ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

ஒரு நாள்.. ஒரு பச்சைக் கிளி.. - உலக ஒளிப்பட தின வாழ்த்துகள்!

*என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 34
*பறவை பார்ப்போம்.. - பாகம்: 29
தோட்டத்துப் பறவைகளைப் படமெடுக்கும் போது இருக்கும் முக்கிய சிரமம் அவை நம்மைக் கவனிக்க நேர்ந்தால் சிட்டாய்ப் பறந்து மறைந்து விடுமென்பதே.

#1
கொய்யாக் கிளையில்.. 
உல்லாசமாய் ஊஞ்சலாடிய படி..  

எல்லாப் பறவைகளும் அப்படியெனச் சொல்ல முடியாது. சில பறவைகள் கண்டு கொள்ளாது. வீட்டுக் கொய்யாவின் ருசியில் மனதைப் பறி கொடுத்த இந்தப் பச்சைக் கிளி, “எப்படி வேண்டுமோ ஆற அமரப் படமெடுத்துக் கொள். அருகே வந்து தொந்திரவு செய்யாமல் இருந்தால் சரி” என்கிற ரீதியில் அவ்வப்போது திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டுக் காரியமே கண்ணாக இருந்தபோது காட்சிப் படுத்திய படங்கள் ஏழின் வரிசை இது:

#2
வாய் நிறையக் கவ்வி..


#3
சிந்திச் சிதறி..


#4
போட்டிக்கு வந்த அணிலை முறைத்து விரட்டி..


#5
விருந்தில் மகிழ்ந்து.. மெய் மறந்து..


#6
‘க்ளிக் க்ளிக் என என்ன சத்தம்.. இந்த நேரம்..’


#7
“அட, நீங்கதானா.. 
சரி சரி.. எத்தனை படம் வேணுமோ எடுத்துக்கோங்க.
உலக ஒளிப்பட தினத்தில் என் படங்களைப் போடுங்க!
வாழ்த்துகள்!”


இந்தப் பச்சைக் கிளியைப் பற்றிய விரிவான தகவல்களை வேறு படங்களுடன் ஏற்கனவே இங்கே பகிர்ந்துள்ளேன்:
செந்தார்ப் பைங்கிளி (அ) சிகப்பு ஆரக்கிளி - http://tamilamudam.blogspot.com/2017/12/21.html
*
மற்றொரு சமயம், ஒரு ஜோடிக் கிளிகள் மாடி ஜன்னலில் குலாவி நடை பயின்ற காட்சிகளின் தொகுப்பு இங்கே:
பிப்ரவரி 14 - அன்பிற்கும் உண்டோ.. - http://tamilamudam.blogspot.com/2018/02/14.html

**

உலக ஒளிப்பட தின வாழ்த்துகள்:)! 

14 கருத்துகள்:

  1. அழகான படங்கள்.....

    உலக ஒளிப்பட தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. கிளியின் ஒவ்வொரு பார்வைக்கும் பொருத்தமான வாசகங்கள் அருமை.

    உ பு தி வாழ்த்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அழகான படங்கள்.
    பொருத்தமான வாரிகள்.
    பச்சைக்கிளி பாடுது , ராமலக்ஷ்மி தோட்டம் வந்தே ஆடுது.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா ...அலகின் நுனியில் உணவு துணுக்கு ...

    நேர்த்தியான படங்கள்..அருமை

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin