#1
முத்துச்சரத்தில் 600 முத்துக்கள் கோத்தாகி விட்டது!
இப்போதெல்லாம் எந்தத் திட்டமிடலும் இல்லை. கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகவும் கோக்கின்ற பயணம் இங்கே சற்று தேக்கம் கண்டாலும் ஃப்ளிக்கர் தளத்தில் தினம் ஒன்று என்கிற கணக்கில் தடையில்லாமல் தொடருகிறது. ஆனால் வாரம் இரண்டு என்ற அளவில் கூட பதிவுகள் இட இயலவில்லை, இந்த வருடத்தின் சில மாதங்களில்.
வாசித்த நூல்கள், பார்த்த இடங்கள், கேட்ட விஷயங்கள் எனப் பகிர நினைத்துத் தள்ளிப் போட்டிருப்பவை நிறையவே.
அவ்வப்போது வருவதும், அதிகமாவதும், சரியாகிப் போவதுமாய் இருக்கிற கழுத்து மற்றும் கைவலி காரணமாகத் தட்டச்சிடுவதில் இருக்கும் சிரமத்திலிருந்து முழு விடுதலை கிடைப்பது சாத்தியமாகத் தெரியவில்லை. விளைவாக, முடியும் போது முடிந்ததைச் செய்வோம் என்கிற கோட்பாடுடனேதான் இருக்கிறேன் என்றாலும்... ஒரு எண்ணிக்கை கண்ணில் படும்போது நின்று சற்று கவனிக்கத் தோன்றுகிறது.
சரத்தில் அறுநூறு என்பதும், நான்கு இலட்சத்து நாலாயிரத்தை எட்டி விட்டப் பக்கப் பார்வைகளும் பெரிய இடைவெளிகள் விடாமல் செயல்பட வைக்குமென்றே நம்புகிறேன்.
தொடரும் அனைவருக்கும் அன்பு நன்றி!
[‘முத்துச்சரம்’ ஒளிப்படம்: நன்றி சர்வேசன்]
வேற்று மாநிலங்களில் விநியோக வசதி செய்யப்படாததால் தமிழ் ஃபெமினா இதழை கையில் பார்ப்பது இதுவே முதல் முறை.
ஆங்கில இதழின் அதே வடிவமைப்பு, காகிதத் தரம் மற்றும் உள்ளடக்கம். இம்மாத இதழில் ‘அடைமழை’ சிறுகதைத் தொகுப்பு குறித்த அறிமுகம் வெளியாகியுள்ளது:
'இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு உட்பட ‘அடைமழை’ மற்றும் அகநாழிகை பதிப்பகத்தின் அனைத்து நூல்களும் கிடைக்குமிடங்கள் குறித்த விவரங்கள் இங்கே.
அடுத்த மாதம் மதுரை மாநகரில் நடைபெறவிருக்கும் வலைப்பதிவர் மாநாடு வெற்றிகரமாக நடைபெற நல்வாழ்த்துகள்!
சிறப்பான திட்டமிடல்களுடன் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும் விவரங்களுக்கும், கலந்து கொள்ள படிவத்தைப் பெறவும் இங்கே செல்லலாம்.
காணொளி:
கரும்பிலிருந்து சாறை எடுக்க வடமாநிலங்களில் கடைப்பிடிக்கும் முறையைப் பாருங்கள்: [தம்பி தனது மொபைலில் பதிந்து வந்த காட்சி. ஷீரடியிலிருந்து சிங்னாப்பூர் செல்லும் வழியில் பல இடங்களில் இப்படிப் பார்க்க முடிந்ததாகக் கூறினான்.]
படத்துளிகள்:
# சொன்னபடி கேளு.. மக்கர் பண்ணாதே..
STAND AT EASE.. ATTENTION..
வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், தேனீ , கட்டெறும்பு ஆகியவற்றைப் படமெடுத்திருக்கிறேன் என்றாலும் இத்தனை சிறிய ஈயைப் படமாக்குவது இதுவே முதல் முறை. சன்னல் blind_ல் மாறி மாறி அமர்ந்து சூரியக் குளியல் எடுத்துக் கொண்டிருந்தது. தம்மைச் சுத்தம் செய்து கொள்ளவே ஈக்கள் இப்படிக் கால்களை மாற்றி நர்த்தனம் செய்கின்றன என அது குறித்து வாசிக்க ஒரு இணைப்பைத் தந்திருந்தார், ஃப்ளிக்கரில் இப்படங்களைப் பகிர்ந்த போது நண்பர் திரு எழில் ராமலிங்கம். நீங்களும் அறிந்து கொள்ளலாம் இங்கே.
