எப்போது தொலைந்தது என் குழந்தைப் பருவம்?
பதினொரு வயது முடிந்த தினத்திலா,
நரகமும் சொர்க்கமும் பூகோள வரைபடத்தில்
கிடைக்காது என உணர்ந்த தருணத்திலா,
ஆகையால் அவை இருக்க வாய்ப்பில்லை எனும்
எப்போது தொலைந்தது என் குழந்தைப் பருவம்?
பெரியவர்கள் நாம் நினைக்கிறபடி எல்லாம்
இருப்பதில்லை என உணர்ந்த நேரத்திலா,
அன்பைப் பற்றி பேசி அன்பைப் போதிக்கிறவர்கள்
ஒருபோதும் அன்பாக நடக்காததை
உணர்ந்த தினத்திலா?
எப்போது தொலைந்தது என் குழந்தைப் பருவம்?
என்னுடைய அறிவு எனக்கே சொந்தமானது, அதை
எந்தவிதத்திலும் நான் பயன்படுத்திக் கொள்ளலாமென
அறிய வந்த பொழுதா,
உருவாகும் சிந்தனைகள் மற்றவருடையாதாக அன்றி
எனதாக, எனக்கே எனக்கு உரித்தானதாக
உணர்ந்த அந்த நாளிலா!
எங்கே தொலைந்தது என் குழந்தைப் பருவம்?
மறந்து போன ஓரிடத்துக்குச் சென்று விட்டது,
ஒரு குழந்தையின் முகத்துக்குள் ஒளிந்து கொண்டது,
அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.
***
மூலம்: “Childhood” by Markus Natten
அதீதம் 2013 அக்டோபர் இரண்டாம் இதழுக்காகத் தமிழாக்கம் செய்த கவிதை.
ரசிக்க வைக்கும் கவிதை... பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குஅழகான தமிழாக்கம்... நன்றி... வாழ்த்துக்கள்...
சிறப்பான தமிழாக்கம்...
பதிலளிநீக்குதமிழாக்கம் அருமையாக உள்ளது
பதிலளிநீக்குதங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
அருமையாக இருக்கிறது. நாமும் ஏதாவது எழுத கை பரபரக்கிறது!!! அப்புறம்.. மனதளவில் நான் இன்னும் குழந்தைதான்! :)))
பதிலளிநீக்குதமிழாக்கம் மிகவும் ரஸிக்க வைத்தது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குமொழியாக்க கவிதை அருமை அக்கா...
பதிலளிநீக்குதிரும்ப கிடைக்காத பருவம்..அழகான மொழியாக்கம்,வாழ்த்துக்கள் அக்கா!!
பதிலளிநீக்குஇழந்த குழந்தைப் பருவம் மீண்டு வந்தது கவிதையின் ஆழத்தில்... அழகான மொழி பெயர்ப்பு
பதிலளிநீக்குஅருமையான கவிதை. மீண்டும் எல்லோர்க் உள்ளும் ஒளிந்து கொண்டு இருக்கும் குழந்தை பருவம் தேடினால் கிடைக்கும்.குழந்தை முகத்துக்குள் ஒளிந்து கொண்ட குழந்தைதனத்தை அவர்களுடன் குழந்தையாகி ரசிக்கலாம்.
பதிலளிநீக்குஇருந்தாலும் கள்ளமில்லாமல் சிரிக்கும் குழந்தை குணம் தொலைந்து விட்டது தான்.
அழகான மொழியாக்கம்...
பதிலளிநீக்குநாமும் அந்தக் குழந்தைப் பருவத்தை தொலத்துக்கொண்டுதான் இருக்கிறோம்...
ஏதேதோ காரணங்களால்...
இங்கே புனையப்பட்ட காரண காரணிகள் வெகு அழகு...
அம்மாவின் இடுப்பில்
பதிலளிநீக்குஅப்பாவின் தோளில்
அண்ணனின் கைகளில்
அத்தையின் மடியில்
மாமனின் முத்தத்தில்
நடக்க கற்று தந்த நடை வண்டியில்
ஓடிய திண்ணையில்
ஒளிந்து விளையாடிய நாட்களில்
பள்ளியில் ,
பருவம் அடைவதில் .........................
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
@கே. பி. ஜனா...,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@PARITHI MUTHURASAN,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@வை.கோபாலகிருஷ்ணன்,
பதிலளிநீக்குநன்றி vgk sir!
@சே. குமார்,
பதிலளிநீக்குநன்றி குமார்.
@S.Menaga,
பதிலளிநீக்குஆம் மேனகா. நன்றி.
@குமரி எஸ். நீலகண்டன்,
பதிலளிநீக்குநன்றி நீலகண்டன்.
@கோமதி அரசு,
பதிலளிநீக்கு/அவர்களுடன் குழந்தையாகி ரசிக்கலாம்./ ஆம் கோமதிம்மா:)! நன்றி.
@மகேந்திரன்,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@Govindan Lakshmi,
பதிலளிநீக்குபகிர்ந்த வரிகளுக்கு நன்றி.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குமனதளவில் குழந்தையாகவே இருக்கக் கொடுத்து வைக்க வேண்டும்:)! பரபரத்த கையைக் கட்டிப் போடாமல் எழுதி விடுங்கள். காத்திருக்கிறேன் வாசிக்க.
நன்றி ஸ்ரீராம்.