Monday, July 6, 2009

ரசிகன்
பூமித் தாயைக் கண்ணில் ஒற்றிப்
புதையலாய்க் கையில் ஏந்திப்
பார்த்துப் பார்த்துப் பக்குவமாய்ப்
படைத்து வைத்தப பாண்டங்கள்-
பாழாகிப் போகுமேயெனப்
பதறிப் போகாமல்..

வருண பகவான
கருணை மிகக்கொண்டு தன்
வருகையை மறுகோடிக்கும்
தெரிவிக்கத்

தோற்றுவிக்கும்
அழகிய வானவில்லைத்
தொலைதூரத்திலிருந்து
கண்டதுமே-

பரவசமாகிப் போகின்ற குயவன்..

வாழ்க்கையை
நலம் விசாரிக்க வரும்
இனிய தருணங்கள் யாவற்றையும்-
இயல்பாக அள்ளியணைத்து
அனுபவிக்க
வரம்வாங்கி வந்த பெரும்ரசிகன்!
***


படம்: இணையத்திலிருந்து..

4 ஜூலை 2009 யூத்ஃபுல் விகடன்
இணைய தளத்தில் வெளியான கவிதை:

69 comments:

 1. /வானவில்லைக் கண்டதும்-
  பரவசமாகிப் போகின்ற குயவன்..
  வாழ்க்கையை
  நலம் விசாரிக்க வரும்
  இனிய தருணங்கள் யாவற்றையும்-
  இயல்பாக அள்ளியணைத்து
  அனுபவிக்க
  வரம்வாங்கி வந்த பெரும்ரசிகன்!/

  அருமை

  ReplyDelete
 2. படமும் கவிதையும் அழகு, வானவில்லைப் போலவே :)

  ReplyDelete
 3. // வாழ்க்கையை
  நலம் விசாரிக்க வரும்
  இனிய தருணங்கள் யாவற்றையும்-
  இயல்பாக அள்ளியணைத்து
  அனுபவிக்க
  வரம்வாங்கி வந்த பெரும்ரசிகன்! //  மிகவும் அருமை சகோதரி.....!!! வாழ்த்துக்கள்.....
  // வருண பகவான
  கருணை மிகக்கொண்டு தன்
  வருகையை அறிவிக்க
  அனுப்பி வைக்கும்
  வானவில்லைக் கண்டதும்- ///  இந்த இடம் எனக்கு புரியவில்லை சகோதரி.......!!! பொதுவாக வானவில் வந்தால் மழை வராது என்பார்கள்...!!

  இவிடத்தில் நீங்கள் வருண பகவான் வருகையை அறிவிப்பதற்காக வானவில்லை அனுப்பியுள்ளார் என்று கூறியுள்ளீர்கள்.....!!!

  எனக்கு கவிதை நடை புரிவது சற்று கடினம்....!! எனக்கு சற்று விளக்கிக் கூறுங்களேன் சகோதரி.....!!!!
  // வானவில்லைக் கண்டதும்-
  பரவசமாகிப் போகின்ற குயவன்.. //

  இந்த வரி எனக்குப் புரிகிறது..... " வானவில் வந்ததும் மழை வராது என்று குயவன் மகிழ்ச்சியடைகிறான்..... !!! "

  ReplyDelete
 4. இனிய தருணங்கள் யாவற்றையும்-
  ....
  வரம்வாங்கி வந்த பெரும்ரசிகன்!"

  கவிதை வரிகள் பிடித்ததன.நன்று.

  ReplyDelete
 5. அருமை! மழைநீரை சேகரிக்கும் பானை, மழையை ​சேகரிக்கும் குயவன். நல்ல கவிதை!

  ReplyDelete
 6. திகழ்மிளிர் said...

  //அருமை//

  பிடித்த வரிகளைப் பாராட்டியிருப்பதற்கு நன்றி திகழ்மிளிர்!

  ReplyDelete
 7. கவிநயா said...

  // படமும் கவிதையும் அழகு, வானவில்லைப் போலவே :)//

  அழகான கருத்து அதே வானவில்லைப் போல:)! நன்றி கவிநயா.

  ReplyDelete
 8. @ லவ்டேல் மேடி,

  வாங்க மேடி. சொற்பிழை இருக்கலாம். பொருட்பிழை இருக்கலாமா என அந்த நக்கீரரே கேட்ட மாதிரி இருக்கிறது. ஹிஹி, அதற்காக நான் சிவபெருமான் என சொல்ல வரவில்லை.

  நீங்கள் சொல்வது ரொம்பச் சரி. மழை பொழிந்து முடித்திருக்க அந்த ஈரப்பதமான அட்மோஸ்ஃபியரில் சூரியனின் ஒளீக்கீற்றுகள் இறங்குகையில்தான் தெறிப்பு ஆகி அழகிய வானவில் தோன்றுகிறது. ஆனால் தொலைதூரத்தில் பொழிந்து தன் வேலையை முடித்த மேகங்கள் அங்கே வானவில் வந்திருக்க அவற்றிற்கு திருப்தியுடன் 'பை பை' சொல்லி விட்டு நாமிருக்கும் பக்கமாய் திரண்டு வந்து நமக்கும் கருணை காட்டுவதை எனது வீடு இருக்கும் ஆறாவது மாடியிலிருந்து கண்கூடாகக் கண்ட போது தோன்றியதுதான் இக்கவிதை. மிஞ்சிப் போனால் நம் போன்றோர், அடடா, மழை வருதா காயப் போட்ட துணிகளை எடுக்கணும். வத்தல் வடாமை அள்ளணும் என நினைக்கக் கூடும். ஆனால் குயவனுக்கு அது வயிற்றுப் பிரச்சனை. அதையும் மீறி பூமி குளிரட்டும் என அவனால் அதை நெஞ்சார வரவேற்க முடிகிறதென்றால் அவன் நிச்சயம் வரம் வாங்கி வந்தவன்தானே!

  அப்படியே இக்கவிதையில் பொருட் பிழை இருப்பதாகக் கருதினாலும் தினம் வாழ்க்கையில் நமக்கு ‘ஹாய், ஹலோ’ சொல்ல வரும் இனிய பல தருணங்ளுக்கு ரெஸ்பாண்ட் பண்ணத் தவறிடாதீர்கள் என்கிற கருத்தைக் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்:)!

  தங்கள் விரிவான கருத்துக்கும் தோன்றிய சந்தேகத்தைத் தயங்காமல் கேட்டதற்கும் என் நன்றி, விளக்கம் உங்களுக்குத் திருப்தி தந்ததா என்பது தெரியவிட்டாலும்:)!

  ReplyDelete
 9. விஜய் ஆத்ரேயன் said...

  //This is a Excellent poem. Hats off Ramalakhmi//

  உங்கள் பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் நன்றி விஜய் ஆத்ரேயன்!

  ReplyDelete
 10. மாதேவி said...

  // இனிய தருணங்கள் யாவற்றையும்-
  ....
  வரம்வாங்கி வந்த பெரும்ரசிகன்!"

  கவிதை வரிகள் பிடித்ததன.நன்று.//

  பிடித்த வரிகளைப் பாராட்டியிருப்பதற்கு நன்றி மாதேவி.

  ReplyDelete
 11. ஜெகநாதன் said...

  //அருமை! மழைநீரை சேகரிக்கும் பானை, மழையை ​சேகரிக்கும் குயவன். நல்ல கவிதை!//

  மழை நீரை பானை சேகரிக்கப் போகிறதா அல்லது அதில் கரைந்திடப் போகிறதா என்பதுதான் கேள்வி!?! ஆனாலும் குயவன் மழையை மனதார நேசிக்கிறான்தான். சேகரிக்கிறான்தான்! கருத்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி ஜெகநாதன்!

  ReplyDelete
 12. :)

  நல்லா இருக்குங்க!

  ReplyDelete
 13. /*வானவில்லைக் கண்டதும்-
  பரவசமாகிப் போகின்ற குயவன்..

  வாழ்க்கையை
  நலம் விசாரிக்க வரும்
  இனிய தருணங்கள் யாவற்றையும்-
  இயல்பாக அள்ளியணைத்து
  அனுபவிக்க
  வரம்வாங்கி வந்த பெரும்ரசிகன்!

  */
  அருமையான சிந்தனை. உண்மை...

  உங்கள் பின்னூட்டத்தில் சொன்னது போல்..
  /*ஆனால் குயவனுக்கு அது வயிற்றுப் பிரச்சனை. அதையும் மீறி பூமி குளிரட்டும் என அவனால் அதை நெஞ்சார வரவேற்க முடிகிறதென்றால் அவன் நிச்சயம் வரம் வாங்கி வந்தவன்தானே!
  */

  ReplyDelete
 14. கவிதையும், லவ்டேல் மேடி யின் கருத்துக்கு நீங்க அளித்த விளக்கமும்... நல்லாருக்குங்க. விகடனில் வெளிவந்தமைக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 15. நல்லா இருக்கு மேடம்.... வாழ்த்துக்கள்...

  எனக்கு கூட அந்த வானவில் சந்தேகம் இருந்தது. ஆனாலும், நண்பர் லவ்டேல் மேடி
  கேட்டு விட்டதால், மீ தி சைலன்ட். பிழையை பற்றிய லவ்டேல் மேடியின் கேள்வியும், உங்கள் பதிலும் அருமை.

  //தொலைதூரத்தில் பொழிந்து தன் வேலையை முடித்த மேகங்கள் அங்கே வானவில் வந்திருக்க அவற்றிற்கு திருப்தியுடன் 'பை பை' சொல்லி விட்டு நாமிருக்கும் பக்கமாய் திரண்டு வந்து நமக்கும் கருணை காட்டுவதை //

  அருமையாக விளக்கி உள்ளீர்கள்..... ஹ்ம்ம்... நடத்துங்க... நடத்துங்க... தமிழ் இங்கே தங்களிடம் விளையாடுகிறது மேடம்............

  //இக்கவிதையில் பொருட் பிழை இருப்பதாகக் கருதினாலும் தினம் வாழ்க்கையில் நமக்கு ‘ஹாய், ஹலோ’ சொல்ல வரும் இனிய பல தருணங்ளுக்கு ரெஸ்பாண்ட் பண்ணத் தவறிடாதீர்கள் என்கிற கருத்தைக் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்:)!//

  ஹாய், ஹலோ.... ... குசல விசாரிப்புகள் எப்போதும் உண்டு என்பதை எங்கள் சங்கத்தின் சார்பாக உறுதிபடுத்துகிறேன்.

  மொத்தத்தில் தங்களுக்கும், தங்கள் கவிதைக்கும் வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 16. உங்கள் கவிதையும் அழகு.வானவில் படமும் அழகு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. மனதை அள்ளிக் கொண்டு போகிறது கவிதை. அந்த குயவனாக ஒரு கணம் நானும் மாறி விட்டேன். பிரமாதம்.

  ReplyDelete
 18. //
  தங்கள் விரிவான கருத்துக்கும் தோன்றிய சந்தேகத்தைத் தயங்காமல் கேட்டதற்கும் என் நன்றி, விளக்கம் உங்களுக்குத் திருப்தி தந்ததா என்பது தெரியவிட்டாலும்:)! ///  ரொம்ப நன்றிங்க சகோதரி.....!! என் சந்தேகத்திற்கு அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்...!! இப்பொழுது புரிந்துகொண்டேன்....!!!


  நன்றி.... !! வாழ்த்துக்கள்...!!! வாழ்க வளமுடன்.....!!!

  ReplyDelete
 19. \\ தினம் வாழ்க்கையில் நமக்கு ‘ஹாய், ஹலோ’ சொல்ல வரும் இனிய பல தருணங்ளுக்கு ரெஸ்பாண்ட் பண்ணத் தவறிடாதீர்கள் என்கிற கருத்தைக் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்:)!//

  ஆகாகா... அருமை..

  ReplyDelete
 20. பாண்டங்கள், குவியன் : இதற்கு பொருள் என்னங்க? :-(

  ReplyDelete
 21. சென்ஷி said...

  //:)

  நல்லா இருக்குங்க!//

  ரசிப்புக்கு நன்றி சென்ஷி:)!

  ReplyDelete
 22. @ அமுதா,
  பாராட்டுக்கும் என் சிந்தனையோடு ஒத்துப் போகும் கருத்துக்கும் மிக்க நன்றி அமுதா.

  ReplyDelete
 23. ஆ.ஞானசேகரன் said...

  // அருமையான வரிகள்//

  நன்றி ஞானசேகரன்.

  ReplyDelete
 24. குடந்தை அன்புமணி said...

  //கவிதையும், லவ்டேல் மேடி யின் கருத்துக்கு நீங்க அளித்த விளக்கமும்... நல்லாருக்குங்க. விகடனில் வெளிவந்தமைக்கும் வாழ்த்துகள்!//

  மேடி சரியாகத்தான் கேட்டிருந்தார்! விளக்கத்துடன் நின்றிடாமல் வரிகளிலும் சில மாற்றங்கள் செய்து விட்டேன் இப்போது:)! பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அன்புமணி!

  ReplyDelete
 25. R.Gopi said...

  //நல்லா இருக்கு மேடம்.... வாழ்த்துக்கள்...//

  நன்றி!

  //பிழையை பற்றிய லவ்டேல் மேடியின் கேள்வியும், உங்கள் பதிலும் அருமை.//

  விளக்கம் ஒருபுறமிருக்க, பிழை கவிதையிலும் திருத்தப் பட்டு விட்டது கோபி:)!

  //ஹாய், ஹலோ.... ... குசல விசாரிப்புகள் எப்போதும் உண்டு//

  தங்கள் சங்கத்துக்கு என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்:)!

  ReplyDelete
 26. ஜெஸ்வந்தி said...

  //உங்கள் கவிதையும் அழகு.வானவில் படமும் அழகு.
  வாழ்த்துக்கள்.//

  அழகான கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜெஸ்வந்தி!

  ReplyDelete
 27. சுசி said...

  //மனதை அள்ளிக் கொண்டு போகிறது கவிதை.//

  நன்றி சுசி!

  //அந்த குயவனாக ஒரு கணம் நானும் மாறி விட்டேன். பிரமாதம்.//

  மாறி விட்டீர்களா, பிரமாதம்:)! அப்போ நிச்சய்மாக நீங்கள் வரம் வாங்கி வந்தவர்தான்:)! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 28. லவ்டேல் மேடி said...

  //ரொம்ப நன்றிங்க சகோதரி.....!! என் சந்தேகத்திற்கு அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்...!! இப்பொழுது புரிந்துகொண்டேன்....!!!//

  நான்தான் மேடி உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்னும் தெளிவாக வரிகளை வடித்திருந்திருக்க வேண்டும் நான். இப்போது என் விளக்கத்தின் படியே கவிதையில் திருத்தம் செய்தாயிற்று:)! உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 29. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  ***** \\ தினம் வாழ்க்கையில் நமக்கு ‘ஹாய், ஹலோ’ சொல்ல வரும் இனிய பல தருணங்ளுக்கு ரெஸ்பாண்ட் பண்ணத் தவறிடாதீர்கள் என்கிற கருத்தைக் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்:)!//

  ஆகாகா... அருமை.. *****

  அப்போ முத்துலெட்சுமி, தினம்தினம் "ஹாய் ஹாய் ஹலோ ஹலோ"தான்னு சொல்லுங்க:)! இனிய இனிய தருணங்களுக்கு என் வாழ்த்துக்களும்:)!

  ReplyDelete
 30. அய்யோ எப்ப 50 வரும் நான் எப்ப பின்னூட்டம் போட?

  முத்து வந்தாச்சா ஊருக்கு?

  ReplyDelete
 31. Truth said...

  // பாண்டங்கள், குவியன் : இதற்கு பொருள் என்னங்க? :-( //

  குவியன் இல்லைங்க ‘குயவன்’:Potter (மண்ணாலான பாத்திரங்கள் செய்பவர்).
  அந்தப் பாத்திரங்களைத்தான் ‘பாண்டங்கள்’ எனக் குறிப்பிட்டிருக்கிறேன். தாய்மொழி தங்களுக்கு தமிழ் இல்லையாததால் இத்தகைய சந்தேகங்கள் வருவது இயல்புதான் ட்ரூத். வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 32. அபி அப்பா said...

  //அய்யோ எப்ப 50 வரும் நான் எப்ப பின்னூட்டம் போட?//

  அதுசரி. எப்பவும் 50 வரும் என நினைத்தால் இருக்க வேண்டியதுதான்:)!

  //முத்து வந்தாச்சா ஊருக்கு?//

  நீங்க வந்தாச்சா ஊருக்கு:)?

  ReplyDelete
 33. "கருது (கதிர்) களத்துல கெடக்கு. இன்னும் ஒரு ரெண்டு நாளு மழை பெய்யாம இருந்தா போதும். அதுக்குள்ள அடிச்சுத் தூத்தி வீட்டுல சேர்த்திருவேன்" என்று நினைக்கும் விவசாயியையே பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படிப் பட்ட குயவனை இப்போதுதான் பார்க்கிறேன். இவன் மழைக்குச் சமம். அருமையான சிந்தனை.

  ReplyDelete
 34. ரசித்தேன்..உங்கள் விளக்கத்தை வெகுவாக ரசித்தேன்! :-)

  ReplyDelete
 35. உங்கள் ரசனையை நான் ரசித்தேன் ராமலக்ஷ்மி. கற்பனை அபாரம். வடித்தவிதம் அற்புதம்.
  வானவில்லும் அற்புதம்

  ReplyDelete
 36. " உழவன் " " Uzhavan " said...

  // "கருது (கதிர்) களத்துல கெடக்கு. இன்னும் ஒரு ரெண்டு நாளு மழை பெய்யாம இருந்தா போதும். அதுக்குள்ள அடிச்சுத் தூத்தி வீட்டுல சேர்த்திருவேன்" என்று நினைக்கும் விவசாயியையே பார்த்திருக்கிறேன். //

  அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் உழவன். உண்மைதான் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாய் கவலை. உழைப்பாளிகளுக்கோ வாழ்வாதாரப் பிரச்சனயாகவும் இது போல..

  //ஆனால் இப்படிப் பட்ட குயவனை இப்போதுதான் பார்க்கிறேன். இவன் மழைக்குச் சமம். அருமையான சிந்தனை.//

  ‘மழைக்கும் சமம்’.. உங்கள் சிந்தனையையும் வியக்கிறேன். ரசிக்கிறேன். நன்றி உழவன்!

  ReplyDelete
 37. சந்தனமுல்லை said...

  // ரசித்தேன்..உங்கள் விளக்கத்தை வெகுவாக ரசித்தேன்! :-)//

  உங்கள் ரசனைக்கு நன்றி முல்லை:)!

  ReplyDelete
 38. வல்லிசிம்ஹன் said...

  //உங்கள் ரசனையை நான் ரசித்தேன் ராமலக்ஷ்மி. கற்பனை அபாரம். வடித்தவிதம் அற்புதம்.
  வானவில்லும் அற்புதம்//

  உங்கள் ரசிப்புக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 39. கண்டிப்பா மழை வரும் இந்த கவிதைக்கு

  ReplyDelete
 40. //
  4 ஜூலை 2009 யூத்ஃபுல் விகடன் இணைய தளத்தில் வெளியான கவிதை
  //

  முதலில் இதற்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 41. அருமை....!! அருமை....!! மாற்றப் பட்ட கவிதை மெருகேற்றத்துடன் மிகவும் அருமையாக உள்ளது சகோதரி....!!!!

  வாழ்க வளமுடன்.....!!!!

  ReplyDelete
 42. //
  பூமித் தாயைக் கண்ணில் ஒற்றிப்
  புதையலாய்க் கையில் ஏந்திப்
  பார்த்துப் பார்த்துப் பக்குவமாய்ப்
  படைத்து வைத்தப பாண்டங்கள்-
  பாழாகிப் போகுமேயெனப்
  பதறிப் போகாமல்..
  //

  சுயநலம் இல்லாத அருமையான மனதைப் படைத்த குயவன்
  போற்றுதலுக்கு உரியவர்.

  ReplyDelete
 43. //
  வருண பகவான
  கருணை மிகக்கொண்டு தன்
  வருகையை மறுகோடிக்கும்
  அறிவிக்க
  அனுப்பி வைக்கும்
  அழகிய வானவில்லைத்
  தொலைதூரத்தில் கண்டதுமே-
  பரவசமாகிப் போகின்ற குயவன்..
  //

  பிறர் நலம் விரும்பும் அறிய உணர்ச்சிகள் நிறைந்த மனது!

  ReplyDelete
 44. //
  வாழ்க்கையை
  நலம் விசாரிக்க வரும்
  இனிய தருணங்கள் யாவற்றையும்-
  இயல்பாக அள்ளியணைத்து
  அனுபவிக்க
  வரம்வாங்கி வந்த பெரும்ரசிகன்!
  //

  அருமை அனைத்துமே அருமை!

  உங்கள் வரிகளில் லயித்துப் போன
  நாங்கள் அனைவருமே பெரும் ரசிகர்கள்தான்.

  ReplyDelete
 45. நசரேயன் said...

  //கண்டிப்பா மழை வரும் இந்த கவிதைக்கு//

  நன்றி நசரேயன் உங்கள் நல் வார்த்தைக்கு!

  ReplyDelete
 46. ரொம்ப கணக்குப்போட்டு எல்லாவற்றிலுமே வியாபார நோக்கோடு வாழ்ந்தால் எதையும் ரசிக்க முடியாது என்பது உண்மைதாங்க, ராமலக்ஷ்மி!

  ReplyDelete
 47. ரசிப்பின் அவசியத்தை விவரிக்கும் வரிகள். சிலர் குறிப்பிட்டது போல் லவ்டேல் மேடியின் கேள்வியும், தங்கள் விளக்கமும் அருமை.

  மழை காட்டும் வானவில்லில்,
  குளிர்ந்த பானை செய்யும்
  குயவரின் ரசிப்பினை,
  நயமாக சொல்லிவிட்டீர் !!!

  ReplyDelete
 48. RAMYA said...
  //சுயநலம் இல்லாத அருமையான மனதைப் படைத்த குயவன்
  போற்றுதலுக்கு உரியவர்.//

  நிச்சயமாய்.

  //பிறர் நலம் விரும்பும் அரிய உணர்ச்சிகள் நிறைந்த மனது!//

  போற்றத்தான் வேண்டும் நீங்கள் சொன்னது போல.

  //நாங்கள் அனைவருமே பெரும் ரசிகர்கள்தான்.//

  அழகு:)! தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரம்யா!!

  ReplyDelete
 49. லவ்டேல் மேடி said...

  //அருமை....!! அருமை....!! மாற்றப் பட்ட கவிதை மெருகேற்றத்துடன் மிகவும் அருமையாக உள்ளது சகோதரி....!!//

  நன்றி மேடி, எனக்கும் திருப்தியாகி விட்டது:)!

  ReplyDelete
 50. வருண் said...

  //ரொம்ப கணக்குப்போட்டு எல்லாவற்றிலுமே வியாபார நோக்கோடு வாழ்ந்தால் எதையும் ரசிக்க முடியாது என்பது உண்மைதாங்க, ராமலக்ஷ்மி!//

  அழகாய் சொல்லிட்டீங்க வருண். ரசிக்கக் கற்றிடுவோம்!

  ReplyDelete
 51. சதங்கா (Sathanga) said...

  //ரசிப்பின் அவசியத்தை விவரிக்கும் வரிகள்.//

  வாழ்க்கைக்கு அதுவும் இன்றியமையாத ஒன்றுதான் என்பதை உங்கள் ‘அவசியம்’ உறுதி படுத்துகிறது.

  //சிலர் குறிப்பிட்டது போல் லவ்டேல் மேடியின் கேள்வியும், தங்கள் விளக்கமும் அருமை.//

  நன்றி, நயம்மிகு கீழ்வரும் வரிகளுக்கும்:

  //மழை காட்டும் வானவில்லில்,
  குளிர்ந்த பானை செய்யும்
  குயவரின் ரசிப்பினை,
  நயமாக சொல்லிவிட்டீர் !!!//

  ReplyDelete
 52. ராமலக்ஷ்மி அனைவரும் எது எதோ கூறுகிறார்கள்..எனக்கு ஒண்ணுமே புரியலை :-)

  ரொம்ம்ம்ம்ம்ம்ப தூரத்தில் இருக்கிறேன் போல ;-)

  தலைப்பு தான் என்னை கவர்ந்தது (இதற்கும் விஜய் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நம்புங்க ப்ளீஸ்)

  ReplyDelete
 53. கிரி said...
  // தலைப்பு தான் என்னை கவர்ந்தது //

  அது போதுமே, எல்லா விஷயங்களிலும் ஏதோ ஒன்றை ரசிக்கத் தெரிகிறதல்லவா? நீங்கள் நல்ல ரசிகனே:)!

  //(இதற்கும் விஜய் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நம்புங்க ப்ளீஸ்)//

  நம்பிட்டோம்:))!

  ReplyDelete
 54. அந்தக் குயவனைப் போல் நானும் ஒரு குயவிதான்!!!!

  ReplyDelete
 55. நானானி said...

  //அந்தக் குயவனைப் போல் நானும் ஒரு குயவிதான்!!!!//

  அப்படிப் போடுங்க நானானி:)!

  ReplyDelete
 56. வித்தியாசமான ரசிகன் தான்..நல்ல கற்பனை என்றாலும்..எதார்த்தமும் கூட..

  ReplyDelete
 57. @ பாசமலர்,

  கருத்துக்கு மிக்க நன்றி பாசமலர்.

  ReplyDelete
 58. வான வில் அவ்வப்போது வந்து நலம் விசாரித்து போகிறதா !!

  பேஷ் !! பேஷ !!

  ராம லக்ஷ்மியின் கவிதைகளும் அவ்வாறே தானே !!

  தொய்யும் இதயத்தின் சோர்வதனை நீக்கும்
  'பெய்யெனப்பெய்யும் மழை.'

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 59. sury said...

  //வான வில் அவ்வப்போது வந்து நலம் விசாரித்து போகிறதா !//

  ஆமாம், பூமியைக் குளிர வைத்தது போல நம் மனங்களையும் குளிர வைக்க:)!

  //பேஷ் !! பேஷ !!

  ராம லக்ஷ்மியின் கவிதைகளும் அவ்வாறே தானே !!//

  பதிலுக்கு நலம் விசாரிக்க வந்த உங்களுக்கு என் நன்றிகள்!

  //தொய்யும் இதயத்தின் சோர்வதனை நீக்கும்
  'பெய்யெனப்பெய்யும் மழை.'//

  ஆஹா, அழகாய் சொல்லி விட்டீர்கள்!

  ReplyDelete
 60. /*வானவில்லைக் கண்டதும்-
  பரவசமாகிப் போகின்ற குயவன்/

  வானவில்- உங்கள் கவிதை
  குயவன்- நான்

  ReplyDelete
 61. பாலமுருகன் said...
  // வானவில்- உங்கள் கவிதை
  குயவன்- நான் //

  நல்ல ‘ரசிகன்’ நீங்கள்:)!

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாலமுருகன்!

  ReplyDelete
 62. நல்ல கவிதை வாசிக்கக் கிடைக்கும் கணங்கள் வாழ்க்கையில் நிறைவானவை. அப்படி ஓர் அனுபவம் இப்போது. நன்றி மேடம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 63. RATHNESH said...

  //நல்ல கவிதை வாசிக்கக் கிடைக்கும் கணங்கள் வாழ்க்கையில் நிறைவானவை. அப்படி ஓர் அனுபவம் இப்போது.//

  இந்தக் கவிதைக்கு அப்படியொரு அந்தஸ்தைக் கொடுத்ததற்கு நன்றி ரத்னேஷ்.

  ReplyDelete
 64. ஹி ஹி, இதுக்கு அப்புறம் போட்ட கவிதைக்கே நான் ரொம்ப லேட்டு. சரி விடுங்க.

  இந்தக் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க. விகடன்ல வந்ததற்கும் வாழ்த்துகள்.

  அனுஜன்யா

  ReplyDelete
 65. எம்.ரிஷான் ஷெரீப் said...

  // அழகான கவிதை சகோதரி !//

  நன்றி ரிஷான்!

  ReplyDelete
 66. அனுஜன்யா said...
  //இந்தக் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க. விகடன்ல வந்ததற்கும் வாழ்த்துகள்.//

  வாழ்த்துக்கும் ரசிப்புக்கும் நன்றி அனுஜன்யா!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin