முதலில், இரண்டாம் மாடி ஜன்னலில் வந்தமர்ந்த கிளிகளைத் தோட்டத்திலிருந்து ஜூம் செய்த படங்கள் சில.. திரைப்பாடல் வரிகளுடன்..
#1
‘சந்திப்போமா..’
#2
‘தனிமையில் நம்மைப் பற்றிச் சிந்திப்போமா..’
#5
***
#9
சாம்பக் காய் மரத்தில்.. சிகப்பு மீசை புல் புல் ஜோடி..
‘க்ளிக் க்ளிக் என தொந்திரவு செய்யாதீர்களேன்.., ப்ளீஸ்..!’
#10
மூங்கில் மரத்தில்..
பூச்சிபிடிப்பான் ஜோடி
***
ஊடலில் வந்த சொந்தம்.. காதல் வாழ்க.. வாழ்க..
இந்த ஜோடிக் காகங்களைப் படமாக்கிய அனுபவம் நெகிழ்வானது. முன் வசித்த ஃப்ளாட்டில் பால்கனி கம்பியில் வந்தமர்ந்த காகங்களை சன்னல் மற்றும் மற்றொரு பால்கனியிலிருந்து க்ளிக்கிய படங்கள். ஜோடியில் ஒன்றுக்கு சற்றே கோபம் போலும். அதற்குப் பார்வைத் திறன் இருக்கவில்லை அல்லது குறைவு என்பதைப் படமாக்கிய பிறகே கவனித்தேன். அருகே நெருங்கிய காகம்(2) அதனோடு பேச முனைந்து கரையாய் கரைந்து பார்த்தும், முகத்தைத் திருப்பிக் கொண்டது. காகம்(2) அருகே செல்லச் செல்ல முதல் காகம் விலகி விலகி நகர்ந்தபடி இருந்தது. சற்றும் மனம் தளராத காகம்(2) கம்பியின் திருப்பத்தில் அமர்ந்து ஐந்தாறு நிமிடங்கள் கரைந்து பார்த்தது.
ஒரு கட்டத்தில் சமாதான முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில் காகம்(2) விருட்டென பறந்து போய் விட, கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தது முதல் காகம். ஆனால் போன வேகத்திலேயே ஓரிரு நிமிடங்களில் திரும்பி வந்த காகத்தின் வாயில் ஏதோ இரை. ஜோடியின் அருகே அமர்ந்து ஊட்டி விடவும் மனம் இளகிப் போனது அதற்கு. இரையைச் சுவைத்து விழுங்கியது அந்தப் பார்வையற்ற காகம். பிறகென்ன, இரண்டும் சந்தோஷமாக சிறிது நேரம் கரைந்து விட்டு சிறகடித்து ஒரே திசையில் ஒன்றாகப் பறந்து போயின.
பார்க்கலாமா படக் கதையாக...?
ஒரு கட்டத்தில் சமாதான முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில் காகம்(2) விருட்டென பறந்து போய் விட, கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தது முதல் காகம். ஆனால் போன வேகத்திலேயே ஓரிரு நிமிடங்களில் திரும்பி வந்த காகத்தின் வாயில் ஏதோ இரை. ஜோடியின் அருகே அமர்ந்து ஊட்டி விடவும் மனம் இளகிப் போனது அதற்கு. இரையைச் சுவைத்து விழுங்கியது அந்தப் பார்வையற்ற காகம். பிறகென்ன, இரண்டும் சந்தோஷமாக சிறிது நேரம் கரைந்து விட்டு சிறகடித்து ஒரே திசையில் ஒன்றாகப் பறந்து போயின.
பார்க்கலாமா படக் கதையாக...?
***
படங்கள் 1-10: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 28)
பறவை பார்ப்போம் - (பாகம் 23)
அன்பு வென்றது. அது தானே முக்கியம். உண்மை.
பதிலளிநீக்குபடங்கள் ஒவ்வொன்றும் அழகு.
நன்றி வெங்கட்.
நீக்குகிளிகளுக்கு எனது பாடல் சிபாரிசு... "ன்றுவரை நீ யாரோ... நான் யாரோ... இன்று முதல் நீ வேறோ நான் வேறோ.... காணும் வரை நீ எங்கே நான் எங்கே... கண்டா உடன் நீ எங்கே நான் அங்கே..."
பதிலளிநீக்குகாக்கைகளின் அன்பு கரைய வைக்கிறது.
அடுத்தடுத்து படங்களுக்குப் பொருந்திப் போகிறது வரிகள்:). நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் அனைத்தும் அழகு
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஒவ்வொரு படங்களும் அற்புதம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீக்குஅற்புத காட்சி பதிவுகள்...
பதிலளிநீக்குஒவ்வொன்றும் மிக தெளிவு, அழகு, நயம்...உள்ளம் கொள்ளை போனது...
நன்றி அனுராதா.
நீக்குஅழகான காட்சிகள் அற்புதமான படபிடிப்பு.
பதிலளிநீக்குபாடல்கள் அருமை.
அன்பு வென்றது .
அன்பை விளக்கும் படங்கள் எல்லாம் மிக அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குஅருமையான புகைப்படங்கள்! அது சரி, பெங்களூரில் காகம் இருக்கிறதா? என் கண்ணில் படவே இல்லை. இன்று அம்மாவாசை, காக்காவுக்கு சாதம் வைக்க வேண்டும் என்று தேடினால்..ஊஹூம்! ஒன்று கூட கண்ணில் படவில்லையே??. புறாக்கள்தான் இருக்கின்றன.
பதிலளிநீக்குநகர்ப்புறங்களில் அதிகம் இருக்கிறதே. இப்போது நான் இருக்கும் வயல் சூழ்ந்த பகுதியில்தான் காகங்களைக் காண்பது மிக அரிதாக உள்ளது.
நீக்குஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் புறாக்கள் தவிர்க்க முடியாதவை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
முத்தான ரெண்டே படங்கள். தேர்ந்தெடுத்த ரெண்டே படங்கள்.
பதிலளிநீக்குஇருந்தாலும் ஒரு நிறைவு இருந்ததைச் சொல்லத் தான் வேண்டும். நன்றி.
மறுக்கவே மாட்டேன்:). பொதுவாக அப்படி ஓரிரண்டை மட்டுமே தேர்ந்தெடுத்து ஃப்ளிக்கரில் பதிந்து பின் இங்கும் பகிருவது வழக்கம். இந்த முறை ஒரு படக் கதை போலிருக்கட்டுமெனும் எண்ணத்தில் பகிர்ந்தது அதிகப்படியாகி விட்டது.
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.