புதன், 19 ஆகஸ்ட், 2015

கலைமகள் அட்டைப்படம் - 176_வது உலக ஒளிப்பட தினம்

176_வது உலக ஒளிப்பட தினமாகிய இன்று, கலைமகள் மாத இதழின் அட்டைப்படமாக நான் எடுத்த ஒளிப்படம் வெளியாகியிருப்பதைப் பகிர்ந்து கொள்கிறேன்:)!
#
நன்றி கலைமகள்!
73, 74_ஆம் பக்கங்களில் அட்டைப் படக் கட்டுரையும்:

சர்வதேசக் கிராமியத் திருவிழா

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

பவளமல்லியின் வாதை - சொல்வனம் (இதழ் 134)


வ்வப்போது வந்து போகிறவர்களால் 

வெடித்தெழும் அழுகை 

விசும்பலாகித் தேயவும்

கனத்த மெளனத்துள் 

புகுந்து கொள்கிறது துக்க வீடு.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

உங்கள் குழந்தையும் படம் பிடிக்கலாம்.. - திறன் வளர்ப்பு.. ‘செல்லமே’ இதழில்..


19 ஆகஸ்ட் உலக புகைப்படதினத்தை முன்னிட்டு.. 
செல்லமே மாத இதழில்.. 


புகைப்படக் கலைஞர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதியிருக்கும் கட்டுரை.. நான் எடுத்த படங்களுடன்..
"நிழற்படம் அல்லது புகைப்படம் என்பது நிகழ்வுகளை அல்லது நினைவுகளை ஓரிடத்தில் உறையச் செய்து சேமித்து வைக்கும் கலை. ie.. Freezing  a piece of time in History.  இது ஓவியம் வரைவது போல  ஒரு அழகிய கலை தான். இன்றைய நவீன உலகில்  நம் குழந்தைகளும் செல்பேசி ஆரம்பித்து பெரிய கருவி வரைக்கும் உள்ள கேமராக்களை உபயோகிக்கும் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.  அவர்களின் ஆர்வத்தை தூண்டி அவர்களும் நல்ல புகைப்படக் கலைஞர்களாக வளர்வதில்  நம் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் ?"... 

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

FLICKR 2000 - ஹாட்ரிக் - உலகப் புகைப்பட தின மாதம்

https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/
ழேகால் ஆண்டுகள்.. இரண்டாயிரம் படங்கள்..! சீரான வளர்ச்சிக்கும் ஓரளவு பெற்றிருக்கும் தேர்ச்சிக்கும் இடைவிடாத முயற்சி மட்டுமே காரணமன்று.

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

கல்கி பவளவிழா இதழில்.. - எதெல்லாம் சேர்ந்தால் முழுமையான மனுஷனாகலாம்?

ம்மாதம் தனது எழுபத்தைந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ‘கல்கி’ வார இதழ்.

பவளவிழாக் கொண்டாட்டத்தின் மூன்றாம் இதழின் ஐந்தாம் பக்கத்தில்.., 

எதெல்லாம் சேர்ந்தால் முழுமையான மனுஷனாகலாம்?
மாஸ்டர். ஷண்முகம் லக்ஷ்மணன்
நன்றி கல்கி!

***

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

கனவு.. கடும் உழைப்பு.. நம்பிக்கை - மாணவ மணிகளுக்கு டாக்டர் அப்துல் கலாமின் பொன்மொழிகள் 10 (பாகம் 1)


ஓவியம் நன்றி: சதங்கா [Shan Art]

மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும்... டாக்டர் அப்துல் கலாம்  வழங்கிய அறிவுரைகள் பத்தின் தமிழாக்கம், வருங்கால வெற்றியாளர்களின்.. சாதனையாளர்களின்.. படங்களுடன்..!



1. உறங்கும் போது வருபவை அல்ல கனவுகள். நிறைவேற்றும் வரை உங்களை உறங்காமல் இருக்கச் செய்பவை.


புதன், 5 ஆகஸ்ட், 2015

நிறுத்தம் - சொல்வனம் (இதழ் 132)


பாதையில் பழுதென
நின்று போயிருந்தது ரயில்.
உயர்ந்தும் தாழ்த்தும்
ஊஞ்சலாடிக் கொண்டிருந்த
மரக்கிளைகளின் ஊடாக
சாமர்த்தியமாகப் புகுந்து
கண்ணாமூச்சி ஆடிக் கவருகிறது
மாலை வெயில்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin