செவ்வாய், 3 செப்டம்பர், 2013

பெயரற்றவன் - ரிச்சர்ட் ரைட் ஆங்கிலக் கவித்துளிகள்


1.
ஏனிந்த வசந்தகாலத்து வனம்
மெளனத்துள் ஒளிகிறது நான் வருகையில்?
என்னதான் நடக்கிறது?

2.
நகரின் எல்லா மணிகளும்
ஓங்கி ஒலிக்கின்றன நள்ளிரவில்
புது வருடத்தை பயமுறுத்தி!

3.
கூட்டை விட்டக் குருவி
ஒரு கணம் காற்றில் மூழ்கி
பின் விரிக்கிறது சிறகுகளை.

4.
வெகு வேகமாகப் பறக்கிறது காகம்
தனிமைக் கரைதலை
வயல்வெளியில் விட்டுவிட்டு.

5.
காயமுற்றக் குருவி
ஏரியின் குளீர்ந்த நீரில் மூழ்குகிறது
கண்களோ திறந்தே இருக்கின்றன.

6.
பறவைகளே பறக்கக் காணோம்
மரயிலைகள் கல்போல் அசைவற்றிருக்க-
ஒரு இலையுதிர்க்கால மாலை.

7.
நான் பெயரற்றவன்
மூழ்கும் இலையுதிர்க்கால சிகப்புச் சூரியன்
எடுத்துச் சென்றுவிட்டது என் பெயரை.

8.
அமைதியான வசந்தகால வனம்
காகமொன்று தன் கூரிய அலகைத் திறந்து
அதிர வைக்கிறது வானத்தை.

9.
தூண்டில் முள்ளைப் போல
சூரியகாந்தியின் நீண்ட நிழல்
மிதக்கிறது ஏரியில்.

10.
கொட்டுகிற பனியில்
சிரித்தபடிசிறுவன் விரிந்துநிற்கிறான் கைகளை
அவை வெண்மையாகும் வரை.

மூலம்: ரிச்சர்ட் ரைட்
அதீதம் 2013 செப்டம்பர் முதலாம் இதழுக்காக தமிழாக்கம் செய்யப் பட்டவை.

Richard Nathaniel Wright
richard-wright-american-author-1937

ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளரான ரிச்சர்ட் ரைட் 4 செப்டம்பர் 1908-ல் பிறந்து 28 நவம்பர் 1960 வரை வாழ்ந்தவர். நாளை அவரது பிறந்த தினம். சர்ச்சைக்குரிய இவரது நாவல்கள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளில் பெரும்பாலானவை இனவேறுபாட்டைச் சாடுகின்றவையாக, குறிப்பாக அலைக்கழிக்கப்பட்டு வந்த ஆப்ரிக்க அமெரிக்கர்களின் அவதிகளைப் பேசுவதாக வெளிவந்து, இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் ஒரு சமுதாய மாற்றத்துக்கு உதவியவை. Native Son, Black Boy, Black Power, White Man, Listen!, American Hunger, Rite of Passage போன்ற நாவல்களை எழுதியவர்தானா இந்த ஹைக்கூ கவிதைகளையும் எழுதினார் என உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர். அதிலும் 4000 ஹைக்கூக்களை எழுதி சாதனை படைத்தவர். 20-30 ஆண்டுகளாக ஹைக்கூ எழுதியவர்கள் கூட இந்த எண்ணிக்கையைத் தொட்டிருக்கவில்லை. இந்த சாதனையையும் இவர் நிகழ்த்தியது வாழ்வின் கடைசி காலத்தில் என்பது கூடுதல் தகவல்.


richardஉடல், மன, பொருளாதார ரீதியாக மிகுந்த சோர்வுக்குள்ளாகியிருந்த நேரத்தில் 1959-ல் R. H. Blyth எழுதிய ஜப்பானிய ஹைக்கூக்கள் நான்கு தொகுதிகளை இவருக்குப் பரிசாகத் தந்திருக்கிறார் ஒரு தென் ஆப்ரிக்க இளைஞர். அக் கவித்துளிகளால் ஈர்க்கப் பட்டவர் தொடர்ந்து பல பெரும் கவிஞர்களின் ஹைக்கூகளையும் வாசித்து மகிழ்ந்த பின், மார்ச் 1960-ல் ஆரம்பித்து வாழ்நாளின் கடைசி எட்டு மாதங்களிலும் சென்ற இடமெல்லாம் கையோடு நோட்டும் பேனாவும் கொண்டு சென்று எழுதிக் குவித்திருக்கிறார் நாலாயிரம் கவித்துளிகளை. ஆனால் அவற்றில் ஒருபகுதியே அச்சாகி வெளிவந்துள்ளன. சிறப்பானதாக அவை வாசகரால் கொண்டாடப்பட்டாலும் மேலும் சில மட்டும் அடுத்த ஓரிரு ஆண்டுகள் வெளிவந்து பிறகு இருட்டடிப்பு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இவர் பெயரும் வெளியான தொகுதியும் ஹைக்கூ பதிப்பகங்கள் மற்றும் ஹைக்கூ தொகைநூலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. பிரவுசரின் “மேற்கத்திய மொழி ஹைக்கூகள்” நூலிலும் இவர் பெயர் இடம் பெறவில்லை என்பது வருத்ததிற்குரிய விஷயம்.

இப்படி நடக்குமென எதிர்பார்த்துதான் தன்னைப் ‘பெயரற்றவன்’ என சொல்லிச் சென்றாரோ? இவரைப் பற்றி அறிந்த பின் மீண்டும் இதே கவித்துளிகளை வாசித்துப் பாருங்கள். அவற்றுள் மெளனமாக உறங்கும் பல அர்த்தங்கள் கண்களுக்குப் புலப்படும்.

 ***

22 கருத்துகள்:

  1. /// நான் பெயரற்றவன்
    மூழ்கும் இலையுதிர்க்கால சிகப்புச் சூரியன்
    எடுத்துச் சென்றுவிட்டது என் பெயரை... ///

    அருமை...

    ரிச்சர்ட் ரைட் அவர்களின் பற்றிய தகவலுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. //"புது வருடத்தை பயமுறுத்தி"//

    !! :))

    //கண்கள் திறந்திருக்க நீரில் மூழ்கும் காயமுற்ற குருவி..//

    அருமை. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. //நான் பெயரற்றவன் முழ்கும் இலையுதிர்க்கல சிவப்புச்சூரியன் எடுத்துச் சென்றுவிட்டது என் பெயரை//
    மெல்லிய இழையோடும் சோகம் தெரிகிறது கவிதையில்
    ரிச்சர்ட் ரைட் அவர்களின் கவிதை பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நகரின் எல்லா மணிகளும்
    ஓங்கி ஒலிக்கின்றன நள்ளிரவில்
    புது வருடத்தை பயமுறுத்தி!

    உறங்கும் அர்த்தங்கள்
    உற்சாகமாய்
    உயிர்பெறுகின்றன..!

    பதிலளிநீக்கு
  5. உலகம் மறந்த, மறைத்த ஒரு கவிஞரை இங்கே அவருடைய அற்புதமான கவித்துளிகளோடு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ராமலக்ஷ்மி. கவித்துளிகள் மனம் வருடிப்போகின்றன.

    பதிலளிநீக்கு
  6. ரிச்சர்ட் ரைட் பற்றிய தகவலில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது
    உடல், மன, பொருளாதார ரீதியான சோர்வுகள் எழுதுவதற்கு தடையல்ல என்பதுதான்.

    மிக்க நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான மொழிபெயர்ப்பு ராமலெக்ஷ்மி. உணர்ந்தேன் ஒவ்வொன்றிலும் உறைந்திருக்கும் வருத்தத்தையும்.

    பதிலளிநீக்கு
  8. @அமைதி அப்பா,

    சரியாகச் சொன்னீர்கள். நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  9. @மலரன்பன்,

    இந்த இணைப்பில் கிடைக்கிறது: http://terebess.hu/english/haiku/wright.html
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. என் நன்றிகளும்.... பதிவுக்கு...

    பதிலளிநீக்கு
  11. மிக மிக அருமை பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin