திங்கள், 23 செப்டம்பர், 2024

வைரவன்பட்டி வைரவர் திருக்கோயில் - கோபுர தரிசனம் - வைரவர் தீர்த்தம்

 #1

மதுரையிலிருந்து பிள்ளையார்ப்பட்டிக்கு செல்லும் வழியில் உள்ளது வைரவன்பட்டி. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இத்தலம் முன்னர் வடுகநாதபுரம் மற்றும் வீரபாண்டியபுரம் என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.  தற்போது இத்தலத்திற்கு வடுகநாதபுரி , வடுகநாதபுரம் , வைரவர் நகர் ,  வைரவமாபுரம் என மேலும் பல பெயர்கள் உள்ளன.

#2 

இடப்பக்கம் சிறிய கோபுரத்துடன் காணப்படுவது விநாயகர் மண்டபம்

இக்கோயிலின் மூலவராக வளர் ஒளி நாதர் எனப்படும் வைரவர் சுவாமி உள்ளார். தாயார் வடிவுடையம்பாள். தலவிருட்சம் ஏறழிஞ்சில் மரம். தல தீர்த்தம் வைரவர் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

#3

ராஜகோபுரம்

சிற்பக்கலையின் சிறப்புக்காகப் போற்றப்படும் இக்கோயில் நகரத்தாரர்களின் 9 நகரக் கோவில்களில் ஒன்றாகும். தட்சிணா மூர்த்தி எழுந்தருளிய இயலிசை தூண் மண்டபம் இக்கோயிலின் தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.

நாம் பொதுவாக பைரவர் என்றே உச்சரித்து வழிபடும் வைரவர், சிவபெருமானுடைய பல வடிவங்களில் ஒருவர். பிரம்மனுடைய அகந்தையை அடக்குவதற்காக சிவபெருமான் தனது நெற்றிப் புருவ மத்தியில் இருந்து வைரவரை உருவாக்கியதாக சிவபுராணத்தில் கூறப்படுகிறது. 

நான்கு வேதங்களையும் நாய் உருவத்திற்குள் அடக்கி அதனையே தனது வாகனம் ஆக்கிக் கொண்டவர் வைரவர்.

எல்லா திருக்கோயில்களிலும் கோயிலையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் காக்கும் கடவுளாக வைரவர் உள்ளார்.

#4

கிழக்கு நோக்கிய இத்திருக்கோயிலின் ராஜகோபுரத்துக்கு எதிரே கோயிலின் ஊரணி, வைரவர் தீர்த்தம் நான்கு துறைகளுடன் மிக அழகாக மட்டுமின்றித் துப்புரவாகவும் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.

#5


#6


#7


படங்கள் DSLR மற்றும் அலைபேசி உபயோகித்து எடுத்தவை. கோயிலுக்குள் அனுமதி பெற்று அலைபேசியில் படங்கள் எடுக்க முடிந்தது. மூலவர், தாயார் சன்னதிகள் தவிர்த்து ஃப்ளாஷ் உபயோகிக்காமல் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள்.

முகப்பு வாயிலில் ஆரம்பித்து கோயிலில் காணப்படும் எண்ணற்ற அழகிய  சிற்பங்களும், தூண்களின் வடிவமைப்பும், நேர்த்தியான வண்ண வண்ணக் கூரை ஓவியங்களும் கண்களையும் கருத்தையும் ஒருசேரக் கவருகின்றன. அவற்றைத் தனிப்பதிவாக அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

உதாரணத்துக்கு இரு படங்கள்:

நந்தி மண்டபமும் நாலாபுறமும் அழகிய தூண்களும்..

#8

நந்தி மண்டபத்தின் மேலுள்ள கூரைச் சிற்பங்கள் மிக அழகு. அடுத்த பாகத்தில் பகிர்ந்திடுகிறேன். 

கீழ் வரும் படம் சுற்றுப் பிரகாரத்தில் எடுத்தது. ஆங்காங்கே சதுரமாக ஒரு பாகத்தை சுமார் மூன்றடி உயரத்திற்கு உயர்த்தி அதன் நான்கு புறமும் சன்னல்கள் அமைத்து அதன் வழியாகச் சூரிய ஒளி பிரகாரத்திற்கு பிரகாசம் கொடுக்கும் வகையில் அமைத்திருப்பதை படத்தின் மேல் பாகத்தை உற்றுப் பார்த்தால் புரியும்.

#9

தகவல்கள்: விக்கிப்பீடியா உட்பட இணையத்தில் கிடைத்த தகவல்களைச் சுருக்கமாகத் தந்துள்ளேன்.

(பாகம்: 2 விரைவில்..)

***

2 கருத்துகள்:

  1. படங்கள் யாவும் கண்ணைக் கவர்கின்றன.  நந்தி மண்டபமும், குளமும் வெகு அழகு.

    பதிலளிநீக்கு
  2. படங்களும் கோவில் பற்றிய விவரங்களும் அருமை. படங்கள் செமையா இருக்கு,. விதான டிசைன்கள் எல்லாம் சூப்பர்,

    இந்தக் கோவில் சென்றிருக்கிறேன். பதிவும் போட்டிருந்தேன் அந்தப் பகுதியில் இருக்கும் 9 வைரவர் கோயில்கள் தரிசித்தது பற்றி. ஆனால் அப்போது கோவிலுக்குள் படம் எடுக்க அனுமதிக்கவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin