புதன், 30 செப்டம்பர், 2009

பன்னீர் புஷ்பங்களே!



வாட்டும் நோயினால்
வருத்தத்தில் அவன்-
இறுகிய முகமும்
குன்றிய உள்ளமுமாய்...

நலம் விசாரிக்க
வலம் வந்த மருத்துவர்
இவன் இருக்கும் இடம்
வந்து நின்றார்-
வெளிர் உடையும்
பளீர் சிரிப்புமாய்...

'கலக்கம் விலக்கிடு
காலத்தே குணமாவாய்!
பரிந்துரைத்த பயிற்சிகளைப்
பழகச் சலிப்பதேன் ?
படுத்தே இருந்தால்
அடுத்துநீ எழுந்து நடப்பது
எப்போதாம்?' கேட்டார்
புன்னகை பூத்தபடி.

தொடர்ந்தார் கனிவாய்:
'மலர்ச்சியுடன் மருந்துகளை
உட் கொள்வாய்,
உற்சாகமாய் இருந்திட்டாலே
தேறிடலாம் விரைவாய்!'

நம்பிக்கை ஊற்றினிலிருந்து
நன்னீர் வழங்கிய
திருப்தியுடன்
திரும்பி நடந்தார்.

'மிடுக்காக வந்து
துடுக்காகச் சொல்லிவிட்டாரே,
பட்டால் அன்றோ புரியும்
வலியின் ஆழமும்-
கதிகலங்கி நிற்குமென்
உள்மனதின் கோலமும்!'

தெளிக்கப்பட்டது பன்னீர் என்ற
தெளிவில்லாமல வென்னீரென்றே
நினைத்துச் சலிக்கின்றான்.

சொன்னவரும் மனிதர்தான்
அவருக்கும் இருக்கக்கூடும்
ஆயிரம் உபாதை என்பதனை
ஏனோ மறக்கின்றான்.
**

வாழ்வோடு வலியும்
காலத்தோடு கவலையும்
கலந்ததுதான் மானுடம் என்பது
இறைவனின் கணக்கு.
இதில் எவருக்குத்தான்
தரப்படுகிறது விதிவிலக்கு?

ஆறுதலாய் சொல்லப்படும்
வார்த்தைகள் கூட சிலருக்கு
வெந்த புண்ணில் பாய்ச்சப்படும்
வேல்களாய்த் தோன்றுவது
வேதனையான விந்தை!

துயரின் எல்லை என்பது
தாங்கிடும் அவரவர்
மனவலிமையைப்
பொறுத்ததே!
ஆயினும் கூட...

பாவம்பாவம் எனப்
பரிதவிப்பைப் பன்மடங்காக்கும்
உற்றார் பலர் உத்தமராகிறார்.
விரக்தியை விடச் சொல்லுபவர்
வேதனை புரியாதவராகிறார்!

சோதனை மேல் சோதனையென
சோர்ந்திருப்பவனின் சோகத்தை
மென்மேலும் சூடேற்றுபவர்
மனிதருள் மாணிக்கமாகிறார்.

மனதைரியத்துடன் இருக்கும்படி
மனிதநேயத்துடன் மன்றாடுபவரோ
அடுத்தவர் அல்லல்
அறிய இயலாத
அற்பப் பதராகிறார்!

அக்கறையை அனுபவத்தை
ஆக்கப் பூர்வமாய்
நோக்கத் தெரியாமல்-
அன்பை ஆறுதலை
இனம் புரிந்து
ஏற்கத் தெரியாமல்..

நேசத்துடன் பாசங்கலந்து
நீட்டப்படும் பூங்கொத்தில்
முட்களைத் தேடியபடி-
இருக்கத்தான் செய்கிறார்
சிலர்..

அத்தகு
இடம் அறிந்து
மெளனிகளாகத்
தெரியாமலேதான்
பலர்..!
*** *** ***

படம்: இணையத்திலிருந்து..

*17 ஏப்ரல் 2003, திண்ணை இணைய இதழில் 'இரண்டு கவிதைகள்’ என்ற தலைப்பின் கீழ் வெளிவந்த மற்றொரு கவிதை.
23 ஜூலை 2009 ‘விந்தை உலகம்’ என்ற தலைப்பில் வார்ப்பு கவிதை வாராந்திரியிலும்.


*“ஈடு செய்ய முடியாத இழப்பினைச் சந்தித்தவருக்கும் மீண்டு வரப் போராடும் உடல்நலக் குறைவோடு வருந்துவோருக்கும் மட்டும், என்றைக்கும் ஆறுதலை பன்னீர் புஷபங்களான வார்த்தைகளால் மட்டுமே தந்துவிட முடியாது. ஆனால் அவர்தம் மனக்காயங்களைக் காலம் ஆற்றிட, உடல் நலம் பெற்றுத் தேறிட நம் உள்ளார்த்தமான பிரார்த்தனைப் பூக்கள் நிச்சயம் கை கொடுத்திடும்.

68 கருத்துகள்:

  1. அருமையான கவிதை அக்கா!

    //நேசத்துடன் பாசங்கலந்து
    நீட்டப்படும் பூங்கொத்தில்
    முட்களைத் தேடியபடி-
    இருக்கத்தான் செய்கிறார்
    சிலர்..//

    சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  2. முதல் கவிதை மிக மிக இயல்பான ஒன்று.. அருமை

    பதிலளிநீக்கு
  3. //ஆறுதலாய் சொல்லப்படும்
    வார்த்தைகள் கூட சிலருக்கு
    வெந்த புண்ணில் பாய்ச்சப்படும்
    வேல்களாய்த் தோன்றுவது
    வேதனையான விந்தை!//

    நாம ஒண்ணு சொல்ல அதுக்கு அவங்க ஒரு அர்த்தம் புரிஞ்சுக்க, வேதனைதான் போங்க

    பதிலளிநீக்கு
  4. நல்ல கவிதை , பின்குறிப்புகள் இன்னும் ஆழமாக புரிந்துக்கொள்ள உதவுகின்றன!

    /'மிடுக்காக வந்து
    துடுக்காகச் சொல்லிவிட்டாரே,
    பட்டால் அன்றோ புரியும்
    வலியின் ஆழமும்-
    கதிகலங்கி நிற்குமென்
    உள்மனதின் கோலமும்!'/

    !!!

    பதிலளிநீக்கு
  5. //இதில் எவருக்குத்தான்
    தரப்படுகிறது விதிவிலக்கு?//

    நல்லா சொன்னீங்க :-) ஏதாவது ஒரு வகையில் என்றாவது நடந்தே தீரும்

    பதிலளிநீக்கு
  6. நல்ல கவிதை நண்பி.

    சும்மா எழுதனும்னு தோணிற்று...

    கெட் வெல் சூன் என்று
    மாவுக்கட்டில் எழுதி
    முத்தம் ஒன்றை
    கொடுத்தாள்.....

    கை பிராக்ச்சர் சரியானது..
    துள்ளிய இதயம்
    ரெண்டு துண்டானது...

    பதிலளிநீக்கு
  7. கலக்கம் விலக்கிடு
    காலத்தே குணமாவாய்!
    பரிந்துரைத்த பயிற்சிகளைப்
    பழகச் சலிப்பதேன் ?
    படுத்தே இருந்தால்
    அடுத்துநீ எழுந்து நடப்பது
    எப்போதாம்?' கேட்டார்
    புன்னகை பூத்தபடி..//

    இது நான் என்னை நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி.

    என் வலிகளை நான் மறந்து இயல்பாக
    இருக்க பழகி கொள்கிறேன்.

    அருமையான கருத்தைச்சொல்லும் கவிதைக்கு பாராட்டுக்கள் இல்லை இல்லை பூங்கொத்துக்கள் ராமலக்‌ஷ்மி

    பதிலளிநீக்கு
  8. //வாழ்வோடு வலியும்
    காலத்தோடு கவலையும்
    கலந்ததுதான் மானுடம் என்பது
    இறைவனின் கணக்கு.
    இதில் எவருக்குத்தான்
    தரப்படுகிறது விதிவிலக்கு?//

    மிக அருமை ராமலக்ஷ்மி அவர்களே... நிதர்சனமான எழுத்து...

    //சோதனை மேல் சோதனையென
    சோர்ந்திருப்பவனின் சோகத்தை
    மென்மேலும் சூடேற்றுபவர்
    மனிதருள் மாணிக்கமாகிறார்.//

    அப்ப‌டின்னா என்ன‌ சொல்ல‌ வ‌ர்றீங்க‌ இங்க‌, மேட‌ம்...

    //நேசத்துடன் பாசங்கலந்து
    நீட்டப்படும் பூங்கொத்தில்
    முட்களைத் தேடியபடி-
    இருக்கத்தான் செய்கிறார்
    சிலர்..//

    ச‌ரிதான்... நாம‌ ந‌ல்ல‌துக்கு சொல்ல‌ப்போக‌, அது விவ‌கார‌மாகிற‌து சில‌ ச‌ம‌ய‌ம்...ஏன் ப‌ல‌ ச‌ம‌ய‌ம்...

    //அத்தகு
    இடம் அறிந்து
    மெளனிகளாகத்
    தெரியாமலேதான்
    பலர்..!//

    க‌ரெக்ட்... இதுதான் ச‌ரியோ என்று தோன்றுகிற‌து...

    ந‌ல்லா எழுதி இருக்கிங்க ராமலக்ஷ்மி மேட‌ம்... வாழ்த்துக்க‌ள்...

    பதிலளிநீக்கு
  9. //சொன்னவரும் மனிதர்தான்
    அவருக்கும் இருக்கக்கூடும்
    ஆயிரம் உபாதை என்பதனை
    ஏனோ மறக்கின்றான்.//

    அவன் மட்டும் மறக்கலை அக்கா..

    //துயரின் எல்லை என்பது
    தாங்கிடும் அவரவர்
    மனவலிமையைப்
    பொறுத்ததே!//

    அற்புதமான வரிகள்.

    ரெண்டு முத்தான கவிதைகளை படிக்கத் தந்ததுக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  10. நல்ல கவிதை, நல்ல சொல் வளம். அருமை. நமக்கு கவிதையும், காதலும் ரொம்ப வீக். இரண்டும் கடைசி வரை கிளிக் ஆகவே இல்லை. ஆதலால் இதுக்கு மேல என்னால விமர்சிக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  11. நீண்ட கவிதையில் நெஞ்சை தொலைதுவிட்டேன்

    பதிலளிநீக்கு
  12. /*நேசத்துடன் பாசங்கலந்து
    நீட்டப்படும் பூங்கொத்தில்
    முட்களைத் தேடியபடி-
    இருக்கத்தான் செய்கிறார்
    சிலர்..*/
    உண்மை...
    நல்ல கருத்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. //சொன்னவரும் மனிதர்தான்
    அவருக்கும் இருக்கக்கூடும்
    ஆயிரம் உபாதை என்பதனை
    ஏனோ மறக்கின்றான்.//
     
    பிரச்சனைகளுக்கு மத்தியிலும், அதைக் கண்டுகொள்ளாது மற்றோருக்கு நம்பிக்கையூட்டும் சொற்களைத் தருவோரை இந்த உலகம் எவ்வாறு நடத்துகிறது என்பதை அழகாக எழுதியுள்ளீர்கள்.
     
    //நேசத்துடன் பாசங்கலந்து
    நீட்டப்படும் பூங்கொத்தில்
    முட்களைத் தேடியபடி-
    இருக்கத்தான் செய்கிறார்
    சிலர்..//
     
    இது மனித இயல்போ??? :-)
     
    இரண்டும் அருமை.

    பதிலளிநீக்கு
  14. //அக்கறையை அனுபவத்தை
    ஆக்கப் பூர்வமாய்
    நோக்கத் தெரியாமல்-
    அன்பை ஆறுதலை
    இனம் புரிந்து
    ஏற்கத் தெரியாமல்..

    நேசத்துடன் பாசங்கலந்து
    நீட்டப்படும் பூங்கொத்தில்
    முட்களைத் தேடியபடி-
    இருக்கத்தான் செய்கிறார்
    சிலர்..///

    பிழைகள் பார்ப்பதில் பெருமையடைகின்ற மனிதர்கள் :(

    பதிலளிநீக்கு
  15. enakkaka ezuthinathu mathiri irukku muthal kavithai!!! nandri nandri!!!!! super kavithaikal!!!

    பதிலளிநீக்கு
  16. //சொன்னவரும் மனிதர்தான்
    அவருக்கும் இருக்கக்கூடும்
    ஆயிரம் உபாதை என்பதனை
    ஏனோ மறக்கின்றான்.//

    வாஸ்தவமான வரிகள்...

    பதிலளிநீக்கு
  17. //வாழ்வோடு வலியும்
    காலத்தோடு கவலையும்
    கலந்ததுதான் மானுடம் என்பது
    இறைவனின் கணக்கு.
    இதில் எவருக்குத்தான்
    தரப்படுகிறது விதிவிலக்கு?//

    அப்படி விதி விலக்கு இல்லாத பொழுதே சிலர் விதியையே விளையாட்டாய் நினைத்து சிலரது வாழ்வை சீரழிக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  18. //ஆறுதலாய் சொல்லப்படும்
    வார்த்தைகள் கூட சிலருக்கு
    வெந்த புண்ணில் பாய்ச்சப்படும்
    வேல்களாய்த் தோன்றுவது
    வேதனையான விந்தை!//

    இலவசமாய் பொருள் கொடுக்கப்பட்டால் இனிதாக வாங்கி கொள்கின்றனர்

    இலவசமாய் கிடைக்கும் ஆறுதல் வார்த்தைகளை புறந்தள்கின்றனர்

    பதிலளிநீக்கு
  19. //பாவம்பாவம் எனப்
    பரிதவிப்பைப் பன்மடங்காக்கும்
    உற்றார் பலர் உத்தமராகிறார்.
    விரக்தியை விடச் சொல்லுபவர்
    வேதனை புரியாதவராகிறார்!//

    அது மனித இயல்பாய் மாறிவிட்டது

    பதிலளிநீக்கு
  20. நோய்வாய்படும்போதுதான் நமக்குத் தெரியும் இந்த உலகத்தில் நான் ஒரு "தனி மனிதர்" என்று. We just have to deal ourselves, ALONE!

    இதில் என்ன கொடுமைனா சில பெரிய மனிதர்கூட குழந்தை போல நடந்துக்குவாங்க.

    உங்க மனசை எப்படி நீங்க இந்த சூழ்நிலையில் பார்த்துக்கொள்றீங்க ங்கிறது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

    பெரியவர் காந்தி, தன் மனைவி கஸ்தூரி பாய்க்கு ஏதோ வியாதி வந்தபோது, "அல்லோப்பதி" மருந்துக்ளை தவிர்க்கச் சொன்னாராம்.
    ஆனால் பின்னால் அவர் நோய்வாய் பட்டபோது ஆண்ட்டிபயாட்டிக் எடுத்தாராம். இப்படி ஒரு "பொய்"க்குற்றச்சாட்டு உண்டு அவர்மேல்! இது உண்மையா பொய்யானு தெரியலை. இதை ஆராயவும் வேண்டாம்.

    ஆனால், தனக்கென்று வரும்போது பலரால் இதை டீல் பண்ண முடிவதில்லை.

    When people get sick..They wonder

    Why me??

    Why do I go through this?

    Why do I deserve this?

    I never did any harm to anybody why God is punishing me?

    Life is not fair.

    So many silly questions come out of them you can see. Nobody wants to get sick. உயிரைக் குடிக்கும் வியாதினா சொல்லவே வேண்டாம்!

    ***பாவம்பாவம் எனப்
    பரிதவிப்பைப் பன்மடங்காக்கும்
    உற்றார் பலர் உத்தமராகிறார்***

    ஒரு சிலருக்கு! :)

    ஆனால் ஒரு சிலருக்கு "sympathy" சுத்தமாகப் பிடிக்காதுனு நினைக்கிறேன்.

    பேசவேண்டிய, எல்லோரும் அனுபவிக்கும் ஒரு விசயத்தை அழகா கவிதைல சொல்லி இருக்கீங்க!

    வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி! :)

    பதிலளிநீக்கு
  21. வரிகளில் இயல்பாய் சொல்லவேண்டிய கருத்துகளை சிறப்பாய் எடுத்துணர்த்தியிருக்கிறீர்கள்...மேடம்

    பதிலளிநீக்கு
  22. தன்னம்பிக்கை ஊட்டும் அருமையான வரிகளில் கவிதை தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    //ஆறுதலாய் சொல்லப்படும்
    வார்த்தைகள் கூட சிலருக்கு
    வெந்த புண்ணில் பாய்ச்சப்படும்
    வேல்களாய்த் தோன்றுவது
    வேதனையான விந்தை!//

    இந்த gap நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டும் இருக்கிறது உறவுகளுள், நட்புகளுள். வேதனையானதும் கூட.

    எங்கே 'ஹல்லோ நாந்தாங்க' மிஸ்ஸிங் இப்பதிவில் ?

    பதிலளிநீக்கு
  23. நல்ல வரிகள் அத்தனை வரிகளையும் இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  24. சென்ஷி said...

    //* அருமையான கவிதை அக்கா!

    //நேசத்துடன் பாசங்கலந்து
    நீட்டப்படும் பூங்கொத்தில்
    முட்களைத் தேடியபடி-
    இருக்கத்தான் செய்கிறார்
    சிலர்..//

    சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!*//

    கவிதையே நேசத்துடன் பாசங்கலந்து நீட்டப்பட்ட பூங்கொத்துதான் எனப் புரிந்து வந்த முதல் பின்னூட்டம். மிக்க நன்றி சென்ஷி.

    பதிலளிநீக்கு
  25. கதிர் - ஈரோடு said...

    //முதல் கவிதை மிக மிக இயல்பான ஒன்று.. அருமை//

    இயல்பு வாழ்க்கையில் எல்லோரும் உணர்வதே. கருத்துக்கு நன்றி கதிர்!

    பதிலளிநீக்கு
  26. சின்ன அம்மிணி said...

    //நாம ஒண்ணு சொல்ல அதுக்கு அவங்க ஒரு அர்த்தம் புரிஞ்சுக்க, வேதனைதான் போங்க//

    இதுபோன்ற அனுபவங்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கும் என்றே தெரிகிறது. கருத்துக்கு நன்றி அம்மிணி.

    பதிலளிநீக்கு
  27. சந்தனமுல்லை said...

    //நல்ல கவிதை , பின்குறிப்புகள் இன்னும் ஆழமாக புரிந்துக்கொள்ள உதவுகின்றன!//

    அவசியமான பின்குறிப்பென நான் நினைத்ததை அர்த்தமுள்ளதாக்கியதற்கு நன்றி முல்லை.

    பதிலளிநீக்கு
  28. கிரி said...

    ***/ //இதில் எவருக்குத்தான்
    தரப்படுகிறது விதிவிலக்கு?//

    நல்லா சொன்னீங்க :-) ஏதாவது ஒரு வகையில் என்றாவது நடந்தே தீரும்/***

    ஆம் கிரி, நாம் ஒருவர்தான் கஷ்டப் படுகிறோம் என்கிற சிந்தனையில் சிக்கிக் கொள்ளாதிருத்தலும், ‘வாழ்வோடு வலியும் காலத்தோடு கவலையும் கலந்த்தே மானுடம்’ என்கிற புரிதலும் வேண்டும்தானே?

    பதிலளிநீக்கு
  29. ஈ ரா said...

    //நல்ல கவிதை நண்பி.//

    நன்றி ஈ ரா.

    // சும்மா எழுதனும்னு தோணிற்று...

    கெட் வெல் சூன் என்று
    மாவுக்கட்டில் எழுதி
    முத்தம் ஒன்றை
    கொடுத்தாள்.....

    கை பிராக்ச்சர் சரியானது..
    துள்ளிய இதயம்
    ரெண்டு துண்டானது...//

    சும்மா எழுதியது சூப்பரா இருக்கு:)!

    பதிலளிநீக்கு
  30. புதுகைத் தென்றல் said...

    ***/ கலக்கம் விலக்கிடு
    காலத்தே குணமாவாய்!
    பரிந்துரைத்த பயிற்சிகளைப்
    பழகச் சலிப்பதேன் ?
    படுத்தே இருந்தால்
    அடுத்துநீ எழுந்து நடப்பது
    எப்போதாம்?' கேட்டார்
    புன்னகை பூத்தபடி..//

    இது நான் என்னை நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி./***

    வாங்க தென்றல். அடுத்தவர்கள் ஏன் கேட்க வேண்டும், நம்மை நாமே கேட்டு எதிலிருந்து மீண்டு வந்திட வேண்டும் என அழகாய் சொல்லி விட்டீர்கள்!

    //என் வலிகளை நான் மறந்து இயல்பாக
    இருக்க பழகி கொள்கிறேன்.//

    நல்லது, வாழ்த்துக்கள். இயல்பாய் நாம் இருக்க முயற்சிக்கையில்தான் மறக்க நினைக்கும் வலி பறக்கவும் செய்திடும்:)!

    //அருமையான கருத்தைச்சொல்லும் கவிதைக்கு பாராட்டுக்கள் இல்லை இல்லை பூங்கொத்துக்கள் ராமலக்‌ஷ்மி//

    மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்கிறேன், நன்றி தென்றல்.

    பதிலளிநீக்கு
  31. R.Gopi said...

    //மிக அருமை ராமலக்ஷ்மி அவர்களே... நிதர்சனமான எழுத்து...//

    நன்றி கோபி.
    --------------------------
    ***/ //சோதனை மேல் சோதனையென
    சோர்ந்திருப்பவனின் சோகத்தை
    மென்மேலும் சூடேற்றுபவர்
    மனிதருள் மாணிக்கமாகிறார்.//

    அப்ப‌டின்னா என்ன‌ சொல்ல‌ வ‌ர்றீங்க‌ இங்க‌, மேட‌ம்.../***

    ஒருவர் சோர்ந்திருக்கையில் அவருக்கு நடந்ததைப் பற்றிப் பேசிப் பேசி வருத்தத்தை அதிகரிப்பவ்ரே மனதுக்கு நெருக்கமாகவும், மீண்டுவர வேண்டுபவர் அடுத்தவர் அல்லல் புரியாதவராய் உணரப்படுவதும் வேதனையான விந்தை என சொல்ல வந்தேன் கோபி.
    ---------------------------
    **/ //அத்தகு
    இடம் அறிந்து
    மெளனிகளாகத்
    தெரியாமலேதான்
    பலர்..!//

    க‌ரெக்ட்... இதுதான் ச‌ரியோ என்று தோன்றுகிற‌து.../**

    அத்தகு இடம் அறிந்'தும்' மெளனிகள் ஆக 'முடி'யாமலேதான் பலர், என்பதுதான் சரியோ என்றும் தோன்றுகிறது.
    ---------------------------
    //ந‌ல்லா எழுதி இருக்கிங்க ராமலக்ஷ்மி மேட‌ம்... வாழ்த்துக்க‌ள்...//

    த்ங்கள் விரிவான கருத்துப் பரிமாற்றங்களுக்கு நன்றி கோபி.

    பதிலளிநீக்கு
  32. சுசி said...
    //ரெண்டு முத்தான கவிதைகளை படிக்கத் தந்ததுக்கு நன்றி அக்கா.//

    விரிவான கருத்துக்களுக்கும் சேர்த்து, நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  33. பித்தன் said...

    // நல்ல கவிதை, நல்ல சொல் வளம். அருமை. //

    நன்றி பித்தன்.

    பதிலளிநீக்கு
  34. கவிக்கிழவன் said...

    //நீண்ட கவிதையில் நெஞ்சை தொலைதுவிட்டேன்//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவிக்கிழவன்.

    பதிலளிநீக்கு
  35. அமுதா said...
    //உண்மை...
    நல்ல கருத்துக்கள்//

    நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  36. " உழவன் " " Uzhavan " said...
    //பிரச்சனைகளுக்கு மத்தியிலும், அதைக் கண்டுகொள்ளாது மற்றோருக்கு நம்பிக்கையூட்டும் சொற்களைத் தருவோரை இந்த உலகம் எவ்வாறு நடத்துகிறது என்பதை அழகாக எழுதியுள்ளீர்கள்.//

    புரிதலுக்கு நன்றி.

    **/ //நேசத்துடன் பாசங்கலந்து
    நீட்டப்படும் பூங்கொத்தில்
    முட்களைத் தேடியபடி-
    இருக்கத்தான் செய்கிறார்
    சிலர்..//

    இது மனித இயல்போ??? :-)/**

    மனித இயல்பில் ஒன்றே:)!

    //இரண்டும் அருமை//

    கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி உழவன்!

    பதிலளிநீக்கு
  37. ஆயில்யன் said...
    //பிழைகள் பார்ப்பதில் பெருமையடைகின்ற மனிதர்கள் :(//

    பெருமையா அறியாமையா எனப் புரியாமல் மற்றவர்!

    கருத்துக்கு நன்றி ஆயில்யன்.

    பதிலளிநீக்கு
  38. அபி அப்பா said...

    // enakkaka ezuthinathu mathiri irukku muthal kavithai!!! nandri nandri!!!!!//

    புதுகைத் தென்றலைப் போல அதில் உங்களுக்கும் நல்ல கருத்துக்கள் கிடைத்திருந்தால் மகிழ்ச்சியே:)!

    //super kavithaikal!!!//

    நன்றி அபி அப்பா!

    பதிலளிநீக்கு
  39. அன்புடன் அருணா said...

    //அன்புடன் பூங்கொத்து!//

    நன்றி அருணா.

    பதிலளிநீக்கு
  40. பிரியமுடன்...வசந்த் said...

    //வரிகளில் இயல்பாய் சொல்லவேண்டிய கருத்துகளை சிறப்பாய் எடுத்துணர்த்தியிருக்கிறீர்கள்...மேடம்//

    நன்றி வசந்த், தங்கள் பார்வையில் கவிதைக்கான விமர்சனத்துக்கும், மனித இயல்பைப் பற்றிய தங்கள் விரிவான கருத்துக்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  41. வருண் said...
    //நோய்வாய்படும்போதுதான் நமக்குத் தெரியும் இந்த உலகத்தில் நான் ஒரு "தனி மனிதர்" என்று. We just have to deal ourselves, ALONE!//

    உடல்நலக் குறைவு வருகையில் பெரியவர் குழந்தையாவதில் இருந்து மீண்டு வரப் போராடும் நோய் தாக்கியவர் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளும் கேள்விகள் வரை நீங்கள் சொல்லியிருப்பது யாவும் சரியே. அதேசமயம், என் பின்குறிப்பையும் சற்று பாருங்கள். அவர்களைப் பற்றி அல்ல இக்கவிதை.

    கவிதையின் முதல் பாகம் ஒரு உதாரணத்துக்கு சொல்லப் பட்டது. 'நோயாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை'. எந்த ஒரு மனச் சோர்விலிருந்தும் விடுபட்டு வெளிவருவது நீங்கள் சொன்ன மாதிரி 'நம் மனதில் நம் கையில்தான்'.//We just have to deal ourselves, ALONE!// ஆனால் அதற்கு உதவ ஒருவர் கை நீட்டும் போது அதை சரியாகப் புரிந்திடுதலும், அதைப் பற்றிக் கொண்டு எழுந்திட முனைதலுமாய் இருக்க வேண்டுமேயன்றி சுயபச்சாதாபத்தில் தவறாகவே பார்த்து, சொன்னவரை வருத்துவதோடு தன்னையும் வருத்திக் கொள்வது நலம் பயக்குமா?. அக்கறையை அனுபவத்தை ஆக்கப் பூர்வமாய நோக்கத் தெரியணும் என்பதுவும், அன்பை ஆறுதலை இனம் புரிந்து ஏற்கத் தெரியணும் என்பதுவுமே கவிதையில் சொல்ல வந்தது.
    ----------------------

    // **பாவம்பாவம் எனப்
    பரிதவிப்பைப் பன்மடங்காக்கும்
    உற்றார் பலர் உத்தமராகிறார்**

    ஒரு சிலருக்கு! :)//

    அந்த ஒருசிலருக்குதான் இது!

    //ஆனால் ஒரு சிலருக்கு "sympathy" சுத்தமாகப் பிடிக்காதுனு நினைக்கிறேன்.//

    பெரும்பாலினருக்குப் பிடிக்காதுதான் என்றாலும் சிலருக்கு சிம்பதிதான் மனதுக்கு எப்போதும் இதம் என்கிற மாயை உண்டு. இதனால் சுயபச்சாதாபம் அதிகரிக்கும். இதை ஒரு தவறாகவும் நாம் பார்க்கமுடியாது. மனித இயல்புகளில் இதுவும் ஒன்று, ஒருவகையான அறியாமை என்றே கொள்ள வேண்டும். அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தால், நீட்டப்படும் பூங்கொத்தால் அவர்கள் பூரித்தால் நமக்கும் மகிழ்ச்சியே:)!
    -----------------------------

    //பேசவேண்டிய, எல்லோரும் அனுபவிக்கும் ஒரு விசயத்தை அழகா கவிதைல சொல்லி இருக்கீங்க!//

    ஒவ்வொருவர் அனுபவத்திலும் அவருக்கும், மற்ற யாரேனும் ஒருசிலருக்கும் இருக்கிறதுதானே ஏதேனும் பாடம்?

    வாழ்த்துக்களுக்கும், விரிவாக சிந்தனையில் எழுந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  42. சதங்கா (Sathanga) said...

    //தன்னம்பிக்கை ஊட்டும் அருமையான வரிகளில் கவிதை தந்தமைக்கு வாழ்த்துக்கள்.//

    நன்றி சதங்கா, பாஸிடிவ்வா எதையும் பார்க்கணும் என்பதே கவிதை.
    --------------------------
    **/ //ஆறுதலாய் சொல்லப்படும்
    வார்த்தைகள் கூட சிலருக்கு
    வெந்த புண்ணில் பாய்ச்சப்படும்
    வேல்களாய்த் தோன்றுவது
    வேதனையான விந்தை!//

    இந்த gap நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டும் இருக்கிறது உறவுகளுள், நட்புகளுள். வேதனையானதும் கூட./**

    உண்மை.
    சரியான புரிதல்கள் இருப்பின் சங்கடங்கள் தவிர்த்திடலாம்.
    -------------------------------

    //எங்கே 'ஹல்லோ நாந்தாங்க' மிஸ்ஸிங் இப்பதிவில் ?//

    போனபதிவிலும்தான்:)! சற்றே சீரியஸான பதிவுகளில் குட்டிப்பெண் ஒரு டைவர்ஷன் எனத் தோன்றியது. சொல்லிட்டீங்கல்ல, அடுத்தபதிவில் அழைத்து வருகிறேன்:)!

    பதிலளிநீக்கு
  43. சந்ரு said...

    //நல்ல வரிகள் அத்தனை வரிகளையும் இரசித்தேன்.//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்ரு.

    பதிலளிநீக்கு
  44. நசரேயன் said...

    //நல்ல கவிதை//

    நன்றி நசரேயன்.

    பதிலளிநீக்கு
  45. ♥ தூயா ♥ Thooya ♥ said...

    //அருமை//

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ளீர்கள்:)! நன்றி தூயா!

    பதிலளிநீக்கு
  46. லவ்டேல் மேடி said...

    //அழகான கவிதைங்க சகோதரி.....//

    நன்றி மேடி.

    பதிலளிநீக்கு
  47. ஜெரி ஈசானந்தா. said...

    // மணக்கிறது புஸ்பங்கள்..//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெரி ஈசானந்தா.

    பதிலளிநீக்கு
  48. "பன்னீர் புஷ்பங்களே!”

    கவிதை அருமை ராமலக்ஷ்மி!

    //வாழ்வோடு வலியும் காலத்தோடு கவலையும் கலந்ததுதான் மானுடம் என்பது இறைவனின் கணக்கு.இதில் எவருக்குத்தான் தரப்படுகிறது விதிவிலக்கு?//

    உண்மை தான் ராமலக்ஷ்மி .

    ஒரு பெண் புத்தரிடம் தன் இறந்த குழந்தையை எடுத்துச் சென்று உயிர்ப்பிக்க கேட்ட போது புத்தர் அந்த பெண்ணிடம் இறப்பில்லா வீட்டில் கடுகு வாங்கி வந்தால் உன் குழந்தையை உயிர்ப்பித்து தருகிறேன் என்று சொன்ன கதை தான் நினைவுக்கு வ்ருகிறது.

    கவலை இல்லாத வீடு உண்டா?

    கவலைப் படும் விஷயம் தான் மாறுபடும்.

    பழம்மொழி சொல்வார்களே கால் இல்லாதவனுக்கு கால் இல்லையே என்று கவலை. கால் இருப்பவனுக்கு
    செருப்பு இல்லையே என்று கவலை.

    சிலர் கவலையை போக்காமல் மேலும்
    அதிகப் படுத்துவர்.

    இடம் அறிந்து தான் பூங்கொத்தை நீட்ட வேண்டும்.

    சிலரிடம் மெளனம் தான் நல்லது.

    மகரிஷியின் கவலை ஒழித்தலில் வரும் கவிதையை இங்கு உங்களுடன்
    பகிர்ந்து கொள்கிறேன்.

    “ வந்ததுன்பம் ஏற்றுச் சகித்து அவற்றைப் போக்க
    வழிகண்டு முறையோடு ஆற்றி இன்பம் காத்து
    எந்தத் துன்பம் வரினும் எதிர்நோக்கி நிற்பாயேல்
    இன்பமே மிகிதிபடும் துன்பங்கள் தோல்வியுறும்.//

    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  49. //துயரின் எல்லை என்பது
    தாங்கிடும் அவரவர்
    மனவலிமையைப்
    பொறுத்ததே!//

    ரொம்ப நாளாச்சு நான் முத்துச்சரம் பக்கம் வந்து. வந்தவுடன் வரவேற்றன இந்த அருமையான வரிகள்!

    பதிலளிநீக்கு
  50. கோமதி அரசு said...
    //"பன்னீர் புஷ்பங்களே!”

    கவிதை அருமை ராமலக்ஷ்மி!//

    பூங்கொத்தை தருகிறீர்கள், நன்றி!
    -----------------------

    //சிலர் கவலையை போக்காமல் மேலும்
    அதிகப் படுத்துவர்.

    இடம் அறிந்து தான் பூங்கொத்தை நீட்ட வேண்டும்.

    சிலரிடம் மெளனம் தான் நல்லது.//

    அழகான புரிதல்.
    ----------------------------

    புத்தர் கதையுடன் சொல்லியிருக்கும் கருத்துக்கள் யாவும் அற்புதம். கூடவே தந்திருக்கும் மகிரிஷியின் கவிதை:

    //“ வந்ததுன்பம் ஏற்றுச் சகித்து அவற்றைப் போக்க
    வழிகண்டு முறையோடு ஆற்றி இன்பம் காத்து
    எந்தத் துன்பம் வரினும் எதிர்நோக்கி நிற்பாயேல்
    இன்பமே மிகிதிபடும் துன்பங்கள் தோல்வியுறும்”.//

    எந்த மனதுக்கும் தந்திடும் இதம்.

    அருமையான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி கோமதி அரசு.

    பதிலளிநீக்கு
  51. ***ஆனால் அதற்கு உதவ ஒருவர் கை நீட்டும் போது அதை சரியாகப் புரிந்திடுதலும், அதைப் பற்றிக் கொண்டு எழுந்திட முனைதலுமாய் இருக்க வேண்டுமேயன்றி சுயபச்சாதாபத்தில் தவறாகவே பார்த்து, சொன்னவரை வருத்துவதோடு தன்னையும் வருத்திக் கொள்வது நலம் பயக்குமா?***

    தவறுதாங்க. ஆனால் அதுபோல் நடந்துகொள்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்று எனக்கு தோனுதுங்க. :(

    பதிலளிநீக்கு
  52. ***ராமலக்ஷ்மி said...

    அருமையான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி கோமதி அரசு.***

    வழிமொழிகிறேன்! :)

    பதிலளிநீக்கு
  53. r.selvakkumar said...

    **/ //துயரின் எல்லை என்பது
    தாங்கிடும் அவரவர்
    மனவலிமையைப்
    பொறுத்ததே!//

    ரொம்ப நாளாச்சு நான் முத்துச்சரம் பக்கம் வந்து. வந்தவுடன் வரவேற்றன இந்த அருமையான வரிகள்!**/

    சுசியும் அதே வரிகளை சிலாகித்திருந்தார். நன்றி செல்வக்குமார். இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு என்று சொல்லாதீர்கள், பலமாதம் ஆயிற்று:)!

    பதிலளிநீக்கு
  54. @ வருண்,

    மறுவருகைக்கும் மறுக்காத கருத்துக்கும் நன்றி வருண்:)!

    //***அருமையான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி கோமதி அரசு.***

    வழிமொழிகிறேன்! :)//

    ஆமாம், எல்லோருக்கும் இதம் தரும் வகையில் அமைந்திருக்கும் பின்னூட்டம்.

    பதிலளிநீக்கு
  55. அத்தனை வரிகளும் அருமை

    சொல்ல வார்த்தை இல்லை

    வாழ்த்துகள்

    அன்புடன்
    திகழ்

    பதிலளிநீக்கு
  56. @ திகழ்,
    பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திகழ்!

    பதிலளிநீக்கு
  57. //மனதைரியத்துடன் இருக்கும்படி
    மனிதநேயத்துடன் மன்றாடுபவரோ
    அடுத்தவர் அல்லல்
    அறிய இயலாத
    அற்பப் பதராகிறார்!//

    உண்மைதான் ராமலக்ஷ்மி. நம்முடைய உண்மையான நலம் விரும்பிகளை பல சமயங்களில் தெரிந்து கொள்ளாமல்தான் நடந்து கொள்கிறோம். சிந்திக்க வேண்டிய செய்திக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  58. கவிநயா said...
    //உண்மைதான் ராமலக்ஷ்மி. நம்முடைய உண்மையான நலம் விரும்பிகளை பல சமயங்களில் தெரிந்து கொள்ளாமல்தான் நடந்து கொள்கிறோம்.//

    புரிந்து கொள்ள நேருகையில் மனம் வருந்துவோம். மனித இயல்புகளில் இதுவும் ஒன்றே, அனுபவம் ஆசானாகக் கற்றுக் கொடுத்தபடியே இருக்கும்.

    //சிந்திக்க வேண்டிய செய்திக்கு நன்றி.//

    கருத்துக்கு நன்றி கவிநயா.

    பதிலளிநீக்கு
  59. பூங்கொத்திலும் முள் தேடும் முகங்கள்...எதார்த்தம் பேசும் கவிதை ராமலக்ஷ்மி..வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  60. @ பாசமலர்,

    கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி பாசமலர்.

    பதிலளிநீக்கு
  61. SurveySan said...

    //அழகோ அழகு.

    just beautiful poem!//

    பூங்கொத்தாய் ஒரு பாராட்டு. நன்றி சர்வேசன்!

    பதிலளிநீக்கு
  62. மின்னஞ்சல் வழியாக..:
    //Hi Ramalakshmi,

    Congrats!

    Your story titled 'பன்னீர் புஷ்பங்களே!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 30th September 2009 10:40:02 PM GMT

    Here is the link to the story: http://www.tamilish.com/story/119207

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team//

    தகவலுக்கு நன்றி தமிழிஷ். வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin