வெள்ளி, 4 ஏப்ரல், 2014

காரியத்தில் உறுதி வேண்டும்

1. விட்டுவிட வேண்டாம். கடினமாக இருப்பது ஆரம்பம்தான்.
Never Give up

2. நம்மைச் சுற்றியிருக்கும் உலகம் எவ்வளவு மாறி விட்டது என வியக்கிறோம். அவற்றால் நாம் எவ்வளவு மாறிப் போய்விட்டோம் என்பதைக் கவனிக்கத் தவறுகிறோம்.

3. நமது பலம் நமக்கே தெரிவதில்லை, பலசாலியாக இருந்தே ஆகவேண்டிய தருணம் வரும் வரையில்.
4. ஏறவேண்டிய படிகளை எண்ணி மலைத்து நிற்காமல் எடுத்து வைப்போம் முதல் அடியை.

5. மனம் சோர்வுறும்போது கால்களின் துணை கொண்டு நகருவோம்.

6. சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்தே... இருப்பவர்கள், எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பதில்லை.
Long Wait..

7. உட்கார்ந்து பேசுவதே, மனஸ்தாபங்களும் பிரச்சனைகளும் தீர சிறந்த வழி.

8. தம்மை நோக்கி வீசப்படும் செங்கற்களைக் கொண்டே வெற்றிக் கோட்டைக்குப் பலமான அஸ்திவாரம் அமைத்துக் கொள்கிறார்கள், துவண்டு போகாமல், தைரியசாலிகள்.

9.  சோம்பேறி திறமைசாலிகளை எளிதாகக் கடந்து செல்கிறார்கள் கடும் உழைப்பாளிகள்.

10.அத்தனை சிறப்பும் தொடங்க விழைகிற துணிவிற்கே.
Just start
 ***
[தொகுப்பது தொடர்கிறது.. எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..]

18 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமை...

    முக்கியமாக 6 & 9 : உழைப்பாளிகள் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் சரியா...? தவறா...? என ஆராய முற்படுவதில்லை...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    சிந்திக்க தூண்டும் கருத்துக்கள்....பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான சிந்தனை மொழிகள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பொன்மொழிகள். என் பதிவு இமெயிலில் கிடைத்ததா, ?

    பதிலளிநீக்கு
  5. நன்றே செய் அதுவும் இன்றே இன்னே செய் தத்துவம் எனக்கு மிகவும் தேவையானது. எல்லோருக்கும் தான். துணீந்து நின்று தொடர்ந்து செல்வோம். மிக நன்றி ராமலக்ஷ்மி.அருமையான மருந்து உங்கள் வரிகள்.

    பதிலளிநீக்கு
  6. @G.M Balasubramaniam,

    நன்றி GMB sir. உங்கள் இமெயிலுக்கு நேற்று பதிலளித்திருந்தேனே. எதற்கும் ஸ்பாமில் பார்த்திடுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. அசத்தல் !! உங்களது வண்ணப் புகைப்படங்கள் மட்டுமல்ல,
    எண்ணக் குறிப்புகளும். வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin