Monday, September 21, 2009

பூக்களைப் புறக்கணிக்காதீர்கள்!

கண்ணே கலைமானே
பெ
ற்றவள் விற்றா விட்டாள்
சொல்கிறார்கள் குற்றமாய்-
ஆயினும் எவருக்கும்
தெரியவில்லை சரியாய்-
தொற்றிக் கொள்ளத்
தோள் தேடிக் கிளியே
கேள்விக் குறியாக நீ!
***

கத்தை கத்தையாய் கண்ணே
நோட்டுக்களைக் கைமாற்றி
நோகாமல் உனைக் கையாளத்
தூக்கத்துக்கும் மருந்தளித்து விட-
தோள்கள் துவண்டு போய்
தொங்கி விழும் தலையுடன்
தூண்டிலில் சிக்கிய மீனாய் நீ!
***

தயக்கமே இல்லாமல்
தடயங்களை மறைத்துத்
தகவல்களையும் இடம் மாற்றி-
தடுமாற்றமே இல்லாமல்
தந்திரமாய் விலை பேசும்
தரகர் கும்பல் இவர்கைகளிலே
தத்தளித்திடும் தளிரே- உண்மையிலே
'தத்து' அளித்திடத்தான்
தரப் பட்டாயா நீ?
***

கலி என்பது இதுதானோ
கற்றவரும் துணையாமே!
காலம் எங்கே செல்கிறதென
கலக்கம் சூழுதிங்கே கலைமானே
கவலை அறியாது நீ!
***

கொடுமை கண்டு அடங்கவில்லை
கொந்தளிப்பு இங்கெமக்கு
சந்தையிலே விற்கின்ற
கொத்தவரங்காயா நீ?
***

மருத்துவமனை வளாகத்திலேயே
மனசாட்சியற்ற சிசு ஏலமாம்
மாசற்ற மலரே-ஏதும் புரியாமல்
மருந்து மயக்கத்தில் நீ!
***

காவலரால் மீட்கப் பட்டு
கரை சேர்ந்ததாயென-செய்தி
ஊடகங்கள் உறுதி செய்ததும்தான்
உறக்கம் வந்தது எமக்கு
நிறைவாய் ஒரு
வாக்கியம் உனக்கு-
இனியேனும் இனிதாய்
வாழ்ந்திடுக நீ!
*** ***

பூக்களைப் புறக்கணிக்காதீர்கள்கு
ற்ற உணர்வென்பது
கொஞசமும் இன்றிக்
குப்பைத் தொட்டியிலும்
இடுகாட்டு வாசலிலும் கூட
இட்டுச் செல்கிறாராமே உனைப்
போன்றப் பல பூஞ்சிட்டுக்களை
விடிகின்ற காலையோடு
விடிந்து விடும் உம்வாழ்வுமென-
விட்டிடலாம் கவலைதனை
எவரேனும் கண்டெடுத்துக்
கரை சேர்ப்பாரென-
இரை தேடி இரவெல்லாம்
சுற்றி வரும் நாய்களிடம்
மாட்டி மடிய நேர்ந்தால்
என்னவாகும் எனும்
பின்விளைவுகளைப் பற்றிய
சிந்தனை சிறிதுமின்றி...!
***

எட்டி யோசிக்கட்டும்
பூக்கள் உம்மைப்
புறக்கணிக்கும் செடிகள்.
***

என் செய்வது..
சில செடிகளுக்கு-
பல கொடிகளுக்கு-
பூக்களுடனான பந்தம்
தொடர்ந்திடக் கொடுத்து
வைப்பதில்லைதான்.
***

வறுமை முதல் வெறுமைவரை
வெவ்வேறு காரணங்களால்
அடித்து வீசும் காற்றாகவும்
சுழன்று வீசும் புயலாகவும்
வாழ்க்கையை விளையாடிவிட்ட-
விதியின் சதியினால்
துளிர்க்கின்ற தளிர்களைத்
தம்மோடு வைத்துக்
கொள்ள வழியற்ற-
அச்செடிகொடிகள்
அரசுத் தொட்டிலிலோ
ஆதரவற்றோர் இல்லத்திலோ
உம்மை உதிர்த்துச் சென்றால்-
தத்தெடுக்கக் காத்திருப்போர் வசம்
சட்டப்படி ஒப்படைக்கப்பட்டு-நீவிர்
வாழ்வாங்கு வாழ்ந்திடத்தான்
வழிவகை பிறந்திடுமே.
*** *** ***

முதல்படம் நன்றி: யூத்ஃபுல் விகடன்
இரண்டாவது படம்: இணையத்திலிருந்து..

*'கண்ணே கலைமானே' கவிதை செப்டம்பர் 4, 2003 திண்ணை இணைய இதழில் வெளியாகி உங்களுடன் இங்கே பகிர்ந்து கொண்டதுதான் என்றாலும், வேதனை கலந்த வேண்டுகோளாக ஒலிக்கும் அடுத்த பாக சேர்க்கையுடன் 11 ஏப்ரல் 2009 யூத்ஃபுல் விகடன் இணைய தளத்திலும், 1 ஜூன் 2009 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும் வெளியாகியுள்ளது.


*ஹ்லோ, நான்தாங்க:


“இந்த மீ(நீ)ள்பதிவினைத் தொடர்ந்து, புதிதாய் எழுதும்வரை முத்துச்சரத்தில் கோர்க்காத சில பழைய படைப்புகளை அடுத்தடுத்து பார்வைக்கு வைக்கலாம் என்றிருக்கிறேன். 'ஆ.., இன்னுமா ஸ்டாக் தீரலை’ன்னு கேட்க மாட்டீங்கதானே?

61 comments:

 1. சிரிப்பூ ரொம்ப அழகு

  சகாதேவன்

  ReplyDelete
 2. //எட்டி யோசிக்கட்டும்
  பூக்கள் உம்மைப்
  புறக்கணிக்கும் செடிகள்.///

  அருமையான வார்த்தை பிரயோகம்!

  ReplyDelete
 3. //வறுமை முதல் வெறுமைவரை
  வெவ்வேறு காரணங்களால்
  அடித்து வீசும் காற்றாகவும்
  சுழன்று வீசும் புயலாகவும்
  வாழ்க்கையை விளையாடிவிட்ட-
  விதியின் சதியினால்
  துளிர்க்கின்ற தளிர்களைத்
  தம்மோடு வைத்துக்
  கொள்ள வழியற்ற-//

  முன் காலங்களில் அப்படியானதொரு சூழலில்,செல்வந்தர்களின் வீட்டு வேலைகளுக்கு கொண்டு போய் விட்டுவிடுவார்கள் என்றும் அது பற்றிய கண்ணீர் கதைகளை கூறிய பாட்டியின் நினைவுதான் என்னை நெருடுகிறது !

  மிக கொடுமையானதொரு செயலாக அதுவே இருக்கும்போது அரசுதொட்டில் அவலம் எத்தகைய கொடுமையானதொரு செயல் ? :(

  ReplyDelete
 4. //ஹ்லோ, நான்தாங்க://

  மர ஸ்டூலில் ஜம்முன்னு உக்கார்ந்து கொண்டு இருப்பது நார்மலான போஸ் என்றால், இது வித்தியாசம் + அட்டகாசம் ! :)

  ReplyDelete
 5. உங்களுக்கே இடுகை பஞ்சமா நம்பவே முடியலை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 6. சகாதேவன் said...

  //சிரிப்பூ ரொம்ப அழகு//

  எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்:)!

  ReplyDelete
 7. ஆயில்யன் said...

  **** //எட்டி யோசிக்கட்டும்
  பூக்கள் உம்மைப்
  புறக்கணிக்கும் செடிகள்.///

  அருமையான வார்த்தை பிரயோகம்!****

  நன்றி ஆயில்யன். இன்றைக்கும் செய்தித்தாளில் இப்படி குழந்தைகள் பல இடங்களில் அநாதரவாக விட்டுச் செல்லப்படும் அவலங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வந்தபடி இருக்கின்றன:(!

  ReplyDelete
 8. ஆயில்யன் said...
  // முன் காலங்களில் அப்படியானதொரு சூழலில்,செல்வந்தர்களின் வீட்டு வேலைகளுக்கு கொண்டு போய் விட்டுவிடுவார்கள் என்றும் அது பற்றிய கண்ணீர் கதைகளை கூறிய பாட்டியின் நினைவுதான் என்னை நெருடுகிறது !//

  எல்லா விதத்திலும் பிறப்பால் ஒதுக்கப்படும் ஒரே காரணத்தால் அவர்கள் அனுபவிக்கும் துன்பம் அளப்பற்றதே.

  // மிக கொடுமையானதொரு செயலாக அதுவே இருக்கும்போது அரசுதொட்டில் அவலம் எத்தகைய கொடுமையானதொரு செயல் ? :(//

  கொடுமைதான், ஆனாலும் எங்கோ விட்டுச் செல்வதைவிட அரசு இல்லங்களில் விடுவது குழந்தைகளுக்குப் பாதுகாப்பே. கர்நாடகத்தில் அரசு இல்லங்களில் குழந்தைகளை மிக நல்ல முறையில் பராமரித்து வருவதை நானே பார்க்கிறேன். அதே போல் முறைப்படி தத்தளித்து பெரும்பாலான குழந்தைகளுக்கு நல்வாழ்வு கிடைக்கவும் வழி செய்கிறார்கள். ஆறுதலான விஷயம் இது.

  ReplyDelete
 9. ஆயில்யன் said...

  //மர ஸ்டூலில் ஜம்முன்னு உக்கார்ந்து கொண்டு இருப்பது நார்மலான போஸ் என்றால், இது வித்தியாசம் + அட்டகாசம் !:)//

  அட்டகாசங்கள் தொடரலாம்னு சொல்லுங்கள்:)! நன்றி.

  ஆயில்யன், இன்று எனக்கிருக்கும் புகைப்பட ஆர்வம் என் தந்தையிடமிருந்தே வந்திருக்க வேண்டும். அவர் சிறந்த நிபுணர். குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். எங்களை மட்டுமின்றி தன் சகோதர சகோதரிகளின் மற்றும் தெரிந்தவர்களின் குழந்தைகளை விதவிதமாகப் படம் பிடித்திருக்கிறார். அவரது வழிகாட்டல் எனது ஒன்பது வயதுக்கு மேல் கொடுத்து வைக்கவில்லை. அவர் எடுத்த படங்களில் அவரையே காண்கிறேன்.

  ReplyDelete
 10. வேதனையான செய்திதான் ராமலக்ஷ்மி :(

  ஆனால் குட்டி ராமலக்ஷ்மியின் க்யூட் படம் வந்து அதை கலைச்சிடுச்சே! :)

  ReplyDelete
 11. ***மருத்துவமனை வளாகத்திலேயே
  மனசாட்சியற்ற சிசு ஏலமாம்***

  ஏலம்லாம் விடுவாங்களா!!!

  எனக்கு இந்த சப்ஜெக்ட் ல அறியாமை அதிகம்ங்க! :(

  ReplyDelete
 12. நசரேயன் said...

  //உங்களுக்கே இடுகை பஞ்சமா நம்பவே முடியலை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

  இத்தனை ஆச்சரியக்குறிகள் இட்டு என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறீர்களே:))!! இதுதாங்க என் முதல் மீள்!

  நல்லாப் பாருங்க, அதிலும் முதலாவது மட்டுமே மீள்கவிதை. இனி அடுத்தடுத்து தரவிருப்பதாய் சொல்லி இருப்பதும் மீள்பதிவுகள் அல்ல. பல வருடம் முன்னர் எழுதி, பதிவிடாமல் வைத்திருக்கும் ஸ்டாக். பயப்படாம வாங்க நசரேயன்:)!

  ReplyDelete
 13. அத்திவெட்டி ஜோதிபாரதி said...

  // நன்று இராமலட்சுமி மேடம்!//

  நன்றி ஜோதிபாரதி!

  ReplyDelete
 14. //சில செடிகளுக்கு-
  பல கொடிகளுக்கு-
  பூக்களுடனான பந்தம்
  தொடர்ந்திடக் கொடுத்து
  வைப்பதில்லைதான்//

  மிகவும் ரசிக்க வைத்த வருத்தமான வரிகள்..

  ReplyDelete
 15. அருமையான வார்த்தைகள்
  நல்ல கவிதை

  ReplyDelete
 16. //ஹ்லோ, நான்தாங்க:

  “இந்த மீ(நீ)ள்பதிவினைத் தொடர்ந்து, புதிதாய் எழுதும்வரை முத்துச்சரத்தில் கோர்க்காத சில பழைய படைப்புகளை அடுத்தடுத்து பார்வைக்கு வைக்கலாம் என்றிருக்கிறேன். 'ஆ.., இன்னுமா ஸ்டாக் தீரலை’ன்னு கேட்க மாட்டீங்கதானே?”//

  கேக்க மாட்டோம்...

  என்ன அழகு... என்ன போஸ்... அமர்க்களம்....

  ReplyDelete
 17. //பெற்றவள் விற்றாவிட்டாள்
  சொல்கிறார்கள் குற்றமாய்//

  பெற்று எடுத்த குழந்தை தாய்க்கு பாரம்
  ஆகிப் போனது கொடுமை.

  //என் செய்வது
  சில செடிகளுக்கு
  பல கொடிகளுக்கு
  பூக்களுடனான பந்தம்
  தொடர்ந்திடக் கொடுத்து
  வைப்பதில்லை தான்.//

  ஆம் ராமலக்ஷ்மி, நீங்கள் சொன்னமாதிரி சில, பல காரணங்களால் குழந்தையை பிரியவேண்டி உள்ளது.

  கன்னத்தில் கை வைத்து யோசிக்கும்
  குட்டி ராமலக்ஷ்மி படம் இந்த பதிவுக்கு ஏற்ற மாதிரி உள்ளது.

  கவிதையால் மனதை நெகிழ வைத்துவிட்டீர்கள்.

  ReplyDelete
 18. கவிநயா said...

  //வேதனையான செய்திதான் ராமலக்ஷ்மி :(//

  இப்போதும் தொடர்கிறது:(!

  //ஆனால் குட்டி ராமலக்ஷ்மியின் க்யூட் படம் வந்து அதை கலைச்சிடுச்சே! :)//

  'ஏன் இப்படி' என சிந்திக்கிறாள், கோமதி அரசு சொல்லியிருப்பது போல. நன்றி கவிநயா!

  ReplyDelete
 19. பழைய படைப்புகளா????

  ஆமலச்சுமி ஆமலச்சுமி
  எஸ் பாப்பா
  ஸ்டூல் மேலே ஏறாதே
  நோ பாப்பா
  கீழே டொம் ஆவே
  ஹஹ்ஹாஹஹ்ஹ்ஹா

  குட்டிப் பொண்ணைப் பார்க்கும் போது,இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது

  ReplyDelete
 20. பாப்பா பாட்டு கேட்க காத்திருக்கிறோம்

  ReplyDelete
 21. வருண் said...

  // ***மருத்துவமனை வளாகத்திலேயே
  மனசாட்சியற்ற சிசு ஏலமாம்***

  ஏலம்லாம் விடுவாங்களா!!!

  எனக்கு இந்த சப்ஜெக்ட் ல அறியாமை அதிகம்ங்க! :(//

  'கண்ணே கலைமானே' பெங்களூரின் பிரபல மருத்துவமனை ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை [செய்தி ஆதாரம்:29 ஜூலை 2003 Times of India] அடிப்படையாகக் கொண்டு எழுதியதுதான் வருண். முறையாக பதிவு செய்து தத்தெடுக்கும் பொறுமை இல்லாத பெற்றோராலும் அல்லது விதிமுறைகளுக்கு தாங்கள் பொருந்திவராத காரணங்களாலும் நடுவிலே தரகர்களை நாடுபவதால் இத்தகைய குற்றங்கள் நடக்கின்றன. இந்த சம்பவத்தில் மருத்துவரும் உடந்தையாக இருந்தது பெரிய சர்ச்சையானது அப்போது.

  ReplyDelete
 22. //எட்டி யோசிக்கட்டும்
  பூக்கள் உம்மைப்
  புறக்கணிக்கும் செடிகள்.//

  அருமை அக்கா.
  வலியோடு படித்துக் கொண்டு வந்த மனதுக்கு இதமாய் ஒரு குட்டிப் பொண்ணின் படம் அருமை.
  கோர்க்கப்படாத முத்துக்களை சீக்கிரம் கோர்த்திடுங்க :))

  ReplyDelete
 23. கருப்பு வெள்ளை போட்டோக்கு இருக்கும் அழகு கலர் போட்டோவிலே இல்லை தான்!!!!!

  ReplyDelete
 24. //ஆ.., இன்னுமா ஸ்டாக் தீரலை’ன்னு கேட்க மாட்டீங்கதானே?”//

  :-))))

  கவிதை எனக்கு எட்டல! ;-)

  ReplyDelete
 25. அத்திவெட்டி ஜோதிபாரதி said...

  //அது உங்க குழந்தையா!?

  அழகு!//

  நன்றி, அந்தக் குழந்தையே ‘நான்தாங்க’:)!

  ReplyDelete
 26. ஈ ரா said...
  ***/ //சில செடிகளுக்கு-
  பல கொடிகளுக்கு-
  பூக்களுடனான பந்தம்
  தொடர்ந்திடக் கொடுத்து
  வைப்பதில்லைதான்//

  மிகவும் ரசிக்க வைத்த வருத்தமான வரிகள்../***

  நன்றி ஈ.ரா! தவறுகளுக்குக் காரணம் ஒருசாரார் மட்டுமே அல்லதானே. சமூகம், சூழ்நிலை என எத்தனையோ உள்ளனவே!

  ReplyDelete
 27. /எட்டி யோசிக்கட்டும்
  பூக்கள் உம்மைப்
  புறக்கணிக்கும் செடிகள்./

  மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு.

  ReplyDelete
 28. //குற்ற உணர்வென்பது
  கொஞசமும் இன்றிக்
  குப்பைத் தொட்டியிலும்
  இடுகாட்டு வாசலிலும் கூட
  இட்டுச் செல்கிறாராமே உனைப்
  போன்றப் பல பூஞ்சிட்டுக்களை
  விடிகின்ற காலையோடு
  விடிந்து விடும் உம்வாழ்வுமென-
  விட்டிடலாம் கவலைதனை
  எவரேனும் கண்டெடுத்துக்
  கரை சேர்ப்பாரென-
  இரை தேடி இரவெல்லாம்
  சுற்றி வரும் நாய்களிடம்
  மாட்டி மடிய நேர்ந்தால்
  என்னவாகும் எனும்
  பின்விளைவுகளைப் பற்றிய
  சிந்தனை சிறிதுமின்றி...!//

  அட இது மாதிரி குழந்தைகளை விட்டுட்டு போறவங்க மனிதர்களே இல்லை..

  உங்க குழந்தை படம் அழகு...

  ReplyDelete
 29. R.Gopi said...


  //கேக்க மாட்டோம்...//

  நன்றி கோபி, தைரியமாய் பதிவிடுகிறேன்:)! பேசும் குழந்தை படத்தை ரசித்தமைக்கும் நன்றிகள்!

  ReplyDelete
 30. தமிழ் பிரியன் said...

  //Present akka.//

  வாங்க தமிழ் பிரியன். விடுமுறையில் இருந்தாலும் என் க்ளாஸுக்கு அட்டெண்டன்ஸ் கொடுக்கும் நீங்கள் நல்ல பிள்ளை:)!

  ReplyDelete
 31. கோமதி அரசு said...

  *** //பெற்றவள் விற்றாவிட்டாள்
  சொல்கிறார்கள் குற்றமாய்//

  பெற்று எடுத்த குழந்தை தாய்க்கு பாரம்
  ஆகிப் போனது கொடுமை.***

  அதைக் குற்றமாக சமுதாயம் பார்க்க நேருகிற கொடுமையை சரியாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்.

  //ஆம் ராமலக்ஷ்மி, நீங்கள் சொன்னமாதிரி சில, பல காரணங்களால் குழந்தையை பிரியவேண்டி உள்ளது.//

  அதை மன்னித்து விடவும் முடியும். ஆனால் சரியான முறையில் விட்டுப் பிரிய வேண்டும் என்பதே ஆதங்கமான கவிதையாய் இங்கே.

  //கன்னத்தில் கை வைத்து யோசிக்கும்
  குட்டி ராமலக்ஷ்மி படம் இந்த பதிவுக்கு ஏற்ற மாதிரி உள்ளது.

  கவிதையால் மனதை நெகிழ வைத்துவிட்டீர்கள்.//

  தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கோமதி அரசு.

  ReplyDelete
 32. goma said...

  // பழைய படைப்புகளா????//

  இத்தனை கேள்விக் குறிகளா:)? நசரேயன் ஆச்சரியக்குறிகளாய் அடுக்கியிருந்தார்!

  //ஆமலச்சுமி ஆமலச்சுமி
  எஸ் பாப்பா
  ஸ்டூல் மேலே ஏறாதே
  நோ பாப்பா
  கீழே டொம் ஆவே
  ஹஹ்ஹாஹஹ்ஹ்ஹா

  குட்டிப் பொண்ணைப் பார்க்கும் போது,இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது//

  ஹி..! எல்லாம் தந்தை கொடுக்க வைத்த போஸ்:)!

  ReplyDelete
 33. goma said...

  // பாப்பா பாட்டு கேட்க காத்திருக்கிறோம்//

  பாட்டு நான் படைக்க பின்குறிப்புக்குப் பின்னணிக் குரலாக பாப்பா வருவாள்:)!
  நன்றி கோமா!

  ReplyDelete
 34. பாசகி said...

  //:((((//

  தங்கள் வருத்தம் புரிகிறது பாசகி. வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 35. அருமையான கருத்து...பூங்கொத்து!

  ReplyDelete
 36. கவிதையை நெகிழ வைத்தாலும்.... ஸ்டூல் பாப்பா(நீங்க தானே) சிரிப்பு சோகத்தை மறைத்து விட்டது.

  மீள் பதிவாக இருந்தாலும் அருமையான பதிவு அக்கா.


  சமுக பதிவுகள் எப்போது வந்தாலும்... வரவேற்கப்பட வேண்டிய ஒன்று... தொடருங்கள்.

  ஆமா... அந்த படம் 4 வயசுல எடுத்த படமா?

  ReplyDelete
 37. சுசி said...
  //அருமை அக்கா.
  வலியோடு படித்துக் கொண்டு வந்த மனதுக்கு இதமாய் ஒரு குட்டிப் பொண்ணின் படம் அருமை.//

  நன்றி சுசி.

  //கோர்க்கப்படாத முத்துக்களை சீக்கிரம் கோர்த்திடுங்க :))//

  சொல்லிவிட்டீர்களல்லவா? செய்கிறேன் சீக்கிரமே:)!

  ReplyDelete
 38. அபி அப்பா said...

  //கருப்பு வெள்ளை போட்டோக்கு இருக்கும் அழகு கலர் போட்டோவிலே இல்லை தான்!!!!!//

  உண்மைதான் அபிஅப்பா. அதன் அழகே தனிதான் இல்லையா?

  ReplyDelete
 39. கிரி said...

  *** //ஆ.., இன்னுமா ஸ்டாக் தீரலை’ன்னு கேட்க மாட்டீங்கதானே?”//

  :-))))***

  இதற்கு அர்த்தம் கேட்பீர்களா மாட்டீர்களா, எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்:))?

  ReplyDelete
 40. பிரியமுடன்...வசந்த் said...

  //அட இது மாதிரி குழந்தைகளை விட்டுட்டு போறவங்க மனிதர்களே இல்லை..//

  விட்டுச் செல்ல வேண்டியது விதியாக இருந்தாலும் விடும் முறையில் தவறு செய்பவர்களை மன்னிக்கத்தான் முடியவில்லை:(!

  கருத்துக்கு நன்றி வசந்த்.

  ReplyDelete
 41. மாதேவி said...

  //மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு.//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி.

  ReplyDelete
 42. தியாவின் பேனா said...

  //அருமையான வார்த்தைகள்
  நல்ல கவிதை//

  தங்கள் பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி தியா.

  ReplyDelete
 43. அன்புடன் அருணா said...

  // அருமையான கருத்து...பூங்கொத்து!//

  மிக்க நன்றி அருணா!

  ReplyDelete
 44. கடையம் ஆனந்த் said...
  //ஆமா... அந்த படம் 4 வயசுல எடுத்த படமா?//

  ஆமாம், 40 வருடம் முன்னே!

  //மீள் பதிவாக இருந்தாலும் அருமையான பதிவு அக்கா.

  சமுக பதிவுகள் எப்போது வந்தாலும்... வரவேற்கப்பட வேண்டிய ஒன்று... தொடருங்கள்.//

  நன்றி ஆனந்த், சில சமூக அவலங்கள் முடிவின்றி தொடர்வதால், மறுபடி பதிவிடுவதில் தவறில்லை என்றேதான் தோன்றுகிறது.

  ReplyDelete
 45. \\அது உங்க குழந்தையா!?

  அழகு!//

  நன்றி, அந்தக் குழந்தையே ‘நான்தாங்க’:)!//

  அப்ப பழய பதிவோட ஒவ்வொரு பழய படம் இலவச இணைப்பா..?

  ReplyDelete
 46. 'ஹல்லோ நான்தாங்க' குழந்தைக்கு சுற்றி போடவும் :) தங்கள் தந்தையின் க்ரியேட்டிவிட்டி தங்களின் முகத்தில். நல்ல ரசனை. வருத்தங்கள் தங்கள் தந்தை நீண்ட நாட்கள் உங்களுடன் இருக்க வில்லை என்று.

  வழக்கம் போல மீ(நீ)ள் கவிதை வரிகள் அருமை. சிலர் சிலாகித்து சொல்லியிருக்கும் அதே வரிகள் மனதைத் தொடுகின்றன.

  //எட்டி யோசிக்கட்டும்
  பூக்கள் உம்மைப்
  அபுறக்கணிக்கும் செடிகள்.//

  ReplyDelete
 47. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  // அப்ப பழய பதிவோட ஒவ்வொரு பழய படம் இலவச இணைப்பா..?//

  இல்லையில்லை, பின்குறிப்புக்கு பின்னணிக்குரல் கொடுக்க மட்டும்:)! பழைய படைப்புகள் 40 வருடப் பழசு இல்லைங்க!

  ReplyDelete
 48. சதங்கா (Sathanga) said...
  //'ஹல்லோ நான்தாங்க' குழந்தைக்கு சுற்றி போடவும் :) //

  இத்தனை காலம் கழித்தா:)?

  //தங்கள் தந்தையின் க்ரியேட்டிவிட்டி தங்களின் முகத்தில். நல்ல ரசனை. வருத்தங்கள் தங்கள் தந்தை நீண்ட நாட்கள் உங்களுடன் இருக்க வில்லை என்று.//

  மாறாத வருத்தம் ஆறுதல் அடைகிறது இந்தப் புகைப்படங்களில். புரிதலுக்கு நன்றி.

  //வழக்கம் போல மீ(நீ)ள் கவிதை வரிகள் அருமை.//

  நன்றி சதங்கா, மனதைத் தொட்ட வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கும்.

  ReplyDelete
 49. இரை தேடி இரவெல்லாம்
  சுற்றி வரும் நாய்களிடம்
  மாட்டி மடிய நேர்ந்தால்
  என்னவாகும் எனும்
  பின்விளைவுகளைப் பற்றிய
  சிந்தனை சிறிதுமின்றி...!
   
  அருமையான சிந்தனைகளோடு, சமூகம் சார்ந்து அழகாக எழுதுகிறீர்கள். திண்ணை, வார்ப்பு, யூ விகடன் என அனைத்திலும் புகுந்து விளையாடும் முத்துச்சரத்திற்கு வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 50. வார்த்தைகள் அழகு பிரயோகம்
  வலிகளோடு.

  அந்த படமும் அழகு.

  ReplyDelete
 51. " உழவன் " " Uzhavan " said...

  // அருமையான சிந்தனைகளோடு, சமூகம் சார்ந்து அழகாக எழுதுகிறீர்கள்.//

  நன்றி உழவன், பாராட்டுக்கும் தங்கள் வாழ்த்துக்களுக்கும்!

  ReplyDelete
 52. நட்புடன் ஜமால் said...

  //வார்த்தைகள் அழகு பிரயோகம்
  வலிகளோடு.//

  வலிகளுக்கு விடிவாய் விழிப்புணர்வு ஏற்படும் என நம்புவோம் ஜமால்.

  //அந்த படமும் அழகு.//

  நன்றி:)!

  ReplyDelete
 53. வேதனை தெறிக்கும் வரிகள்.

  "ஹலோ நாந்தாங்க..: ஸ்வீட்"

  ReplyDelete
 54. @ அமுதா,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமுதா!

  ReplyDelete
 55. // ராமலக்ஷ்மி said...
  கிரி said...

  *** //ஆ.., இன்னுமா ஸ்டாக் தீரலை’ன்னு கேட்க மாட்டீங்கதானே?”//

  :-))))***

  இதற்கு அர்த்தம் கேட்பீர்களா மாட்டீர்களா, எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்:))?//

  அந்த வரியை ஒரு தன்னடக்கமா எடுத்து ரசித்தேன் ... :-) எனக்கு அர்த்தம் தேவையில்லை.

  ReplyDelete
 56. கிரி said...

  //அந்த வரியை ஒரு தன்னடக்கமா எடுத்து ரசித்தேன் ... :-) எனக்கு அர்த்தம் தேவையில்லை.//

  ஹி, நன்றி. ‘அப்போ சரி’ என ஸ்டாக்கிலிருந்து அடுத்ததைப் பதிந்து விட்டேன்:)!

  ReplyDelete
 57. மின்னஞ்சல் வழியாக:
  //Hi Ramalakshmi,

  Congrats!

  Your story titled 'பூக்களைப் புறக்கணிக்காதீர்கள்!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 22nd September 2009 05:22:02 PM GMT

  Here is the link to the story: http://www.tamilish.com/story/115942

  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team//

  தகவலுக்கு நன்றி தமிழிஷ். வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin