19 ஆகஸ்ட் உலக புகைப்படதினத்தை முன்னிட்டு..
செல்லமே மாத இதழில்..
புகைப்படக் கலைஞர்
ஐயப்பன் கிருஷ்ணன் எழுதியிருக்கும் கட்டுரை.. நான் எடுத்த படங்களுடன்..
"
நிழற்படம் அல்லது புகைப்படம் என்பது நிகழ்வுகளை அல்லது நினைவுகளை ஓரிடத்தில் உறையச் செய்து சேமித்து வைக்கும் கலை. ie.. Freezing a piece of time in History. இது ஓவியம் வரைவது போல ஒரு அழகிய கலை தான். இன்றைய நவீன உலகில் நம் குழந்தைகளும் செல்பேசி ஆரம்பித்து பெரிய கருவி வரைக்கும் உள்ள கேமராக்களை உபயோகிக்கும் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். அவர்களின் ஆர்வத்தை தூண்டி அவர்களும் நல்ல புகைப்படக் கலைஞர்களாக வளர்வதில் நம் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் ?"...
ஷண்முகம் சீனியர். தங்கை மகன். இவரும் சிறுவயதிலிருந்து என் கேமராவுக்கு மாடலாக இருப்பவரே. 2009_ல் ஒரு Pit போட்டிக்காக புத்தரின் சிலை முன் புத்தரைப் போலவேக் கண்மூடித் தியானம் செய்வது போல எடுத்த அந்தப் படம் பிறகு
2011 கல்கி தீபாவளி மலரிலும் வெளியாகியிருந்தது. சென்ற வருடம் இவரது சமீபப் படமொன்றைப் பகிர்ந்த வேளையில் திவா அவர்கள் ‘இவர் அவரல்லவா?’ எனச் சரியாக அடையாளம் கண்டு கொண்டிருந்தார்:)!
|
"கேமராக்களை எப்படிக் கையாள்வது என குழந்தைகளுக்கு பக்குவமாக சொல்லிக் கொடுங்கள். உதாரணமாக முதலில் அந்த கழுத்துப் பட்டையை கழுத்தில் மாட்டிக் கொள்வது கைத் தவறினாலும் கேமரா கீழே விழாமல் பாதுகாக்கும், கையை லென்ஸின் அடிப்புறம் பிடித்துக் கொள்வது படம் எடுக்கும் போதான அசைவை தடுக்கும்.."
இந்தக் கட்டுரைக்காக படங்கள் தேவையெனத் தகவல் வந்த அரைமணியில் அவசரமாக சீனியரையும் ஜூனியரையும் வைத்துப் படங்கள் எடுத்து அனுப்பியிருந்தேன். நெல்லையில் இவர்களுடன் இருந்ததால் உடன் சாத்தியமாயிற்று. ஜூனியருக்குப் பலகாலமாகவே ஆர்வம் உண்டு. ஆனால் சீனியர் இப்படங்களுக்காக போஸ் கொடுத்த போது கேமராவை எப்படிப் பிடிப்பது, எப்படி நிற்பது, வ்யூ ஃபைண்டர் வழியாகப் பார்ப்பது போன்றவற்றை அறிந்த போது ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு அங்கிருந்த கடைசி இரு தினங்களில் என்னிடமிருந்து வேகமாக நுணுக்கங்களைக் கற்று, எல்லா மோடிலும் எடுத்தும் காட்டி அசத்தி விட்டார். தற்போது ஊர் திரும்பி தன் சேமிப்பில் பயிற்சிக்காக இரண்டாம் விலையில் Pentax dslr ஒன்று வாங்கிக் கொண்டிருப்பதுடன், பள்ளியின் ஃபோட்டோகிராஃபி க்ளப்பில் இணைந்து இக்கலையை விருப்பப்பாடமாக எடுத்துக் கொள்ளவிருக்கிறார்.
ஷண்முகம் ஜூனியர், தம்பி மகன். இதோ இருக்கிறதே கட்டுரையின் முதல் படம், இந்த வயதிலிருந்தே கேமராவைக் கவனமாகப் பிடித்துப் படம் எடுப்பார்:).
சமீப காலமாக Nikon Coolpix 2800 பயன்படுத்தி வருகிறார்.
#
|
“குழந்தைகளின் கற்பனையை விரிக்க விடுங்கள். அவர்கள் விரும்பும் கோணங்களில் படங்களை எடுக்கட்டும். அவற்றில் சில இதுவரை நாம் பார்த்திராத கோணங்களாகவும் இருக்கக் கூடும். ” |
உண்மைதான். இவர் எடுத்த படங்களில் அப்படி வித்தியாசமான கோணமாக அமைந்து எனக்குப் பிடித்தமான ஒன்று..
நாம் எடுக்கும் விதத்தைக் கூடவே நின்று கூர்ந்து கவனித்து சரியான கோணங்களில் அழகாக எடுக்கிறார்..
"கால்களை முன்னும் பின்னுமாக வைத்து
ஸ்டெடியாக நிற்க வேண்டும்" :)!
இதோ பாருங்கள் அன்று ஜூனியர் எடுத்த படங்கள்:
திருப்பரங்குன்றம்
Coolpix 2800
பிகாஸாவில் பேஸிக் பிராஸஸிங் சொல்லிக் கொடுத்தேன். எடுத்தவற்றில் எதை பிராஸஸ் செய்யலாம் என்பதைத் தேர்வு செய்து, எந்தப் படங்களுக்கு vignetting நன்றாயிருக்கும் எனத் தீர்மானித்து, பார்டர் போட்டு, வாட்டர் மார்க் போட்டு என அடுத்தடுத்த நாட்களில் செய்து காட்டி என்னிடம் சபாஷ் வாங்கியபடியே இருந்தார்:)!
இக்காலக் குழந்தைகள் எல்லோருமே எதையும் வேகமாகக் கற்றுக் கொள்கிறார்கள் இல்லையா?
|
|
" கருவியை நேராக பிடிக்க பழக வேண்டும். அந்த துறு துறு பிஞ்சு கைகளை ஒரு நிமிடம் கருவியை நேராகப் பிடித்து படங்களை எடுக்கப் பழக்கி விட்டால் பாதி வெற்றி அடைந்துவிட்டீர்கள் என்றே சொல்லுவேன். .."
பிஞ்சுக் கைகள் என்பது சரியாகதான் இருக்கிறது. DSLR-ஐ முழுமையாகப் புரிந்து கையாள இன்னும் நாளாக வேண்டும். ஆனாலும் முயன்றிடுகிறார். |
|
“எந்த இடங்களில் நெருங்கி எடுக்க வேண்டும், எந்த இடத்தில் சற்று தூரத்தில் நின்று எடுக்க வேண்டும் போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்குங்கள்.”
|
*நிறைய இணைய தளங்கள் புகைப்படங்களைப் பகிர இருக்கின்றன. ப்ளிக்கர், ப்ளாக்கர் போன்றவை சில எடுத்துக் காட்டுகள். குழந்தைகளின் படங்களை, அவர்கள் சொல்லும் சிறு குறிப்புடன் பகிருங்கள். அவற்றிற்கு வரும் உற்சாக வரவேற்பை குழந்தைகளிடம் தவறாமல் தெரிவியுங்கள்.
அதாவது பகிரும் தளங்களுக்குள் குழந்தைகள் தாமே நுழையும்படி அமைக்காமல் நீங்கள் வலையேற்றி, நீங்களே வரும் கருத்துகளைக் காட்டி ஊக்கம் அளியுங்கள் என்கிறார் கட்டுரை ஆசிரியர்
ஐயப்பன் கிருஷ்ணன்.
புகைப்படங்களும் தகவல்களும் நன்று சகோ
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குகவர்கிறார்கள் குழந்தைகள். யாரோட மருமான்கள்!
பதிலளிநீக்குஅதானே :)! நன்றி ஸ்ரீராம்.
நீக்குஐயப்பன் கிருஷ்ணன் மிக அருமையாக சொல்லி இருக்கும் குறிப்புகள், குழந்தைகளுக்கு மட்டும் அல்ல. எங்களுக்கும் உபயோகமாய் இருக்கும். உங்கள் தம்பி மகன் அத்தையை போல் திறமையானவராக (கலைஞராக)வருவார்.
பதிலளிநீக்குகட்டுரை ஆசிரியருக்கும், உங்களுக்கும், உங்கள் மருமகனுக்கும் வாழ்த்துக்கள்.
ஆம், இவை அனைவருக்கும் பயன்படுகிற பொதுவான குறிப்புகள். வாழ்த்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குஅடாடா! அனைத்தும் அருமை! வாழ்க! வளர்க!
பதிலளிநீக்குநன்றி திவா sir :)!
நீக்குவளரும் குழந்தைகளின் பெற்றோருக்கு சரியாக வழிக்காட்டியுள்ளீர்கள். நன்றி.
பதிலளிநீக்குசுதந்திர தின வாழ்த்துகள்!
நன்றி அமைதி அப்பா.
நீக்குஹாஹா சரியா சொன்னீங்க ஸ்ரீராம். :)
பதிலளிநீக்குமிக அருமை ராமலெக்ஷ்மி. என்னக் கூட நேரா பிடிச்சு எடுங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்க. கோணல் மாணலா எடுத்து சொதப்பி அதையும் விடாம ப்லாகில போடுற இம்சை அரசி நான்.
பைதவே செல்லமே ந்னு கூப்பிட்டு சொன்னமாதிரி பிடிச்சிருக்கு. :) !
சித்திரமும் கைப்பழக்கம் என்பது எல்லாக் கலைக்கும் பொருந்தும்தானே :)? தொடர்ந்து எடுத்துக் கொண்டிருங்கள்.
நீக்குநன்றி தேனம்மை .
குட்டிக் கலைஞர்கள் பெரிய விஷயங்களை அழகா செய்திருக்காங்க வாழ்த்துக்கள் :) அனைவருக்குமே (குழந்தைகளுக்கு மட்டுமேயல்லாமல்) மிகவும் பயனுள்ள கட்டுரை நன்றிங்க ராமலக்ஷ்மி :)
பதிலளிநீக்குமிக்க நன்றி :).
நீக்கு