வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

ஆரம்பப்பள்ளித் தண்டனை - கமலா தாஸ் கவிதை (2)

Sad-Little-Girl-HD-Wide-Cute-trend-HD-300x187
வலிகளை நினைக்கத் தேவையில்லாமல்
இன்று இவ்வுலகம் முன்னை விட எனக்கானதாக உள்ளது.

‘மற்றவர்களோடு ஏன் சேராதிருக்கிறாய்,
என்ன வினோதமான குழந்தை நீ’
தேன் நிற நாளின் அமைதியை
தேள் கொட்டினாற் போன்ற தன் வார்த்தைகளால்
நீர்த்துப் போகச் செய்து விட்டாள்
நீலவண்ண உடையிலிருந்த பெண்.

புல்வெளியில் கொத்துக் கொத்தாக
அமர்ந்திருந்த என் சகபள்ளித் தோழர்கள்
திரும்பிக் கொண்டும் சிரித்துக் கொண்டும்
கரும்புச் சாற்றை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள்;
வேடிக்கையானவர்கள் குழந்தைகள்!
அடுத்தவர்கள் கண்ணீர் கண்டு உல்லாசமாய்ச் சிரிப்பவர்கள்.
சூரியக் கதிர்களால் வெதுவெதுப்பாகியிருந்த புதருக்குள்
என் முகத்தைப் புதைத்து நுகருகின்றேன்
பூவாசத்தோடு வலியையும்.

சிரித்துக் கொண்டிருந்த குழந்தைகளின் முகங்கள்
மசமசப்பாய்த் தெரிந்தன.
வார்த்தைகள் கொசகொசப்பாய் இணைந்தொலித்தன.
வருடங்கள் விரைந்தன, அன்பான நிறுத்தங்களில்
மிகக் குறைவான நேரமே நின்று
சோகமாய் நகர்ந்தன.
முதிர்ச்சியடைந்த என் மதி அமைதி கண்டது.
இப்போது நினைக்கத் தேவையில்லை
அந்தச் சுற்றுலா தினத்தையும்
புதருக்குள் ஒளிந்திருக்கையில் கவனித்த
வானத்து எஃகு-வெண் சூரியனின்
தனிமையையும்.
***

படங்கள் நன்றி: இணையம்

மூலம் ஆங்கிலத்தில்: 
Punishment in Kindergarten
by Kamala Das
kamala das

5 பிப்ரவரி 2013, அதீதம் இணைய இதழுக்காக தமிழாக்கம் செய்த கவிதை.

22 கருத்துகள்:

  1. நல்ல மொழியாக்கம்... மனச்சாட்சி நன்றாகவே ஏங்குகிறது... (கேள்வி கேட்கிறது...)

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு கவிதையின் அற்புதமான மொழி பெயர்ப்பு. நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  3. கவிதை அருமை, உங்கள் மொழி பெயர்ப்பும் அருமை ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு எழுத்துக்காரியின் எழுத்தை மொழி பெயர்த்துப் பகிர்ந்தமைக்கு நன்றி எழுத்துக்காரியே :-)

    பதிலளிநீக்கு
  5. என்ன ஒரு ஏக்கம் இந்தக் குழந்தைக்கு. அதை அப்படியே
    அழகுத் தமிழில் உருவம் கொடுத்திருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி,.

    மிக அருமை.

    பதிலளிநீக்கு
  6. ஏக்க வரிகளை அழகு தமிழில் மொழிபெயர்த்த தங்களுக்கும் ஆசிரியருக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான தமிழாக்கம். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. ஏக்க மனதின் தாக்கம் வரிகளில் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  9. கவிதையை நானும் மிக ரசித்தேன். அருமை!

    பதிலளிநீக்கு
  10. குழந்தையின் ஏக்கம் மனம் வலிக்கிறது,அருமையான மொழியாக்கம்!!

    பதிலளிநீக்கு
  11. கமலா தாஸ் அவர்களின் கவிதையின் தமிழாக்கத்தை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி!

    வலிகளும் வேதனைகளும் அப்படியே மொழி பெயர்ப்பில் பிரதிபலிக்கிறது.

    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin