செவ்வாய், 9 செப்டம்பர், 2014

குழந்தைகளின் அழுகுரல் (பாடல்கள் 2 & 3) - எலிஸபெத் பேரட் பிரெளனிங்

2.
சோகமாக இருக்கும் குழந்தைகளிடம் கேட்டிருக்கிறீர்களா
அவர்களது கண்ணீருக்கான காரணத்தை?
எப்போதோ முடிந்து விட்ட எதிர்காலத்தை எண்ணி
முதியவர்கள் அழுகிறார்கள்
இலைகளற்று நிற்கிறது வனத்தில் வயதான மரம்
உறைபனியோடு முடிகிறது பழைய வருடம்
அடிபடும்போது ரணமாகிறது பழைய காயம்
பழைய நம்பிக்கையைத் தொலைப்பது வேதனையின் உச்சம்
ஆனால் என் சகோதரர்களே, கேட்டிருக்கிறீர்களா
ஏன் இந்தப் பச்சிளம் குழந்தைகள்
தம் தாய்களின் அணைப்பில் தேம்பி அழுதவாறு நிற்கிறார்கள்,
ஆனந்தம் பொங்கும் நம் தந்தையர் நாட்டில்?

3.
வேதனை அளிக்கிறது ஏறிட்டுப் பார்க்கிற
குழிவிழுந்த அவர்களது வெளிறிய முகங்கள்,
மனிதன் வெறுக்கின்ற சோகத்தால் அழுந்தி
கீழிறங்கிக் கிடக்கிறது இளம் கன்னங்கள்
“உங்கள் பழைய பூமி பாழடைந்தது” என்கிறார்கள்.
“எங்கள் இளம் பாதங்கள் மிகப் பலவீனமானது!” என்கிறார்கள்.
மேலும் சொல்கிறார்கள்-
சில காலடிகளே எடுத்து வைத்திருக்கிறோம்,
அதற்குள் களைப்படைந்து விட்டோம்.
இன்னும் வெகு காலம் இருக்கிறது
நாங்கள் விரும்பும் ஓய்வைத் தரவல்ல
கல்லறைக்குச் செல்ல!
குழந்தைகளை விட்டுவிட்டு
கேட்கிறீர்கள் முதியவர்களை
ஏன் அழுகிறார்கள் என.
வெளியே குளிர் ஆட்டுவிக்கிறது எங்களை
ஒதுங்க இடமின்றிக் குழப்பத்தில் தவித்து நிற்கிறோம்
குழந்தைகளாகிய நாங்கள்,
கல்லறைகளோ முதியவர்களுக்கு!
*

மூலம்: “The Cry of the Children”
by Elizabeth Barrett Browning

படம் நன்றி: இணையம்
**

செப்டம்பர் 2014, அதீதம் மின்னிதழில் வெளியான கவிதை.

பாடல் 1 இங்கே.
***

12 கருத்துகள்:

  1. மனதைத் தொட்ட கவிதை.....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. சோகம் உறைக்கிறது. பாவம் குழந்தைகள்.நல்ல மொழிபெயர்ப்பு ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  3. ஒதுங்க இடமில்லாமல் குளிரும் தவிக்கும் குழந்தைகள் பாவம்.
    இப்போதே களைப்படைந்தால் செல்லும் தூரம் அதிகமே! வாழ்க்கை பாதையில்

    கல்லறைகளில் குளிர் இருக்காது முதியவர்களுக்கு.
    வேதனையான கவிதை.

    பதிலளிநீக்கு
  4. @கோமதி அரசு,

    ஆம். அந்நாளில் அச்சிறுவர்கள் அனுபவித்த வேதனைகளை உருக்கமாகச் சொல்லியிருக்கிறார் இப்பாடல்களில், கவிஞர். நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin