Saturday, August 6, 2011

‘சோகம்’ இனி இல்லை.. வானமே எல்லை..- ஆகஸ்ட் PiT போட்டி

இந்த மாதத்திற்கான தலைப்பு - சோகம் :( என அறிவித்த நடுவர் நாதஸ் அழகாய்ச் சொல்லி விட்டார்:

“வாழ்க்கை பயணம் தொடர்ந்து சீராகச் செல்லாது. சில தடுமாற்றங்கள், கவலைகள் இடையிடையே தோன்றும். அத்தகைய உணர்வுகளை இந்த வாரம் படம் எடுக்கப்போகின்றோம். உங்களுடைய படம் இயலாமை, தோல்வி, விரக்தி, பரிதவிப்பு போன்ற உணர்வுகளை வெளிபடுத்தலாம்.”


போட்டியில் கலந்து கொள்ள காமிராவைக் கையிலெடுக்க இருப்பவருக்காக சில மாதிரிப் படங்கள் இங்கே:

#1 தள்ளாத வயதில்.. தனிமைத் துயரில்..?


#2 விரக்தி தவழும் புன்னகை?

சோகமென்றாலே வயதானவர்கள்தானா என்று கேட்கவோ, கேட்காமலே ஒரு முடிவு கட்டவோ செய்து விடாதீர்கள். வாழ்வின் விளிம்பில் ஒரு வித சோகத்தை, விரக்தியைப் பரப்புகிற மாதிரியாக அமைந்து போன படங்கள் இவை. உடல்மொழியால் உணர்வை உணர்த்துகின்றன.

ஆனால் உணர்வை வெளிப்படுத்தும் சக்தி கண்களுக்கே அதிகம் என்பதை நம்மாலே மறுக்க முடியுமா? கீழுள்ள படத்தில், உச்சிச் சூரியனின் கதிரும் நிழலும் சூழ்ந்த இடத்தில், உட்கார்ந்திருக்கும் இந்த விற்பனையாளரின் கண்களில் காலையிலிருந்து பொரி போணியாகாத கவலை எப்படித் தெரிகிறது பாருங்கள்:

#3 கவலை தேக்கிய கண்கள்

#4 இந்தக் கண்களை நேருக்கு நேர் நம்மால் சந்திக்க முடிகிறதா?
#5 காட்டு ராஜாவைக் கட்டிப் போட்டால் அதன் கண்களில் உற்சாகமா வழியும்:(?#6 பரிதவிப்பில் இன்னொரு ராஜா


இதுபோல பலவிலங்குகள், குறிப்பா நாய்கள், மாடுகள் தனிமையில் சோகமாகப் பார்த்தபடி இருக்கும். ஐந்தறிவு விலங்குகளுக்கும் உணர்வுகள் இருக்கிறதே.

இப்போது இலையுதிர்காலம். இந்தத் தலைப்பு அறிவிப்பான நாளில் காரில் சென்று கொண்டிருக்கும் போது பல இடங்களில் ஒற்றை இலை கூட இல்லாத மரங்களைப் பார்த்தேன். அது கூட ஒரு சோகம்தான். நெடுஞ்சாலை என்பதால் நிறுத்தி எடுக்க முடியவில்லை. ஆனால் என்னென்ன அழகான கோணங்களில் எடுக்கலாம் என மனது மட்டும் கணக்குப் போட்டது. அப்படியான படத்தைக் கொடுத்து விட்டு ‘நீங்க சொன்னீங்கன்னு எடுத்தனே. பத்துக்குள்ள வரலியே’ என்று கேட்கக் கூடாது:))! கட்டிடப் பின்னணியில்லாமல் வெண்மேகம் சூழ்ந்த வானோ, நிர்மலமான நீல ஆகாயமோ மட்டுமே பின்னணியா வருமாறு லோ ஆங்கிளில் எடுத்தா நல்லாருக்கும். லைட்டிங்கும் அந்த மூடை கொண்டு வருமாறு அமைய வேண்டும்.

இது ஒரு உதாரணத்துக்குதான். வானமே எல்லை என உங்க கற்பனையைத் தட்டி விடுங்கள். சோகத்தை எப்படிப் படமெடுக்க என சோர்வாகி விடாதீர்கள். நம்மில் எத்தனை பேருக்கு சோகப்பாடல்கள் கேட்கப் பிடிக்கும்? மனதுக்கு அவை இதம் தருவதாயும் உணருகிறோம். பாருங்கள், மொட்டை மரம் சோகமாகத் தெரிந்தாலும், இன்னும் சில நாட்களில் துளிர்த்துத் தளிர்விட்டுப் பூத்துக் குலுங்கிடும். அது போலதான். எந்த உணர்வும் நிரந்தரமில்லை. எல்லாம் மாறி மாறி வருவதுதானே வாழ்க்கை. நடுவர் சொன்ன அதே பாயின்டுக்கு வந்து விட்டேனா? முடித்துக் கொள்கிறேன்:)! இதுவரை வந்த படங்களோடு உங்கள் படங்களையும் சேர்க்க PiT ஆவலாகக் காத்திருக்கிறது!

*இந்தப் பதிவு பிட் குழுமத்தினர் கருவாயன் மற்றும் ஜீவ்ஸ் ஆகியோரின் கீழ்வரும் சிறப்பான மாதிரிப் படங்களை சேர்த்துக் கொண்டு..PiT தளத்திலும்: ஆகஸ்ட் போட்டி - மாதிரிப் படங்கள் http://photography-in-tamil.blogspot.com/2011/08/blog-post.html

34 comments:

 1. அருமையாக இருக்கிறது.
  ஒவ்வொரு படங்களும் பேசுகின்றன.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. எல்லாமே ஏதோ ஒரு சோகக்கதையைப் பேசும் படங்களாகவே உள்ளன.

  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. எந்தத் தலைப்பு கொடுத்தாலும் உங்கள் சேமிப்பிலிருந்து படங்கள் காட்ட முடியும் போலும்! முதல் இரண்டு கருப்பு வெள்ளைப் படங்களும், வியாபாரியின் சோகமும் அருமை என்றால் கட்டிப் போடப்ப்பட்டிருக்கும் காட்டு ராஜா படம் கண்களில் நீரை வரவழைக்கிறது.

  மாதிரிப் படங்களில் கோவணக்கிழவர் படம் மனதை அசைக்கிறது.

  //"லைட்டிங்கும் அந்த மூடை கொண்டு வருமாறு அமைய வேண்டும்."//

  அதுதானே புரிய மாட்டேனென்கிறது...!

  ReplyDelete
 4. மாதிரிப் படங்கள் அனைத்தும் நன்று.

  //உச்சிச் சூரியனின் கதிரும் நிழலும் சூழ்ந்த இடத்தில், உட்கார்ந்திருக்கும் இந்த விற்பனையாளரின் கண்களில் காலையிலிருந்து பொரி போணியாகாத கவலை எப்படித் தெரிகிறது பாருங்கள்//

  இனி, போகும் பாதையில் இப்படி அமர்ந்திருபவர்களிடம் பொரி வாங்க வேண்டும் என்கிற உணர்வைத் தூண்டுகிறது இந்தப் படம்.

  ReplyDelete
 5. பார்ப்பவற்றை எல்லாம் - இயல்பு மாறாமல் அழகாக படம் பிடித்து விடுகிறிர்கள். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. படங்கள் எல்லாமே சோகத்தை பேசுகின்றன. யானை கண்களில்
  கண்ணீர். நம் கண்களும் ஈரமான
  உணர்வு.

  ReplyDelete
 7. எந்த உணர்வும் நிரந்தரமில்லை. எல்லாம் மாறி மாறி வருவதுதானே வாழ்க்கை.//

  நீங்கள் சொல்வது உண்மை தான் ராமலக்ஷ்மி.

  மனம் ஒரு நிலையில் இருப்பது இல்லை,மாறி கொண்டே இருக்கும்,

  சோகபாடல்கள் எனக்கும் பிடிக்கும்.

  படங்கள் எல்லாம் கதை சொல்கின்றன.

  ReplyDelete
 8. படங்கள் அனைத்தும் அருமை.
  வாழ்த்துக்கள் அக்கா.

  ReplyDelete
 9. கருப்பு வெள்ளை படங்களுக்கு தனி அழகுண்டு.எப்படி தான் உங்களுக்கு இப்படி பார்த்து பார்த்து எடுக்க நேரம் கிடைக்கிறதோ?

  ReplyDelete
 10. படங்கள் வழக்கமான அழகுடன் அர்த்தத்துடன்...

  ReplyDelete
 11. படங்களெல்லாம் ரொம்ப ரொம்ப அழகாருக்கு..

  அதுவும் அந்த கறுப்பு வெள்ளை!!.. ச்சான்ஸே இல்லை.

  ReplyDelete
 12. யானை பாவம்.. அது தான் ரொம்ப சோகமான படமாத்தெரியுது..

  ReplyDelete
 13. என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. படங்கள் ஆயிரம் கதை பேசுகின்றன.அருமை ராமலக்‌ஷ்மி.

  ReplyDelete
 15. படங்கள் எல்லாம் கதை சொல்கின்றன.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. மிக அருமை ராமலக்‌ஷ்மி

  ReplyDelete
 17. Rathnavel said...
  //அருமையாக இருக்கிறது.
  ஒவ்வொரு படங்களும் பேசுகின்றன.
  வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 18. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //எல்லாமே ஏதோ ஒரு சோகக்கதையைப் பேசும் படங்களாகவே உள்ளன.

  பாராட்டுக்கள்.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 19. ஸ்ரீராம். said...
  //எந்தத் தலைப்பு கொடுத்தாலும் உங்கள் சேமிப்பிலிருந்து படங்கள் காட்ட முடியும் போலும்! முதல் இரண்டு கருப்பு வெள்ளைப் படங்களும், வியாபாரியின் சோகமும் அருமை என்றால் கட்டிப் போடப்ப்பட்டிருக்கும் காட்டு ராஜா படம் கண்களில் நீரை வரவழைக்கிறது. //

  மிக்க நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 20. Thekkikattan|தெகா said...
  //ம்ம்ம்ம் ....//

  வருகைக்கு நன்றி தெகா.

  ReplyDelete
 21. அமைதி அப்பா said...
  //மாதிரிப் படங்கள் அனைத்தும் நன்று.

  //உச்சிச் சூரியனின் கதிரும் நிழலும் சூழ்ந்த இடத்தில், உட்கார்ந்திருக்கும் இந்த விற்பனையாளரின் கண்களில் காலையிலிருந்து பொரி போணியாகாத கவலை எப்படித் தெரிகிறது பாருங்கள்//

  இனி, போகும் பாதையில் இப்படி அமர்ந்திருபவர்களிடம் பொரி வாங்க வேண்டும் என்கிற உணர்வைத் தூண்டுகிறது இந்தப் படம்.//

  வாங்கினேன் அந்த எண்ணத்தில். நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 22. தமிழ் உதயம் said...
  //பார்ப்பவற்றை எல்லாம் - இயல்பு மாறாமல் அழகாக படம் பிடித்து விடுகிறிர்கள். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 23. Lakshmi said...
  //படங்கள் எல்லாமே சோகத்தை பேசுகின்றன. யானை கண்களில்
  கண்ணீர். நம் கண்களும் ஈரமான
  உணர்வு.//

  வருகைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 24. கோமதி அரசு said...
  //**எந்த உணர்வும் நிரந்தரமில்லை. எல்லாம் மாறி மாறி வருவதுதானே வாழ்க்கை.//

  நீங்கள் சொல்வது உண்மை தான் ராமலக்ஷ்மி.

  மனம் ஒரு நிலையில் இருப்பது இல்லை,மாறி கொண்டே இருக்கும்,

  சோகபாடல்கள் எனக்கும் பிடிக்கும்.

  படங்கள் எல்லாம் கதை சொல்கின்றன.**//

  மிக்க நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 25. 'பரிவை' சே.குமார் said...
  //படங்கள் அனைத்தும் அருமை.
  வாழ்த்துக்கள் அக்கா.//

  நன்றி குமார்.

  ReplyDelete
 26. மோகன் குமார் said...
  //கருப்பு வெள்ளை படங்களுக்கு தனி அழகுண்டு.எப்படி தான் உங்களுக்கு இப்படி பார்த்து பார்த்து எடுக்க நேரம் கிடைக்கிறதோ?//

  நன்றி மோகன் குமார்:)!

  ReplyDelete
 27. பாச மலர் / Paasa Malar said...
  //படங்கள் வழக்கமான அழகுடன் அர்த்தத்துடன்...//

  மிக்க நன்றி மலர்.

  ReplyDelete
 28. அமைதிச்சாரல் said...
  //படங்களெல்லாம் ரொம்ப ரொம்ப அழகாருக்கு..

  அதுவும் அந்த கறுப்பு வெள்ளை!!.. ச்சான்ஸே இல்லை.//

  மிக்க நன்றி சாந்தி.

  ReplyDelete
 29. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //யானை பாவம்.. அது தான் ரொம்ப சோகமான படமாத்தெரியுது..//

  ஆம் அதன் பலம் அதற்கே தெரியவில்லை. பயன்படுத்திக் கொள்கிறோம் அதையே சாதகமாக:(!

  நன்றி முத்துலெட்சுமி.

  ReplyDelete
 30. Reverie said...
  //என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//

  வாழ்த்துக்களும் நன்றியும்.

  ReplyDelete
 31. ஸாதிகா said...
  //படங்கள் ஆயிரம் கதை பேசுகின்றன.அருமை ராமலக்‌ஷ்மி.//

  மிக்க நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 32. T.V.ராதாகிருஷ்ணன் said...
  //படங்கள் எல்லாம் கதை சொல்கின்றன.
  வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி டி வி ஆர் சார்.

  ReplyDelete
 33. Jaleela Kamal said...
  //மிக அருமை ராமலக்‌ஷ்மி//

  வாங்க ஜலீலா. மிக்க நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin