செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

விட்டு விடுதலை - திண்ணையில்..



சுமக்கிற பிரியங்களை
இறக்கி வைப்பது
இறுதி நொடியில் கூட
இயலுமா தெரியவில்லை.
பிரிகிற ஆன்மா
பேரொளியில் சேரத்
தடையாகுமதுவே
புரியாமலுமில்லை.

காலத்திற்கேற்ப
ஆசைகள் மாறுவதும்
தலைமுறைகள் தாண்டிப்
பாசங்கள் தொடர்வதும்
புகழ்பொருள் மீதான நாட்டங்கள்
போதையாகுவதுமே
சாஸ்வதமாக

மீளும் விருப்பற்று
இறுக்கும் சங்கிலிகளுக்குள்
இருப்பினைப் பத்திரமாக்கி

விட்டு விடுதலை ஆகாமலே
விடுதலை ஆகிறோம் ஓர் நாள்.
***

17 ஜூலை 2010 திண்ணை இணைய இதழில்.., நன்றி திண்ணை!

65 கருத்துகள்:

  1. விட்டு விடுதலை ஆகாமலே
    விடுதலை ஆகிறோம் ஓர் நாள். //

    கனமான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. வாழ்க்கை சிறையில் விடுதலை ஆக நினைத்தாலும் இயலாது.

    பதிலளிநீக்கு
  3. விட்டு விடுதலையாகி நிற்பாய் சிட்டுக்குருவி போல..

    பதிலளிநீக்கு
  4. வாவ்! அசத்திட்டீங்க.... அபாரம்!

    பதிலளிநீக்கு
  5. அருமை.

    //"விட்டு விடுதலை ஆகாமலே விடுதலை ஆகிறோம் ஒரு நாள்..."//

    சிட்டுக்குருவிக்கு மட்டும்தான் கொடுப்பினை போலும்!

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொரு வரிகளும் ஆணி அடித்ததுபோல இருக்கு. நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  7. மீளும் விருப்பற்று
    இறுக்கும் சங்கிலிகளுக்குள்
    இருப்பினைப் பத்திரமாக்கி

    விட்டு விடுதலை ஆகாமலே
    விடுதலை ஆகிறோம் ஓர் நாள்

    மனம் கவர்ந்த அருமையான வரிகள்
    தரமான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. \\மீளும் விருப்பற்று
    இறுக்கும் சங்கிலிகளுக்குள்
    இருப்பினைப் பத்திரமாக்கி//

    நல்லா இருக்கு ராமலக்‌ஷ்மி

    பதிலளிநீக்கு
  9. போனவாரம்தான் இதைப்பற்றி நினைப்பு வந்துச்சுங்க.

    'அந்த பயணத்தில்' எதையும் எடுத்துக்காம ஹாய்யாக் கையை வீசிக்கிட்டுப் போய்க்கிட்டே இருக்கலாமே'ன்னு!

    அந்த விடுதலை ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் வரத்தானே போகுது!

    பதிலளிநீக்கு
  10. வாழ்க்கைக் கோட்பாடு..ஒரு சில வரிகளில்ல்..இந்தப் பிணைப்புகள்தான் நம் பலமே...வாழ்த்துகள் ராமலக்ஷ்மி...மிக அழகான கவிதை..

    பதிலளிநீக்கு
  11. //விட்டு விடுதலை ஆகாமலே
    விடுதலை ஆகிறோம் ஓர் நாள்.//
    அருமையான வரிகள் அக்கா.

    பதிலளிநீக்கு
  12. மீளாச் சிறையிலிருந்து அனைவரும் மீளத்தான் வேண்டும்... பலவந்தமாக கடவுளால் அளிக்கப்படும் ஒரு விடுதலை இது.

    பதிலளிநீக்கு
  13. வாழ்வியலை வரிகளில் அருமையாக
    வடித்து உள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  14. இருப்புடன் இருப்பற்று இருப்பது ஹ்ம்ம்:(( கஷ்டம்தான்

    பதிலளிநீக்கு
  15. //மீளும் விருப்பற்று
    இறுக்கும் சங்கிலிகளுக்குள்
    இருப்பினைப் பத்திரமாக்கி

    விட்டு விடுதலை ஆகாமலே
    விடுதலை ஆகிறோம் ஓர் நாள்.//

    எவ்ளோ உண்மை அக்கா.. :))

    பதிலளிநீக்கு
  16. வாழ்வின் தத்துவம் சொன்னமாதிரி இருக்கு அக்கா அகவிதை !

    பதிலளிநீக்கு
  17. அந்த சங்கிலி நாமே பிரியப்பட்டு பிணைத்துக்கொண்டது என்பதுதான் வேடிக்கை

    பதிலளிநீக்கு
  18. :)

    படம் அழகா, பொருத்தமா இருக்கு. கவிதை நிதர்சனம்.

    பதிலளிநீக்கு
  19. முத்தாய்ப்பாய் விடுதலை...மரிக்கும் கதகதப்பு....நல்ல படைப்பு...ராமலக்‌ஷ்மி

    பதிலளிநீக்கு
  20. //சுமக்கிற பிரியங்களை
    இறக்கி வைப்பது
    இறுதி நொடியில் கூட
    இயலுமா தெரியவில்லை. //

    மிக ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  21. //மீளும் விருப்பற்று
    இறுக்கும் சங்கிலிகளுக்குள்
    இருப்பினைப் பத்திரமாக்கி

    விட்டு விடுதலை ஆகாமலே
    விடுதலை ஆகிறோம் ஓர் நாள்.
    //

    அருமையான வ‌ரிக‌ள். மிக‌வும் ர‌சித்தேன்.

    பதிலளிநீக்கு
  22. yeduttha karupporulum, athai solli vantha nayamum arumai. vaarthai korvaiyil leasana virisal therikiradhu,iruthi varikal marathil araintha aaniyai manathil vizhukiradhu.

    பதிலளிநீக்கு
  23. //தலைமுறைகள் தாண்டிப்
    பாசங்கள் தொடர்வதும் //

    இந்த பந்தம் நாமே ஏற்படுத்தி கொண்டது, இதிலிருந்து மீள விருப்பம் இல்லாமல் தான் அதிலே ஆழ்ந்து போகிறோம்.

    உண்மையை அழுத்தமாய் சொல்லும் கவிதை.

    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  24. துள்சி,'அந்த பயணத்தில்' எதையும் எடுத்துக்காம ஹாய்யா கையை வீசிட்டு....அதெப்படி? கையை வீசமுடியும்? கட்டில்லாருக்கும்? அருமையான தத்துவக் கவிதை!

    பதிலளிநீக்கு
  25. நான் ஆனி,

    இங்கே நியூஸியில் கைகட்ட மாட்டாங்க. கையில் ஒரு பூங்கொத்து வச்சுருவாங்க. அதைப்பிடிச்சுக்கிட்டே படுத்துக்கலாம்!

    பதிலளிநீக்கு
  26. oops....... தட்டச்சு இப்படி சதிச்சதே:(

    நானானி நானானி நானானி

    பதிலளிநீக்கு
  27. இராஜராஜேஸ்வரி said...
    *** /விட்டு விடுதலை ஆகாமலே
    விடுதலை ஆகிறோம் ஓர் நாள். //

    கனமான பகிர்வு./***

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  28. தமிழ் உதயம் said...
    //வாழ்க்கை சிறையில் விடுதலை ஆக நினைத்தாலும் இயலாது.//

    உண்மை.

    மிக்க நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  29. சின்னப்பயல் said...
    //விட்டு விடுதலையாகி நிற்பாய் சிட்டுக்குருவி போல..//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. Chitra said...
    //வாவ்! அசத்திட்டீங்க.... அபாரம்!/

    நன்றி சித்ரா.

    பதிலளிநீக்கு
  31. ஸ்ரீராம். said...
    //அருமை.

    //"விட்டு விடுதலை ஆகாமலே விடுதலை ஆகிறோம் ஒரு நாள்..."//

    சிட்டுக்குருவிக்கு மட்டும்தான் கொடுப்பினை போலும்!//

    அப்படிதான் போலும்.

    மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  32. Lakshmi said...
    //ஒவ்வொரு வரிகளும் ஆணி அடித்ததுபோல இருக்கு. நல்ல கவிதை.//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  33. Ramani said...
    //மனம் கவர்ந்த அருமையான வரிகள்
    தரமான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  34. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    ***/ \\மீளும் விருப்பற்று
    இறுக்கும் சங்கிலிகளுக்குள்
    இருப்பினைப் பத்திரமாக்கி//

    நல்லா இருக்கு ராமலக்‌ஷ்மி/***

    நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  35. துளசி கோபால் said...
    //போனவாரம்தான் இதைப்பற்றி நினைப்பு வந்துச்சுங்க.

    'அந்த பயணத்தில்' எதையும் எடுத்துக்காம ஹாய்யாக் கையை வீசிக்கிட்டுப் போய்க்கிட்டே இருக்கலாமே'ன்னு!

    அந்த விடுதலை ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் வரத்தானே போகுது!//

    விதிவிலக்கில்லாமல் எல்லோருக்கும்:)! நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  36. பாச மலர் / Paasa Malar said...
    //வாழ்க்கைக் கோட்பாடு..ஒரு சில வரிகளில்ல்..இந்தப் பிணைப்புகள்தான் நம் பலமே...வாழ்த்துகள் ராமலக்ஷ்மி...மிக அழகான கவிதை..//

    நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  37. 'பரிவை' சே.குமார் said...
    ***
    //விட்டு விடுதலை ஆகாமலே
    விடுதலை ஆகிறோம் ஓர் நாள்.//
    அருமையான வரிகள் அக்கா./***

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  38. குமரி எஸ். நீலகண்டன் said...
    //மீளாச் சிறையிலிருந்து அனைவரும் மீளத்தான் வேண்டும்... பலவந்தமாக கடவுளால் அளிக்கப்படும் ஒரு விடுதலை இது.//

    பலவந்தமாக என்பது மிகச் சரி. நன்றிகள் நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  39. திகழ் said...
    //வாழ்வியலை வரிகளில் அருமையாக
    வடித்து உள்ளீர்கள்//

    நீண்ட இடைவெளிக்குப் பிறகான வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் திகழ்.

    பதிலளிநீக்கு
  40. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //இருப்புடன் இருப்பற்று இருப்பது ஹ்ம்ம்:(( கஷ்டம்தான்//

    நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  41. சுசி said...
    ****/

    //மீளும் விருப்பற்று
    இறுக்கும் சங்கிலிகளுக்குள்
    இருப்பினைப் பத்திரமாக்கி

    விட்டு விடுதலை ஆகாமலே
    விடுதலை ஆகிறோம் ஓர் நாள்.//

    எவ்ளோ உண்மை அக்கா.. :))/****

    ம்:)! நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  42. Rathnavel said...
    //நல்ல கவிதை.//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  43. S.Menaga said...
    //அசத்தல் கவிதை!!//

    நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  44. ஹேமா said...
    //வாழ்வின் தத்துவம் சொன்னமாதிரி இருக்கு அக்கா அகவிதை !//

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  45. goma said...
    //அந்த சங்கிலி நாமே பிரியப்பட்டு பிணைத்துக்கொண்டது என்பதுதான் வேடிக்கை//

    ஆம், மிக்க நன்றி கோமாம்மா.

    பதிலளிநீக்கு
  46. கவிநயா said...
    //:)

    படம் அழகா, பொருத்தமா இருக்கு. கவிதை நிதர்சனம்.//

    நன்றி கவிநயா.

    பதிலளிநீக்கு
  47. ஈரோடு கதிர் said...
    //சிலர் அவசரமாய்
    சிலர் ஆறஅமர....//

    சரியாய் சொன்னீர்கள். நன்றி கதிர்.

    பதிலளிநீக்கு
  48. Reverie said...
    //முத்தாய்ப்பாய் விடுதலை...மரிக்கும் கதகதப்பு....நல்ல படைப்பு...ராமலக்‌ஷ்மி//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  49. மோகன் குமார் said...
    ***//சுமக்கிற பிரியங்களை
    இறக்கி வைப்பது
    இறுதி நொடியில் கூட
    இயலுமா தெரியவில்லை. //

    மிக ரசித்தேன்/***

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  50. தீஷு said...
    ****//மீளும் விருப்பற்று
    இறுக்கும் சங்கிலிகளுக்குள்
    இருப்பினைப் பத்திரமாக்கி

    விட்டு விடுதலை ஆகாமலே
    விடுதலை ஆகிறோம் ஓர் நாள்.
    //

    அருமையான வ‌ரிக‌ள். மிக‌வும் ர‌சித்தேன்./****

    நன்றி தீஷு அம்மா.

    பதிலளிநீக்கு
  51. ஸாதிகா said...
    //யதார்த்தம்.//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  52. kothai said...
    //yeduttha karupporulum, athai solli vantha nayamum arumai. vaarthai korvaiyil leasana virisal therikiradhu,iruthi varikal marathil araintha aaniyai manathil vizhukiradhu.//

    மிக்க நன்றி கோதை.

    பதிலளிநீக்கு
  53. அப்பாவி தங்கமணி said...
    //அழகா எழுதி இருக்கீங்க உண்மையை ...//

    வாங்க புவனா, நன்றி.

    பதிலளிநீக்கு
  54. T.V.ராதாகிருஷ்ணன் said...
    //அசத்தல்//

    மிக்க நன்றி டிவிஆர் சார்.

    பதிலளிநீக்கு
  55. கோமதி அரசு said...
    ***/ //தலைமுறைகள் தாண்டிப்
    பாசங்கள் தொடர்வதும் //

    இந்த பந்தம் நாமே ஏற்படுத்தி கொண்டது, இதிலிருந்து மீள விருப்பம் இல்லாமல் தான் அதிலே ஆழ்ந்து போகிறோம்.

    உண்மையை அழுத்தமாய் சொல்லும் கவிதை.

    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//***

    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  56. நானானி said...
    //அருமையான தத்துவக் கவிதை!//

    நன்றி நானானிம்மா.

    பதிலளிநீக்கு
  57. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin