புத்தம்புது காலை பொன்னிற வேளை
இனிவருமோ இந்நிமிடம்?
எங்கோ கூவும் குயில்களின் கீதம்
மகிழ்வாய்ப் பாடும் மைனாக்களின் கானம்
'கீச்'சிடும் குருவிகள் நடத்திடும் உற்சாகப்பாடம்
தென்னங்கீற்றுகளும் கேட்டுத் தலையசைக்கும்;
விழித்தெழும் கிளிகள் சிறகுகள் விரிக்கும்
புலர்ந்தது பொழுதெனக் குதூகலமாய்க் கிளம்பும்;
இன்று இப்பொழுது காணக் கிடைக்கும்
இதோ இந்த சூரிய உதயம்
இந்நிமிடம் நொடிக்கு மட்டுமே சொந்தம்;
ஒருமுறை கடந்தது மறுமுறை வாய்ப்பினும்
ஒன்றல்ல உணர்வோம் அதுவும் எதுவும்!
நாளையைக் காண நமக்கு விதித்திருந்தாலும்
நழுவ விடாதிருப்போம் நம்மைப் புதுப்பிக்கும்
எத்தகு இனிய சிலிர்ப்புகளையும்;
அத்தோடு தொலைக்காது இருப்போம்
இந்நிமிடம் இந்நொடியில் நாடிவரும்
நம்மை உயர்விக்கத் தேடிவரும்
எந்தவொரு நல்வாய்ப்புக்களையும்;
சோம்பித் தள்ளிப்போடாதும் இருப்போம்
முயன்றால் அக்கணமே அத்தருணமே
முடிக்கக் கூடிய வேலைகளையும்!
*** *** ***
மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே
நம்பிக்கையின் சூத்திரம்
அந்திமழைக்குப் பின்னே அழகு காட்டும் வானம்
அஸ்தமனத்துக்கு பின்னே இருள் வந்து சூழும்;
அஸ்திவாரம் நம்பிக்கைக்கு அதுவே ஆகும்
அடுத்தநாள் விடிகையில் தானே புரியும்.
*** *** ***
'இனிவருமோ இந்நிமிடம்?' இங்கு வலையேற்றிய பின் 17 செப்டம்பர் 2009 யூத்ஃபுல் விகடனில் “க்ளிக் கவிதை"யாக வெளியாகியுள்ளது:
*ஹலோ, நான்தாங்க பேசறேன்:
[அப்பப்போ இப்படிப் பேசுவேன். “நான்தாங்கன்னா யாரு”ன்னு கலாய்க்க கூடாது. ஓகே:)?]
ஒரு மாதம் ஆயிற்று உங்களையெல்லாம் சந்தித்து. விடுப்பு நீடித்தாலும் விழுந்தடித்து ஓடிவந்து ‘பிட்’டுக்கு பதிவிட்டு, இரண்டாவது படத்தை போட்டிக்குக் கொடுத்த கையோடு மறுபடியும் 'பைபை' சொல்லவிருக்கிறேன்! முன்போல செயல்பட இன்னும் நாளாகலாம் என்றாலும் அவ்வப்போது வந்தபடி இருப்பேன்.
ஒவ்வொரு மாதமும் தலைப்பைத் தந்து எப்படி எடுக்கலாம் படங்கள் எனப் பாடமும் நடத்துகிறார்கள் ‘பிட்’டிலே. படித்துப் புதிதாய் படம் பிடிப்பவர் பலர். இருப்பதைக் கொடுத்தே காலத்தை ஓட்டுகிறோம் சிலர்:)! புது புரொஃபசர் நந்துவும் அழகாய் விளக்கியிருக்கிறார் silhouette பற்றி, பாருங்கள் இங்கே.
மேலுள்ளவை பார்வைக்கு முன்னர் வைத்த படங்களே ஆயினும் போட்டியில் கலந்து கொள்ளாதவை. நந்து அப்பதிவுகளின் பின்னூட்டத்தில் அப்போது அறிவுறுத்தியபடி பி.பி செய்தவை. இம்மாதத் தலைப்புக்குப் பொருத்தமாய் தோன்றியதால் மீள்படங்கள் ஆனவை. கவிதைகள் வழக்கம்போல படத்துக்காகவே படைத்தவை. பை பை:)!
wow...u still the look teh same - managed to preserve the baby face!! :-)
பதிலளிநீக்குபடம் நல்லா இருக்கு - வாழ்த்துகள்!
நல்லாயிருக்கு மேடம்
பதிலளிநீக்குமுதல் படம் மிக மிக அருமை...
பதிலளிநீக்குவாழ்த்துகள்
காலை பொன்னிற வேளை அழகு.
பதிலளிநீக்கு"எத்தகு இனிய சிலிர்ப்புகளையும்;
அத்தோடு தொலைக்காது இருப்போம்"
"எந்தவொரு நல்வாய்ப்புக்களையும்;
சோம்பித் தள்ளிப்போடாதும் இருப்போம்" நல்ல கருத்துள்ளவரிகள்.
வெல்கம் பேக்.
பதிலளிநீக்குபடங்கள் சூப்பர்.
இப்ப மாதிரியே அப்ப இருக்கீங்களா?
பதிலளிநீக்குஅப்ப மாதிரியே இப்ப இருக்கீங்களா?
:)
நீங்க எடுத்த போட்டோஸ்ம் நல்லாருக்கு..
பார்த்து ரொம்ப நாளாச்சு....
பதிலளிநீக்குசில சிலவுட் படங்களோடு வந்து கலக்குகிறீர்கள்...
இத்த பார்ரா குட்டி ராமலஷ்மி அமர்ந்திருக்ற தோரணையை....
பதிலளிநீக்குரெண்டாவது படம் சூப்பரேய்ய்ய்!
பதிலளிநீக்கு//நம்மைப் புதுப்பிக்கும்
பதிலளிநீக்குஎத்தகு இனிய சிலிர்ப்புகளையும்;
அத்தோடு தொலைக்காது இருப்போம்///
ஒவ்வொரு நிமிடங்களையும் மனம் மகிழும் தருணங்களாய் கொணர்ந்து வரும் வரிகள் !
படம் தகதகவென்றிருக்கிறது... வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஹ ஹ... வாங்க ரொம்ப நாளா ஆள காணோம்னு நினைச்சேன். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமீள்படங்கள் அருமை. வழக்கம்போல கவிதை வரிகள் அத்தனையும் முத்துக்கள்.
பதிலளிநீக்கு//மறுபடியும் 'பைபை' சொல்லவிருக்கிறேன்! முன்போல செயல்பட இன்னும் நாளாகலாம் என்றாலும் அவ்வப்போது வந்தபடி இருப்பேன்.//
வெல்கம் பேக் என்று டீச்சருக்கு ஒரு 'அதே ! அதே!!' போடலாம்னு பார்த்தா, பைபை சொல்லிட்டீங்களே :((
நோப்ராப்ளம், டேக் கேர் :)
ராமலக்ஷ்மி,
பதிலளிநீக்குபடங்கள் வெகு அழகு.
கவிதைகள் அருமை.
குழந்தையில் உள்ள முகசாயல் சிலருக்கு
மாறும், உங்களுக்கு அப்படியே இருக்கு,
ராமலக்ஷ்மி.
பழைய மாதிரி பதிவுலகில் வலம் வர
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!
ஹை... ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்கள் பதிவைக் கண்டதில் மகிழ்ச்சி. அழகான படங்கள்
பதிலளிநீக்குwelcome back Ramalakshmi.
பதிலளிநீக்குphotos look very good.
ராமலக்ஷ்மி உங்க படம் அருமை..
பதிலளிநீக்குஉண்மைய சொல்ல போனா உங்க பதிவை விட உங்க சிறு வயது படம் என்னை ரொம்ப கவர்ந்தது :-)
நல்லா இருக்கு ராமலக்ஷ்மி வாழ்த்துகள் :-)
பதிலளிநீக்குசில் அவுட் படங்கள் கவிதையோடு கலக்கல்...
பதிலளிநீக்குஹலோ, நான் தாங்க பின்னூட்டம் போடுறேன்.. என் ஓட்டு கடைசி படத்துக்கு
பதிலளிநீக்குபடம் ரெண்டும் நல்லாயிருக்குங்க ராமலக்ஷ்மி!
பதிலளிநீக்கு***இன்று இப்பொழுது காணக் கிடைக்கும் இதோ இந்த சூரிய உதயம்
இந்நிமிடம் நொடிக்கு மட்டுமே சொந்தம்;
ஒருமுறை கடந்தது மறுமுறை வாய்ப்பினும் ஒன்றல்ல உணர்வோம் அதுவும் எதுவும்!****
உண்மைதாங்க, அந்த நொடியை நிலைநிறுத்த ஒரே வழி இதுபோல் அழகான புகைப்படம் எடுத்து அந்தக் காலை, மாலை நேரங்களை பார்த்து ரசிப்பதுதான்.
--------------
ஃபோட்டோவில் உள்ள இந்த சிறுமி தாங்களா?! :-)))
சூப்பர்......
பதிலளிநீக்கு"புத்தம்புது காலை...பொன்னிற வேளை"ன்னா இதுதானா ராமலக்ஷ்மி மேடம்...
பதிலளிநீக்கு//இன்று இப்பொழுது காணக் கிடைக்கும்
இதோ இந்த சூரிய உதயம்
இந்நிமிடம் நொடிக்கு மட்டுமே சொந்தம்;
ஒருமுறை கடந்தது மறுமுறை வாய்ப்பினும்
ஒன்றல்ல உணர்வோம் //
நேரத்தின் அருமையை, எவ்ளோ அழகா சொல்லி இருக்கீங்க... வாழ்த்துக்கள் மேடம்...
//இந்நிமிடம் இந்நொடியில் நாடிவரும்
நம்மை உயர்விக்கத் தேடிவரும்
எந்தவொரு நல்வாய்ப்புக்களையும்;
சோம்பித் தள்ளிப்போடாதும் இருப்போம்//
உழைப்பின் அருமை, பெருமையை அழகாக சொல்லும் அற்புதமான வரிகள்...
//இரண்டாவது படத்தை போட்டிக்குக் கொடுத்த கையோடு மறுபடியும் 'பைபை' சொல்லவிருக்கிறேன்! //
மறுபடியுமா??
//முன்போல செயல்பட இன்னும் நாளாகலாம் என்றாலும் அவ்வப்போது வந்தபடி இருப்பேன்.//
ம்ம்ம்...சரி... ஒரு ஆறுதல் சொல்றீங்க... கேட்டுக்கறோம்... ஓகேவா!!??
கவிதையும், படங்களும் அருமை... அருமை...
சீக்கிரம் திரும்பி வாங்க... காத்திருக்கிறோம்...
good one.
பதிலளிநீக்குwhat is that in the 2nd pic? temple?
என்னக்கா வந்தீங்க... அப்படியே திரும்பவும் எங்க...
பதிலளிநீக்குஅந்த படம் நீங்களா... சின்ன பிள்ளையாய்... நல்லாயிருக்கு.... போட்டி படங்களும் அருமை. புத்தம் புது காலை...ம்...ம்.. நல்லாயிருக்கு.
//ஒருமுறை கடந்தது மறுமுறை வாய்ப்பினும்
பதிலளிநீக்குஒன்றல்ல உணர்வோம் அதுவும் எதுவும்!//
//நம்மைப் புதுப்பிக்கும்
எத்தகு இனிய சிலிர்ப்புகளையும்;
அத்தோடு தொலைக்காது இருப்போம்//
உண்மை அக்கா..
அருமையான கவிதைகள். அழகான படங்கள்.
குட்டிப் பொண்ணும் சூப்பர்...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமுதல் படம் அருமைகா
பதிலளிநீக்குவெற்றிபெற வாழ்துக்கள் :-))
படங்களும் வரிகளும் அருமை.
பதிலளிநீக்கு//ஹலோ, நான்தாங்க பேசறேன்:
[அப்பப்போ இப்படிப் பேசுவேன். “நான்தாங்கன்னா யாரு”ன்னு கலாய்க்க கூடாது. ஓகே:)?]//
:-)))
நீண்ட விடுமுறை. நலமா மேடம்?
//அதுவும் எதுவும்!//
பதிலளிநீக்குபுதிதாய் வார்த்தைக் கோர்வையை ரசித்தேன்...
முதல் படத்த என் டெஸ்க் டாப் பேக் ரவுண்டுல வைச்சுகிட்டேன்..! உங்க அனுமதி இல்லாமலே...!!!!
பதிலளிநீக்கு"Be present in the present. Present is your present", அப்படின்னு சொல்லும் கவிதைகளும் படங்களும் அழகு. உடல் நலத்தை கவனிச்சுக்கிட்டே அப்பப்ப தரிசனம் குடுங்க ராமலக்ஷ்மி! மீண்டும் பதிவின் மூலம் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி :)
பதிலளிநீக்குசந்தனமுல்லை said...
பதிலளிநீக்கு//wow...u still the look teh same - managed to preserve the baby face!! :-)//
அப்படீங்றீங்க? ஹி.. தேங்க்ஸ்.
//படம் நல்லா இருக்கு - வாழ்த்துகள்!//
நன்றி முல்லை!
தண்டோரா ...... said...
பதிலளிநீக்கு// நல்லாயிருக்கு மேடம்//
பாராட்டுக்கு நன்றி தண்டோரா!
கதிர் - ஈரோடு said...
பதிலளிநீக்கு//முதல் படம் மிக மிக அருமை...
வாழ்த்துகள்//
மிகவும் நன்றி கதிர்.
மாதேவி said...
பதிலளிநீக்கு// காலை பொன்னிற வேளை அழகு.//
//நல்ல கருத்துள்ளவரிகள்.//
பொன்னிற காலை வேளையோடு, கருத்துக்களையும் ரசித்தமைக்கு நன்றி மாதேவி.
துளசி கோபால் said...
பதிலளிநீக்கு//வெல்கம் பேக்.//
வந்தேன்:)!
//படங்கள் சூப்பர்.//
நன்றி மேடம்.
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு//இப்ப மாதிரியே அப்ப இருக்கீங்களா?
அப்ப மாதிரியே இப்ப இருக்கீங்களா?
:)//
நீங்கதான் சொல்லணும்:)! [எனது பாணி பின்னூட்டம் எனக்கேவா:))? நல்லாத்தான் இருக்கு!]
//நீங்க எடுத்த போட்டோஸ்ம் நல்லாருக்கு..//
நன்றி முத்துலெட்சுமி!
goma said...
பதிலளிநீக்கு//பார்த்து ரொம்ப நாளாச்சு....//
இன்னும் ரொம்ப நாளாகி விடக் கூடாதேயெனப் பார்க்க வந்துட்டேன்:)!
//சில சிலவுட் படங்களோடு வந்து கலக்குகிறீர்கள்...//
நன்றி!
goma said...
பதிலளிநீக்கு// இத்த பார்ரா குட்டி ராமலஷ்மி அமர்ந்திருக்ற தோரணையை....//
ஹி.., சும்மா ஆல்பத்தில் அமர்ந்திருக்கிற குட்டி ராமலக்ஷ்மிகளை எல்லாம் இங்கே கூட்டி வரலாம்னு ஒரு எண்ணம்:)!
ஆயில்யன் said...
பதிலளிநீக்கு//ரெண்டாவது படம் சூப்பரேய்ய்ய்!//
உங்களையெல்லாம் கேட்காமலே இந்தமுறை அதை அனுப்பிவிட்டேன் போட்டிக்கு. அந்தப் படத்துக்கு ஸ்ட்ராங்காக உங்கள் ஓட்டைப் பதிந்திருப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது:)!
ஆயில்யன் said...
பதிலளிநீக்கு//ஒவ்வொரு நிமிடங்களையும் மனம் மகிழும் தருணங்களாய் கொணர்ந்து வரும் வரிகள் !//
படங்களோடு கவிதையையும் ரசித்துப் பாராட்டியிருப்பதற்கு நன்றி ஆயில்யன்!
குடந்தை அன்புமணி said...
பதிலளிநீக்கு// படம் தகதகவென்றிருக்கிறது... வாழ்த்துகள்.//
பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி அன்புமணி!
Truth said...
பதிலளிநீக்கு//ஹ ஹ... வாங்க ரொம்ப நாளா ஆள காணோம்னு நினைச்சேன். வெற்றி பெற வாழ்த்துக்கள்.//
உங்களோடு ஓரமாய் இருந்து போட்டி போட தவறாமல் வந்திடுவோம்ல தேதி 15 ஆகிவிட்டாலே:))!
சதங்கா (Sathanga) said...
பதிலளிநீக்கு//மீள்படங்கள் அருமை. வழக்கம்போல கவிதை வரிகள் அத்தனையும் முத்துக்கள்.//
ரசித்துப் பாராட்டியிருப்பதற்கு நன்றி சதங்கா!
// வெல்கம் பேக் என்று டீச்சருக்கு ஒரு 'அதே ! அதே!!' போடலாம்னு பார்த்தா, பைபை சொல்லிட்டீங்களே :((//
இன்னும் சில வாரமே:)!
// நோப்ராப்ளம், டேக் கேர் :)//
புரிதலுக்கு நன்றி!
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//ராமலக்ஷ்மி,
படங்கள் வெகு அழகு.
கவிதைகள் அருமை.//
மிக்க நன்றி.
//குழந்தையில் உள்ள முகசாயல் சிலருக்கு மாறும், உங்களுக்கு அப்படியே இருக்கு,ராமலக்ஷ்மி.//
நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!
//பழைய மாதிரி பதிவுலகில் வலம் வர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!//
உங்கள் ஆசிகளுடன் அப்படியே நடக்கும். நன்றி!
அமுதா said...
பதிலளிநீக்கு//ஹை... ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்கள் பதிவைக் கண்டதில் மகிழ்ச்சி. அழகான படங்கள்//
நன்றி அமுதா:)!
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//welcome back Ramalakshmi.
photos look very good.//
Thanks a lot Vallimma!
கிரி said...
பதிலளிநீக்கு// ராமலக்ஷ்மி உங்க படம் அருமை..//
நன்றி கிரி:)!
//உண்மைய சொல்ல போனா உங்க பதிவை விட//
ஆகா, நோட்டட் த பாயிண்ட்! பதிவுக்கு அது டிஸ்ட்ராக்ஷன்:))!
//உங்க சிறு வயது படம் என்னை ரொம்ப கவர்ந்தது :-)//
குழந்தைகள் அனைவருமே அழகுதான்.
அனைவருமே குழந்தையில் அழகுதான்.
சரியா நான் சொலவது:)?
சிங்கக்குட்டி said...
பதிலளிநீக்கு//நல்லா இருக்கு ராமலக்ஷ்மி வாழ்த்துகள் :-)//
நன்றி சிங்கக்குட்டி!
பிரியமுடன்...வசந்த் said...
பதிலளிநீக்கு//சில் அவுட் படங்கள் கவிதையோடு கலக்கல்...//
இரண்டுக்கும் பாராட்டு. நன்றி வசந்த்!
நசரேயன் said...
பதிலளிநீக்கு//ஹலோ, நான் தாங்க பின்னூட்டம் போடுறேன்..//
ஹலோ.. ’நான்தாங்கன்னா யாரு’ன்னு நான் கேட்க மாட்டேனே:)!
//என் ஓட்டு கடைசி படத்துக்கு//
நன்றி நன்றி, அதைத்தான் போட்டிக்கு கொடுத்துள்ளேன். உங்கள் பாராட்டே அதற்கான பரிசு!
வருண் said...
பதிலளிநீக்கு//படம் ரெண்டும் நல்லாயிருக்குங்க ராமலக்ஷ்மி!//
நன்றி வருண்!
//உண்மைதாங்க, அந்த நொடியை நிலைநிறுத்த ஒரே வழி இதுபோல் அழகான புகைப்படம் எடுத்து அந்தக் காலை, மாலை நேரங்களை பார்த்து ரசிப்பதுதான்.//
நீங்கள் சொல்லியிருப்பதும் சிறந்த வழிதான். ஆனால் எந்நேரமும் எல்லோரும் காமிராவோடு இருக்க முடியாதே:)! ஆகையால் எந்த அருமையான கணங்களையும் நழுவ விடாமல் ரசித்திடுவோம்.
//ஃபோட்டோவில் உள்ள இந்த சிறுமி தாங்களா?! :-)))//
'நான்தாங்க'ன்னு சொல்லிட்டனே:)))!
தியாவின் பேனா said...
பதிலளிநீக்கு//சூப்பர்......//
நன்றி தியா!
R.Gopi said...
பதிலளிநீக்கு// "புத்தம்புது காலை...பொன்னிற வேளை"ன்னா இதுதானா ராமலக்ஷ்மி மேடம்...//
ஆமாம் நான் ரசித்த காட்சியை நீங்களும் ரசியுங்கள்!
//நேரத்தின் அருமையை, எவ்ளோ அழகா சொல்லி இருக்கீங்க...//
//உழைப்பின் அருமை, பெருமையை அழகாக சொல்லும் அற்புதமான வரிகள்...//
கவிதைகளை ரசித்தமைக்கும், பாராட்டுக்கும், காத்திருக்கும் அன்புக்கும் நன்றி கோபி!
SurveySan said...
பதிலளிநீக்கு//good one.//
நன்றி சர்வேசன்.
//what is that in the 2nd pic? temple?//
மசூதி. முன்னர் ‘எம்மதமும் எமக்கு’ எனத் தலைப்பிட்ட பிட் பதிவில் ‘தொழுவோம்’ என்கிற சப்டைட்டிலுடன் இப்படத்தை பார்வைக்கு வைத்திருந்தேன்.
கடையம் ஆனந்த் said...
பதிலளிநீக்கு//என்னக்கா வந்தீங்க... அப்படியே திரும்பவும் எங்க...//
எங்கேயும் இல்லை:)! ஊரில்தான் இருக்கிறேன். சீக்கிரம் முன்போல செயல்படுவேன்.
//அந்த படம் நீங்களா... சின்ன பிள்ளையாய்... நல்லாயிருக்கு....//
நானேதான்:)!
// போட்டி படங்களும் அருமை. புத்தம் புது காலை...ம்...ம்.. நல்லாயிருக்கு.//
பாராட்டுக்கு நன்றி ஆனந்த்!
சுசி said...
பதிலளிநீக்கு*** //ஒருமுறை கடந்தது மறுமுறை வாய்ப்பினும்
ஒன்றல்ல உணர்வோம் அதுவும் எதுவும்!// ***
இது பலரும் உணர்வதில்லை சுசி!
// உண்மை அக்கா..
அருமையான கவிதைகள். அழகான படங்கள்.
குட்டிப் பொண்ணும் சூப்பர்...//
ஒத்த கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுசி!
கார்த்திக் said...
பதிலளிநீக்கு// முதல் படம் அருமைகா
வெற்றிபெற வாழ்துக்கள் :-))//
நன்றி கார்த்திக்! 'எத்தனை பிஸியாக இருந்தாலும் இம்மாதப் போட்டியில் கண்டிப்பாகக் கலந்தே தீர வேண்டும்' என நீங்கள் இட்ட அன்புக்கட்டளையே இப்பதிவுக்கான உத்வேகத்தைத் தந்தது:)!
" உழவன் " " Uzhavan " said...
பதிலளிநீக்கு//நீண்ட விடுமுறை. நலமா மேடம்?//
நலமே, நன்றி!
//படங்களும் வரிகளும் அருமை.//
படங்களோடு வரிகளையும் ரசித்தமைக்கு இன்னொரு நன்றி!
*** //ஹலோ, நான்தாங்க பேசறேன்:
[அப்பப்போ இப்படிப் பேசுவேன். “நான்தாங்கன்னா யாரு”ன்னு கலாய்க்க கூடாது. ஓகே:)?]//
:-)))***
இந்த சிரிப்பு கலாய்ப்பு இல்லாமல் என்னவாம்:)))?
ஈ ரா said...
பதிலளிநீக்கு*** //அதுவும் எதுவும்!//
புதிதாய் வார்த்தைக் கோர்வையை ரசித்தேன்...***
கவிதையில் எனக்குப் பிடித்த வரியும் அதுவே. நன்றி ஈ.ரா!
ஜீவன் said...
பதிலளிநீக்கு//முதல் படத்த என் டெஸ்க் டாப் பேக் ரவுண்டுல வைச்சுகிட்டேன்..! உங்க அனுமதி இல்லாமலே...!!!!//
ஆகா, தன்யை ஆனேன்:)!
கவிநயா said...
பதிலளிநீக்கு// "Be present in the present. Present is your present", அப்படின்னு சொல்லும் கவிதைகளும் படங்களும் அழகு.//
எப்போதும் உங்கள் விமர்சனம் தனி அழகு!
//உடல் நலத்தை கவனிச்சுக்கிட்டே அப்பப்ப தரிசனம் குடுங்க ராமலக்ஷ்மி! மீண்டும் பதிவின் மூலம் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி :)//
வந்து கொண்டே இருக்கிறேன், நன்றி கவிநயா!
wow..
பதிலளிநீக்குஅன்புடன்,
அம்மு.
Ammu Madhu said...
பதிலளிநீக்கு//wow..//
முதல் வருகைக்கு நன்றி அம்மு:)!
வந்தாச்சா??? கலக்குங்க!
பதிலளிநீக்குஅன்புடன் அருணா said...
பதிலளிநீக்கு//வந்தாச்சா??? கலக்குங்க!//
வந்துட்டேன் அருணா:)! நன்றி!
அட சின்ன ராமலெஷ்மி அச்சு அசலா பெரிய ராமலெஷ்மி மாதிரியே தான்!!
பதிலளிநீக்கு@ அபி அப்பா,
பதிலளிநீக்குநன்றி:)!
காலையில் படித்ததாலோ என்னவோ, இனி வருமே இந்த நிமிடத்தின் ஆரம்ப வரிகள் அப்படி ஒரு நெருக்கமானதாய் இருந்தன. நன்றிங்க.
பதிலளிநீக்கு@ மாதவராஜ்,
பதிலளிநீக்குஉங்கள் காலைப் பொழுதை இனிமையாக்கியதில் எனக்கும் மகிழ்ச்சி. முதல் வருகைக்கும் என் நன்றிகள்!
ஆஹா இப்பதான் பாக்றேன் எல்லாமே அழகு!
பதிலளிநீக்கு