செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

அன்புக்காக.. படங்கள் - பிப்ரவரி PiT போட்டி

அன்பு.

போட்டித் தலைப்பு.

ஒரு படம் போட்டிக்கு.. நான் எடுத்தது.

ஒரு படம் தலைப்புக்கு.. நான் இருப்பது.


தளிர் நடை
தத்தித் தத்தி நடந்து வரும் தங்க பாப்பா
அவள்
தானாக நடக்கும் வரை தாங்கிப் பிடிக்க
தாய்மாமனோ தகப்பனோ..
தந்திருக்கும் அன்புக் கரங்கள்!
அந்த ஆதரவில்
ஒளிர்கின்றன மின்மினியாய்க்
கண்மணியின் சின்னக் கண்கள்!


அம்மாவின் ஆசைக்காக..

அன்பைச் சொல்லும், பாசம் பேசும் இப்படம்.. உங்கள் பார்வைக்கு..

என் திண்ணை நினைவுகளில் பதிவுக்குப் பொருத்தமாக சிறுவயது படங்கள் பலவற்றை உபயோகித்திருந்தேன். அதைப் பார்த்த நாளிலிருந்து அம்மாவின் ஆசை இந்தப் படத்தை என்றேனும் நான் வலைப்பூவில் பகிர்ந்திட வேண்டுமென்று. கள்ளமில்லாப் பிள்ளைச் சிரிப்பென்பது இதுதான் எனச் சொல்லிச் சொல்லி ரசிப்பார்கள்.


புகைப்படச் சட்டத்துள்
காலம் நகருகையில்
படங்களும் புதிது புதிதாக
மாறியபடி இருப்பது
பொதுவாக வழக்கம்தான்.

ஆனால் படம் எடுத்த அப்பா
விரும்பி சட்டத்துள் வைத்தது என
அவர் மறைந்த பின்னும்
மாற்றாமல் இருந்தார்கள் அம்மா.

படத்தில் இருக்கும்
மறைந்த அண்ணனின் நினைவாக
மாற்றாமல் வைத்திருக்கிறேன்..

இன்றுவரை நானும்.
***
எனது பிட் பதிவுகள் எதிலும் நான் எடுக்காத படம் எதையும் இதுவரை பதிந்ததில்லை. இந்த முறை ‘அன்புக்காக’ ‘அம்மாவுக்காக’ப் பகிர்ந்தது என்பதால் தவறில்லை என எண்ணுகின்றேன்.

இருத்தலின் அடையாளமாக 'தளிர் நடை' போட்டு என் படம் போயிருக்க,அன்பு வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கும் ஏனைய போட்டிப் படங்கள் இங்கே. பார்வையிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து உற்சாகம் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

அப்டேட்ஸ்:



நன்றி PiT!!


86 கருத்துகள்:

  1. படத்தை சட்டத்திலிருந்து மாத்தாம இருக்கிறதுக்கு, நீங்க சொன்ன காரணம் நெகிழவெச்சுடுச்சு ராமலஷ்மி..

    பதிலளிநீக்கு
  2. உங்கள் சிறுவயது புகைப்படம் அழகு என்பதைவிட சந்தோஷம் குடிகொண்டிருக்கிறது திண்ணை நினைவுகளில் இருந்த புகைப்படங்களும் பொக்கிஷங்கள்தான்..

    நான் வாண்டா இருக்குறப்போ யாரும் என்னை ஃபோட்டோ எடுக்கலையே :(

    பதிலளிநீக்கு
  3. Ammavin aasai gets the vote - beauty of the black and white picture; pure innocence in both the faces; strong love in both the hugs.... love it !

    I will be terribly disappointed if this picture did not win :(

    பதிலளிநீக்கு
  4. அமைதிச்சாரல் said...
    //படத்தை சட்டத்திலிருந்து மாத்தாம இருக்கிறதுக்கு, நீங்க சொன்ன காரணம் நெகிழவெச்சுடுச்சு ராமலஷ்மி..//

    வருகைக்கு நன்று சாரல். அந்தப் படம் நீங்கா இனிய நினைவாக.. என்றென்றும் பொக்கிஷமாக..

    பதிலளிநீக்கு
  5. Knowing the reason for preserving this photo in its frame, I was not able to look at /enjoy this photo for more than a few seconds without tears in my eyes... :(

    Thanks for sharing this precious moment with the rest of the blog world.

    பதிலளிநீக்கு
  6. உங்க "அன்பு"க்கு நன்றிங்க, ராமலக்ஷ்மி! :)

    பதிலளிநீக்கு
  7. ப்ரியமுடன் வசந்த் said...
    //உங்கள் சிறுவயது புகைப்படம் அழகு என்பதைவிட சந்தோஷம் குடிகொண்டிருக்கிறது திண்ணை நினைவுகளில் இருந்த புகைப்படங்களும் பொக்கிஷங்கள்தான்..

    நான் வாண்டா இருக்குறப்போ யாரும் என்னை ஃபோட்டோ எடுக்கலையே :(//

    நன்றி வசந்த். உண்மைதான் சந்தோஷமான காலங்கள் அவை.

    பதிலளிநீக்கு
  8. Someone like you said...
    //Ammavin aasai gets the vote - beauty of the black and white picture; pure innocence in both the faces; strong love in both the hugs.... love it !//

    மிக்க நன்றி.

    //I will be terribly disappointed if this picture did not win :(//

    இந்தப் படம் போட்டிக்கு அல்ல. பார்வைக்கும் பகிர்வுக்குமே. போட்டி விதிகளின்படி நாம் எடுக்காதவற்றைக் கொடுக்கக் கூடாது.

    உங்கள் நெகிழ்வான வார்த்தைகளுக்கும் என் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வருண் said...
    //உங்க "அன்பு"க்கு நன்றிங்க, ராமலக்ஷ்மி! :)//

    நன்றி வருண்:)!

    பதிலளிநீக்கு
  10. தங்கப் பாப்பா ரொம்ப அழகு.

    எங்கள் பார்வைக்கும் கள்ளமில்லாச் சிரிப்புக்காரியைத் தந்ததுக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  11. அண்ணனின் அரவணைப்பில் ஒரு சின்னப்பறவை

    பதிலளிநீக்கு
  12. தளிர்நட வெற்றி நடையாகத் தெரிகிறது .வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. ’தளிர்நட’ என்பதை ’தளிர்நடை’ என்று திருத்திக்கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  14. இதேபோல் நான்கு பாசப்பறவைகள் படம் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி கிட்டாமல் ,பல போட்டிகளில் பங்கேற்காமல் காத்திருக்கிறது என் ஆல்பத்தில்

    பதிலளிநீக்கு
  15. thalir nadai super.
    but annanin anpu anaippu manathai nekizavaiththuvittathu....athira vaiththuvittathu.

    பதிலளிநீக்கு
  16. என்றோ என் முகத்தில் மலர்ந்த அந்த புன்னகை
    என்றுமே நிலைத்திடுவே
    என்றுமே அருள் புரியும் ஈசா !
    எனக்கொரு வரம் தந்திடுவாய்.

    சுப்பு ரத்தினம்.

    http://kandhanaithuthi.blogspot.com

    பதிலளிநீக்கு
  17. அன்பு வழிந்தோடும் படங்கள்!!

    தளிர்நடை புதுக் கேமரா படமோ?

    பதிலளிநீக்கு
  18. அக்கா, சிறுவயதில் இருந்தே உங்கள் சிரிப்பு தனித்தன்மையுடன் இருப்பது தெரிகிறது. வாழ்த்துக்கள், அக்கா!

    பதிலளிநீக்கு
  19. படங்கள் வெகு அழகு. குறிப்பா குட்டி அண்ணனுடன் இருக்கும் குட்டித் தங்கை :)

    பதிலளிநீக்கு
  20. உங்கள் சிறு வயது படம் அருமை. நன்கு expressions உடன் போட்டோ எடுத்துள்ளனர்.

    பதிலளிநீக்கு
  21. T.V.ராதாகிருஷ்ணன் said...
    //superb//

    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  22. சுசி said...
    //தங்கப் பாப்பா ரொம்ப அழகு.

    எங்கள் பார்வைக்கும் கள்ளமில்லாச் சிரிப்புக்காரியைத் தந்ததுக்கு நன்றி அக்கா.//

    நன்றி சுசி!

    பதிலளிநீக்கு
  23. goma said...Februar
    //அண்ணனின் அரவணைப்பில் ஒரு சின்னப்பறவை

    தளிர்நடை வெற்றி நடையாகத் தெரிகிறது .வாழ்த்துக்கள்//

    நன்றி கோமா. இருத்தலின் அடையாளமாகதான் மெல்ல மெல்லப் போயிருக்கிறது தளிர் நடை, போட்டி முடிவு நேரத்தின் கடைசி மணித்துளியில் ! ஒருவேளை முதல் சுற்றுக்கு வந்தால் உங்கள் வாழ்த்தினால் ஆகட்டும்:)!

    பதிலளிநீக்கு
  24. அருமையான படங்கள்..
    இரண்டிலும் அன்பு நிறைந்து நிற்கிறது.:)

    பதிலளிநீக்கு
  25. goma said...
    //இதேபோல் நான்கு பாசப்பறவைகள் படம் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி கிட்டாமல் ,பல போட்டிகளில் பங்கேற்காமல் காத்திருக்கிறது என் ஆல்பத்தில்//

    சம்பந்தப்பட்ட அனைவரின் அனுமதியையும் வாங்கித் தந்ததோடு, படத்தை ஸ்கேன் செய்து அனுப்பியவரிடமே முறையிடலாமா இப்படி:)? 'படம் டிஜிட்டல் அல்லவே' என்றும் ஒரு தயக்கம் தெரிவித்தீர்கள். கருப்பு வெள்ளைப் படங்கள் என்றுமே காலத்தால் மங்காத பொக்கிஷங்கள் புகைப்படத் துறைக்கும். அடுத்த பொருத்தமான தலைப்புக்காகக் காத்திருக்காமல் இப்போதும் கூட அனுப்பிப் பார்க்கலாமே நீங்கள். ‘Not for the contest' எனும் குறிப்புடன் முடிவு நேரத்தை சற்றே தாண்டி வந்த படங்களை கடந்தமுறை போட்டிப் படங்களுடன் வெளியிட்டிருந்தார்கள் PiT-ல்.

    பதிலளிநீக்கு
  26. நானானி said...
    //thalir nadai super.//

    மிக்க நன்றி நானானி.

    //but annanin anpu anaippu manathai nekizavaiththuvittathu....athira vaiththuvittathu.//

    மனதோடு நின்றும் விட்ட படம்.

    பதிலளிநீக்கு
  27. sury said...
    //என்றோ என் முகத்தில் மலர்ந்த அந்த புன்னகை
    என்றுமே நிலைத்திடுவே
    என்றுமே அருள் புரியும் ஈசா !
    எனக்கொரு வரம் தந்திடுவாய்.

    சுப்பு ரத்தினம்.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சூரி சார்.

    பதிலளிநீக்கு
  28. ஈரோடு கதிர் said...
    //அன்பு வழிந்தோடும் படங்கள்!!

    தளிர்நடை புதுக் கேமரா படமோ?//

    நன்றி கதிர். ஆம், கடந்தமாத மலர் கண்காட்சிப் படங்களும் கூட அதில் எடுத்தவையே:)!

    பதிலளிநீக்கு
  29. Chitra said...
    //அக்கா, சிறுவயதில் இருந்தே உங்கள் சிரிப்பு தனித்தன்மையுடன் இருப்பது தெரிகிறது. வாழ்த்துக்கள், அக்கா!//

    நன்றி சித்ரா:)!

    பதிலளிநீக்கு
  30. கவிநயா said...
    //படங்கள் வெகு அழகு. குறிப்பா குட்டி அண்ணனுடன் இருக்கும் குட்டித் தங்கை :)//

    மிக்க நன்றி கவிநயா:)!

    பதிலளிநீக்கு
  31. February 16, 2011 8:37 AM
    மோகன் குமார் said...
    //உங்கள் சிறு வயது படம் அருமை. நன்கு expressions உடன் போட்டோ எடுத்துள்ளனர்.//

    தமிழ்மணத்தின் இந்த வார நட்சத்திரப் பதிவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  32. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //அருமையான படங்கள்..
    இரண்டிலும் அன்பு நிறைந்து நிற்கிறது.:)//

    மிக்க நன்றி முத்துலெட்சுமி:)!

    பதிலளிநீக்கு
  33. Very Nice Pics..! Nothing will go with Mother's love.. Its unique in all respects...!

    பதிலளிநீக்கு
  34. உங்கள் அழகான அந்த புகைப்படத்தில் என் சிறு வயதில் எனது தாத்தா வீட்டு திண்ணையையும் விளக்கு மாடத்தையும் விரிந்த முற்றத்தையும் காண்கிறேன் என்னிடம் எந்த புகைப்படமும் இல்லாத தால். நன்றிகள் ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  35. பாசப் பறவைகள் படம் அழகு.

    இரண்டு படங்களும் அழகு.

    பாசப் பறவைகளுக்கே என் ஓட்டு.

    பதிலளிநீக்கு
  36. அன்றெல்லாம் குழந்தைகளை ஒரு புகைப்படம் எடுப்பதே அரிது. இன்று மொபைல் புண்ணியத்தில் புகைப்படஙகளாக எடுத்து குவிக்கிறோம். எனக்கும் என் குழந்தை ப்ராயம் ஞாபகத்திற்கு வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  37. உங்கள் சிறுவயது புகைப்படம் பதிவ படிக்கும் முன் பார்த்ததும் கண்டு பிடிச்சுட்டேன்.ரொம்ப நல்ல இருக்கு

    பதிலளிநீக்கு
  38. நல்ல படங்கள். போட்டோகிராபி உங்கள் குடும்ப சொத்து என்பதை சொல்லும் புகைப்படம்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  39. இரண்டு படங்களும் அழகு.

    உங்கள் படம் கூடுதல் அழகு.

    பதிலளிநீக்கு
  40. பெர்ஃபெக்ட் பிக்சராக வந்திருக்கீறது, இரண்டாவது படம். பாசமலர்கள்!!

    பதிலளிநீக்கு
  41. //உங்கள் சிறுவயது புகைப்படம் பதிவ படிக்கும் முன் பார்த்ததும் கண்டு பிடிச்சுட்டேன்//

    Yes Me too identified you with your childhood face even before reading the next para.

    பதிலளிநீக்கு
  42. குழந்தைகள் என்றாலே அழகுதான்.அதுவும் பாசத்தோடு அண்ணாவின் கைகளுக்குள் அடங்கும் கள்ளமில்லாப் புன்னகையோடு....
    எத்தனை அழகு.
    மனமும் நெகிழ்கிறது அக்கா !

    பதிலளிநீக்கு
  43. புகைப்படச் சட்டத்துள்
    காலம் நகருகையில்
    படங்களும் புதிது புதிதாக
    மாறியபடி இருப்பது
    பொதுவாக வழக்கம்தான்.

    ஆனால் படம் எடுத்த அப்பா
    விரும்பி சட்டத்துள் வைத்தது என
    அவர் மறைந்த பின்னும்
    மாற்றாமல் இருந்தார்கள் அம்மா.

    படத்தில் இருக்கும்
    மறைந்த அண்ணனின் நினைவாக
    மாற்றாமல் வைத்திருக்கிறேன்..

    இன்றுவரை நானும்.

    ***
    இதை இப்படி சொல்லிப் பார்த்தேன் சகா. கவிதையாகத்தானே இருக்கிறது? கவிதை, எப்படி எழுதினாலும் கவிதைதானே!

    ***
    அப்புறம், உங்கள் நெற்றியில் இருக்கும் ஜோதி மாதிரியான அந்த பொட்டு இப்பல்லாம் குழந்தைகள் நெற்றியில் கூட காண கிடைக்கலை மக்கா. பொட்டுகளை கூடவா அடித்து செல்லும், காலங்கள்? :-(

    ***
    பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  44. உள்ளம் துடிப்பது இந்த மாதிரி படங்களைக் காணத்தான்

    பதிலளிநீக்கு
  45. குட்டி அண்ணனுடன் இருக்கும் குட்டித் தங்கை அழகு.

    பதிலளிநீக்கு
  46. விலை மதிக்க முடியாத ஒரு பொக்கிஷம் ராமலக்ஷ்மி -
    உங்கள் இருவரின் சிரிப்பும் - அன்பும் !
    You have been so lucky to have that moment recorded and cherished forever!

    பதிலளிநீக்கு
  47. மிக அருமையான பகிர்வுக்கு மிக நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  48. முதல் படம் மகிழ்ச்சி. இரண்டாவது படம் நெகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  49. இரண்டாவது படம் டக்கரா இருக்கு! :-)

    பதிலளிநீக்கு
  50. Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
    //Very Nice Pics..! Nothing will go with Mother's love.. Its unique in all respects...!//

    உண்மைதான். நன்றி ரவிக்குமார்.

    பதிலளிநீக்கு
  51. குமரி எஸ். நீலகண்டன் said...
    //உங்கள் அழகான அந்த புகைப்படத்தில் என் சிறு வயதில் எனது தாத்தா வீட்டு திண்ணையையும் விளக்கு மாடத்தையும் விரிந்த முற்றத்தையும் காண்கிறேன் என்னிடம் எந்த புகைப்படமும் இல்லாத தால். நன்றிகள் ராமலக்ஷ்மி//

    என் திண்ணை பதிவு உங்கள் நினைவுகளையும் மீட்டெடுத்திருப்பது தெரிய வருகிறது. மிக்க நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  52. கோமதி அரசு said...
    //பாசப் பறவைகள் படம் அழகு.

    இரண்டு படங்களும் அழகு.

    பாசப் பறவைகளுக்கே என் ஓட்டு.//

    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  53. தமிழ் உதயம் said...
    //அன்றெல்லாம் குழந்தைகளை ஒரு புகைப்படம் எடுப்பதே அரிது. இன்று மொபைல் புண்ணியத்தில் புகைப்படஙகளாக எடுத்து குவிக்கிறோம். எனக்கும் என் குழந்தை ப்ராயம் ஞாபகத்திற்கு வந்து விட்டது.//

    மிக்க நன்றி தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  54. Jaleela Kamal said...
    //உங்கள் சிறுவயது புகைப்படம் பதிவ படிக்கும் முன் பார்த்ததும் கண்டு பிடிச்சுட்டேன்.ரொம்ப நல்ல இருக்கு//

    பரவாயில்லையே, மிக்க நன்றி ஜலீலா.

    பதிலளிநீக்கு
  55. அன்புடன் அருணா said...
    //ஆஹா கலக்குறீங்க!//

    பூங்கொத்துக்கு நன்றி அருணா:)!

    பதிலளிநீக்கு
  56. அமைதி அப்பா said...
    //நல்ல படங்கள். போட்டோகிராபி உங்கள் குடும்ப சொத்து என்பதை சொல்லும் புகைப்படம்.
    பகிர்வுக்கு நன்றி.//

    நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  57. அம்பிகா said...
    //இரண்டு படங்களும் அழகு.

    உங்கள் படம் கூடுதல் அழகு.//

    நன்றி அம்பிகா.

    பதிலளிநீக்கு
  58. Pit said...
    //that b&w padam attagaasam.//

    பாராட்டு எடுத்த அப்பாவுக்கும், பாதுகாத்து என்னிடம் தந்த அம்மாவுக்கும்.

    சற்று முன் கோமாவுக்கு சொன்னது: /கருப்பு வெள்ளைப் படங்கள் என்றுமே காலத்தால் மங்காத பொக்கிஷங்கள் 'புகைப்படத் துறைக்கும்.'/

    ஆமோதிப்பது போல வந்துள்ளது உங்கள் கருத்து. நன்றி PiT !

    பதிலளிநீக்கு
  59. ஹுஸைனம்மா said...
    //பெர்ஃபெக்ட் பிக்சராக வந்திருக்கீறது, இரண்டாவது படம். பாசமலர்கள்!!//

    மகிழ்ச்சியும் நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  60. மோகன் குமார் said...
    ***//உங்கள் சிறுவயது புகைப்படம் பதிவ படிக்கும் முன் பார்த்ததும் கண்டு பிடிச்சுட்டேன்//

    Yes Me too identified you with your childhood face even before reading the next para./***

    நீங்களும்தானா? நன்றி மோகன் குமார்:)!

    பதிலளிநீக்கு
  61. MANO நாஞ்சில் மனோ said...
    //நெகிழ்ச்சியாக இருக்கிறது....//

    மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

    பதிலளிநீக்கு
  62. ஹேமா said...
    //குழந்தைகள் என்றாலே அழகுதான்.அதுவும் பாசத்தோடு அண்ணாவின் கைகளுக்குள் அடங்கும் கள்ளமில்லாப் புன்னகையோடு...

    எத்தனை அழகு.
    மனமும் நெகிழ்கிறது அக்கா !//

    கருத்துக்கும் அன்புக்கும் நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  63. சி.பி.செந்தில்குமார் said...
    //முதல் ஃபோட்டோ பாப்பா செம கலக்கல்//

    காமிராவைப் பார்க்கும் கண்கள் மின்மினியே. நன்றி செந்தில்குமார்:)!

    பதிலளிநீக்கு
  64. பா.ராஜாராம் said...

    //இதை இப்படி சொல்லிப் பார்த்தேன் சகா. கவிதையாகத்தானே இருக்கிறது? கவிதை, எப்படி எழுதினாலும் கவிதைதானே!//

    ஆகா பா ரா. ஆம் உண்மைதான்.
    ***
    //அப்புறம், உங்கள் நெற்றியில் இருக்கும் ஜோதி மாதிரியான அந்த பொட்டு இப்பல்லாம் குழந்தைகள் நெற்றியில் கூட காண கிடைக்கலை மக்கா. பொட்டுகளை கூடவா அடித்து செல்லும், காலங்கள்? :-(//

    காணக் கிடைக்கவில்லைதான். நாங்கள் மூன்று பெண்கள். அம்மா தலைவாரி வண்ண ரிப்பன்கள் வைத்துக் கட்டி, அழகாக திலகமிட்டு விடுவார்கள். சாந்துப் பொட்டையும் இப்போது கண்ணிலே பார்க்க முடிவதில்லை. ஸ்டிக்கர்தானே எல்லார் நெற்றியிலும்.

    வருகைக்கு நன்றி பா ரா.

    பதிலளிநீக்கு
  65. திகழ் said...
    //உள்ளம் துடிப்பது இந்த மாதிரி படங்களைக் காணத்தான்//

    மிக்க நன்றி திகழ்.

    பதிலளிநீக்கு
  66. சி.கருணாகரசு said...
    //இரண்டாம் படம் நெகிழ்ச்சி....//

    மிக்க நன்றி கருணாகரசு.

    பதிலளிநீக்கு
  67. ஆயிஷா said...
    //குட்டி அண்ணனுடன் இருக்கும் குட்டித் தங்கை அழகு.//

    ரொம்ப நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  68. James Vasanth said...
    //விலை மதிக்க முடியாத ஒரு பொக்கிஷம் ராமலக்ஷ்மி -
    உங்கள் இருவரின் சிரிப்பும் - அன்பும் !
    You have been so lucky to have that moment recorded and cherished forever!//

    ரொம்ப அழகாய் சொல்லி விட்டீர்கள் ஜேம்ஸ். மனதுக்கு நிறைவு. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  69. ஸாதிகா said...
    //மிக அருமையான பகிர்வுக்கு மிக நன்றி சகோதரி.//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  70. ஸ்ரீராம். said...
    //முதல் படம் மகிழ்ச்சி. இரண்டாவது படம் நெகிழ்ச்சி.//

    மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  71. கிரி said...
    //இரண்டாவது படம் டக்கரா இருக்கு! :-)//

    நன்றி கிரி!

    பதிலளிநீக்கு
  72. தமிழ்மணத்தில் வாக்களித்த பதிமூன்று பேருக்கும் இன்ட்லியில் வாக்களித்த முப்பத்து நான்கு பேருக்கும் என் நன்றி.

    பதிலளிநீக்கு
  73. மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கு ராமலக்ஷ்மி. முதல் பட்ம் போட்டிக்கு அனுப்பியது . இரண்டாவது அண்ணனின் அன்புப் பரிசு. களங்கமில்லாத இரண்டு சிறாற்களைப் பார்க்க மனம்மகிழ்ந்து கலங்கியது.
    உயிர் உலாவும் சட்டத்துக்குள்.

    பதிலளிநீக்கு
  74. @ வல்லிம்மா,

    ஆம், இரண்டாவது படம் அன்புப் பரிசேதான். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  75. உங்களின் சிறுவயது படம் அருமை
    வாழ்த்துகள்ங்க

    பதிலளிநீக்கு
  76. ஆ.ஞானசேகரன் said...
    //உங்களின் சிறுவயது படம் அருமை
    வாழ்த்துகள்ங்க//

    மிக்க நன்றி ஞானசேகரன்.

    பதிலளிநீக்கு
  77. @ பா.ராஜாராம்,

    நீங்கள் வாசித்த வடிவிலேயே வரிகளை அமைத்து, கவிதையாக்கி விட்டுள்ளேன் இப்போது. நன்றி பா ரா.

    பதிலளிநீக்கு
  78. பத்தில் ஒரு முத்து
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin