ஞாயிறு, 21 அக்டோபர், 2012

தீராத ஆச்சரியம் - மலர்கள்

இயற்கையின் மீதான தீராத ஆச்சரியங்களில் ஒன்றாக மலர்களின் வடிவங்களும் வண்ணங்களும். தீயெனப் பற்றிக் கொள்ளும் உற்சாகம் சில வண்ணங்களால். மனம் வருடிச் செல்லும் சிலவற்றின் வண்ணங்கள். நின்று ரசிக்க வைக்கும் சிலவற்றின் வடிவங்கள். தொடருகிறது பூக்களின் தொகுப்பு:)!

#1 ஆதவனின் பிரகாசத்துடன் மஞ்சள் டெய்ஸி



#2 போகன்விலா


#3 லைலாக்


#4 நந்தியாவட்டை

COOL:)!

#5 அன்றலர்ந்த மலர்கள்

 இதன் பெயர் அறிந்தவர்கள் பகிர்ந்திடலாம்.

#6 Impatiens
இலேசாகத் தொட்டாலே வெடித்துச் சிதறிவிடும் இயல்பு கொண்டவை இதன் முற்றிய விதைகள். இந்தப் பொறுமையற்ற தன்மையே பெயருக்கும் காரணமாகி விட்டது. [Impatient, “impatiens” in Latin].

#7 தடாகத்தில் தாமரை

31 கருத்துகள்:

  1. மலர்களின் வண்ணங்கள் கண்களை இழுத்துநிற்கின்றன.

    தீராத ஆச்சரியம் தான் இவ்வளவு அழகா!

    பதிலளிநீக்கு
  2. "தீயெனப் பற்றிக் கொள்ளும் உற்சாகம்" - படங்களைப் போலவே பளிச்.

    பதிலளிநீக்கு
  3. அப்படியே
    அள்ளிக்கொண்டுபோய்
    அன்னை அவள் காலடியில்
    அர்ப்பணித்து
    அம்மா ! என் தாயே !

    உன்னழகே
    உன் நகையே

    பூக்களாகப்
    பரிணமிக்கிறதோ எனப்
    பாடலானேன்.


    சுப்பு ரத்தினம்.
    http://arthamullavalaipathivugal.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொரு படமும் அள்ளிக் கொண்டு போனது நெஞ்சை!

    பதிலளிநீக்கு
  5. கண்கவர் வண்ணங்கள். மனதை அள்ளும் மலர்கள்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்,

    புகைப்படங்கள் மிக அருமையாக உள்ளது....
    புகைப்படங்களில் தாங்கள் எப்படி தங்களின் பெயரை(Water Mark) எழுதுகிறீர்கள்.....எனக்கு குறிப்பு தர முடியுமா?

    நன்றி...

    பதிலளிநீக்கு
  7. மலர்கள் பூத்தன
    ரமாலக்ஷ்மியின் காமிராவைச் சென்றடையவே.
    முத்துச்சரத்தில் கோத்த பிறகு பூமிதேவியின் பொன்னாரம்
    மனதை அள்ளிக் கொண்டிவிட்டன. அப்பா எத்தனை வண்ணங்கள்.
    மிக மிக நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  8. எல்லா மலர்களுமே கண்களை கவர்ந்தன.

    பதிலளிநீக்கு
  9. @Gokulakrishnan,

    Picasa-வில் எளிதாகச் செய்யலாம். நன்றி கோகுலகிருஷ்ணன்.

    பதிலளிநீக்கு
  10. @வல்லிசிம்ஹன்,

    ரசித்ததில் மகிழ்ச்சி. நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  11. ஆஹா!!.. அள்ளுதுங்க. அதுவும் லைலாக் ஜூப்பரு :-)

    பதிலளிநீக்கு
  12. படங்கள் பளிச்.....
    நானும் சில சுட்டு வைத்துள்ளேன்
    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  13. காகிதப்பூ கூட உங்கள் காமிராவில் கதை பேசுது ராமலஷ்மி! மலர்போல மனம் வேண்டும்!

    பதிலளிநீக்கு
  14. அருமையான மல‌ர்களின் தொகுப்புகள்...வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  15. போகன்விலா பூ மரம் எங்கள் கிராமத்து பள்ளியில் நான் படிக்கும் பொழுது இருந்தது. அனால், இப்பொழுது எங்கள் பகுதியில் அழிக்கப்பட்டுவிட்டது. என்ன அங்கு இதை 'பேப்பர் ரோஸ்' அல்லது 'தாள் ரோஜா' என்று சொல்லுவோம்.

    படங்கள் அனைத்தும் நன்று.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin