ஓவியம் நன்றி: சதங்கா [Shan Art] |
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும்... டாக்டர் அப்துல் கலாம் வழங்கிய அறிவுரைகள் பத்தின் தமிழாக்கம், வருங்கால வெற்றியாளர்களின்.. சாதனையாளர்களின்.. படங்களுடன்..!
1. உறங்கும் போது வருபவை அல்ல கனவுகள். நிறைவேற்றும் வரை உங்களை உறங்காமல் இருக்கச் செய்பவை.
2. வாழ்வில் வரும் இடர்கள் உங்களை அழிப்பதற்காக வருவதில்லை. உங்களுக்கு உதவ, உங்களுள் மறைந்திருக்கும் ஆற்றலையும் சக்தியையும் நீங்கள் உணர வழி செய்கின்றன. சிரமங்களுக்கும் தெரியட்டும் உங்களோடு மோதுவது சிரமம் என்று.
3. ‘நாம் அனைவரும் சரிசமமான திறமைகளைக் கொண்டவர்கள் அல்ல. ஆனால் சரிசமமான வாய்ப்புகள் உள்ளன திறமைகளை வளர்த்துக் கொள்ள.’
4. தோல்வி எனும் நோயைக் கொல்லக் கூடிய சிறந்த மருந்து, நம்பிக்கையும் கடும் உழைப்புமே. நிச்சயம் அவை உங்களை ஒரு வெற்றியாளனாக ஆக்கும்.
5. விரைவாகக் கிடைக்கக்கூடிய செயற்கையான சந்தோஷங்களுக்குப் பின் ஓடாமல் செறிவான இலக்கை அடைய அர்ப்பணிப்போடு செயல்படுங்கள்.

6. முதல் வெற்றிக்குப் பின் ஓய்வெடுக்காதீர்கள். இரண்டாவதில் தோற்க நேரின் ஏராளமான உதடுகள் காத்திருக்கும், உங்கள் முதல் வெற்றி வெறும் அதிர்ஷ்டத்தில் கிட்டிய ஒன்றென சொல்வதற்கு.
7. இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற இந்திய இளைஞர்கள் தொழில் முனைவர்களாக, தொழில் அதிபர்களாக ஆக வேண்டும்.
8. வித்தியாசமாக சிந்திக்கும் துணிச்சல், எவரும் சென்றிராத பாதையில் பயணித்து புதியதைக் கண்டுபிடிக்கும் தைரியம், இயலாத ஒன்றெனக் கருதப்படுவதன் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு வெற்றி பெறுதல் ஆகிய உயரிய திறமைகளை வளர்த்துக் கொள்ள பாடுபட வேண்டும். இதுவே இளைஞர்களுக்கான எனது செய்தி.
9. சிந்தனையே முதலீடு, முனைப்பே வழி, கடும் உழைப்பே தீர்வு.
10. நம் நாட்டுக்கு வெற்றியை விடக் குறைந்த எதையும் நன்றியாகச் செலுத்த முடியாது. வெற்றியே நம் இலட்சியமாக இருக்கட்டும்.
வந்தே மாதரம்!
***
பொன்மொழிகளும்படங்களும் அருமைசகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇரண்டும் அருமை...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குஅனைத்து பகிர்வும் அருமை.
பதிலளிநீக்குஉங்கள் தம்பி மகன் இலை வடிவை தாளில் வரைந்து இலைகளை ஒட்டி ஆல்பம் செய்து இருப்பது அருமை.
அந்தக் காலத்தில் என் அண்ணன் பச்சை கலர் தாள் ஆல்பத்தில் இல்லைகளை பாடம் செய்து ஒட்டி வைத்து இருந்தது நினைவுக்கு வருகிறது.
நன்றி கோமதிம்மா. அனைத்து இலைகளையும் வீட்டுத் தோட்டத்தில் இருந்தே சேகரித்து செய்திருந்தான்.
நீக்குபடங்கள், கலாமின் பொன் மொழிகள் என சிறப்பான பகிர்வு. நன்றி.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குகலாமின் வரிகள், படங்கள் இரண்டும் அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் அனைத்தும் சிறப்பு
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஅழகான படங்களுடன் திரு. கலாமின் கருத்துக்கள்...
பதிலளிநீக்குஅருமை அக்கா...
நன்றி.
நீக்குபொன்மொழிகளும் படங்களும் அருமை. பொன்மொழிக்கு ஏற்ப நேர்த்தியாக படங்கள் தேர்வு செய்துள்ளீர்கள். பாராட்டுகள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குVery nice. Tommorow memorial day god bless u
பதிலளிநீக்குThank you.
நீக்குபொன் மொழி மிக அருமை
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமிக அருமை நன்றி
பதிலளிநீக்குஅழகிய படங்களும் அருமையான கருத்துகளும், மிக்க நன்றி
பதிலளிநீக்குமகிழ்ச்சி. நன்றி.
நீக்கு