ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

நாளை நமதே

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (91) 

பறவை பார்ப்போம் - பாகம்: (59)

#1
"நேற்று என்பது நமதல்ல திரும்பப் பெறுவதற்கு, 
ஆனால் போராடிப் பெறவோ தோற்கவோ 
நாளை என்றும் நமதே!" 
-Lyndon B. Johnson



#2
"உங்கள் எல்லைக்கோடினை வரையறுப்பது 
உங்கள் மனம் மட்டுமே."


#3
"எவ்வளவுக்கு எவ்வளவு 
உங்கள் விருப்பங்களை விட்டு விடுகிறீர்களோ,
 அவ்வளவுக்கு உயரச் செல்வீர்கள்."

#4

"தெளிவாகச் சிந்திக்க 

புத்திசாலித்தனத்தை விடவும் 

தைரியமே அவசியப்படுகிறது." 

_ Thomas Szasz

ஆண்டாளின் ஆனைச்சாத்தன்
["கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!" திருப்பாவை வரிகளில் வரும் ஆனைச்சாத்தன், இரட்டைவால் குருவியான கரிச்சான் பறவைதான் என்பது சமீபத்தில்தான் தெரிய வந்தது. அதன் பிறகு கவனித்துப் பார்த்ததில் அறிந்தேன், மார்கழி மாதத்தில் இப்பறவைகளின் தரிசனம் பனி விலகாத  அதிகாலைப் பொழுதினில் தவறாமல் கிடைப்பதை.]

#5
"மற்றவர் உங்களை வரையறுக்க அனுமதிக்காதீர்கள், 
நீங்கள் நீங்களாக இருங்கள், 
அதில் பெருமிதம் கொள்ளுங்கள்!"

#6

"குறி வைத்தால் மட்டும் போதாது.

அதை எட்ட வேண்டும்." 

(இத்தாலியப் பழமொழி)


#7
"மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிக் 
கவலை கொள்ளாதீர்கள்,
எப்போதும் உங்கள் சொந்தப் பாடலைப் பாடியபடி இருங்கள்."

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..]
***

8 கருத்துகள்:

  1. மிக அழகான பறவைகள் அவைகள் சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  2. விருப்பங்களை விடுவது அவ்வளவு எளிதா என்ன!

    ஆனைச்சாத்தன் விவரம் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்னவோ சரிதான். புத்தரால் மட்டுமே முடியும்:).

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அத்தனை படங்களும் வெகு அழகு. சிந்தனைகளும் சிறப்பு.

    தொடரட்டும் உங்கள் சேமிப்பும் பகிர்வும்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin