செவ்வாய், 2 செப்டம்பர், 2014

திடம் கொண்டு போராடு

1. பிரச்சனை என்னவென்றால், நேரம் இன்னும் இருக்கிறது என நாம் நினைப்பது.

2. முடியும் என நம்புவதிலேயே பாதி தூரத்தைக் கடந்து விடுகிறோம்.

3. மகிழ்ச்சி என்பது நம்மிடம் என்ன இருக்கிறது, நாம் யார் என்பவற்றைச் சார்ந்தது அல்ல. நாம் என்ன நினைக்கிறோம் என்பதைப் பொறுத்ததே.
4. நம்முடைய கோட்பாடுகள் நமக்குத் தெளிவாக இருந்தால், முடிவுகள் எடுப்பதும் எளிதாக இருக்கும். [Roy E Disney]

5. சூரியனின் ஒளிக்கீற்று மட்டுமே மகிழ்ச்சியைத் தருமென நினைக்கிறார்கள், மழையில் நடனம் ஆடாதவர்கள்.
6. ஒவ்வொரு நாளையும் நேசிப்போம், ஒவ்வொரு நொடியையும் இரசித்திடுவோம். இல்லையெனில் மழைத்துளிகள் போல நல்ல பல தருணங்கள் நாம் பார்க்கும் முன்னரே நழுவியோடி விடும்.

7. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கம். ஆரம்பிப்போம் மறுபடியும். [Paul Tillich]

8. அன்பின் முதல் கடமை, செவி மடுத்தல். [Paul Tillich]

9. அமைதியில் கிடைக்கின்றன பதில்கள். பிறக்கின்றன தீர்வுகள்.

10. சிரமமான கட்டங்களிலிருந்து போராடி வெளி வருவது சிறப்பான நாட்களை வரவேற்கவே.
 **

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..]
***

14 கருத்துகள்:

  1. அனைத்தும் முத்துகள். மிக நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு நாளையும் நேசிப்போம், ஒவ்வொரு நொடியையும் இரசித்திடுவோம். இல்லையெனில் மழைத்துளிகள் போல நல்ல பல தருணங்கள் நாம் பார்க்கும் முன்னரே நழுவியோடி விடும்.

    ஒளிரும் முத்துகள் ஒவ்வொன்றும் ரசனையான தேர்வுகள்..பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    அனைத்தும் துளிர்விடும் முத்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. முதல் படம் மிகவும் கவர்ந்து விட்டது.

    எல்லாமே அருமை.

    5 வது ஜோர். முன்னர் மழையில் நனைந் ஆனந்த நினைவுகள் வரும் அதே சமயம், இப்போது அதுபோல நனைய முடியாத நிலை வருத்தத்தையும் தருகிறது! :))))

    9 வது லேட்டரல் திங்கிங் முறையை வலியுறுத்துகிறது.

    திடங்கொண்டு போராடு என்றதும் சீனு பற்றியும் ஏதோ செய்தி இருக்குமோ என்று பார்த்தேன்! :))))

    பதிலளிநீக்கு
  5. //திடங்கொண்டு போராடு என்றதும் சீனு பற்றியும் ஏதோ செய்தி இருக்குமோ என்று பார்த்தேன்! :))))//

    ஹி ஹி ஹி சீனு கூட அதையே நினைச்சதா என்கிட்டே சொன்னான் ஸ்ரீராம் சார் :-)

    பதிலளிநீக்கு
  6. அனைத்துமே நல்முத்துகள்.

    புகைப்படங்கள் அசத்தல்!

    பதிலளிநீக்கு
  7. @ஸ்ரீராம்.,

    அந்த முதல் படத்தின் ஃப்ளிக்கர் லிங்கை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த போது கணேஷும் இதையே சொன்னார், சீனுவைக் குறிப்பிட்டு:).

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  8. @சீனு,

    நல்லதொரு பெயரை வைத்திருக்கிறீர்கள் வலைப்பூவுக்கு:)!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin