநீக்குமுதல் படத்தைப் பார்த்ததும் நம் வீட்டில் இப்ப பூனைக்குட்டிகள் வருவதும் அதில் ஒன்று ஜன்னல் வழி வரும் போது சிறிதாகத் தொங்கிக் கொண்டு முன்னங்கால்கள் ஜன்னலின் விளிம்பில் வைத்து முகம் மட்டும் தெரியும் கம்பிகளுக்கு இடையில் கண் மூடிக் கொண்டு சில சமயம். புகைப்படம் எடுத்திருக்கிறேன்.
பொன்மொழிகளும் அருமை.
//"தன்னமிக்கை குறைவதே
எல்லாத் தயக்கத்திற்கும் காரணம்."//
ஆமாம். நமக்கு நாமே தட்டிக் கொடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.
அறிவு, ஞானம் பற்றிய கருத்து சூப்பர். என் சிந்தனையில் இது அடிக்கடி வரும். அறிவு குறை குடம். ஞானம் நிறைகுடம் என்றும்.
இதே கருத்தை William Cowper சொல்லியிருப்பதும் தெரிந்து கொண்டேன்
அருமையான பொன்மொழி
கீதா
படங்கள் அருமை. கண்களை அகலத் திறந்து பார்க்கும் பூனை மிரட்டுகிறது. கண்மூடி இருக்கும் குட்டி கொஞ்சத் தூண்டுகிறது. தவளை எம்புவதற்குள் எடுத்த படம் அருமை. வரிகள் தன்னம்பிக்கை அளிக்கின்றன.
பதிலளிநீக்கு