# ‘நான் ஈ’
தோட்டங்களுக்குப் படமெடுக்கப் போகும் போது இனிப் பூச்சிகளையும் ஆராய வேண்டும் என்கிற ஆர்வம் வந்திருக்கிறது இப்போது:).
***
தோட்டங்களுக்குப் படமெடுக்கப் போகும் போது இனிப் பூச்சிகளையும் ஆராய வேண்டும் என்கிற ஆர்வம் வந்திருக்கிறது இப்போது:).
***
முத்துச்சரத்தில் இன்று கோர்த்துள்ள தங்களின் 600வது முத்துக்குப் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு600 க்கும் 4,லட்சத்துக்கும் வாழ்த்துகள் ராமலெக்ஷ்மி.. !!!
பதிலளிநீக்குஃபெமினாவில் வந்ததுக்கும் சிறப்பு வாழ்த்துகள். விமர்சனங்கள்தானே நம்மை தொடர்ந்து செயல்பட வைக்கின்றன. :)
சரத்தில் 600 முத்துகள் = வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகழுத்து மற்றும் கைவலி = உடல் ஆரோக்கியம் முதல் சாய்ஸ்.
தமிழ் ஃபெமினாவில் 'அடைமழை' நூலுக்கான விமர்சனம் - வாழ்த்துகள்.
கரும்புச்சாறு - பாவம் மாடு. :)))
ஈ படம் அழகாக வந்திருக்கிறது.
@வை.கோபாலகிருஷ்ணன்,
பதிலளிநீக்குநன்றி VGK sir!
@Thenammai Lakshmanan,
பதிலளிநீக்குஆம். அவையும் ஒரு காரணமே:). நன்றி தேனம்மை.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி.
கரும்பைச் சக்கையாகப் பிழிவது போல மாட்டின் உழைப்பைப் பிழிகிறார்கள்.
மேக்ரோ படங்கள் இன்னும் நேர்த்தியாக முயன்றிட உள்ளேன்:).
மனம்கனிந்த வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு600 பதிவுகள் என்பது சாதாரண விஷயமல்ல...
எட்டியிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்..
இன்னும் பல நித்திலமான முத்துக்கள்
எங்களுக்கு கிடைக்கச் செய்யுங்கள்...
தமிழ் ஃபெமினாவில் 'அடைமழை' நூலுக்கான விமர்சனம் இடம்பெற்றதற்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு600 வது முத்துக்கு வாழ்த்துக்கள்.
காணொளி திறக்கவில்லை.
மேலும் மேலும் சரத்தில் முத்துக்கள் சேர வாழ்த்துக்கள்.
சூரிய குளியல் ஈ அழகு.
உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
600 ற்கு மேற்பட்ட பதிவுகளுடனும்
பதிலளிநீக்குநான்கு இலட்சத்தைத் தாண்டிய பார்வைகளுடனும்
வலையுலகில் பவனி வரும் உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா...
பதிலளிநீக்குமுதலில் 600 - மிகப்பெரிய மைல்கள் வாழ்த்துக்கள்.
அடைமழை - பெமினாவில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.
மற்ற அனைத்தும் அருமை...
நான் ஈ சூப்பரக்கா...
மனமார்ந்த வாழ்த்துகள்.....
பதிலளிநீக்குஈ படம் - மிக அருமை.
@மகேந்திரன்,
பதிலளிநீக்குநன்றி.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா. காணொளி ஏன் திறக்கவில்லை எனத் தெரியவில்லை.
@Muruganandan M.K.,
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி டாக்டர்.
@சாந்தி மாரியப்பன்,
பதிலளிநீக்குநன்றி சாந்தி.
@சே. குமார்,
பதிலளிநீக்குநன்றி குமார்.
@வெங்கட் நாகராஜ்,
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.